Advertisement

ம்ருத்யஞ்சய யாகம்
என்னதான் ருத்ரா தன்னை தானே வேதாந்த் விருப்பத்திற்கு மாற்ற முயன்றுகொண்டிருந்தாலும் இவை அனைத்தும் செல்லுபடி ஆவது ருத்ரா வேதாந்த் அருகருகில் இருந்தால் மட்டுமே. அரங்கநாயகியை மீறி அவ்வீட்டினுள் நுழைவதும் முடியாத ஒன்று. என்னதான் ருத்ரா வேதாந்த்தின் தீவிர ரசிகையாக இருந்தாலும் சினிமா துறையில் ஸ்டண்ட் பிரிவில் இருந்தாலும் எப்போதும் பைக் சாகசங்களிலும் சில காட்சிகளில் கதாநாயகிகளுக்கு டூப்பாக மட்டுமே வேலை செய்ததால் ஒன்று எப்பொழுதும் முகத்தை முழுதாய் மூடிய தலைக்கவசமோ அல்லது முதுகு புறத்தை மட்டுமே வேதாந்த் பார்த்திருக்க முடியும் அந்த ஒருநாள் விபத்தின் பொழுதும் ருத்ரா தன் தலை கவசம் அணிதிருத்தாள் ஆகையால் அடையாளம் தெரியுமோ என்று பயம் இல்லை நண்பர்களுக்கு.
எப்படி வேதாந்த்தின் வீட்டிற்குள் நுழைவது என்று தீவிரமாக நண்பர்கள் அனைவரும் சிந்தித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல் காதில் வந்து விழுந்தது செய்தி வேதாந்த்தின் வீட்டில் நடக்கும் ம்ருத்யஞ்சய யாகமும் அதற்காக அவர்கள் தேடும் குடும்பமும்.
அன்று அந்த வீட்டின் வரவேற்பறையை நடந்து நடந்து அளந்துகொண்டிருந்தனர் நண்பர்களும் ருத்ராவும் எப்படி வேதாந்த்தின் வீட்டிற்குள் யாகத்தை காரணமாகிக்கொண்டு நுழைவது என்ற தீவிர சிந்தனையே.
பொறுத்து பொறுத்து பார்த்த மஞ்சரி தன் பொறுமையும் குலைந்து அவர்களையும் கலைத்தாள்
“இப்படியே அலைந்து கொண்டிருந்தால் சரியாகிற்றா எமக்கு ஒரு யோசனை உதயமாகிறது பொருந்துமோ கூறுங்கள், அங்கு நடப்பது யாகம் ஆகையால் நீங்கள் ஒரு அந்தண குடும்பமாக செல்வது உசிதம் என்று என் கருத்து”
“நீ சொல்றதெல்லாம் சரிதான் மஞ்சரி ஆனா எங்களை எல்லாம் பாரு ஒரு மூஞ்சியாது அய்யர் வூட்டு மூஞ்சியாட்டம் இருக்கா?” சுருட்டை
“நீங்கள் கலைத்துறையை சேர்த்தவர் ஆகிற்றே ஒப்பனையில் மாறாத முகமும் உண்டோ?” மஞ்சரி
“அப்படிங்கற ட்ரஸ்ஸ மாத்திடலாம் ஆனா இவுனுக வாயதொறந்தா மாட்டிக்கிடுவோமே?” ருத்ரா
“உண்மைதான்” மஞ்சரி
“சூப்பர் ஐடியா நா சொல்டா?” ஏழுமலை
“நீ மொதல்ல சொல்லு அது சூப்பரா இல்லையானு நாங்க சொல்றோம் ” மலையப்பன்
“நம்ம தெரு கோவில் பூசாரி இருக்காரே அவராண்ட ஹெல்ப் கேட்டா என்ன, அந்த பக்கத்து காலனி காவாலிபய அவர் பொண்ணுமேல ஆசிட் அடிக்க வந்தானே நம்ம ருத்ரா தான அந்த பொண்ண காப்பாத்துச்சு, கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாருடா” ஏழுமலை
“டேய் சூப்பர் டா சூப்பர் டா நண்பா….” கத்திகொண்டே ஏழுமலையை தூக்கி சுற்றி இறக்கிவிட்டாள் ருத்ரா 
மஞ்சரியின் அறிவுரையின் படி சினிமா துறையில் நம்பகமான நண்பர்களான ஒப்பனையாளரையும் ஆடை வடிவமைப்பாளரையும் அணுகினர், முதல் தேவை உருவ மாற்றம் அல்லவா?
அவர்களின் திறமையினால் சுருட்டையின் சுருண்ட முடி நீட்டப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டது பின்மண்டையில் குடுமி ஏறியது, உருண்டை கண்ணாடியுடன் தாதாவாக உருமாறிப்போனான்.
8247
இயல்பிலேயே குள்ளமான தோற்றம் கொண்ட மண்ணாங்கட்டி அவனுக்கு இருந்த அரும்பு மீசையும் மளிக்கப்பட்டு ருத்ராவின் தம்பியாகி போனான்.
8248
சற்று பருத்த உடல்வாகு கொண்ட ஏழுமலை ஒப்பனை உடை மாற்றப்பட்டு தந்தையாக உருப்பெற்றான்.
8249
வெளிர் நிறமும் கலையான முகமும் கொண்ட மலையப்பன் ருத்ராவின் மாமன் மகன் கதாபாத்திரம் ஏற்றான் (இந்த கேரக்டர் வேற எதுக்கும் இல்லங்க வேதாந்த்தோடா பொறாமையை தூண்டவாம், ஓவரா யோசிக்கறாங்கப்பா தாங்கல)
8250
ருத்ராவுக்கு அழகிய பாவாடை தாவணியும் பின்னாலும் பூவுமாக அலங்கரிக்க பட்டது (அதுவும் பேண்டுக்கு மேலதாங்க இன்னமும் அம்மணிக்கு உள்பாவாடை போட வரல, புடவையும் ரொம்ப கஷ்டமா இருந்ததால காஸ்ட்யூம் மாத்திட்டாங்க ருத்ராவை மாதுரத்துக்கு இது ஈஸி அதான்)
8253
உடை மாறினாலும் நடையும் பாவனையும் மாறவேண்டும் அல்லவா அதில் தான் விழிபிதுங்கி போயினர் ஐவரும்.
இதன் காரணமாக அவர்கள் தெருவில் உள்ள கோவில் அர்ச்சகர் உதவியை நாடினர்.
8252
தன் மகளை காப்பாற்றிய ருத்ராவின் மீது அவருக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு அப்படிப்பட்ட ருத்ரா உதவி என்று வரும்பொழுது மறுப்பாரா என்ன? முரட்டுத்தனமும் கோமாளித்தனமும் கூடிய அவர்களின் நடையையும் லேசான சென்னை வழக்கும் கொண்ட அவர்களின் பேச்சுவழக்கையும் மாற்றுவதற்குள் அறையுயிர் ஆகி போனார்.
நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் பயில்வான் நடை எங்கே? பூமிக்கே அதிராது நாடாகும் அய்யர் வீட்டு நடை எங்கே? மூச்சுக்கு முன்னூறு சோமாறியும் காசமாலமும் தெறித்து விழும் இவர்கள் மொழி எங்கே? யாரை பார்த்தாலும் வாங்கோ, போங்கோ என்று மரியாதைத்தன்மையுடன் விளித்து பழகிய இவர்கள் மொழி எங்கே?
எல்லாவற்றையும் விட மந்திரங்கள் உச்சரிப்பது அப்பப்பா சுக்லாம் பரதரம் என்றால் என்னாது சுளுக்கெடுக்கணுமா என்றனர் சரஸ்வதி நமஸ்துப்யம் என்றால் சரஸ்வதி நாஸ்தா துன்னனுமா என்றனர் எவ்வளவு முயன்றும் முழுமையாக மாற்றமுடியாது போகவே அர்ச்சகரையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர் தாங்கள் செய்யும் தவறுகளை பூசி மொழுகுவதற்காக.
அனைவரையும் பார்த்து மஞ்சரி தன் திருப்தியை தெரிவித்தபின் வேதாந்த் வீட்டை நோக்கி படையெடுத்தது அறுவர் படை காதல் கோட்டையை கைப்பற்ற வேண்டுமே.
இங்கு வேதாந்த்தின் வீட்டில் தாராவுடனான திரைப்பட இயக்கம் முடிவு பெற்றவுடன் யாகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தது ஆறு நாட்கள் மூவாயிரம் ஆஹுதிகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது கூடவே ஒரே கன்னிப்பெண் கொண்ட குடும்பத்திற்கு இருபத்து ஒரு நாள் உணவும் உடையும் உறைவிடமும் தந்து உபசரிக்க வேண்டும். சுவாமிஜி கூறிச்சென்ற வழிமுறைகளின் படி அனைத்தும் நடந்துகொண்டிருந்தது ஆனால் ஒரே ஒரு கண்ணியுடைய குடும்பம் மட்டும் கிடைக்காமல் இருந்தது. அப்படி வருகின்ற குடும்பத்தை பற்றியும் வேதாந்த்தின் கண்டம் பற்றியும் எந்த பத்திரிகை துறைக்கும் சந்தேகம் வராது இருக்க வேண்டும் எனவே யாகத்தின் உதவிக்காய் ஒரு குடும்பத்தை அழைப்பதாய் மட்டுமே அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. யாகத்திற்கு தாராவும் வருவதால் மிகவும் கவனமாய் அனைத்தையும் கையாண்டார் அரங்கநாயகி.
வேதாந்த்தை காணும் பொழுதெல்லாம் தேவ்ராஜின் வன்மம் ஏறிக்கொண்டே சென்றது எவரும் அறியாமல் இயற்கையாய் சில விபத்துகளை ஏற்படுத்திக்கொண்டே இருந்தான். இந்த விபத்துகளின் காரணமாக பயந்து போன அரங்கநாயகி யாகத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க விரும்பினார் எனவே அர்ச்சகர் மூலம் அறியப்பட்ட ப்ராமண குடும்பத்தை எந்தவித விசாரிப்பும் இன்றி உடனடியாக வரவழைத்தார், யாகமும் தொடங்கியது.

Advertisement