Advertisement

இன்னமும் எவராலும் நம்பமுடியவில்லை ருத்ரா காதலிப்பதை, அதுவும் வேதாந்த்தை “ருத்ரா ஆர் யூ இன் லவ்? நீ காதலிக்கிறாயா? நுவூ ப்ரேமிஸ்டதுன்னாவா? க்யா தும் பியார் கார்தேஹே? “என்று விதவிதமான மொழிகளிலில் ஒவொருவரும் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினர். (வேதாந்த் ஒரு வளர்ந்து வரும் சினிமா கதாநாயகன், சிறுவயதிலேயே தகப்பனை இழந்து தாயின் கட்டுப்பாட்டில் வளர்ந்தான் தாய் சொல் தட்டா பிள்ளை)
    அனைவருக்குமே அதிர்ச்சி ஆச்சர்யம் எல்லாம் இருந்தாலும் இது எப்படி எனும் குறுகுறுப்பே அதிகம் இருந்தது.
ருத்ரா ஒன்றும் அழகான ஆண்களையே காணாதவள் இல்லையே வேதாந்த்தை போலவே எத்தனையோ கதாநாயகர்களை அவள் தொழில் ரீதியாக கடந்தவள்தான். அவர்கள் பாராட்டும் பொழுது கூட அலடிக்கொண்டது கிடையாது, அப்படிப்பட்டவள் வேதாந்த்திடம் ஈர்க்கப்பட்டாள் என்றாள் அப்படி என்ன ஸ்பெஷல் அவனிடம் என்பதே அவர்களின் குறுகுறுப்பிற்கு காரணம்.
     ஒருகட்டத்திற்குமேல் கட்டுப்படுத்த முடியாமல் அதை அவளிடமே கேட்டும் விட்டார்கள், நின்றது நின்றபடி கண்களில் கனவு மிதக்க அழகிய கவிதை புனைந்தாள் ருத்ரா….
என்னடா ஏதடா மாற்றிவிட்டாய் என்னை
புயலையும் பூப்போட்டு பூட்டிவிட்டாயே!
உயர பரந்த பருந்தாய் இருந்தேனே
உன் விழியின் சிறையில் மாட்டிவிட்டாயே!
பொங்கிவரும் ஆழிபேரலை நானே – உன்
ஒற்றை சிரிப்பில் தனித்துவிட்டாயே! 
அடர் காடாய் இருந்த மனம்தானே – ஒரு
வேட்டைக்காரனாய் நுழைந்துவிட்டாயே! 
கற்கோட்டையென கருவித்திருந்தேனே  – அதை
சீட்டுக்கட்டு மாளிகையாய் சரித்துவிட்டாயே! 
சுழற்காற்றாய் சுற்றிவந்தேனே -உனை
மட்டும் சுற்ற விட்டாயே! 
அஃகினி பிழம்பேன்றிருந்தேனே – உன்
மூச்சு காற்றில் அனைத்துவிட்டாயே! 
 என்னடா ஏதடா மாற்றிவிட்டாய் என்னை
 புயலையும் பூப்போட்டு பூட்டிவிட்டாயே!
அவள் பாடி முடித்தும் அமைதி நிலவியது சில மணித்துளிகள், பின் தட தட வென எழுந்த கைதட்டல் ஓசையில் நினைவு திரும்பினாள் ருத்ரா
“வாவ்” என்றான் மலையப்பன்
“காதல் வந்தால் கவிதையும் வந்துடுது பாரேன்”என்று வியந்தான் ஏழுமலை
“இம்புட்டு லவ்சா? எப்படிப்பா ” என்றான் சுருட்டை
“நீ விடுமா தூக்கிட்டு வந்ததுனாச்சு தாலிகட்ட வெச்சுடுவோம்” என்று மார்தட்டினான் மண்ணாங்கட்டி
வீரமணியின் நிலையோ இருதலை கொல்லி எறும்பாய் ஆனது தன் மருமகளின் காதல் மகிழ்ச்சி என்றாள் அவள் காதலித்தது வேதாந்த் ஆயிற்றே “அவங்க இருக்கிற உயரத்துக்கு நம்மால முடியுமாடா?” கவலையுடன் அமர்ந்தவரை நண்பர்கள் சேர்ந்து தேற்றினார்கள்.
    அனைவரும் ருத்ராவின் காதல் அதிர்ச்சியில் இருந்து தேரும் முன்னரே ருத்ராவுக்கு ஒரு சூட்டிங் அழைப்பு வந்தது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள் ருத்ரா, இருக்காதா பின்னே வேதாந்த் கதாநாயகனாக நடிக்கும் படம் சூட்டிங் முடியும் வரை அவனை சைட் அடிக்கலாமே!
வேதாந்த்தின் வீடு
    தங்கத்தில் வெள்ளி இழையோடியது போல் அழகான படுக்கையில் அமைதியாய் தூங்கிக்கொண்டிருந்தான் வேதாந்த், அவன் அருகில் அவன் விழிப்பதற்காகவே காத்துக்கொண்டிருந்தான் தேவ்ராஜ். இது தேவ்ராஜின் அன்றாட பணிகளில் ஒன்று. வேதாந்த் விழித்து கால் கீழே படும் முன் அவன் செருப்பை அணிவிக்க வேண்டும், பல் விளக்க பற்பசை போட்டு தயாராய் கொடுக்க வேண்டும், குளியல் தொட்டியில் பதமாய் நீர் விளாவி வைக்க வேண்டும், குளித்துவரும் வேதாந்த்துக்கு உரிய உடை தேர்ந்தேடுத்து அணிவித்துவிட வேண்டும், இப்படி ஆரம்பிக்கும் தேவ்ராஜின் காலைவேளை (வேலை) இரவு வேதாந்த் உறங்கும் வரை தொடரும்.
     வேதாந்த்துக்கு இதில் அவ்வளவு உடன்பாடு இல்லை என்றாலும் தாய் அரங்கநாயகியின் சொல்லுக்காக அணைத்து பணிவிடைகளையும் ஏற்றான் அதற்காக தாய் அறியாமல் சிலசமயம் சிறு தொகை கூட தேவ்ராஜிற்கு வேதாந்த் வழங்குவது உண்டு. ஆனால் வீட்டு பொறுப்போடு பண வரவு செலவு கணக்குகள் அரங்கநாயகியையே சேர்ந்தது என்பதால் அதற்கு மிஞ்சி எதுவும் செய்ய இயலாது.
வேதாந்தின் வீடு அன்று பரபரப்பாய் இருந்தது காரணம் வெகு நாட்களுக்கு பிறகு ஸ்வாமிஜி வருவதாக கூறியிருந்தார். வேதாந்த் பிறந்த பொழுதே அவன் கலையுலகில் மின்னும் நட்சத்திரம் ஆவான் என்று வாக்கு கூறியவர் ஆகையால் அரங்கநாயகிக்கு சுவாமிஜியின் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு.
   வீட்டிற்கு வந்த ஸ்வாமிஜி தலை வாழை இலை விரித்து அதில் அமர்ந்தார், ஒவொருவராக வந்து ஆசீர்வாதம் பெற்று சென்றுகொண்டிருந்தனர் இறுதியாக வேதாந்த் ஆசி பெற வரவும் அவன் முகத்தை கூர்ந்து நோக்கியவர் அரகநாயகியை அழைத்து “உன் மகனின் தலைமேல் மரணத்தின் நிழல் படிவது தெரிகிறது, ஒரு ம்ரித்யுஞ்சய யாகம் செய், உன் உதவிக்கென்று உன்னை தேடிவருவாள் கன்னி ஒருத்தி தன் குடும்பத்ததுடன் , அவளை பற்றிக்கொள் உடும்பென, அக் கன்னியாகுமரியின் பார்வையில் உன்மகன் இருக்கும் வரை அவனை மரணம் நெருங்காது, எனது பரிபூரண ஆசிகள்” என்று ஆசீர்வதித்து விடைபெற தயாராகினர்.
    முதலில் அதிரிந்த அரங்கநாயகி பின்பு முழு கவனத்துடன் அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.
    வீட்டை விட்டு வெளியேறும் முன் எதிர்ப்பட்ட தேவ்ராஜை கூர்ந்த நோக்கி “பேராசையும், பொறாமையும், வஞ்சமும் உனக்கு நீயே வெட்டிக்கொள்ளும் சவக்குழி ஆகையால் கவனமாய் இரு” என்று எச்சரித்துவிட்டு வெளியேறினார். அதிர்ந்து நின்றான் தேவ்ராஜ். அவன் மனதிற்குள் வேதாந்த்தின் மீது இருக்கும் பொறாமையும் வஞ்சமும் அவன் மட்டுமே அறிந்தது.
   “அப்படி என்ன என்னை விட பெரிய அழகன் இவன், என்னிடம் இல்லாதது அவனிடம் உள்ளது பணம் பணம் மட்டுமே, அது மட்டும் என்னிடம் இருந்திருந்தால் என்னை சுற்றியும் இதனை பேர் இருந்திருப்பார்கள், இந்த வேதாந்த்தை கூட என் செருப்பை ஏந்த வைத்திருக்க முடியும்” என்று உள்ளுக்குள் கருவுவான். ஆனால் இது அவன் மட்டுமே அறிந்த ரகசியம் வெளி பார்வைக்கு மிகவும் அமைதியான அப்பாவி தோற்றம். மனதிற்குள் எவ்வளவு கருவினாலும் வெளியில் அமைதியாகவே அணைத்து வேலைகளையும் செய்வான், இல்லையென்றால் அரங்கநாயகியிடம் இதனை நாள் தாக்கு பிடிப்பது சுலபமில்லையே!
   “இந்த நேரத்திலா அவ்வளவு தூரத்தில் சூட்டிங் இருக்க வேண்டும்” மனதிற்குள் புலம்பிக்கொண்டிருந்தார் அரங்கநாயகி, வேதாந்த் மற்ற விசயங்களில் எப்படியோ ஒரு படத்தை ஒத்துக்கொண்டுவிட்டால் அதை முறையாய் முடித்து கொடுத்தபின்பே ஓய்வான் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாது தன் பணியை செவ்வனே முடித்துக்கொடுத்துவிடுவான் வேதாந்த்தின் வெற்றிக்கும் அவனை பல இயக்குனர்கள் விரும்புவதற்கும் இதுவே முதல் காரணம்.
  இவை மட்டும் அல்லாது அரங்கநாயகி இப்படத்திற்கு செல்ல தடை விதிக்காததற்கு இன்னுமொரு முக்கிய கரணம் தாரா, பெரும் கோடீஸ்வர குடும்பத்து ஒரே வயசான தாரா, சினிமா மோகத்தால் இந்த படத்தை தயாரித்து நடிக்கவும் செய்கிறாள். அதோடு மட்டும் அல்லாது வேதாந்த்தின் மீது தாராவுக்கு ஈடுபாடு இருப்பது போல் தோன்றியது. அப்படி மட்டும் இருந்துவிட்டால், கற்பனையே வானில் பறப்பதுபோல் இருந்தது அரங்கநாயகிக்கு.
   எவரும் அறியாத விஷயம் என்னவென்றால் அந்த தாராவின் மேல் தேவ்ராஜின் மோகம், அவள் செல்வச்செழிப்பின் மீது கொண்ட மயக்கம். விதி ஆடும் விளையாட்டு அது யாரை எங்கு இழுத்துச்செல்லுமோ?

Advertisement