Advertisement

அலுவலகத்தில் நுழைந்தவளை எல்லோரும் சூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்க ஒரு சில உண்மையான அக்கறை கொண்ட உள்ளங்களை தவிர மற்ற கண்களில் பரிதாப அலை வீச உள்ளுக்குள் நொறுங்கி போனாள் ஷண்மதி.

“மதி!” என்று வரும் ஷ்ரவனின் குரலில் சுய உணர்விற்கு வந்தவள்.

“என்ன ஷ்ரவன்?” என்றாள் தன் வருத்தத்தை மறைக்க முயற்சி செய்தபடி.

“நீ என்கிட்டே உன் உணர்வுகளை மறைக்கணும்னு நினைக்காதே மதுகுட்டி அது உன்னால முடியாது.” என்றான் மெதுவாய் அவளின் செவி அருகில்.

“உண்மைதான் ஷ்ரவன். இனி இது மாதிரி செய்யமாட்டேன்” என்று தன் காதுகளை பிடித்து கண்களால் கெஞ்சியபடி மன்னிப்பு கேட்க, அவளின் செய்கையில் தன்னையும் மீறி அவளிடம் இழந்து கொண்டிருந்தான் ஷ்ரவன்.

“தட்ஸ் மை கேர்ள். ஐ லவ் யு.” என்று அவளின் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்து அவளை தன்னோடு அணைத்துகொண்டான்.

அவனின் அருகாமை அவளுக்கு இதமாய் இருக்க, இமைகளை மூடி அதில் கட்டுண்டு இருந்தவளை கலைத்தது வெளியே இருந்து வந்த குரல்.

“மேம்! அஜய் சார் உங்களை வர சொன்னார்” என்றார் பியூன்.

‘எதற்கு நம்மை வர சொல்கிறான்?’ என்று யோசித்தவள்.

“நான் வரேன் நீங்க போங்க” என்று அவனை அனுப்பிவிட்டு “ஷ்ரவன் நான் போய் என்னனு கேட்டுட்டு வந்துடறேன்” என்று எழுந்தாள்.

,”மது” ஷ்ரவனின் அழைப்பில் நின்றவள் திரும்பி “என்னடா?” என்றாள்.

“இல்ல… நான் சொல்றேன்னு என்னை தப்பா நினைக்காத. “ என்று இழுத்தான்.

“இல்ல. நீ எது சொன்னாலும் என் நல்லதுக்கு தான் சொல்லுவ. பரவால்ல சொல்லு.” என்றாள் சிரித்துக்கொண்டு.

“இப்போ எல்லோர் பார்வையும் உன் மேல ஒரே மாதிரி இருக்காது. ஒரு சிலர் அதே உண்மையான அக்கறையோட பேசுவாங்க. ஒரு சிலர் எண்ணம் மாறி இருக்கும். அதனால கொஞ்சம் எச்சரிக்கையா இருடா” என்றான் சற்று கவலையான குரலில்.

“புரியுது டா. நான் பார்த்துக்குறேன்” என்று சிரித்தபடி வெளியே சென்றாள்.

நேராக அஜயின் அறைகதவை தட்டியவள் “மே ஐ கம் இன்’ என்று மரியாதை நிமித்தம் கேட்க, உள்ளே இருந்து ‘எஸ் கம் இன்’ என்று குரல் வரவே உள்ளே நுழைந்தாள்.

“வா வா ஷன்மதி. எப்படி இருக்க?” என்றான் அஜய்.

“ஹ்ம்ம் இருக்கேன் அஜய். நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் வறட்டு புன்னகையை உதிர்த்து.

“ஐ ஆம் பைன். இதன் நேரத்துல இதை சொல்ல கூடாது தான். இருந்தாலும் சொல்றேன். எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கு” என்று அமைதியாய் சிரித்தான்.

முகத்தில் மகிழ்ச்சி பரவ “அப்டியா ரொம்ப சந்தோஷம். கன்ங்ராட்ஸ்” என்று கரம் குலுக்க, எதிரில் இருப்பவனின் பார்வையின் அர்த்தம் அந்த குலுக்கலில் மதிக்கு லேசாக புரிந்தது. .

மனதின் ஒரு ஓரத்தில் ஷ்ரவனின் குரல் ஒலித்தது.

‘நீ சொன்னது சரி தான் ஷ்ரவன். என் மேல இவங்க பார்வை மாறி இருக்கு.’ என்று நினைத்தவள்.

வெடுக்கென கையை அவனிடம் இருந்து உருவி, “சொல்லுங்க எதுக்கு என்னை கூப்பிட்டிங்க?” என்றாள் மேஜையில் பார்வையை பதித்தபடி.

“எதுக்கு இப்போ இவ்ளோ டென்ஷன் ஆகுற ஷன்மதி?ஒண்ணுமில்லை. உன்னை பார்க்கணும் போல இருந்தது. அதான் கூப்பிட்டேன்.” என்றான் மெதுவாய்.

“ஓஹ அப்டியா?சரி உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி. நான் போகவா எனக்கு வேலை இருக்கு” என்றாள் வரும் கோபத்தை அடக்கி கொண்டு.

“எதுக்கு இவ்ளோ அவசரம்?வேலை எங்கயும் ஓடிடாது.” என்று மெல்ல அவன் இருக்கையில் இருந்து எழுந்தவன், அவளை நோக்கி மெல்ல பேசியபடி அடிவைத்தான்.

“உன்னை அப்போவே நேர்ல வந்து பார்க்கணும்னு என் மனசு துடிச்சது. பட் என்னால வரமுடியல. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ஷன்மதி. நீங்க ரெண்டு பெரும் லவ் பண்ணலைண்ணா நான் வந்து உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிருப்பேன். ஆனா, எல்லாமே தலை கீழாகிடுச்சு. இப்போகூட அப்பா ரொம்ப வற்புறுத்தி தான் இந்த கல்யாணத்துக்கு என்னை சம்மதிக்க வச்சிருக்கார் தெரியுமா? எனக்கு உன்னைத்தான் பிடிக்கும்.” என்றவன் அவளின் இருக்கையின் அருகே வந்து நின்றான்.

ஷன்மதிக்கு ஒருபுறம் கோபம் இருந்தாலும் மற்றோருபுறம் லேசான படபடப்பு வந்தது. அங்கிருந்து எழுந்து ஓடி விட்டால் தேவலாம் என்று இருந்தது. எந்நேரத்திலும் வெளியே வந்து விழுந்து விடுவேன் என்று சொல்லும் கண்ணீரை அடக்கி கொண்டு அமைதியாக இருந்தாள்.

அவள் எதிர்பாரா நேரம் அவளின் இரு தோள்களிலும் தன் கைகளை வைத்து லேசாக அழுத்தியவன், “நீ எதுக்கும் பீல் பண்ணாத. தனியா இருக்கோமேன்னு நினைக்காத. உனக்கு நான் இருக்கேன். என்ன உதவி வேணும்னாலும் என்கிட்டே தயங்காம கேளு” என்றான் மெல்ல சிரித்து.

அடக்கி வைத்திருந்த கோபம் புயலாய் வெளிப்பட முதலில் பதிந்தது அவளின் கரம் அவன் கன்னத்தில்.

ஒரு நொடி அதிர்ச்சியாய் அவளை பார்த்தவன்.

“உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா என்னை அடிச்சிருப்ப?ஏதோ போனா போகட்டும் தனியா இருகிஎன்னுன் பாசமா பேசினா என்னையே அடிக்கிறியா?” என்று அவளின் மேல் கை வைக்க முயன்ற நொடி, உருவம் இல்லாத ஷ்ரவனின் கைகளில் அவன் கழுத்து நன்கு மாட்டிக்கொண்டது.

“நான் ஷ்ரவன். அவளோட உயிர். அவகூட தான் இருக்கேன். இன்னொரு தடவை அவ மேல உன் விரல் இல்ல, உன் பார்வை பட்டா கூட நீ மூச்சு விட உயிரோட இருக்க மாட்ட. இதை பத்தி வெளில சொல்ல நினைச்ச. உன் வீட்ல இருக்கவங்க எல்லோரும் ஒரே நொடில பரலோகம் போயிருவாங்க. புரியுதா?” என்று கடுங்குரலில் கர்ஜித்தான்.

அஜயின் சப்தநாடியும் அடங்கி போனது. உருவம் இல்லா உயிரை பார்த்த பீதியில் பிரம்மை பிடித்தது போல தலை அசைத்தான்.

வேகமாக அழுதபடி அங்கிருந்து ஓடிய மதியை நினைத்து அவன் மனம் பதறியது.

“மதிம்மா” என்ற அவன் அழைப்பிற்கு நிற்காமல் ஓடினாள்.

தனதறையில் விழிகள் மூடி அமர்ந்திருந்தவளின் எதிரே தோன்றியவன் மெல்லிய குரலில் “மதிம்மா” என்றான்.

“ஷ்ரவன்” என்று அடுத்த நொடி அவனை அணைத்துகொண்டாள்.

சதை இல்லாத உயிர் ஆன்மாவை அணைக்க அன்பு மேலோங்கி இருக்க வேண்டும்.

“மதிகுட்டி. நான் தான் சொன்னேன்ல இப்போ ஒரு சிலரோட பார்வை மாறி இருக்கும்னு. ஒரு சிலர் உன் மேல பரிதாப படுவாங்க. ஒரு சிலர் இவளா என்று ஒதுங்குவாங்க. ஒரு சிலர் இப்படி தனக்கு சாதகமா மாத்த முயற்சி செய்வாங்க. எல்லோரையும் எதிர்கொள்ள உனக்கு மனதைரியம் தான் தேவை.” என்றான் மெதுவாய்.

“ஏன் ஷரவ் இப்படி இருக்காங்க?ச்சே இதை நான் அவன்கிட்ட இருந்து எதிர்பார்கலை. எனக்கு இங்க வேலை பார்க்கவே பிடிக்கலை” என்றாள் அழுதபடி.

அவளின் கேசத்தை பொறுமையாக விலக்கி விட்டவன்.

“என் மதுகுட்டி அழக்கூடாதுன்னு தான் உன் கூடவே நான் இருக்கேன். அழாதடா” என்றான் வருத்தமாய்.

சிறிதுநேரம் அமைதியாய் இருந்தவள்.

“சரி ஷ்ரவ். இனி நான் அழமாட்டேன். ஒரு புது மதியா மாற போறேன். யாருக்கும் என் உணர்வுகளை பத்தி கவலை இல்லன்னும் போது. அவங்களோட கேலி பேச்சுக்கு காது கொடுக்காம எனக்கு பிடிச்ச மாதிரி நான் இருக்க போறேன். அதை தான நீயும் எதிர் பார்க்குற ஷ்ரவன்” என்றாள் மெலிதாய் இதழ் சிரித்து.

“எக்சாக்ட்லி மதி குட்டி” என்று அவள் நெற்றியோடு நெற்றி மோதியவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

அந்த முத்தத்தில் மனிதனின் உயிர் சொல்லும் தொடுதல் இல்லை. ஆனால், அவனின் காதல் உணர்வுகள் நிரம்பி இருந்தது.

அந்த நிமிடமே அவளின் ராஜினாமா கடிதத்தை எழுதி தந்துவிட்டு வந்தாள்.

வீட்டிற்கு வந்தவள் அன்று நடந்ததையே நினைத்து கொண்டிருந்தாள்.

“எவ்ளோ ஈசியா என்னை சீப்பா எடை போட்டுட்டான் இல்ல. ராஸ்கல்” என்று ஆத்திரம் தாங்காமல் அரற்றிகொண்டிருந்தாள்.

“மதி” என்றான் ஷ்ரவன் மெதுவாய் அவளின் எதிரில் மெத்தையில் அமர்ந்து.

“சொல்லு ஷ்ரவன்” என்றாள் கண்களை மூடியபடி.

“மதி” என்றான் மீண்டும் மிக மெதுவாய்.

“என்ன சொல்லுடா?ஏதோ சொல்லனும்னு நினைக்கிற? அப்புறம் எதுக்கு இவ்ளோ தயங்குற?” என்றாள் மெதுவாய் விழிகளை திறந்து.

“அது வந்து..’என்று இழுத்தான்.

“என்ன இவ்ளோ இழுக்குற?” என்றாள் அவனை குறும்பாய் பார்த்து.

“அது வந்து நான் ஒன்னு சொல்லுவேன். கேப்பியா?” என்றான் ஷ்ரவன்.

.

” ’    

Advertisement