Advertisement

5

தன் அருகில் உறங்குபவளின் தலைகோத கைநீட்டியவன், திருமணத்தின் இரவு இருவரும் பேசிகொண்டது நினைவுவர வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டான்.

“எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னதால அவசர அவசரமா இந்த கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க. உனக்கும் எனக்கும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க டைம் வேணும். அதனால் கொஞ்சநாளைக்கு நாம ஜஸ்ட் பிரெண்ட்ஸா மட்டும் இருப்போம்” என்றான் மெதுவாக.

“ரொம்ப நன்றி! நான் எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்களே சொல்லிட்டிங்க” என்று அமைதியாக உறங்கி போனான்.

“மீரா! நான் போயிட்டு வரேன்” என்று வெளியே சென்றுவிட்டான்.      

“சரிங்க!” என்று கூறிவிட்டு உள்ளே தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவளை முறைத்துக்கொண்டிருத மாமியார் வனஜா.

“என் தலையெழுத்து. நம்மளுக்கு இருக்குற வசதிக்கு, இந்த தரிதிரத்த புடிச்சிட்டு வந்திருக்கான் என் மகன்” என்று புலம்பினார்.  

“இப்ப எதுக்கு புலம்பற? உன் பையன்கிட்ட சொல்ல வேண்டியது தான. இந்த ஏழை குடும்பதுலர்ந்து பொண்ணு வேண்டாம்னு? அதவிட்டுட்டு வந்த மருமகள திட்டற?” என்று கேட்டார்.

“அப்படியே நான் சொன்னா உங்க புள்ள கேட்டுட்டாலும்.. போதும் எதுவும் பேசி என் எரிச்சலை கிளப்பாம உங்க வேலையை மட்டும் பாருங்க” என்று மீராவின் அறை அருகே சென்றவர்.      

“அம்மாடி மீரா” என்று கூப்பிட “என்னங்க அத்தை?” என்று வெளியே வந்தாள் மீரா.

“ஒன்னுமில்லடா எவ்வளவு நேரம் இப்படி உள்ளே அடைஞ்சி கிடப்ப ஹால்ல வந்து உக்காரு. நான் சமையல் முடிச்சி வந்துடறேன்” என்றார்.

“இல்ல அத்தை நீங்க உக்காருங்க. நான் சமைக்கிறேன்” என்றவளிடம் “நீ புதுபொண்ணு மா ப்ரீயா இரு” என்று உள்ளே சென்றார்.

ஒரு அரைமணி நேரம் கடந்திருக்கும் சமையல் அறையில் இருந்து “டமார்..” என்று சத்தம் வர, இருவரும் உள்ளே அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

வனஜா மயங்கிய நிலையில் இருக்க அவரை கொண்டு வந்து ஹாலில் உட்கார வைத்துவிட்டு, “அத்தை நீங்க சமைக்க வேண்டாம் நானே பார்த்துகிறேன்.” என்றாள் மீரா.  

“உனக்கெதுக்கும்மா?” என்று அறைவிழியில் களைப்புடன் கேட்க.

“இதுல என்ன அத்தை இருக்கு நம்ம வீடு தான? நானே பார்த்துகிறேன்” என்று சமையலறை சென்று சமையல் முடித்துவிட்டு வரவும் சுதன் வரவும் சரியாக இருந்தது.

“மீரா நீயா சமைச்ச? அதுக்கு தான் வேலைக்காரங்க இருக்காங்களே? நீ எதுக்கு இதெல்லாம் செய்யற?” என்று தன் தாயை முறைக்க, “நான் ஒன்னும் சொல்லலைடா உன் பொண்டாட்டியே தான்” என்றார்.

“ஆமாங்க நான் தான் எனக்கு பொழுது போகலை” என்றாள்.

“இங்க பாரு இந்த வீட்ல எல்லாத்துக்கும் வேலைக்கு ஆளுங்க இருக்காங்க. அதனால நீ எதையும் மாங்கு மாங்குன்னு இழுத்து போட்டு செய்யாத புரியுதா?” என்றான்.

‘சரி’ என்று தலை ஆட்ட அவன் பின்னே உள்ளே சென்றாள்.

“சீமைல இல்லாத பொண்டாட்டிய கொண்டு வந்துட்டான். இந்த குதி குதிக்கிறான்” என்று அவனை புலம்பி தள்ளினார் வனஜா.

இருந்தாலும் அவன் இல்லாதப்ப மீராவே சமையலை கவனித்து கொண்டாள்.

ஒரு வாரம் கழிந்த நிலையில், “மீரா நம்ம பிசினெஸ் விஷயமா,  ட்ரைனிங்காக ஆறுமாசம் நான் சுவிசர்லாந்து போகணும்” என்றான்.

“என்ன ஆறுமாசமா?” என்றாள்.

“ஜஸ்ட் ஆறு மாசம் தான? நீயும் உன் பிசினெஸ் கொஞ்சம் பார்த்துக்க ஆறு மாசம் அஞ்சு நாள் மாதிரி பறந்திரும்” என்று அவளை நெருங்கியவன் லாவகமாக அவளை விட்டு பிரிந்தும் சென்றான்.

‘என்ன ஆச்சு இவருக்கு கிட்ட நெருங்கி வராரு. ஆனா ஏதோ நினைச்சி விலகி போறாரு. பாப்போம்’ என்று யோசித்து விட்டு தன் வேலையில் மூழ்கினாள் மீரா.          

சுதன் சென்ற மறுநாள், “மீரா கொஞ்சம் இந்த பாத்திரத்தை கழுவிகொடும்மா” என்று வந்தார் வனஜா.

குழப்பத்துடன் கேள்வியாய் மீரா அவரை பார்க்க, “வேலைக்கார பொண்ணு ஊருக்கு போயிருக்கா வர ரெண்டுமாசம் ஆகும். அதான் மா” என்றார்.      

அவள் உள்ளே சென்றபின், “எதுக்குடி நீயே வேலைக்கார பொண்ணுக்கு லீவ் கொடுத்துட்டு இப்ப மீராவை வேலை வாங்குற?” என்று கேட்ட தன் கணவனை, “உங்க வேலையை மட்டும் பாருங்க” என்று சென்றுவிட்டார்.

ஒரு மாதம் கடந்தது. அதற்குள் மீராவை வேலைகாரியாக மாற்றி இருந்தாள் வனஜா.

தினமும் ஒரு முறை மட்டும் சுதன் அவளிடம் பேசுவான்.

ஒரு நாள் தன் தோழியிடம் அலுவல் பற்றி பேசிக்கொண்டே தன் மாமியாரின் அறையை கடந்தபோது, அவர் பேசுவது காதில் விழுந்து அப்படியே சமைந்து நின்றாள்.

“நீ வேற ஸ்ரீ. எனக்கு அவளை பிடிக்கல அதான் வீட்டு வேலைகாரியா மாத்தி வெச்சிருக்கேன்” என்று கூறினார்.

‘அப்படியா? நான் பார்த்துகொள்கிறேன் இனி’ என்று அங்கிருந்து சென்றுவிட்டாள்.

மறுநாள் காலை “அத்தை இன்னைலர்ந்து நான் என் ஆபிஸ்க்கு போகணும். அதனால வேற நல்ல வேலைகாரியா பார்த்து வச்சிடுங்க” என்றாள்.

“திடிர்னு யார் வருவாங்க . வேணா உன் வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்து செய்ம்மா” என்றார்.

“அப்படி தான் அத்தை நானும் சொன்னேன். ஆனா, அவர் கண்ணா பின்னாவென்று கத்துகிறார். உங்களுடன் பேசவேண்டும் என்று கூறினார். இருங்கள் போன் செய்து தருகிறேன்” என்று தன் மொபைல் எடுக்கவும், “இப்ப எதுக்கும்மா அவனுக்கு போன் பண்ணி தொந்தரவு பண்ற? நான் அவளையே போன் பண்ணி சீக்கிரம் வர சொல்றேன்” என்றார் வேகமாக.

“சரிங்க அத்தை” என்று உள்ளே சென்று வந்தவள்.

“நான் போயிட்டு வரேன் அத்தை. மதியம் சாப்பாட்டுக்கு வந்துருவேன்” என்று சென்றுவிட்டாள்.

“என்ன இவளை நாம வேலைகாரியாக்கனும்னு பார்த்தா? இவ நம்மளை வேலைக்காரியா ஆக்கிடுவா போல இருக்கு” என்று புலம்பினார்.

“அதுக்கு தான் யாரையும் குறைச்சு எடை போடக்கூடாது. மருமக நல்லா படிச்சி சொந்தமா ஒரு தொழில் செய்றவ. அவளையே நீ வேலைகாரியா ஆக்கணும்னு நினைச்ச” என்றார்.

“போதும் உங்க மருமகளுக்கு ஜிங் ஜாங் போட்டது” என்று கத்தி விட்டு உள்ளே சென்றார்.

‘உண்மைய சொன்னா எல்லாருக்கும் கசக்கசெய்து என்ன பண்றது?’ என்று உள்ளே சென்று விட்டார்.

அன்றில் இருந்து வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் தன் வேலையை மட்டும் கவனித்தாள் மீரா.

“இன்னும் அதிக ஆர்டர்கள் கிடைத்தது அவர்களின் உழைப்புக்கு” சில நாள் வீட்டிற்கு வர தாமதமாகியது.    

“என்ன இவ்ளோ நேரம்? என் பையன் இல்லன்னு ஊற சுத்திட்டு வரியா?” என்று வனஜா கத்த, “இல்ல அத்தை உங்க பையனோட தான் ஊரை சுத்துறேன்” என்று தன் மொபிலில் வீடியோ காலில் பேசிகொண்டிருந்த சுதனை காட்ட. வெலவெலத்து போனார் வனஜா.      

“என்னம்மா? என்ன என்னவோ பேசறிங்க? இப்படிதான் மருமககிட்ட பேசறதா? அவ லேட் ஆனா என்கூட தான் வண்டில பேசிட்டு வரா. பார்த்து பேசுங்க. இனி ஒரு தடவை இப்படி பேசனிங்க. நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது?” என்றான்.   

அன்றில் இருந்து பேசுவதையும் நிறுத்தி விட்டார் வனஜா.

ஆறு மாதங்கள் ஓடியது சுதன் வந்துவிட்டான்.

இனியாவது தங்கள் வாழ்கையை ஆரம்பிக்கலாம் என்று எண்ணியவளின் எண்ணத்தில் மண் விழ வந்தது அந்த போன் கால்.

“என்ன ஆக்சிடென்ட்டா? எங்க?” என்று பதறினாள் மீரா.

மருத்துவமனையில் இடுப்பில் அடிபட்டு படுத்துகிடந்தவனை  பார்க்க மனமுடைந்து அழுதாள் மீரா.

“மீரா அழாதடா. எனக்கு ஒண்ணுமில்ல ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்ன்னு டாக்டர் சொல்லிட்டாங்க” என்று அவளை தேற்றினான்.

“மீரா சுதன். உங்களை டாக்டர் கூபிட்றார்” என்று நர்ஸ் வந்து கூறினாள்.

“வரேன்” என்று டாக்டர் அறை வாசலை தட்ட, “எஸ்! கம் இன்” என்று குரல் கேட்டதும் உள்ளே சென்றாள்.

“டாக்டர் வர சொன்னதா நர்ஸ் சொன்னாங்க. இப்ப அவருக்கு எப்படி இருக்கு?” என்று கேட்க.

“உக்காருங்க மா. அதை பத்தி பேசத்தான் உங்களை வரசொன்னேன்” என்றார்.

மீரா தயங்கியபடி அமர, “உங்க கணவருக்கு அடிபட்டதுதுல இடுப்பு பகுதில பலமா அடிபட்றுக்கு அதனால..” என்று இழுத்தார்.               

“அதனால.. என்ன சொல்லுங்க டாக்டர். அவருக்கு ஒன்னுமில்லையே” என்றாள் பதட்டமாக.

“இல்ல அவர் உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்ல. ஐ ஆம் சாரி டு சே திஸ்..  ஆனா இனி நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியா வாழ முடியாது” என்ற குண்டை தூக்கி தலையில் போட்டார்.

“உங்க கணவர்கிட்ட நீங்க தான் பொறுமையா சொல்லணும்” என்றார்.

எதுவும் பேசாமல் எழுந்து வெளியே வந்தவள் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

தன் வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னே அஸ்த்தமனம் ஆகிவிட்டதா? என்று நொறுங்கி போனாள்.

அழுது அழுது ஓய்ந்தவள். கண்களை துடைத்து கொண்டு சுதனிடம் செல்ல, “டாக்டர் என்ன சொன்னார்? ஏன் உன் முகம் அழுது வீங்கி இருக்கு?” என்று சுதன் கேட்க.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல? வீட்டுக்கு போய் பேசிக்கலாம். ரெஸ்ட் எடுங்க” என்றாள்.

ஒரு வாரம் சென்றது. வீட்டிற்கு சுதனை கூட்டி வந்தாயிற்று. இப்பொழுது மெல்ல மெல்ல மீராவை பிடித்துக்கொண்டு நடக்கிறான். அப்படியே மீராவிடம் நெருங்கவும் முயல்கிறான். உண்மை தெரிந்த மீராவோ அவனை விட்டு விலகுகிறாள்.

“இப்ப தான் கொஞ்சம் தேறி வரிங்க கொஞ்ச நாள் போகட்டும்” என்கிறாள்.

இன்னும் ஒரு ஆறு மாதங்கள் கழிய, தொடர்ந்து இதே போல் நடக்க, உண்மையை கூறி விடுகிறாள் மீரா.

“இங்க பாருங்க இது தான் வாழ்க்கை இல்ல.. நாம உண்மைய அன்பா இருப்போம்” என்றாள்.

கொஞ்ச கவலையாக சுற்றும் சுதன் ஒரு நாள், “இல்ல மீரா நாம வேணா டெஸ்ட் டியுப் பேபி ட்ரை பண்ணலாம்” என்றான்.       

“இல்ல வேணாம்” என்றாள் ஒற்றை வரியில்.

அவளின் மாமியாரும் மறைமுக தாக்குதல் போய் இப்பொழுது நேரடியாகவே வார்த்தைகளால் தாக்க ஆரம்பித்து விட்டார்.

“கல்யாணம் ஆகி வந்து ரெண்டு வருஷம் ஆகுது. இன்னும் ஒரு பேரனோ பேத்தியோ பெத்துகொடுக்க துப்பில்லை” என்று.

உண்மையை கூற சுதன் வரும்பொழுதெல்லாம்  மீரா தடுத்துவிடுவாள்.

“நாங்க தனியா போறோம்” என்று கோபத்தில் சுதன் தனி வீடு வாங்கிகொண்டு வந்துவிட்டான்.

சுதனுக்கு அடிபட்டதில் இருந்து தன் தோழியிடம் முழுபொறுப்பை கொடுத்து ஆபிசை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டாள். மீரா.

மீராவை முயற்சி செய்து சம்மதிக்க வைத்து, டெஸ்ட் டியுப் பேபி இப்பொழுது நடந்தும் விட்டது.

நினைவுகளில் இருந்து மீண்டவள் அதிர்ச்சியோடு காரின் பிரேக்கை போட்டாள்.

‘டாக்டர் தான் அவருக்கு குழந்தை பிறக்காது சொன்னாங்கல்ல அப்ப எப்படி?? இந்த சந்த்ரா கூட குழந்தை…??” யோசித்து யோசித்து அவளுக்கு தலையே வலித்தது.

நேராக தன் அம்மா வீட்டிற்கு சென்றாள்.

வீட்டின் பூட்டை திறந்தவள் தன் தந்தையின் படத்திற்கு முன் நின்றவள். “அப்பா என்னை இப்படி எல்லாருமே ஏமாத்திட்டிங்ளே? நான் எவ்வளவு தான் தாங்கறது” உடைந்து அழ ஆரம்பித்தாள்.

கடந்த வருடம் மாரடைப்பால் குணசீலன் இறந்துவிட்டார்.

 

Advertisement