Advertisement

20
“மழலை மொழியாலே சிரித்திருப்போம். 
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே!..
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…” 
என்று இதழ்கள் முனுமுனுக்க ஒரு கனவுலோகத்தில் சஞ்சரித்தபடி பொத்தென்று மெத்தையில் விழுந்தான் க்ருஷ்வந்த்.
எண்ண அலைகள் சிறகை விரித்து வானுலகத்தில் மிதக்க அசதியில் உறங்கி போனான் சிறு பிள்ளையாய்.
தன் அன்னையின் சொற்களை மதிபதற்காக மட்டும் அல்லாமல் தன் உயிரினில் கலந்த மனம் கவர்ந்தவளை காண உயர்நாடி வரை இத்தனை ஏங்கி கொண்டிருக்க இன்று தான் அந்த பொன்நாளோ என்று சிந்தனையில் புகுந்து உயிர்நாடி வரை சென்று பித்து பிடிக்க வைத்தவளை பார்க்க போகும் ஆர்வம்.
‘ஆனால் இன்று அவளை நான் மட்டும் தான் காண வேண்டும். அதற்கு அன்னையை முதலில் சென்று தங்க சொல்லவேண்டும்’ என்று எண்ணிக்கொண்டு அன்னையிடம் வந்தவன்.
“அம்மா! நீங்கள் பொழுதுசாயும் முன்னரே சென்றுவிடுங்கள் எனக்கு சிறிது பணி இருப்பதால் முடித்துவிட்டு இரவுக்குள் வந்துவிடுகிறேன்.” என்றான் தமிழ்ச்செருக்கன்.
பெற்ற மகனின் எண்ணம் புரியாதவரா என்ன? 
“சரி தமழ்! கண்டிப்பாக வந்துவிடு. உன்னை எதிர்பார்த்து காத்துகொண்டிருப்பேன்.” என்றார் காதம்பரி.
“கண்டிப்பாக வந்துவிடுகிறேன். உயிரே போனாலும் உங்களின் மகன் என்றும் சொன்ன சொல்லை மீறமாட்டான். உங்களுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன் பாதுகாப்புக்கு எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. நீங்கள் புறப்படலாம்.” என்று தன் அன்னையை நோக்கினான்.
“சரி கண்ணா! நான் வருகிறேன்” என்று அவரும் தன் தமையனின் நாட்டை நோக்கி பயணப்பட்டார்.
தன் அன்னை சென்றவுடன் அவன் செல்வதற்கு தேவையான உடையணிந்து அவனும் தனி புரவியில் வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்தான்.
தன் மாமன் நாட்டை நோக்கி புறப்பட்டவன் மாலை நேரம் நேராக அவள் இருக்கும் இடத்திற்குள் புகுந்து மறைந்துகொண்டு தன்னவளை நோட்டமிட்டான்.
தலையில் சுற்றி கட்டபட்டிருந்த அந்த கருப்பு முண்டாசு தொடர்ந்து நீண்டபடி அவன் முகத்தின் முழு அழகையும் மூடியிருக்க அதிலிருந்து மீண்டுவிட்டோம் என்ற திருப்த்தியில் ஜோலித்தனவோ அந்த இருவிழிகள்….?
அவ்விழிகளும் அந்த மண்டபத்தின் இருளை போக்க ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்கொளியில் அவ்வளவு மனித தலைகளையும் தாண்டி தூரத்தில் தன் தோழியுடன் அளவளாவி கொண்டிருக்கும் அப்பேரழகியையே வட்டமடித்து கொண்டிருந்தது.
பேச்சினில் மட்டும் பேரழகி இல்லை அவள்…!!
காண்பவரின் விழிகள் அவளை விட்டு விலகி செல்ல வாய்ப்பே இல்லாவண்ணம் செதுக்கிய சிலையின் சிற்பமாய் நின்றிருந்தாள். தூக்கி கொண்டியிட்டு ஒய்யாரமாய் பின்னிய பின்னும் நீண்டு அவளின் பின்னழகின் அழகை இன்னும் கூட்டி காட்டி இடையினை தாண்டி நின்றது அவளின் கருங்கூந்தல்…!!
வானத்தில் ஜொலித்து கொண்டிருக்கும் அந்த வண்ண வண்ண விண்மீன்களின் கூட்டத்தில் இருந்து இரண்டு மட்டும் நழுவி அவளின் விழிகளாய் மின்னியதோ? என்று எண்ணும்படி இருந்தது அவளின் மீன் விழிகள்.
தலையை இருபுறமும் அசைத்து அசைத்து ஆட்டியபடி கண்கள் மின்ன இதழ்கள் சிரித்தபடி தோழியுடன் பேசி கொண்டிருந்த அவளை ருசிக்காமலே விழுங்கியது இரு விழிகள்…
அந்த கூரான மூக்கு அதற்குமேலும் அழகுகூட்டும் விதமாக ரோஜா மலரே பூத்திருப்பது போல் பளபளக்கும் அவளின் மலர் இதழ்கள் என பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் அழகுக்கு உரியவள் என்ற மமதை சிறிதும் இல்லாத தூய்மை நிறைந்த பொலிவான மனதை காட்டிய பஞ்சு முகம்.
யாரோ தன்னை மட்டுமே காண்பதுபோல் தோன்ற தன்னை சுற்றி எல்லா இடங்களிலும் நோட்டமிட சட்டென நின்றிருந்த தூணின் அருகில்  மறைந்து கொண்டான்.
தோழியிடம் பேசிய பின்னர் அன்னநடை நடந்து அவள் தனதருகில் வந்தவுடன் தூணின் மறைவிலிருந்து வெடுக்கென இழுத்து கொண்டு பக்கத்தறையில் நுழைந்தான்.
கரம் பிடித்து இழுத்தவனின் திடீர் தாக்குதலை எதிர்நோக்காதவள் திமிறினாள். அவனின் வலிமையான வலக்கரத்தை கொண்டு அவளின் முதுகு அவன் மார்பினில் படரும்படி மாலையாய் அவள் கழுத்தை சுற்றியபடி அறைகதவு தாழிடும் சத்தம் அவள் இதயத்தில் திகில் பரப்பியது.
தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க மூளை அதில் மட்டும் கவனம் செலுத்த நொடியில் அவள் இடக்கரத்தால் அவன் இடையினில் சொருகியிருந்த உடைகத்தியை உருவி தாமதிக்காமல் வலக்கைக்கு மாற்றி அவன் இடநெஞ்சில் குத்த ஓங்கியவளின் கையை லாவகமாக இறுக்கி பிடித்தவன். தன் முகத்தில் இருந்த முண்டாசு துணியை விலக்கினான்.
அவனின் கம்பீரமுகத்தை கண்டவள் தன் விழிகளையே நம்பமுடியாமல் மீண்டும் அவன் முகத்தை ஏறிட்டாள். அவனின் விழிகள் பேசும் மொழி தன் மேனியை தீண்டி உடல் முழுவதும் செங்கதிரின் நிறமாய் மாற செய்வதறியாது அவன் மார்பினில் முகம் புதைத்தாள் அழுத்தமாய்.
இதையும் எதிர்பார்த்தவன் சத்தமாய் கலகலவென நகைத்து அவளை ஆரத்தழுவினாள்.
“மனம் கவர்ந்தவனின் முகம் காண இத்தனை வருடம் ஏங்கவில்லையோ?” என்றான் அவள் செவிகளில் மட்டும் விழும்படி. அவளின் பின்னங்கழுத்தில் முகம் புதைத்தபடி கேட்க.
இத்தனை வருட தவம் இன்று தான் நிறைவேறியது போல் மனம் குதிக்க, இருந்தாலும் ஆண்மகனின் முதல் ஸ்பரிசம் அவளை நெளிய செய்து உயிர் வரை சென்று அவளின் உடல் ரோமங்கள் சிலிர்த்தெழ, “ஏன் இல்லை? இம்மேனிக்கு உற்றவரே பத்து வருடங்கள் என் முகம் பாராமல் காலம் கழிக்கையில் பெண்ணிவள் தானாய் வந்து உம்மை பார எண்ணுவாளோ?” என்றாள் மெதுவாய்.
“அதுவும் சரிதான். ஆனால் இன்னும் உன் மனதில் குடியிருப்பேனோ என்று எனக்கிருந்த சந்தேகத்தில் பலமுறை இங்கே வந்த பின்பும் உன்னை காண வரவில்லை அன்பே…” என்றான் தமிழ்ச்செருக்கன்.
“என் உயிர் மட்டும் தானே இங்கிருந்தது. உயிர் உம்மிடவல்லவா இருந்தது.” என்றாள் அருன்மொழித்தேவி.
“ஹ…ஹா.” என்று கலகலவென தன் வெளிர்நிற பற்கள் தெரியும்படி சிரித்தான் தமிழ்ச்செருக்கன்.
   
    .      

Advertisement