Advertisement

19
ஐந்து நாள் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான் க்ருஷ்வந்த்.
அவன் விசாரித்து கொண்டிருக்கும் முக்கியமான கேசின் முக்கிய கட்டம் போயே ஆகவேண்டும் என்ற நிலை. ஸ்ருச்டிமீராவை விட்டு செல்ல மனம் வரவில்லை அவனுக்கு. இப்பொழுது அவளுக்கு எட்டு மாதம் நடந்து கொண்டிருக்க அவனுக்குள் ஒரு பயம் தொற்றி கொண்டிருந்தது. அதையும் மீறி தான் வலுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்க அது இப்பொழுது முடியாது என்ற நிலையில் தூரத்தில் இருந்தாவது அவளை பார்த்துகொண்டிருந்தான்.
இப்போது அதற்க்கும் தடை வந்தது போல் இருக்க. போயே ஆக வேண்டும் முடிந்த வரை சீக்கிரமாக வர முயற்சி செய்யவேண்டும் என்று முடிவு செய்து தன்னவளுக்கு கடிதமாக எழுதிகொண்டிருந்தான்.
மறுநாள் காலை எழுந்து ஜன்னலை வழக்கம் போல் பார்க்க இத்தனை நாளாய் இல்லாமல் இன்று தேநீர் கோப்பையுடன் ஒரு சின்ன காகிதம் வைக்கபட்டிருந்தது.
மனதில் பொங்கும் ஆர்வத்தோடு சென்று அதை எடுத்து படித்தவள் முகம் சுனங்க கட்டிலில் எதையோ பறிகொடுத்தது போல் உட்கார, இதை எல்லாம் தன் அறை ஜன்னலில் இருந்து ஸ்ருஷ்டிமீராவை பார்த்துகொண்டிருந்தவனுக்கு இதயத்தில் முதல் முறையாய் தன்னவள் என்ற இன்பம் பொங்க விழிநீர் தானாய் சுரந்து நின்றது மனநிறைவில்.
அப்படி என்ன தான் இருந்தது அந்த காகிதத்தில்…?
“வெளியூர் செல்கிறேன் வர ஐந்து நாளாகும் நீங்கள் இருவரும் பத்திரமாக இருங்கள்” அவ்வளவே தான். 
இதை படித்துவிட்டு அவளின் முகபாவம் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காக ஆவலாய் காத்துகொண்டிருந்தான்.
வலுவிழந்து மனம் சுண்டிபோய் அமர்ந்தவளின் விழியில் பட்டது கோப்பையின் கீழ் நாளாக மடிக்கப்பட்ட இன்னொரு சிறிய காகிதம். 
உயிர் வந்ததுபோல் அதை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். விழிகளை கூர்மையாக்கி நடக்க போவதை பார்த்துகொண்டிருந்தான் க்ருஷ்வந்த்.
“உன்னை முழுவதும் நான் அறிந்து கொண்டேன் மீரூ. உன் விழி சொல்லவில்லை என்றாலும் உன் ஆழ்மனத்தின் அசைவுகளில் எனக்கான அன்பை கண்டுகொண்டேன். நீயா முழுமனசோட எப்போ வருவேன்னு எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கேன். சரி நடக்கும்போது நடக்கட்டும் அப்படியே நடக்காமல் இருந்தாலும்கூட நீ எங்க இருக்கியோ அங்க உனக்காகவே உனக்கு தெரியாம நான் இருப்பேன். என் வாழ்வின் இறுதி மூச்சி வரை. இந்த ஜென்மத்தில் அல்ல இன்னும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் என் உள்ளத்திற்கும் உடலிற்கும் உரிமையானவள் நீ மட்டுமே.
                                                 இப்படிக்கு
                                              உன்……………………….,
என்று இருந்தது. படித்தவளுக்கு கண்கள் கலங்கினாலும் மறுநொடி அந்த காகிதத்தை கசக்கி தூக்கி எறிந்தாள்.
இதை பார்த்துகொண்டிருந்தவனுக்கு இன்னும் சிரிப்பு அதிகமானது.
‘ஏய் பச்சைமிளகாய் உன் மனசுல இருக்கறதை ஒத்துக்க மாட்டியே. என்ன தான் பண்ற பார்க்கிறேன் இருடி’ என்று எண்ணியவன் அவளின் செய்கையை தொடர்ந்து கவனிக்கலானான்.
“இது எப்படி நடக்க முடியும்? இப்படி நடக்க வாய்ப்பே இல்லை. நான் இன்னொருத்தனுடன் வாழ்ந்தவள். என்னால் இன்னொரு வாழ்க்கையை எப்படி ஏற்று கொள்ளமுடியும்? சுதனை என் வாழ்வில் இருந்தும் மனதில் இருந்தும் என்றோ தூக்கி வீசிவிட்டேன் என்றாலும் இப்படி நடக்க கூடாது.” என்று வாய்விட்டு பேசி கொண்டிருந்தவளின் மனது அவளுக்கு எதிராய் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தது.
‘ஏன் இன்னொரு புது வாழ்க்கையை உனக்காக தேர்ந்தெடுத்தால் என்ன தப்பு? தவறு செய்த சுதனே இன்னொரு பெண்ணுடன் நலமாக வாழும்போது தவறே செய்யாத உனக்கென்ன? அதுவும் உன்னை… நீ சொன்ன ஒரு வார்த்தைக்கு மதிப்பளித்து இத்தனை நாளாய் பார்க்காமல் உனக்கு தேவையானவற்றை செய்து கொண்டிருக்கிறான். உன் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவனுடனும் உன்னை பார்க்காமலே உனக்காக வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்து கொண்டிருப்பவனுடன் உன் வாழ்க்கையை அமைத்துகொள்வதில் என்ன தவறு?’ என்று அறிவும் மனதும் ஒன்று சேர்ந்து கேட்க தன் தலையை பிடித்து அமர்ந்துவிட்டாள்.
சிறிதுநேரம் அமைதியாக இருந்தவள் தான் தூக்கி எறிந்த காகிதத்தை மறுபடி எடுத்து பிரித்து படித்தாள் மெல்ல புன்னகை  பூத்து அதனை பார்த்தபடி தன்நெஞ்சோடு அணைத்துக்கொண்டு விழிமூடி ரசித்திருக்க.
இதை பார்த்த க்ருஷ்வந்திற்கு தான் காலும் புரியவில்லை தலையும் புரியவில்லை தன் அறையில் பொங்கி வரும் காதலின் அன்பை சிரித்து கொண்டாடி கொண்டிருந்தான்.
க்ருஷ்வந்த் மீராவிடம் கூறியபடி வெளியூர் சென்று விட. அவனை பார்க்காவிட்டாலும் அவனின் அன்பை சொல்லும் எதுவும் கிடைக்காமல் அவளின் மனது ஏங்க ஆரம்பித்து சோர்ந்து போனாள் மீரா.
ஒரு வாரம் என்று சென்றவன் மூன்றே நாளில் திரும்பி வந்தவன் இன்னும் இரண்டு நாள் அவளின் நடவடிக்கைகளை காண முடிவு செய்து வந்ததை காட்டிக்கொள்ளவில்லை.
தினமும் காலை ஜன்னலருகே வந்து ஒரு ஏக்க பார்வை செலுத்திவிட்டு செல்வதும் கட்டிலில் அமர்ந்து ஜன்னலையே வெறித்து பார்ப்பதும், வெளியே வந்து அந்த எலுமிச்சை செடியின் வாசனையை முகர்ந்துவிட்டு செல்வதும் என அவளின் செய்கைகள் ஒவ்வொன்றையும் க்ருஷ்வந்த் நினைத்துவைத்திருந்தபடி எல்லாம் செய்தாள்.
ஸ்ருஷ்டிமீரா எவ்வளவோ தடுத்தும் கேளாமல் சுந்தரியும் வினோத்தும் வளைகாப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
‘இந்த குழந்தையே எனக்கில்லை, இவங்களுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது?’ என்று தவித்தாள்.
எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க சீமந்த விழா சிறப்பாக நடைபெற்றது. ஸ்ருஷ்டிமீராவின் விழிகள் க்ருஷ்வந்த்தை காண ஏங்குவதை லைவ் கேமராவில் பார்த்து கொண்டிருந்தான் க்ருஷ்வந்த்.
‘ஏய் பச்சை மிளகாய்! என்னை பார்த்தாலே எரிஞ்சு விழுவ இப்போ என்னையே தேடுற? நான் நினைச்ச நாள் இது தாண்டி. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ கூடிய சீக்கிரத்தில் இங்க என் பக்கத்துல உன்னை வச்சி தங்குறேன்டி செல்லம். அதுக்கப்புறம் மாமா உன்னை எங்கயும் விடமாட்டேன்டி. இவ்ளோ நாள் என் விலகலை பார்த்த நீ அதுக்கப்புறம் என் காதலை மட்டுமே பார்ப்படி மீரூ குட்டி.’ என்று கூறி சிரித்தான்.

Advertisement