Advertisement

ஓவியத்தில் பாவை 
ருத்ராவின் வீட்டில் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இரண்டு நாட்களாய் விடாமல் வெளீயே பெரும் இடியும், மின்னலும், மழையும், என வானமே உடைந்து விழுந்தது போல் ஊற்றிக்கொண்டிருந்தது. சாதாரணமாகவே காட்டாற்றுவெள்ளத்தில் விழுந்தவர்களை கண்டுபிடிப்பது அரிது இதில் இப்படி ஒரு மழை? வீட்டில் இருந்த ஐந்து ஆண்களும் ஆளுக்கு ஒரு மூலையில் விட்டதை வெறித்தவாறு அமர்ந்திருந்தனர். பட பட வென தட்டப்பட்ட கதவின் ஓசையில் சற்று நினைவு திரும்பிய சுருட்டை “இந்த நேரத்தில யாரு அது கதவ உடைக்கிறது, நிம்மதியா அழுகக்கூட விடமாட்டாங்க” புலம்பியவாறே கதவை திறந்தவன் கண்ணில் விழுந்தது ஒரு கருப்பு உருவம். இருட்டோடு இருட்டாக கை கால்கள் என்று பிரித்தறியமுடியாமல் இருந்த உருவத்தை பார்த்தவுடன் தொண்டை வறண்டு போனது ” பே… பே… பே”வார்த்தைகள் சிக்கிக்கொண்டன தொண்டைக்குழியில். சென்றவனை காணவில்லையே என பின்னால் வந்த மண்ணாங்கட்டிகும், ஏழுமலைக்கும் இதே நிலையே. இவளவு நேரம் கண்ணீரில் விட்டதை வெறித்து அமர்ந்திருந்த வீரமணி ” யாருடா அது?” சத்தம் போட்டவாறே வாசல் விளக்கை போட்டவர் வெளியில் வந்தார். அவர் கண்களுக்கு விழுந்த முகத்தை கண்டவர்
” வந்துட்டயா ருத்ரா மாமா இல்லாம நீ இறுக்கமாட, தெரியும் எனக்கு என்னையும் கூட கூட்டுக்கோடா எம் புலிக்குட்டி நீ இல்லாம நா மட்டும் என்ன சாதிக்க போறேன்”
தன்னிலை இழந்து அரற்றியவரை பார்த்து நண்பர்களும் சிலையாகி நின்றனர்.
     ஆம் வந்தது ருத்ரா தான் மழைக்காக ஒரு பெரிய கருப்பு நிற பாலிதீன் பையை கொண்டு முகம் மட்டும் விட்டு உடல் முழுதும் மறைத்திருந்தாள். உதட்டை சுளித்தவாறு ஒரு பெருமூச்சை விட்டபடி உள்ளே வந்த ருத்ரா தன்னை சுற்றி இருந்த பாலிதீன் பையை எடுத்துவிட்டு கையில் வைத்திருந்த பொருள்களை மேசையில் வைத்துவிட்டு தன் விரல்களை சொடுக்கெடுத்தவரே வந்தவள் பக்கத்தில் நின்று விழித்துக்கொண்டிருந்த சுருட்டையின் கன்னத்தில் விட்டாள் ஒரு அறை.
“எப்பிடி எப்படி பே பே வா என்ன பாத்தா பேய் மாதிரி தெரியுதா? அம்புட்டு சீக்கிரம் உங்களுக்கு எல்லாம் விடுதலை கிடையாது ராசா தவாஃகட்டய பேத்துடுவேன் வாங்கடா உள்ளே”
முதலில் அதிர்ந்தாலும் ருத்ராவை உயிருடன் கண்ட மகிழ்ச்சியில் கண்ணீர்தவிர வார்த்தைகள் வரவில்லை யாருக்கும், அவளை தொட்டு தொட்டு பார்த்தபடி இருந்தனர்.
“டேய் முடியலடா பீலிங்ச கொறைங்கடா, மாமா நீயுமா? நீயே சொன்னமாரி உங்களைவிட்டு போய்டுவேனா, அப்பிடியே போறதா இருந்தாலும் மொத்தமா கூட்டிட்டு போய்டமாட்டேன்” அவள் கண்சிமிட்டி சொன்ன அழகில் அனைவர் முகத்திலும் புன்னகை விரிந்தது.
இரண்டு நாட்களாய் அலைச்சலும் அசதியும் சேர்ந்ததில் ருத்ரா தன் மாமனின் மடியை மஞ்சமாக்கி நண்பர்கள் சூழ வரவேற்பு அறையிலேயே தூங்கிபோனாள்.
    மறுநாள் எழுந்து வேக வேகமாக கிளம்பியவள் ஓவியத்தை எடுத்துச்சென்று அதற்கு ஒரு அழகிய சட்டம் கட்டி தன் அறையில் மாட்டிய பின்பே ஓய்ந்தாள், ஓவியத்தில் உள்ள பாவையை பார்க்க பார்க்க என்னவென்று தெரியாத ஒரு உணர்வு அவளை கட்டி இழுத்தது கண்களில் சோகமும் இதழ்களில் புன்னகையுமாக ஏதோ ஒரு விதத்தில் ருத்ராவை மிகவும் பாதித்தது அந்த ஓவியம்.
“எவளவு அழகு நீ, எனக்கே உன்ன சைட் அடிக்கணும் போல இருக்கே நீ மட்டும் நிஜத்தில இருந்த ஒரு பய இந்த ஏரியால தூங்க மாட்டானுக, ஆனா பாரு ஓ உதடு தான் சிரிக்கிது கண்ணுல எம்புட்டு கவல, எண்ணமறியே உனக்கும் லவ் புட்டுக்கிச்சா? சரி வுடு நம்ளலாம் பொண்ணா கூட பாக்காது சிலது இதுக்கெலாம் கவலைப்படலாமா “
என்னவோ யாரிடமும் தன்னை வெளிக்காட்ட விரும்பாத ருத்ரா ஓவியத்தின் முன் மனம் விட்டு பேசினாள்
   அன்றிரவு வீடே அடங்கிய பின்னிம் ருத்ராவின் மனம் அடங்க மறுத்தது தூக்கம் வருவேனா என்று அடம் பிடித்தது, கண்ணை மூடினாலே விழிகளுக்குள் வேதாந்த்தும் தாராவும் இம்சை செய்தனர் விழிகளை மலர்த்தி ஓவியத்தை பார்த்தவள்
“வேதாந்த் தெரியுமா உனக்கு, பெரிய ஹீரோ நா கூட சும்மா மத்த ரசிகங்க மாறி ரசிகரத்தோட நிறுத்திக்கணும்தான் நினச்சேன் ஆனா பாரு எப்டியோ மனசுக்குள்ள பூந்துட்டான் அன்னக்கி சூட்டிங்கில தாரா முத்தம்கொடுத்தா பாரு அப்பிடி ஒரு வலி இங்க நெஞ்சில” தன் இதயத்தை தொட்டு காட்டியவள்
“மைன்ட் புல்லா பிளாக் ஆகிடுச்சு, அப்புறம் மலைல இருந்து விழுந்து பொழச்சு, உன்ன கண்டுபிடுச்சு ஹிம் … இந்த மொத்த எபிசோடுல நடந்த ஒரே நல்லவிசயம் நீதான். இந்த பசங்க இருக்காங்களே பாகத்தான் முரட்டு பசங்க மனசு கொழந்த மாதிரி நா ஒடஞ்சேன்னு தெரிஞ்சிது ஒண்ணுமில்லாம போய்டுவாங்க, மாமாவும் அதுக்கு மேல அதனாலேயே என்னோட வழிய யாருகிட்டயும் சொன்னது இல்ல என்னமோ உன்கிட்ட சொல்லனும்போல இருந்துச்சு சொல்லிட்டேன் மனசு லேசாகிடுச்சு குட் நைட் “
   தன் மனபாரங்களை இறக்கியதாலோ என்னவோ ஓவியத்தை பார்த்தவாறே கண்ணயர்ந்தாள் ருத்ரா.
  மூன்று மணியளவில் ருத்ரா என்று தன்னை யாரோ அழைப்பது போல் இருக்க மெல்ல விழிமலர்த்தினாள் யாரும் இல்லை மீண்டும் கண்மூடும் நேரம் காதில் விழுந்த அழைப்பில் அடித்து பிடித்து எழுந்தாள் சுற்றிலும் தேட யாரும் இல்லை ஏதோ பிரமை என்று பார்வையை திருப்பும் பொழுது ஓவியத்தில் இருந்த பாவையின் விழிகள் தன்னையே பார்ப்பதுபோல் இருந்தது ருத்ராவுக்கு, ஓவியத்தை பார்த்தபடியே குறுக்கும் நெடுக்கும் நடந்து பார்த்தாள் தான் போகும் இடமெல்லாம் ஓவியப்பாவையின் விழிகள் தொடர்வது போல் இருந்தது.
” இது என்னடா நா போர்ப்பக்கமெலாம் பாக்கிறமாதிரி இருக்கே உண்மையா பாக்குதா? இல்ல நமக்குத்தான் அப்படி தெரியுதா?” ருத்ரா யோசித்துக்கொண்டிருக்கையிலேயே
“ருத்ரா” என்ற ஓவியப்பாவையின் குரல் தெளிவாய் கேட்டு அவள் சந்தேகத்தை நிவர்த்திசெய்தது.
“என்னை பார்த்து பயம் கொள்ளாதே ருத்ரா, என்பெயர் தேவமஞ்சரி, எத்தனையோ காலங்கள் இந்த ஓவியத்தில் அடைந்து வாழ்ந்து வரும் ஆத்மா நான். என்னால் உனக்கு எந்தஒரு தீங்கும் ஏற்படாது, உன்னாலே சிறிது வெளியுலகை காணும் பாக்கியம் கிடைத்தது எனக்கு, கோடி நன்றிகளை உரித்தாக்குகிறேன்.”
“அப்போ நீ பேயா? பாரேன் இதுவரைக்கும் நா சில ஜந்துக்களை தான் கூட வச்சிருந்தேன் இனி நீயும் இருந்திட்டு போ யாரு என்ன சொல்வா சரி நீ உன்ன பத்தி சொல்லு கேப்போம், யாரு நீ எப்படி இந்த படத்துக்குள்ள வந்த எல்லாம் டக டகனு சொல்லு பாப்போம் “
“ஏதோ ஒரு குரல் மட்டும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது ஓடு மஞ்சரி ஓடு தேவமஞ்சரி என்று ஆனால் என்னைப்பற்றி வேறு எதுவும் நினைவடுக்குகளில் எட்டவில்லை, நான் எம் பெயர் அறிந்தது கூட அந்த குரலின் உதவியால் மட்டுமே, மன்னிப்பாயாக”
“அட இதுக்கெல்லாம் சாரி கேட்டுகிட்டு விடு பாத்துக்கலாம் “
“சாரி அங்ஙனமாயின்?”
“அட நீ தமிழ் மீடியம்ல சாரினா மன்னிப்புனு அர்த்தம் “
இப்படியாக தொடர்ந்த அவர்களின் உரையாடல் இரவு முழுவதும் நீண்டது இருவருக்கும் இடையில் அழகிய நட்பு உருவாகியது.

Advertisement