Advertisement

வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றுகொண்டிருந்தது வீரமணிக்கு முதல் வலி இதயத்தை தாக்கும் வரை, தன் உயிர் பிரிந்தால் தனக்கு பின் ருத்ராவின் வாழ்கை வீரமணியை பயமுறுத்தியது அவளுக்கு ஒரு கல்யாணம் செய்துவிட்டால் தன் கடமை முழுமை அடையும் என்று தோன்றியது.
   மெதுவாக ருத்ராவிடம் கல்யாண பேச்சை ஆரம்பித்தார் “ரூடி மா சொல்றத கேளு என் கண்மூடுறதுக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணனும்டா அத பார்த்தாதான் என் கட்ட வேகும்” , ருத்ரா “சும்மா நெஞ்ச நக்காத மாமா உண்ணப்பத்தி எனக்கு தெரியாது, எனக்கு அதல்லாம் ஒத்து வராது விட்டுரு”  வீரமணி” ரூடிடா என் புலிக்குட்டி மாமா சொல்றத கெலுமா” கெஞ்சி கொஞ்சி ஒரு வழியாய் மாப்பிள்ளையை பார்க்க ஒத்துக்கொண்டாள், பார்ப்பதற்கு மட்டுமே, அவள் உள் மனமோ  “வாடா என் மச்சிகளா நல்ல வெங்காய பஜ்ஜிகலா” என்று குத்தாட்டம் போட ஆரம்பித்திருந்தது (வேறெதுக்கு வர்றவங்கள தெறிக்க விடதான்)
    ஒரு பக்கம் வீரமணி மாப்பிளை பார்ப்பதில் மும்முரமாய் இருக்க மறுபுறம் ருத்ராவோ அதை முறியடிக்க தன் நண்பர்களுடன் ரகசிய ஆலோசனையில் இருந்தாள்.
  மாப்பிள்ளை 1
       பார்ப்பதற்கு சுமாராக இருந்தான், வரும்போதே வீட்டை அளந்து கொண்டே வந்தான் (எவ்வளவு விலை போகும்முனு தங்கப்பா ) நிலைப்படியில் காலை வைத்தவன் தலையை எங்கிருந்தோ வந்த ஒரு கல் பதம் பார்த்தது “அம்மா ” என்ற அலறலில் வீரமணி பதறிபோய் பார்த்தார் நெற்றியில் ரெத்தம் வழிய நின்றிருந்தான் மாப்பிளை, “யாரு பாத்த வேலடா  இது” என்று நண்பர்கள் நால்வரையும் முறைத்தார்  நால்வரும் திரு திரு வென முழித்தார்களே தவிர வேறு பேசவில்லை மலையப்பன், ஏழுமலையின் தோலை சூரன்டினான் எனாண்டா எண்ரவனிடம் “மாப்பு அக்யூஸ்ட் யாருன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் மாமாவுக்கும் தெரியும் ஆனாலும் போடுற சீன பாத்தியா இந்தவீட்டுல இவ்வளவு கரைக்ட்டா குறிபாத்து யாரு எரிவா ருத்ராவ தவிர, ஆனாலும் தெரியாத மாறியே எவ்வளவு நடிப்பு இந்த நடிப்பை ஸ்க்ரீன்ல  காமிகாம போய்ட்டாரேடா பெரிய ஹரோ ஆகியிருப்பாரு மிஸ்ஸ்ஸாகிடுச்சுடா” என்று காதை கடித்தவனை முறைத்துக்கொண்டே சென்றார் வீரமணி. ஈ..ஈ..  என்று இளித்தார்களே தவிர ஒன்றும் பேசவில்லை, பிறகு யார் வாங்கி கட்டுவது.
“டேய் போதும், போய் ருத்ரவ கூட்டிட்டு வாங்க”வீரமணி ஆணையிட மாப்ப்ளிளை இப்போது திரு திரு வென முழித்தான் பின் பொதுவாய் பெண்ணை அழைத்து வருவது பெண்கள் தானே இங்கோ நாலு தடியர்கள் வேக வேக மாய் செல்கின்றனர், அவன் வயிற்றுக்குள் பயப்பந்து “வந்தவுடனே மண்டைய உடைச்சுட்டாங்க,இப்போ நாலு தடியனுக பொண்ண அழைக்க போறாங்க ஆரம்பமே இப்படி இருக்கே பொண்ண பாக்கலாமா இல்ல இப்படியே எந்திரிச்சு ஓடிடலாமா” அவன் குழம்பிக்கொண்டிருக்கையிலேயே ருத்ரா இறங்கி வந்தாள்
    ருத்ராவை பார்த்தவன் எழுந்து நின்றேவிட்டான் நால்வர் படை சூழ கம்பீரமாய் நடந்துவந்தவளை பார்க்கையில் பாட்ஷா பட ரஜினியை பார்ப்பது போல் இருந்தது அவனுக்கு வயிற்றில் இருந்த பந்து இப்போது நெஞ்சில் நின்றது மிரண்டு போய் நின்றவனை கவனித்த வீரமணி “தப்பா எடுத்துக்காதீங்க ருத்ரா என்னோட தங்கச்சி மக, என் தங்கச்சி இப்போ உயிரோட இல்ல எங்க ஸ்டண்ட் ஜனங்க மத்தியிலேயே வளந்துட்டதால இப்படியே டிரஸ் பண்ண பழகிட்டா நீங்க தப்பா எடுத்துக்காதீங்க”என்றவர் “வீட்ல பெரியவங்க யாரும் வரலையா” என்று பேச்சை மாற்றினார் அவரை பார்த்து சிரித்தவன் ” அப்பா அம்மா எல்லாம் ஆல் இந்தியா  டூர் போயிருக்காங்க, யு சீ வருசத்துக்கு ஒரு தடவ இப்படி போவாங்க நான் அவர்களுக்கு ஒரே பையன் அதனால எல்லாம் என் விருப்பம்னு சொல்லிட்டாங்க (அவன் கண்களுக்குள் சேரியில் குடித்து விட்டு உருளும் தன் அப்பாவும் குழாய் சண்டை போட்டுகொண்டு புகையிலையை குதப்பி கொண்டு நிற்கும் அம்மாவும் வலம் வந்தார்கள்) அவங்கள கூட்டிட்டு வந்தா என் கல்யாணம் நடக்குமா என்று எண்ணியவன் தன் தலையை சிலுப்பிக்கொண்டான், அதை தவறாக புரிந்து கொண்ட வீரமணி ருத்ராவிடம் “மாப்பிள்ளையை கூட்டிட்டு போய் வீட்டை சுத்திக்காமி ருத்ரா” என்றார் மனம் விட்டு பேசட்டும் என்று.
    “டேய் புலி குகைக்கு ஆட்ட அனுப்பி வக்கிறாரே   திரும்பும்னு நினைக்கிற” சுருட்டையிடம் கிசுகிஸ்த்தான் ஏழுமலை டவுட்டு தான் தனக்குத்தானே பதிலும் சொல்லிக்கொண்டான்  சுருட்டை தன் டிரேட் மார்க் புன்னகையை தவிர வேறு பதில் சொல்லவில்லை.
மாப்பிள்ளையும் ருத்ராவின் அழகில் சற்று மயங்கி தான் இருந்தான் அவன் வழிசலில் கடுப்பான ருத்ரா விடு விடு வென தன் அரை நோக்கி சென்றாள் அவளை பிண்டோடர்ந்தவனை வாசலில் நிறுத்தினாள் ருத்ராவின் இதழ்களில் ஒரு ரகசிய புன்னகையும் குடியேறியது அந்த புன்னகையில் இன்னும் கிறுகிறுத்து போனான் மாப்பிளை, அங்கு தொங்கிய கயிறை இழுக்கவும் அவன் மேல் பூமாரி பொழிந்தது பூரித்து போனான் மாப்பிளை (பாவம் பூக்களோடு அவன் மேல் விழுந்த சர்க்கரை தண்ணீரை கவனிக்காது போனான் )
    “உங்கள எனக்கு ரொம்ப பிடுச்சிருக்கு உங்களுக்கும் என்ன பிடிச்சிருக்குனு தெரியுது” என்று வழிந்தவாறே ருத்ராவின் அருகில் வர எத்தனித்தவனை நிமிர்ந்து பார்த்தவள் ஒரு எள்ளல் நகையோடு அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட எதிரில் இருந்த ஒற்றை சோபாவில் விழுந்தான் அவன் விழுந்த வேகத்தில் அதில் இருந்த குண்டூசிகள் அவன் பின்புறத்தை துளைக்க வலியில் முகம் அஷ்டகோணலாய் மாற தன் பிடிமானத்திற்காய் பக்கத்து மேசையை பற்றினான் பற்றிய நொடி அதில் இருந்த கரண்ட் வயரில் விழுந்தது அவன் கை உடல் முழுவதும் மின்சாரம் பாய நட்டிட்டு நின்றது தலை முடி போதாத குறைக்கு தயாராய் வைத்திருந்த கட்டை எறும்புகளை அவன் மீது வீச உடல்முழுவதும் தடித்து போனது நிலைகுலைந்து போனான் மாப்பிளை நிதானமாக அவன் அருகில் வந்தவள் “என்ன காண்பிடன்ஸ்டா உனக்கு இப்பவும் சொல்லுவயா ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லு அட சொல்லுப்பா என்று கூறிக்கொண்டே (மிரட்டிக்கொண்டே)” மேலும் முன்னேறியவளை பார்த்தவன் தன் பின்னங்கால் பிடரியில் பட பிடித்தான் ஓட்டம்.
மாப்பிள்ளை 2
   அடுத்து வந்தவனோ கட்டுமஸ்தான ஆண்கள் மத்தியில் பாண்ட் ஷர்ட் சகிதம் அமர்ந்து இருந்தவளை பார்த்ததும் முகம் சுளித்தான் “இங்க பாருங்க பொண்ணா லட்சணமா இல்லாம இது என்ன டிரஸ் என் பொண்டாட்டி இப்படி டிரஸ் பண்ணறது எல்லாம் எங்க குடும்பத்துக்கு சரிவராது “என்று வீராவேசமாய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ருத்ரா விட்ட உதையில் நான்கடி தள்ளி விழுந்தான் பக்கத்தில் இருந்த அவனின் பெற்றோர் அலறவே “ஏய் மூடு ” என்று ஒரே சத்தத்தில் ஆப் செய்தவள் அவன் சட்டையை கொத்தாய் பிடித்தவள் “என்னடா பொண்ணா லட்சணமா இல்ல என்ன பொண்ணா லட்சணமா” என்று உலுக்க மிரண்டு போயினர் அப்புறமென்ன ரெண்டாவது மாப்பிள்ளையும் ஓட்டம் தான்.
மாப்பிள்ளை 3
     மூன்றாவது குடும்பமோ பொண்ணுக்கு பாட தெரியுமா, ஆட தெரியுமா, சமையல் தெரியுமா என்று வழக்கமான கேள்விகளை கேட்கவும் காண்டானவள் உள்ள ரூமுக்கு வா ஆடி காமிக்கிறேன் என்று எழுந்து அறைக்குள் செல்ல குசியானான் மாப்பிள்ளை வீரமணியும் நண்பர்களும் கலவரத்துடன் பூட்டிய அரைக்கதவையே பார்த்துக்கொண்டு நிற்க மாப்பிள்ளையின் பெற்றோரோ “கவலைப்படாதீங்க உங்க பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது”என்று தைரியம் சொல்லிக்கொண்டிருந்தனர் (வீரமணியின் கவலை மாப்பிளையை நினைத்து என்பது பாவம் புரியவில்லைஅவர்களுக்கு)உள்ளே சென்றவன் ஆர்வக்கோளாறில் ருத்ராவின் தோளில் கை வைத்த நொடி கதவை பெயர்த்துக்கொண்டு வெளியில் விழுந்தான் அவன் பெற்றோர்கள் ஆவென திறந்த வாய் மூடாது நிற்க “டோர் டெலிவரி இதுதாண்டா”என்று விழுந்து விழுந்து சிரித்தான் மண்ணாங்கட்டி மற்றவருக்கும் சிரிப்பு வந்தாலும் வீரமணியின் கோபப்பார்வைக்கு பயந்து சிரிப்பை வாய்க்குள்ளேயே புதைத்தனர்.
     ருத்ரா என்ற மாமனின் அழைப்பு எதுவும் அவள் காதில் விழவில்லை ஓடிய மாபிளைளை வீட்டாரையும் தன் நண்பர்களையும் ஒரு பார்வை பார்த்தவள் இறுதியாய் கல்யாண தரகரிடம் வந்தாள் அவரின் சட்டையை கொத்தாய் பிடித்து தூக்கியவள் “இனி மாப்பிளை மை…. னு இந்த பக்கம் வந்த உசுரு தாங்காது” என்று தள்ளிவிட அவரை பிடித்த வீரமணி பேச ஆரம்பிக்கும் முன் தரகரே “எத்தனை மாப்பிளை வந்தாலும் ஒர்கவுட் ஆகாது சார்” என்றவரை அனைவரும் விசித்திரமாய் பார்க்க “உங்க பொண்ணு மனசுல யாரையோ வச்சிக்கிட்டு வரவ்வகளை விரட்டுது அத என்னனு பார்த்திட்டு அப்புறமா என்ன கூப்பிடுங்க” என்று பேச பேச பளார் பளார் என்று அவர் கன்னம் பழுத்தது.
   தன் இரு கைகளாலும் கன்னத்தை தாங்கியபடி “முதல்ல உங்க பொண்ணு மனசுல என்ன இல்ல இல்ல யாருனு பருங்கையா அத விட்டுட்டு என் கன்னத்துல மத்தளம் வாசிச்சிகிட்டு” புலம்பியவாறே வெளியேறினார்.
    ருத்ரா ருத்ரத்தின் எல்லையில் இருந்தாள் அதை உணராது தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “ருத்ராவா? காதலா?”என்று தாக்குப்பிடிக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.அவர்களின் சிரிப்பு ருத்ராவின் பொறுமையை துடைதெரிய “ஆமா நா காதலிக்கிறேன்” என்று உச்சத்தில் ருத்ரா கத்திய கத்தில் ஒரு நிமிடத்தில் உலகமே நின்றுவிட்டதோ எனும் அளவு அமைதி நிலவியது.

Advertisement