Advertisement

8
பணிக்கு செல்ல கிளம்பிவிட்டானே தவிர ஏனோ செல்ல மனம் வராமல் அங்கேயே இருந்தான்.
“டேய் என்னடா? மீட்டிங் இருக்குன்னு அந்த குதி குதிச்ச இப்போ இங்கயே இருக்க?” என்று கேட்டார் சுந்தரி.
“இல்லம்மா மீட்டிங்க நாளைக்கு தள்ளி வச்சிடாங்க. அதான் லேட்டா போக போறேன்” என்று சோம்பல் முறித்தபடி சோபாவில் அமர்ந்து செய்தி தாளை புரட்டினான்.
குறிப்பிட்ட பக்கத்தில் பார்த்தவன், விழிகளை மட்டும் மீராவிடம் சுழட்டினான்.
அதில் படித்த செய்தியின் தலைப்பு, “வளர்ந்து வரும் இளம் பெண்”
ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் தொழிலை மேம்படுதமுடியும் என்பதை நிரூபிக்க, கடினமான துறையை தேர்ந்தெடுத்து படித்து இன்று வெற்றிகரமாக தொழிலில் வளர்ந்து வரும் இளம் பெண் ஸ்ருஷ்டிமீரா என்று போடப்பட்டிருந்தது.
‘செய்வா! இவ ஆள் தான் பார்க்க இப்படி இருக்கா. ஆனா பயங்கர தைரியம் போல’ என்று நினைத்தவன்.
‘ஒரு தொழிலை இவ்வளவு நல்ல பெயரோடு நடத்துறாள்னா நிச்சயம் தைரியமான பொண்ணா தான் இருப்பா!! அப்புறம் என்ன பிரச்சனை??? இப்படி மாசமா இருக்கும்போது புருஷன்கூட கோவிச்சிக்கிட்டு தனியா வாழற அளவுக்கு முடிவு எடுத்துருக்கா?? எப்படி இருந்தாலும் இவ புருஷன்கூட சேர்த்து வச்சிடனும்’ என்று ஸ்ருஷ்டிமீராவை இன்னொருவருடைய மனைவியாக நினைத்து காவல் அதிகாரியாக செயல்பட்டான்.
வேண்டாம் என்று மறுத்தவளை வற்புறுத்தி சாப்பிட வைத்தாள் சுந்தரி.
“சரிங்க மேடம் நான் கிளம்பறேன்.நாளைக்கு காலைலயே வீட்டுக்கு குடி வந்துடறேன்” என்று புறப்பட..
“இந்த மேடம்லாம் வேண்டாம் என்னை ஆண்ட்டி இல்லன்னா அம்மான்னே கூப்பிடு” என்றதும் லேசாக முகம் பூத்தவள்.
“சரிம்மா! இனி நான் அம்மான்னே கூப்பிடுறேன்” என்றாள்.
சம்மதமாய் ஒரு புன்னகையை தவழவிட்டாள் சுந்தரி.
நடந்தவைகளை ஒர விழியால் பார்த்தபடி இருந்தான் க்ரீஸ்வந்த்.
நேராக தன் போலீஸ் வாகனத்திடம் சென்றவன்.

“அண்ணா! நீங்க நேரா ஸ்டேஷன்க்கு போய்டுங்க. நான் கார்ல வந்துடறேன்” என்றான்.

“சரிங்க சார்!” என்று கிளம்பியவுடன்.
“போலாமா? போற வழில உங்கள டிராப் பண்ணிட்டு போறேன்” என்றவனிடம், “இல்ல! எனக்கு இப்போ கொஞ்சம் பரவால்ல. நானே போய்டுறேன்” என்றாள்.
“இங்க பாரும்மா நீ ரொம்ப டையர்ட்டா இருக்க. அதனால என் பையன் கூடவே போய்ட்டு ரெஸ்ட் எடுத்துக்க” என்றாள் சுந்தரி.
சிறிது யோசித்தவள். “சரி!” என்றாள்.
‘ஹப்பாடா!! சரின்னு சொல்லிட்டா.போலீஸ்காரனையே நம்ப மாட்றா??’ என்று யோசித்தவன்.
“டேட்! நான் கார சர்வீஸ் விட்டுடறேன். நீங்க ஈவினிங் எடுத்துக்கோங்க” என்றான்.
“சரி டா” என்றார் கண்ணன்.
“வாங்க மிஸஸ்.மீரா” என்றவனை முறைத்து. “கால் மீ மிஸ்.மீரா” என்றாள்.
கிருஷ்வந்த் காரின்முன் கதவை திறந்துவிட, நிராகரித்து பின் கதவை திறந்து ஏறினாள் மீரா.
மெளனமாக சிறிது நேர பயணம் போக, “உங்க அப்பா அம்மால்லாம் எங்க இருக்காங்க?” என்றான்.
பதில் ஏதும் கூறாமல் அமைதியாக விழிகளை மூடி வந்தாள்.
“அம்மா சின்ன வயசுலயே தவறிட்டாங்க. போன வருஷம் அப்பா தவறிட்டாங்க.” என்று விழிநீரை மறைக்க வெளியே வேடிக்கை பார்த்தாள்.
அவளின் முகமாறுதல்களை கண்ணாடி வழியே கவனித்தவன்.
“உங்க கூட பிறந்தவங்க யாரும் இல்லையா?” என்றான்.
“ஹலோ நீங்க யாருன்னே எனக்கு தெரியாது. நீங்க போலீசா இருக்கலாம். அதுக்காக என்னோட பர்சனல் விஷயத்துல தலையிடாதிங்க. நான் உங்ககிட்ட எந்த கம்ப்ளைண்டும் கொடுக்கல. முடிஞ்சா இறக்கி விடுங்க இல்லன்னா வண்டிய நிப்பாட்டுங்க நான் இங்கயே இறங்கிக்கிறேன்.” என்று கார் கதவை தொட.
“ஹலோ என்ன பண்ற நீ? முதல்ல கதவை மூடு. நான் இனி என்னைக்குமே உன்னை பத்தி கேட்கமாட்டேன். போதுமா?” என்று முகத்தை திருப்பி கொண்டான்.
ஸ்ருஷ்டிமீராவிற்கு அவளை நினைத்தால் அவளுக்கே கோபமாக வந்தது. முன் பின் தெரியாத தனக்கு இவ்வளவு உதவி செய்த குடும்பத்தை சேர்ந்த ஒருவரை இவ்வாறு பேசுவதற்கு. ஆனால் என்ன செய்வது. வாழ்க்கை அவளுக்கு கற்று தந்த பாடம். தன்னை தவிர யாரையும் முழுசாய் நம்பகூடாது என்பது.
அதுவும் சிறுவயதில் இருந்தே தன் கஷ்டங்களை அடுத்தவரிடம் சொல்லி அனுதாபம் தேடுவது அவளுக்கு பிடிக்காது. தன் நிலை கண்டு அனுதாபம் படுபவர்களையும் பிடிக்காது.
“நீங்க எங்க போகனும்னு சொல்லவே இல்ல?” என்றான் அவள் முகத்தை பார்க்காமல்.
அவளின் முகம் அவனை தனக்கு நெருக்கமானவளாக நினைக்க தோன்றியது. திருமணம் ஆன பெண்ணை இப்படி நினைப்பது தவறு என்று அந்த எண்ணத்தை தனக்குள் அழித்துவிட்டான்.
“நான் சின்னதா ஒரு ஆபிஸ் நடுத்துறேன் அங்க போகணும்” என்றவள் காலையில் நடந்த சம்பவங்களை அசைபோட ஆரம்பித்தன.
சுதன் ஆபிசில் இருந்து நேராக தன் வீட்டிற்கு வந்தவளுக்கு அண்ணி பத்ரகாளியாய் நிற்பதை பார்த்து வயிற்றில் புளியை கரைத்தது.
“அண்ணி. வாங்கண்ணி. எப்போ வந்திங்க?” என்று கேட்டாள்.
“ஹ்ம்ம் நான் வந்ததிருக்கட்டும். என் வீட்ல வந்து எனக்கு தெரியாம இப்படி திருட்டுத்தனமா இருக்கியே உனக்கு வெட்கமா இல்லை?” என்றாள்.
“அண்ணி!!!” என்றாள் தீயில் விழுந்த மீனாய்.
“என்ன நொன்னி?” என்றாள் நக்கலாக.
எதுவும் பேசாமல் அமைதியாக மீரா அழுதபடி நிற்க.
“ஏதாவது கேட்டா என்ன தெரியுதோ இல்லையோ? இப்படி அழுது நீளிகண்ணீர் வடிக்க வேண்டியது? உங்க அப்பா தான் சாவறதுக்கு முன்னாடி இந்த வீட்ட உன் அண்ணன் பேருக்கும், அந்த ஆபிஸ் இருக்க இடத்தை உன் பேருக்கும் எழுதி கொடுத்துட்டார்ல? அப்புறம் எதுக்கு என் வீட்ல என்னை கேட்காம இருக்க நீ?” என்றாள்.
“பொய் சொல்லாதடி எங்க அப்பா எங்க எழுதிக்கொடுத்தார்?? நீ தான இந்த வீட்ட மீராக்கு கொடுக்க கூடாதுன்னு சண்ட போட்டு வாங்கன??” என்று பின்னல் இருந்து கோவமாக கத்தியபடி வந்தான் வினோத்.
அவனை கண்டவுடன் பொங்கி வந்த அழுகையை கட்டுபடுத்தாமல் “அண்ணா!” என்று ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள்.
“மீராகுட்டி அவன் வேற பொண்ணை கல்யாணம் பண்ணியிருக்கான் ராஸ்கல். ஏன்டா என்கிட்டே எதுவுமே சொல்லலை?” என்று கேட்க, மீரா அண்ணியை பார்த்தாள்.
அவளோ எரித்துவிடுவது போல பார்க்க, “என் வாழ்கை அவ்ளோ தாண்ணா முடிஞ்சிருச்சு. அதைவேற சொல்லி உன்ன எதுக்கு கஷ்ட படுத்துனும்னு தான் சொல்லலை” என்றாள்.
“இங்க பாருடி உன் பெட்டிய எடுத்துகிட்டு போயிரு. இந்த வீட்ட நாளைலர்ந்து வாடகைக்கு விட போறேன்” என்றவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான் வினோத்.
“சீ!! என்ன பொண்ணு நீ? அவ எவ்ளோ கஷ்ட்டதுல இருக்கா? அவளுக்கு ஆறுதலா இல்லாம இப்படி பேசற? இந்த வீட்ல என் தங்கச்சி தான் இருப்பா. இஷ்டம் இருந்தா இரு இல்லன்னா போயிரு” என்றான்.
“அப்படியா நானும் என் பொண்ணும் எங்கையாவது போய் சாவறோம். நீயும் உன் தங்கச்சியும் மட்டும் நல்லா இருங்க.” என்று வேகமாக ஓட, “என்ன அண்ணா நீ? நான் செஞ்ச தப்புக்கு அண்ணி என்ன பண்ணுவாங்க? அவங்களை போய் திட்ற?” என்றாள்.
“நீ என்னடா தப்பு பண்ண? இன்னொரு பெண்ணோட வாழறான்னு தெரிஞ்சும் அவன் கூட எப்படி உன்னால குடும்பம் நடத்த முடியும். உன் கல்யாணதன்னைக்கே நான் நிறுத்திருந்தேன்னா நல்லா இருந்திருக்கும்” என்று கண் கலந்கியவனை, “அண்ணா விடுண்ணா… நீ மட்டும் என்ன தெரிஞ்சா செஞ்ச. நடந்தது நடந்துருச்சு. நீ போய் அண்ணிய சமாதனப்படுத்து. ரெண்டு பேரும் கஷ்டப்படக்கூடாது. நீயாவது நல்லா இருக்கனும்” என்று சொல்ல்லியவளை அணைத்து, “நான் இருக்கேண்டா உனக்கு எப்பவும் துணையா” என்றான்.
“சரி. நீ போ நான் பார்த்துக்குறேன். எதாவது வேணும்னா உனக்கு போன் பண்றேன்” என்று அவனை அனுப்பி வைத்தாள்.
அண்ணன் சென்றவுடன் வீட்டின் உள்ளே சென்றவள் வேகமாக அவளுடைய பொருட்களை பேக் செய்து தன்னுடைய ஆபீசில் வைத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தபடி நடக்கும்போது வண்டியில் மோதிவிட்டாள்.
கண்களை மூடி இருந்தாலும் அவளின் கண்ணீர் உணர்த்தியது அவள் அழுகிறாள் என்று. அவளை வழியெல்லாம் பார்த்துக்கொண்டே வந்தவன். ஒன்னும் செய்யமுடியாமல் தவித்தான்.
“உங்க ஆபிஸ் வந்துருச்சு” என்றவுடன் ஒன்றும் புரியாமல் விழித்தவள்.
“நான் எங்க போகணும்னு சொலவே இல்லையே? இங்க தான்னு உங்களுக்கு தெரிஞ்சுது???” என்றாள் ஆச்சர்யமாக.
எதுவும் பேசாமல் அவளை இறங்க செய்தபின் அவன் படித்த செய்தித்தாளை கொடுத்துவிட்டு போய்விட்டான்.
உள்ளே அவளின் தோழி பதற்றமாய் உட்கார்ந்திருக்க அவளின் அருகில் அவளுடைய தந்தையும் அமர்ந்திருந்தார்.
இவளை கண்டவுடன் ஓடி வந்து கட்டிக்கொண்டவள்.
“மீரா உனக்கு ஒன்னும் ஆகல இல்ல? எவ்ளோ நேரம் உன் போன் சுவிட்ச் ஆப் ரொம்ப பயந்துட்டேன்.” என்றாள் உண்மையான அக்கறையோடு.
“ஒன்னும் இல்லடா.” என்று நடந்தவைகளை கூறினாள்.
“எதுக்கும்மா வேற எங்கையோ தங்கிட்டு? நம்ம வீட்லயே தங்கிக்கம்மா.” என்றார் அவளின் தந்தை.
“இல்லப்பா இருக்கட்டும். என்னால யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது. எனக்கு ஒரே ஒரு உதவி செய்யனும்பா” என்றாள்.
“இப்போ என்கூட கொஞ்சம் அந்த வீடு வரைக்கும் வரமுடியுமா? என்னுடைய திங்க்ஸ் அங்க இருக்கு. அதை எல்லாம் எடுத்துட்டு வந்துருலாம். எங்க அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்சது கண்டவங்கல்லாம் அனுபவிக்க கூடாது.” என்றாள்.
“சரிம்மா போலாம்” என்று இருவரும் சுதனின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த பொருட்களை வண்டி வைத்து எடுத்து வந்துவிட்டார்கள்.
வீட்டில் அவன் இல்லாததால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வேலை சுலபமாக முடிந்தது.
சாமான்களை நேராக நாளை குடிபோகும் வீட்டிலேயே கொண்டு வைத்துவிட்டு வந்துவிட்டாள் ஸ்ருதிமீரா.
இங்கே நம்ம டி.சி.பி, “இங்க பாருங்க மது. நீங்க என்ன செய்விங்களோ தெரியாது. நாளைக்கு காலைக்குள்ள எனக்கு ஸ்ருஷ்மீராவுடைய ஹிஸ்டரி முழுக்க தெரியனும்.” என்றான்.
“சரி சார்” என்று அங்கிருந்து நகர்ந்தாள் அந்த அலுவலகத்திலேயே வேலை செய்யும் பெண் காவலர்.
தன்னுடைய பதவிகாகவும் பணத்துக்காகவும் நிறைய பெண்கள தன் மேல் விழாத குறையாக தன் பின்னால் சுற்ற யாரையும் பிடிக்காது கிருஷ்வந்திர்க்கு.
முதல்முறையாக போலீச்காரன் என்று தெரிந்தும் உனக்கு நான் எதற்கு பயப்பட வேண்டும் என்ற ஸ்ருதிமீராவின் நிலை என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினான்.
அவளுடைய துன்பம் அவனையும் பாதித்தது…
பாப்போம் எவ்வளவு பாதிக்கிறது என்று…

Advertisement