Advertisement

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு
ஆடு ஒரு அழகான  கிராமம், எங்கும் பச்சை போர்த்திய மலை, துள்ளி திரியும் மான் கூட்டம், மயில்கள் ஆடும் நந்தவனம், குயிலும் குருவியும் கிளிகளின் சங்கீதமும் அதோடு அருவியின் ஜாதியும் சேரும் சொர்க்கபூமி,  வீரம், கொடை, அன்பு , பண்பு என்று எதிலும் சோரம் போகாத மக்கள்.பூமியில் ஒரு சொர்கம் உண்டு என்னுபடியான அக் கிராமத்தின் அரசன் நாகர்குல தலைவன் நாகேந்திரவர்மன்.பல மனை கொள்ளும் அக்காலத்தில் கூட தன் மனை பூவுலகை நீங்கிய பின்னும்  நினைவுகள் சுகம் என்று வாழும் ஜீவன்.
அவர்களின் காதல் பரிசாய் தன் தந்தைக்கு மட்டும் அன்றி அக் கிராமத்திற்கே இளவரசியாய், தேவதை பெண்ணாய், உயிர் கொண்ட ஓவியமாய் வாழ்ந்துவந்தால் தேவமஞ்சரி.
         இளம் மஞ்சள் நிறத்தில் அழகோவியமாய், அச்சம் ,மேடம், நாணம், பயிர்ப்போடு பொறுமையின் உருவாய் கண்களில் கனவும் கருணையும் இழையோட வெள்ளை உள்ளம் கொண்ட பாவையை காண காண தந்தையின் உள்ளம் பெருமையில்  விம்மும். தண் மகளின் அழகிற்காகவும் குணதிற்காகவும் பல நாடு அரச இளவரசர்கள் போட்டிபோட நாகேந்திரவர்மனுக்கு கர்வம் உச்சத்தில் இருந்தது பாவம் பெண் மனம் காதல் கொண்டால் பணம் பதவி எதயும்  ஈடாக ஏற்காதே இந்த உண்மையை உணராது போனது விதியின் சதியன்றி வேறு கூற இயலாது.அந்த உண்மை புரியும் பொழுது காலம் கடந்துவிடுமே!
     தேவமஞ்சரியும் மணிமாறனும் ஈருடல் ஓர் உயிராய் காதலில் திளைத்திருந்த காலம் அது தெளிந்த நீரோடையாய் இன்பம் மட்டுமே வாழ்வாய் சென்று கொண்டிருந்த மஞ்சரியின் வாழ்வில் பெரும் அழிப்பேலரலையென  வந்தான் விருபாக்ஷன்.
     விருபாக்ஷன் ஒரு ஈவு இரக்கம் இல்லா சூனியக்காரன், தான் பெரும்  சக்தியும்       செல்வமும் பெற எல்லா இழிநினளிக்கும் செல்ல கூடியவன். பல உயிர்களை பலி கொண்டு த்ன் இலக்கை அடைய இறுதியாய் அவன் வேண்டியது எல்லா நற்குணங்களும் சர்வ லக்ஷணமும் பொருந்திய உத்தமக்குல பெண்ணை. அப்பெண்ணின் ஆத்மாவை அவன் ஆராதிக்கும் தீய வேதாளத்திற்கு சமர்ப்பித்தால் அவன் வேண்டியது கிட்டிவிடும்.எத்தனையோ பெண்களை தேடி தேடி இறுதியில் அவன் பார்வையில் விழுந்தால் பாவை மஞ்சரி.
இளவரசியை அவ்வளவு எளிதில் நெருங்கிவிட்ட முடியுமா, ஆகவே தக்க தருணத்திற்காக காத்திருந்தான் விருபாக்ஷன். காலமும் அவனுக்கு பதில் தந்தது.
      மஞ்சரியின் காதல் அவள் தந்தையின் காதிற்கு சென்றது. குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.  என்றுமே தன்னை மீறாத பெண் எவனோ ஒருவானுக்காக தன்னை எதிர்த்ததில் அவரின் கர்வம் ஆடி வாங்கியது.விளைவு கண்மண் தெரியாத கோவத்தில் மஞ்சரியை நந்தவனத்தில் காவல் வைத்தார்,தந்தைக்கும் மகளுக்கும் எழுந்த வாக்குவாதத்தில் எழுந்த கோவத்தின் விளைவால் வார்த்தைகள் தடித்து விழுந்தது “மஞ்சரி என் சொல் கேளாமல் பிடிவாதம் செய்யாதே அது உன் காதலன் மணிமாறனின் உயிர் விழுங்கிவிட போகிறது”என்ற நாகேந்திரவர்மனின் வார்த்தைகள் மஞ்சரியை விக்கித்து நிற்க செய்த்துவிட்டது.
      கவலையில் மூளை மறைத்து பொய் மஞ்சரி நின்ற சமயம் அது, எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருந்த அவளின் நிலையை விருபாக்ஷன் உடும்பாய் பற்றினான்.
      மஞ்சரியிடம் சென்றவன் “குழந்தாய், என்னை உன் தந்தையாய் நினைத்து கொள்வாய் அம்மா” திடீர் என்று தன முன் தோன்றி பேசிய ஒருவரை பயமும் அதிர்ச்சியும் கலந்து விழி விரித்து நோக்கினாள்.
அவளின் பாவத்தில் என்ன ஊரு அழகு என்று ஒரு சிறு நொடி சலனம் கொண்டாலும் உடனே தெளிந்தவன் மேலும் தொடர்ந்தான் “என்னை கண்டு பயம் கொள்ள தேவை இல்லை மகளே நான் முற்றும் துறந்தவன் உன் புனிதமான காதலை பற்றி யாம் அறிவோம், என்னால் உனக்கு உதவ முடியும் “என்றவனை ஏக்கமும் ஆவலுமாய் நோக்கியவளை கண்டு மேலும் தொடர்ந்தான் “உங்கள் தந்ததையின் ஆத்மா தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டுளதாம்மா நாம் ஒரு பூஜை செய்து அதை விடுவிக்கும் பொழுது நம் எண்ணங்கள் ஈடேறி வெற்றி கிட்டும்” தீபத்தில் உள்ளிருக்கும் கருமையாய் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசினான்.
     மஞ்சரி முதலில் திகைத்தாள் பின் இது உண்மையாய் இருக்குமோ என்ற ஐயம் தோன்றியது “இல்லையென்றல் கருணையே வடிவான தன் தந்தை தன் மீது உயிரையே வைத்திருக்கும் தன் தந்தை தான் கேட்டு இதுவரை எதையும் மறுத்திடாத தன் தந்தை தான் காதலிப்பவனையே கொல்லும் அளவுக்கு துணிவாரா” பாவம் பேதை பெண் காதல் என்று வருகையில் பெற்றவரின் சுபாவம் வேரு என்பதை அறிய தவறிவிட்டாள். விருபாக்ஷன் வெற்றிகரமாக மஞ்சரியின் உள்ளதை கலைத்தே விட்டான்.
     விருபாக்ஷன் கூறியது போல் ஒரு மண்டலம் பயபக்தியாய் விரதம் இருந்து வந்தாள், நாகேந்திரவர்மனும் மகள் மனம் மாறி விட்டாள் என்று தன் பார்வையை சற்றே தளர்த்தினார்.இந்த சமயத்தில் முழுதுமாய் தவித்து போனது என்னவோ மணிமாறன் தான். தன் தேவதையை காணமுடியா ஏக்கத்தில் வெறும் கூடாய் அலைந்தான்.
     விருபாக்ஷன் கூறியபடியே கடுமையான மண்டல பூஜையை முடித்த இறுதிநாளில் அந்த பெரிய ஆலமரத்தின் அடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாகத்தின் முன் அமர்ந்தாள். ஏதோ தவறு என்று அவள் உணரதுவங்கும் முன் காலம் கடந்திரு்ந்தது, தன் உடல் கூடாய் சரிவதை ஆன்மாவாய் மஞ்சரியால் கானமட்டுமே முடிந்தது.
     எப்படியோ விருபாக்ஷனின் கொடிய எண்ணத்தை அறிந்து கொண்டு தன் உயிர் காதலியை காக்க ஓடி வந்த மணிமாறன் அவளை அடையும் முன் விருபாக்ஷனின் மந்திர சக்தி அவனின் உடலில் பாய்ந்தது தன் உடலில் இருந்து உயிர் பிரியும் வலியை விட கொடிய வலியை அனுபவித்தாள் மஞ்சரி.இருவர் உடலும் ஒருசேர மண்ணில் வீழ்ந்தது.
      மணிமாறன் மரணத்தை கண்டு விருபாக்ஷன் கருவித்திருக்கும் சில நொடி துளிகளில் தன் மந்திர கட்டுகளை உடைத்து வெளியேறியது மஞ்சரியின் ஆன்மா இறந்த தன் காதலனை காண கூட விடாமல் அவள் ஆன்மாவை துரத்தியது ஒரு குரல் ஆம் தன் ஆன்மாவையும் தன் காதலியின் அன்னமாவிற்கு அரனாய் அமைத்து நின்றான் மணிமாறன் அவளின் கட்டுகளை சில நொடிகள் தளர்த்தியதும் அவனின் அந்த காதலின் சத்தியே.
      தன் கட்டுகளை உடைத்து வெளியேறிய மஞ்சரியின் ஆன்மா முழு அரச பாதுகாப்பில் இருக்கும் கலையரங்கில் அன்று தீட்டப்பட்டிருந்த அழகிய அவளின் ஓவியத்தில் தன்னை அடித்துக்கொண்டது.
      இதற்கிடையில் தன் மகளின் அகால மரணத்தையும் அதற்கு காரணமானவனையும் பற்றி அறிந்து கொண்ட நாகேந்திரவர்மன் விருபாக்ஷனை கழுவில் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார்.தன் நிலை அறிந்த விருபாக்ஷன் மஞ்சரியை பற்றியும் வேதாள மரத்தை பற்றியும் அதனால் அடையக்கூடிய பெரும் சத்தி மற்றும் செல்வம் குறித்தும் ஓலையில் எழுதி ஒரு பாறையின் கீழ் மறைத்து வைத்து தப்பிப்பதற்கு முயலும் முன் அரச காவலர்கலின் கைகளில் சிக்கினான். கழுவில் ஏறும் முன்பும் “உன் மகளின் ஆன்மாவை காத்ததாக எண்ணாதே ஆசை அது மனிதனில் உள்ளவரை உன் மகளின் ஆன்மாவிற்கு அடிமை வாழ்வு தப்பாது” என்று விகாரமாக சிரித்து கொண்டே தன் உயர் நீதான்.
    விருபாக்ஷனின் வார்த்தைகள் நாகேந்திரவர்மனின் உயிரையும் உறையச்செய்தது என்று சொன்னால் அது மிகையாகாது “தன் பிடிவாதமும் கர்வமும் தன் மகளின் உயிரையும், காதலித்ததை தவிர ஒரு குற்றமும் செய்யாத மணிமாறனின் உயிரையும் குடித்தது மட்டுமல்லாமல் அவளின் ஆன்மாவையும் நிம்மதியில்லாமல் செய்யுமா, என்ன செய்த்துவிட்டேன் என் மகளுக்கு நான்” என்று எண்ணி உருக்குலைந்து போனார்
   தன் மகளின் ஆன்ம அடைபட்ட ஓவியத்தை ஒரு சித்தரின் உதவியால் அறிந்துகொண்ட மன்னன் யாரும் அந்த ஓவியத்தை அடைந்து விடாதபடி வழிசெய்ய அந்த கலையரங்கத்தின் அடியில் ஒரு சுரங்கம் அமைத்து, மூலிகைகளை கொண்டு ஓவியத்தை அழிந்து விடாமல் பாடம்  செய்து உரிய பாதுகாப்புடன் ஒரு இரும்பு பேழையில் பத்திரம் செய்தார். அந்த சித்தரின் உதவியால் தூய உள்ளம் கொண்ட  பெண்ணை தவிர வேறு எவராலும் திறக்க முடியாத படி மந்திர தகடு அமைத்து சுரங்கத்தில் அந்த பேழையை பதுக்கினார்.
     சிறிது காலத்திலேயே மகளின் பிரிவுத்துயரால் மன்னரும் இறந்துவிட அந்த ராஜ்யமே அழிந்து போனது.

Advertisement