Advertisement

18
இப்பொழுது ஸ்ருஷ்டிமீராவிற்கு ஐந்து முடிந்து ஆறாவது மாதம் தொடங்கியிருக்க, அவளின் கண்ணங்கள் செழுமையையும் சிசுவின் வளர்ச்சியால் அவளின் வயிறும் சிறிது மேடிட்டு இருக்க, அவளின் கருவிழிகள் மட்டும் உயிர்ப்பில்லாமல் ஒரு மெல்லிய சோகத்தை தத்தெடுத்திருந்தது.
அதற்கான காரணம் நிச்சயமாய் சுதன் மேல் இருந்த அன்பாய் இருக்க வாய்ப்பே இல்லையெனும் பொழுது வேறு எதுவாக இருக்கும் என்பது தான் க்ருஷ்வந்தின் மனதிற்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியாய் இருந்தது.
“ஒரு வேளை குழந்தை பெற்ற பின் யார் தன்னை பார்த்து கொள்வார்கள் என்ற எதிர்கால பயமா? இல்லை என்றால் தனக்கு சீமந்தம் செய்ய சொந்தங்கள் இல்லை என்ற கவலையா? பிரசவத்தை பற்றிய பயமாக இருக்குமோ?’ எண்ணி எண்ணி அவன்   மண்டை தான் காய்ந்தது.
‘டேய் கிருஷ்! ஆனா குழந்தைய பெத்துக்க போற அவகூட ஏதோ ஒரு ரீசனுக்காக தான் பயப்படற மாதிரி தெரியுது. ஆனா நீ இருக்க பாரு… இல்லாத காரணத்தை எல்லாம் புதுசு புதுசா… டிசைன் டிசைனா யோசிச்சு என்னை பி.பி ஏத்துறடா? இதுக்கு அவகிட்டயே கேட்ருக்கலாம்ல?’ என்று மனம் கேட்க.
‘ஹ்க்கும் அப்டியே பதில உடனே சொல்லிட்டாலும்’ என்று ஸ்ருஷ்டிமீராவை நொடித்தது அறிவு. 
‘ஹே! என்ன என் பேபிய சலிச்சிக்கிற? உன்னை யாரு இப்ப கூப்பிட்டது? உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு’ என்று எகிறியது மனம்.
‘எப்பா சாமி மிடில! உன் லவ் சிகனல் கிடைக்காமலே இந்த குதி குதிக்கிற… இன்னும் ஓகே சொல்லி உன்கிட்ட வந்துட்டா?? அவ்ளோதான்… உன்னை கைலயே புடிக்க முடியாது போல இருக்கே? சரி எனகென்ன வேலை நான் போறேன். நீயே பார்த்துக்க’ என்றது அறிவு.
ஸ்ருஷ்டிமீராவிர்க்கு இப்பொழுதெல்லாம் வாமிட்டிங் சென்ஸ் குறைந்து இருந்தது.
அவளே சமைக்க ஆரம்பித்திருந்தாள் ஆனாலும் டி வருவது நிற்கவில்லை அவளும் நிற்க எதுவும் செய்யவில்லை ஆனால் விதி நினைத்துவிட்டது.       
அவளுக்கு சுதனின் ஞாபகம் சுத்தமாக வரவில்லை.
அவளின் முழு கவனமும் தன் தொழிலை முதல் இடத்திற்கு கொண்டு வருவதிலேயே இருந்தது.
குழந்தையின் மேல் ஆசை இருந்தாலும் இரும்பு மனம் கொண்டு அந்தாசைக்கு வேலி போட்டிருந்தாள்.
ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்பொழுது தான் ஸ்ருஷ்டிமீரா சகஜ நிலைக்கு திரும்பிகொண்டிருந்தாள்.
ஸ்ருஷ்டிமீரா- மெஸ்வசுதன் விவாகரத்து வழக்கிற்க்காக கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் வந்திருக்க அந்த நாளும் வந்தது. 
இப்பொழுது ஸ்ருஷ்டிமீராவின் மனம் ஏனோ காரணம் இல்லாமல் க்ருஷ்வந்தை எதிர்நோக்கி அவனை தேட தொடங்கியது. 
சிறிது மேடிட்ட வயிறுடன் தன் தந்தையின் படத்திற்கு முன் வந்தவள். “அப்பா இன்னையோட என் துன்பம் கரைந்து அவனிடம் விடுதலை கிடைக்கணும். அதுக்கு உங்க ஆசிவாதம் வேணும்” என்று வேண்டியபடி கோர்ட்டிற்கு கிளம்பினாள்.
அவளுக்கு முன் அவளுக்கே தெரியாமல் கோர்டில் இருந்தான் க்ருஸ்வந்த். வினோத் உடன் இருந்தாலும் விழியில் ஒரு வெறுமை படர்ந்து கிடக்க அலைபாய்ந்த அவளின் கருவிழிகளுக்குள் சென்று உயிர்நாடி உயிர் கொடுத்தது போல் இருந்தது க்ருஸ்வந்தை கண்ட நொடி. அவளுக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு படருவதை அவனின் ஓரக்கண்ணில் கவனித்து கொண்டுதானிருந்தான் அவனும். 
‘என்னை பார்த்தா உள்ளுக்குள்ள பொங்குறா, ஆனா, பக்கத்துல போனா துள்ளுறா. ஆளப்பாரு பச்சைமிளகாய்க்கு மூக்கும் முழியும் வெச்சு, கையும் காலும் முளைச்ச  மாதிரி இருக்கா. நான் கிட்ட வந்தா கசக்குது எட்ட நின்னா இனிக்கிதோ? எப்படியும் என்கிட்டே வந்து தான ஆகணும் அப்போ பார்த்துகிறேன். அன்னைக்கு இருக்குடி உனக்கு அம்மில வச்சி அரைச்சி பச்சைமிளகாய் துவையலாய் பழைய சோறுக்கு தொட்டுகலை என் பேரு க்ருஷ்வந்த் இல்லடி’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டாலும் விழிகள் மட்டும் அகலவில்லை.
சந்தோஷும் ஏற்கனவே வந்திருக்க, எதிர்கூண்டில் சுதன் இவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.
நீதிபதி மீராவை நோக்கி, “மீரா நீங்க அம்மாவா ஆக முடியாதுன்னு தானே இந்த டிவோர்ஸ்‌ கேஸ் அப்பளை பண்ணிங்க? இப்போ நீங்க கன்சீவா இருக்கீங்க. இந்த குழந்தையின் எதிர்கால வாழ்கையை கருத்தில் கொண்டு மறுபடியும் சேர்ந்து வாழ ஆசைப்பட்றிங்களா? நீங்க கேட்டா எந்த காரணமும் இல்லாம டிவோர்ஸ் கொடுக்க முடியாது. இபோ என்ன காரணம் சொல்ல போறீங்க?” என்று கேட்டார்,
“யுவர் ஹானர் ! இப்போ நான் மாசமா இருக்கறது உண்மை தான். ஆனா, அதுக்காக எல்லாம் இவர் கூட என்னால மறுபடியும் ஒண்ணா சேர்ந்து வாழ முடியாது” என்று பொங்கி வரும் அழுகையை கிழுதட்டை கடித்து அடக்கியபடி நிலத்தை பார்த்து மீரா சொல்ல.
“அப்போ கரெக்ட்டான காரணம் சொல்லுங்க ?” என்றார் நீதிபதி.
“ஒரு பொண்ணா பொறந்தா என்ன கஷ்டம் அனுபவிக்கக்கூடாதோ அது எல்லாத்தையும் இந்த மூணு வருஷத்துல இவரால அனுபவிச்சிட்டேன். வெளில சொல்ல முடியாத அளவு இவர் எனக்கு கொடுமைகள் பண்ணியிருக்கார். இவ்வளவும் மீறி நான் இந்த சமுதாயத்துல தலைநிமிர்ந்து வாழணும்னு ஒரு முடிவோட எனக்காக வாழந்துட்டு இருக்கேன். திரும்பி இவர் கூட வாழ சொல்லி என்னை அந்த நரகத்துல தள்ளிறாதிங்க. இவர் கூட என்ன? இவர் பேரை கேட்க கூட நான் விரும்பலை. தயவு செஞ்சு எனக்கு இவர்கிட்ட இருந்து விவாகரத்து மூலமா  விடுதலை வாங்கி கொடுத்துடுங்க.” என்றாள் மீரா.
நீதிமன்றம் என்றும் பாராமல் அவனை கொல்ல துடிக்கும் மனதினையும் கரத்தையும் சிரமப்பட்டு விழிகள் சிவப்பேரி அமைதியாய் இறுக்கத்துடன் அமர்ந்திருந்தான் க்ருஷ்வந்த்.
வந்த கோபத்தை கை முஷ்டிகளை மூடி கட்டுபடுத்தி நீதிபதியின் தீர்ப்புக்காக காத்திருந்தான்.
அவள் சொற்களில் முழுவதும் திருப்தி அடையாமல் ஸ்ருஷ்டிமீராவை அமைதியாய் பார்த்திருக்க.
“மேம்! ஒரு சில விஷயங்கள் இங்க வெளிப்படையாய் சொல்ல முடியலை. நீங்க அனுமதி கொடுத்திங்கன்னா உங்ககிட்ட தனியா இது சம்பந்தமா சில விஷயங்கள் சொல்றேன்” என்றாள்.
அவளை உற்று பார்த்தவர் அதில் ஏதோ விஷயம் இருக்கின்றது என்பதை உணர்ந்து.
”சரி வாங்க” என்று தனி அறைக்கு கூட்டி சென்றார்.
இருபது நிமிடங்கள் நீதி மன்ற வளாகத்தில் சிறு சிறு சலசலப்புடன் கழிய இருவரும் வெளியே வந்தனர்.
உள்ள கலக்கத்தோடு ஸ்ருஷ்டிமீராவின் முகத்தை நோக்க, எதையோ சாதித்து விட்ட நிம்மதி ஒரு தெளிவு அவளின் முகத்தில் மின்னியது. 
அதற்கு நேர்மாறாக நீதிபதியின் முகத்தில் கட்டுகடங்காத கோபம் கொப்பளித்தது. இதை எதிர்பார்க்காத சுதன் அரண்டு போய் இருந்தான்.
‘என்ன சொல்லிருப்பா உள்ள? இந்தம்மா மூஞ்சி இப்படி எள்ளும் கொள்ளுமா வெடிக்குது. விட்டா வாணலில வச்சி வறுத்துடும் போல இருக்குதே? என்ன சொல்ல போகுதோ தெரியலையே?’ என்று நினைத்தவன் பாவமாய் தன் முகத்தை வைத்து கொள்ள அதை பார்த்த நீதிபதி இன்னும் எரிச்சலானார்.
“என்ன சுதன் அப்பாவியாய் முகத்தை வைத்துகொண்டால் நீங்கள் நல்லவர் ஆகிடுவிங்களா?” என்று கோபக்கனையை கேள்வியாய் தொடுக்க.
“மே…..ட….ம்” என்றான் அதிர்ச்சியில்.
நீங்க என்னென்ன பண்ணி வச்சிருக்கிங்கன்னு எல்லாத்தையும் ஒன்னுவிடாம மீரா என்கிட்டே சொல்லிட்டாங்க. எல்லார் முன்னாடியும் சொல்ல முடியலைன்னாலும் என்னை ஒரு அம்மாவா நினைச்சி எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. அதுக்கான ஆதாரத்தையும் என்கிட்டே கொடுத்திட்டாங்க. அவ நினைச்சா இனி நீ வாழ்நாள் முழுக்க வெளியவே இருக்க முடியாது. ஆனா, அவ ஏதோ பெரிய மனசு பண்ணி உன்னை மன்னிக்குறா. இனிமேலாவது ஒழுங்கா இரு.” என்றவர். நீதிமன்றத்தில் உள்ளவர்களை நோக்கி, “ இவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்க போதிய காரணங்களை இங்கே என்னிடம் கூறி உள்ளதால் இவர்கள் இருவருக்கும் இந்த நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது.” என்று வழக்கை முடித்து வைத்தார்.
மீராவின் விழிகள் அலட்சியமாய் சுதனை நோக்கியபின் அவளின் விழிகள் தானாய் தேடியது க்ருஷ்வந்த்தை தான். அவனின் விழிகளும் இவளையே பார்த்துகொண்டிருக்க எதுவும் பேசாமல் விழிமூடி திறந்து நானிருக்கிறேன் என்று மட்டும் உணர்த்திவிட்டு அமைதியானான்.
“நீ இதே மன தைரியத்தோடு நல்லா முன்னுக்கு வரணும்னு கடவுளை பிராதிக்கிறேன்மா. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் என்னை தனியாக கேள்” என்று சென்றுவிட்டார் நீதிபதி.
‘நமக்கு எல்லாம் தெரியும். ஆனா, அதையும் மீறி ஏதோ இருக்கு போல அதை தான் இந்த பச்சைமிளகாய் சொல்லிருக்கும். என்னவா இருக்கும்? ‘ என்று யோசனையில் ஆழ்ந்தான் க்ருஷ்வந்த்.
மீரா வினோத்திடம் ”எனக்கு ஒரு முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இருக்கு நான் போகணும். நீ வீட்டுக்கு போயடுண்ணா.” என்றவள் சந்தோஷிடம் திரும்பி, “அண்ணா! ரொம்ப நன்றிண்ணா சொன்ன மாதிரியே விவாகரத்து வாங்கி கொடுத்திட்டிங்க” என்று கரம் கூப்பி விடைபெற்றாள்.
அவள் செல்வதையே பார்த்துகொண்டிருந்தவன், “எல்லாம் என் நேரம்… இவளுக்கு எல்லாத்தையும் செஞ்சு கொடுக்கறது நானு… ஆனா பாரு நன்றிய இந்த ரெண்டு பக்கிங்களுக்கும் சொல்லிட்டு போறா?” என்று வாய் விட்டே சொல்லி தலையில் அடித்து கொண்டான் கிருஷ்வந்த்.
“அதுகெல்லாம் ஒரு கொடுப்பனை வேணும் மச்சி. சரி விடு  தங்கச்சி என்னைக்கு இருந்தாலும் உன்னை புரிஞ்சிக்கும்” ஆறுதல் கூறுவதாய் சந்தோஷ் கடுப்பேற்ற, ‘நீ வாயை மூடு’ என்பது போல் வலக்கையை வாயில் வைத்து, ‘போதும் வாயை மூடிட்டு போய் உன் வேலையை பார்.’ என்று சைகை செய்தான்.
“இந்த இடைப்பட்ட காலங்களில் சந்தோஷ், க்ருஷ்வந்த், வினோத் மூவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.
“சரி வா சந்தோஷ். ஸ்ருதி பார்க்காம போறாள்ள அதான் கடுப்பு அவனுக்கு” என்று சந்தோஷை கூட்டி சென்றான் வினோத்.
அதன் பிறகு புது தெம்போடு மீரா  வளம் வர தொடங்க அசுர வேகத்தில் இருந்தது அவளின் தொழில் வளர்ச்சி.
தன் பணியில் எவ்வளவு மூழ்கினாலும் ஸ்ருஷ்டிமீராவை பாதுகாப்பதில் குறியாய் இருந்தான் க்ருஷ்வந்த்.

Advertisement