Advertisement

17
‘என்னடா இது? இவ இப்படி முழிச்சிகிட்டு இருக்கா? என்ன சண்டை போட வந்துருக்கான்னு தெரியலையே? கேட்டு வைப்போம். எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு இவ தான் நமக்கு கொரியர் கேர்ள். அதனால, எதுவா இருந்தாலும் அடக்கி வாசிடா க்ருஷ்வந்த்.’ என்று உள்ளுணர்வு அவனை எச்சரிக்க.
“என்னம்மா? இப்ப எதுக்கு இப்படி சாமி ஆடிட்டு வந்து நிக்கற?” என்றான் பொறுமையாக.
“ஏன்டா? உனக்கு தினமும் காலைல இங்க இருந்து எல்லாம் சப்ளை பண்ற கொரியர் பாயா மட்டும் நான் வேணும்ல?” என்றாள்.
‘அய்யய்யோ! நான் மனசுல நினைகிறத அப்டியே சொல்றாளே. ஒரு வேலை நாம நினைக்கிறது வெளில கேக்குதோ?’ என்று உள்ளுக்குள் நினைத்து கொண்டிருந்தான்.  
“ச்சே! ச்சே! அப்டிலாம் இல்லைடா செல்லகுட்டி. நீ என் செல்ல தங்கச்சி இல்ல. எதுக்குடா இப்படிலாம் பேசுற?” என்றான் சமாளிக்கும் விதமாக.

“வாய மூடுடா பண்ணி. அப்புறம் நல்லா வாயில ஏதாவது வந்துரும்.” என்றாள் மறுபடியும்.

“ஏய்! என்னடி நான் உனக்கு அண்ணன்டி. வாய் கொழுப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு. இப்ப எதுக்கு இப்படி குதிக்கிற? அதை முதல்ல சொல்லு?” என்றான் இவனும் கோபமாக.
“நல்லா இல்லாத உளுந்தங்களிய நாலு நாளா வேணாம்னு கெஞ்சினாலும் விடாம சாப்பிட வெச்சியே. நான் கூட ஏதோ தூக்கத்துல நீ என்ன கொடுக்கறேன்னு தெரியாம கொண்டு வச்சிட்டு வந்து தூங்கிட்டேன். அதுக்குன்னு உனக்கு நல்லா போட தெரிஞ்ச ஹைபிஸ்கஸ் டீய ஏன்டா எனக்கு போட்டு தரலை? அம்மா இப்ப தான் சொன்னாங்க. அண்ணன் சூப்பரா ஹைபிஸ்கஸ் டி போட்டு கொடுத்தான் நல்லா இருந்ததுன்னு. எனக்கு எங்க?” என்றாள் நான்கு வயது குழந்தை சண்டைபோடுவது போல்.
‘ஹ்பூ! இவ்ளோ தானா? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சு பயந்திட்டேன். அம்மா நீங்க இருக்கிங்களே. எனக்கு ஹெல்ப் பண்ணலைன்னாலும் நாரதர் வேலைய மட்டும் நல்லா பாக்கறிங்க’ என்று தன் அன்னையை மனதில் அர்ச்சனை செய்தவன்.
“இப்போ என்ன? உனக்கு டி தான வேணும்? நான் உடனே போட்டு தரேன். என் தங்கச்சிக்காக இதை கூட செய்யமாட்டேனா?” என்று கேள்வியாய் கேட்க.
“நீ செய்யலையே? அதுக்கு தான நானே வந்து கேக்குறேன்” என்றாள் காரமாக.
‘இதுக்கு மேல எதுவும் பேசாத. இவ அந்த பச்சைமிளகாய் கூட நிறைய சேர்றான்னு நினைக்கிறன். ரொம்ப காரமா ச்சே ரொம்ப கோவமா பேச ஆரம்பிச்சிட்டா.  என் லைன் கிளியர் ஆகட்டும் இவளை முதல்ல கல்யாணம் பண்ணி துரத்துறேன். இல்லன்னா ஒன்னும் தெரியாத என் பேபிக்கு எல்லாத்தையும் இவளே சொல்லிக்கொடுத்து நம்ம பேர டேமேஜ் பண்ணிருவா போல இருக்கே’ என்று யோசினையில் மூழ்கி இருக்க.
“என்ன அண்ணா? அதுக்குள்ள டி எப்டி போடறதுன்னு மறந்துட்டியா?” என்று நக்கலாக கேட்டாள்.
“யாரு மறந்துது? இப்ப எப்டி போட்டு தரேன்னு மட்டும் பாரு” என்று சமையல் அறை நோக்கி சென்றான்.
“இங்க வா. எப்படி போடறதுன்னு நீயும் கத்துக்க. நாள பின்ன உனக்கும் யூஸ் ஆகும்” என்றான்.
“ஹ்க்கும்.. அதெல்லாம் முடியாது. வேணா நீ நல்லா போட்றியான்னு இங்க உக்கார்ந்து செக் பண்றேன்” என்று அங்கிருந்த மேடையின் மேல் ஏறி அமர்ந்து கொண்டாள்.
“ம்.. எல்லாம் உன் நேரம்டா க்ருஷ்வந்த். இந்த சுண்டெலில்லாம் உன்னை கேள்வி கேக்குது” என்று வாய் விட்டு சொல்லியபடியே செய்ய தொடங்கினான்.
முடியாது என்று சொன்னாலும் அண்ணன் செய்வதை கவனிக்க தொடங்கினாள்.
முதலில் இரண்டு க்ளாஸ் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்தவன், வெளியே வாசலில் இருந்த செம்பருத்தி பூ ஐந்தை பறித்து வந்து கழுவி அதில் போட்டான்.
பின் ஒரு பெரிய துண்டு இஞ்சியை நறுக்கினாலும் அதை மத்தில் தட்டி கொதிக்கும் நீரில் போட்டு அதனுடன்  மூன்று பனங்கற்கண்டையும் போட்டு சிம்மில் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு அந்நீரில் அந்த பூவின் சாறும் இஞ்சியின் காரமும் முழுதும் இறங்கி நீர் கருப்பாக ஆனவுடன் இறக்கி ஒரு லெமனை பிழிந்தான். பிழிந்தவுடன் கருப்பு நிறத்திலிருந்த டி மனதை மயக்கும் பிங்க் நிறத்திற்கு மாறியது.
“வாவ்! அண்ணா சூப்பர்ணா. எவ்ளோ அழகா இருக்கு இந்த கலர்” என்று புகழ.
“இன்னும் இருக்கு.” என்று ஒரு தம்ப்ளரில் இரண்டு ஸ்பூன் தேனை விட்டு அதில் அந்த டியை வடிகட்டி ஊற்றி கலக்கி கொடுத்தான்.
“இந்தா குடிச்சி பாரு. எப்டி இருக்குனு சொல்லு பார்க்கலாம்” என்று ஒரு கோப்பையை அவளிடம் நீட்டி இன்னொரு கோப்பையை அவன் உரிய தொடங்கினான்.
“அண்ணா. ரொம்ப சூப்பர் அண்ணா. ரொம்ப சுவையா இருக்கு. புளிப்பு காரம்ன்னு ஒரு வித்யாசமா இருக்கு. இதோட வாசம் ரொம்ப நல்லா இருக்கு. இதை குடிக்கிறவங்க இதுக்கு அடிக்ட் ஆகாமா இருக்க முடியாது போல” என்று ருசித்து பருகினாள்.
“குடிச்சிட்டியா? இப்போ இதுல இருக்க இஞ்சியையும் செம்பருத்தி பூவையும் தனி தனியா எடுத்து சாப்பிட்டு பாரு.” என்றான்.
“ம் ம் நான் மாட்டேன். இந்த பூ வழ வழன்னு இருக்கு” என்று முகத்தை சுருக்க.
“அப்படி சொல்லாத? இது தான் நம்ம இதயத்துக்கு பலத்தை கொடுக்குது. பார்க்க தான் அப்படி இருக்கு சாப்பிட்டு பாரு உனக்கு அந்த சுவை ரொம்ப புடிக்கும். பெண்களுக்கு சுகப்ரசவதுல இருந்து இன்னும் நிறைய பிரச்சனைகள் சரி ஆகிடும்.” என்று ஒன்றை எடுத்து தன் தங்கைக்கு கொடுக்க அவளும் சாப்பிட்டு “உண்மை தான் அண்ணா பார்க்க தான் அப்படி இருக்கு. ஆனா சாப்டா ரொம்ப நல்லா இருக்கு” என்று எல்லா பூவையும் சாப்பிட்டாள்.
“இனிமே தினமும் எனக்கு கொடுத்தபுறம் தான் நான் அண்ணிக்கு எடுத்துட்டு போவேன்” என்றாள்.
“சரி” என்று அவளின் நெற்றியோடு நெற்றி மோதினான் சிரித்தபடி.

Advertisement