Advertisement

15
கிழே சென்றவள் மறுபடியும் எதையோ யோசித்த படி மேல வர “இப்ப என்ன?” என்றான் சிரித்தபடி.
“அது ஒண்ணுமில்லை அண்ணா! இன்னும் ஒரே ஒரு சந்தேகம் அதை மட்டும் சொல்லிடு”
“என்ன கேளு?” என்றான் க்ருஷ்வந்த்.
“நான் காலேஜ் டூர் போயிட்டு வரதுக்குள்ள அம்மாவையே சமாளிச்சு எப்படி சரின்னு சொல்ல வச்ச அதை சொல்லு?” என்றாள்.
“நம்ம அம்மா யாரு?அவங்க முதல்லயே கண்டுபிடிச்சிட்டாங்க. அன்னைக்கு மீராவ கூட்டிட்டு வீட்டுக்கு வந்த ரெண்டாவதுநாள் என்னை கூப்பிட்டு அம்மா கேட்டாங்க”.
“என்ன கிருஷ்? இதுவரைக்கும் எந்த பொண்ணையும் நீ உன் வண்டில ஏத்துனதில்ல?..? அதுவும் இவ்ளோ காலைல அந்த பொண்ணு வீட்டுக்கு போய் கூட்டிட்டு வந்துருக்க? என்ன விஷயம்?” என்றார் நேரடியாக.
அன்னையின் நேரடி கேள்வியை எதிர்பார்க்காதவன் சற்று தடுமாறினான்.
“அம்மா அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்று இரவு சுதன் வந்து தகராறு செய்ததை கூறி “அதனால தான் மனசு கேக்காம போய் கூட்டிட்டு வந்தேன்” என்றான்.
“அவ்ளோ தானா? வேற எதுவும் இல்லையா? நான் உன் அம்மாடா?” என்று முறைக்க.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் பின் சுந்தரியை பார்த்து “ஆமாம்மா! எனக்கு மீராவை பிடிச்சிருக்கு” என்றான்.
“என்னடா சொல்ற? அவ ஏற்கனவே கல்யாணம் ஆனவடா? அதுவும் இல்லாம மாசமா இருக்கா? அவளை போய் விரும்புறேன்னு சொல்ற? இதெல்லாம் தப்பு” என்றார் கொதித்து போய்.
“அம்மா! அவ கல்யாணம் ஆனா பொண்ணு தான். ஆனா அவ புருஷன்ற பேர்ல இருக்க மிருகத்துகிட்ட, அவள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அந்து பொண்ணுக்கு இருக்க மன தைரியத்துல தான் இதை எல்லாத்தையும் தாண்டி வெளில வந்துருக்கா. அவளுக்கு ஒரு புது வாழ்க்கைய நான் தரணும்னு முடிவு பண்ணிருக்கேன்” என்றான் நிறுத்தி நிதானமாக.
மெதுவாக அவனை முறைத்தபடி வந்தவர் ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.
“அவளுக்கு ஆயிரம் பேர் இருக்காங்க வாழ்க்கை கொக்க. உனக்கெதுக்கு இந்த வேலை? நீ என்ன பெரிய தியாகியா? நான் இதை ஒரு காலும் சம்மதிக்க மாட்டேன். முதல்ல இப்பயே போய் அவ கழுத்தை புடிச்சு வெளில தள்றேன். ச்சி…!!! இவளுங்க எல்லாம் என்ன மாதிரியான பொண்ணுங்கன்னு தெரியல. பார்த்து பார்த்து புள்ளைய வளர்த்து வெச்சா, இப்படி பார்த்து ரெண்டு நாள் கூட ஆகாத பையனை சொத்துக்காக வளைச்சி போட திட்டம் போட்றாளுங்க” என்றார் கோவமாக.
“அம்மா…!!!” என்று இதுவரை எதிர்த்து பேசாத தன் அன்னையை பார்த்து கர்ஜித்தான் க்ருஷ்வந்த்.
“எந்த ஒரு பொண்ணையும் தப்பா பேசறதே தப்பு. அதுவும் என் மீராவ பத்தி எதுவும் தெரியாத நீங்க, எப்படி அப்படி பேசலாம். இப்ப வரைக்கும் இதுமாதிரி எனக்கு ஒரு எண்ணம் இருக்கறதே அவளுக்கு தெரியாது. தெரிஞ்சா அவள் இதுக்கு ஒத்துகுவான்னு நினைகிறிங்களா? நெவெர். நிச்சயமா மாட்டா. நீங்க சொல்றதுக்கு முன்னாடி அவளே இங்க இருந்து சொல்லாம காலி பண்ணி போயிருவா.” என்று அவரை பார்த்தவன் பின் மெதுவாய் தொடர்ந்தான்.
“நானும் எவ்ளோ பொண்ணுங்களை பார்த்துருக்கேன். நிறைய பேர் நம்ம சொத்துகாகவும், ஒரு சிலர் என் அழகுக்காகவும், இன்னும் ஒரு சிலர என் பதவிக்காகவும் தான் என்ன விரும்பர மாதிரி நடிச்சாங்க. மீரா மட்டும் தான் முதல்ல நானா உதவி செய் கேட்டப்ப, நீங்க யாரு எனக்கு உதவ செய்ய? உங்க வேலைய போய் பாருங்கன்னு என் மூஞ்சில அடிச்சா மாதிரி ஒரு ஸெல்ப் ரெஸ்பெக்ட்டோட பேசுனது.”
“ஆமா!  இன்னொருத்தர் மனைவி மேல விருப்பம் கொள்றது தப்புன்னு தான் அவளை விட்டு விலகிருந்தேன். ஆனா, நேத்து அவ புருஷனை எந்த அளவுக்கு வெறுக்குறான்னு   என் கண் முன்னாடியே சொல்லிட்டா. இப்ப அவள் என்னை ஏத்துக்க மாட்டா தான். ஆனா அவளுக்காக நான் காத்திருக்க தான் போறேன்.” என்றான் திண்ணமாக.
“சரி. நமக்குள்ள ஒரு டீல் போட்டுப்போம்” என்றான் க்ருஷ்வந்த்.
“என்ன?” என்றார் வேண்டா வெறுப்பாய்.
“நமக்குள்ள நடந்த இந்த பேச்சு பத்தி அவளுக்கு எதுவும் தெரியகூடாது. நீங்க சொல்றிங்களே நம்ம சொத்துக்காக தான் இப்படி பண்றான்னு. அடுத்த ரெண்டு மாசத்துக்கு நானா பிளான் பண்ணி அவ முன்னாடி போறேன். ஒரே ஒரு தடவை என் மீரா. என்னை கோபமா பார்க்கிறதை தவிர, என்னை ஆசையா பார்த்துட்டான்னு வைங்க… அந்த நிமிஷமே நீங்க சொல்ற பொண்ணு கழுத்துல நான் தாலி கட்றேன்.” என்று நிறுத்தி தன் அன்னையை பார்த்தவன்.
(‘மீரா என் செல்ல பச்சைமிளகாய்!  உன்னை நம்பி எங்க அம்மாகிட்ட  சொல்லிட்டேன். மாமாவை  ஜெயிக்க  வச்சிருடி. உன்னை மோர்ல  ஊற போட்டு   மோர்மிளகாவாய் சாப்பிடுறேன்’)  கிருஷ்வந்த் மனதில் நினைத்தாலும்.     
“ஆனா, அதே சமயம் ஒரு வேலை மீரா என்னை கண்டுக்கலைன்னு வச்சுகோங்க. அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன். உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லனாலும். நான் சொன்னத மீறி மீராகிட்ட ஏதாவது கோபமா பேசி அவ வெளிய போய்ட்டா அதுக்கப்புறம் நானும் இந்த வீட்ல இருக்கமாட்டேன். அவளை தொலைகறதா நினைச்சு என்னையும் சேர்த்து தொலைச்சிராதிங்க” என்று தன் அன்னையை நெருங்கி.
“அம்மா! ப்ளீஸ் உங்களுக்கும் அவளை பிடிக்கும். குழந்தை இருக்குன்னு யோசிக்காதிங்க. அவளே எனக்கு பிடிக்குங்கும்போது அவளுக்கு பிறக்க போற குழந்தையும் எனக்கு பிடிக்கும். அந்த குழந்தையை என் குழந்தையாய் நான் வளர்ப்பேன்.” என்றான்.
“முதல்ல நீ சொல்ற மாதிரி அவ இருக்காளான்னு நான் பார்க்குறேன். அப்புறம் மத்ததை பத்தி பேசலாம்” என்று தன் அறைக்கு சென்றுவிட்டார்.
தன் தந்தையிடம் சென்றவன். “அப்பா நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேன்ல நீங்க எனக்கு சப்போர்ட்டா பேசலாம்ல?” என்று ஆதங்கமாய் தந்தையை பார்த்து கேட்க.
“என்னால பேசி உங்கம்மாவ சம்மதிக்க வெக்க முடியும். ஆனா அவளே பார்த்து தெரிஞ்சிகிட்டா தான் அவ மீரா மேல முழு பாசத்தையும் காட்டுவா. பொறுமையா இரு எல்லாம் நல்லதே நடக்கும்.” என்று அவரும் சென்று விட்டார்.
மறுநாளில் இருந்து வேண்டுமென்றே அவள் வீட்டை விட்டு வெளியே வரும் போது எதிரே கடப்பது. முறைப்பாள் என்று தெரிந்தும் தேவை இல்லாமல் அவளை பார்த்து சிரிப்பது.
“ஏதாவது ஹெல்ப் வேணுமா?” என்று கேட்பது. இப்படி தினமும் குறைந்தது ஒரு முறையாவது  வேண்டுமென்றே அவளை சந்தித்தான் திட்டம் போட்டு.
‘பேபி என் பச்சை மிளகாய்! மாமாவை தப்பா நினைகாதடி எல்லாம் நம்ம எதிர்கால வாழ்க்கைக்காக தான் இப்படி செய்றேன்’ என்று தனக்குள் புலம்பி தள்ளுவான்.
ஆனா, நம்ம மீரா. அதாங்க க்ருஷ்வந்தோட பச்சைமிளகாய் பத்தி தான் நமக்கு நல்லா தெரியுமே. அவன் தன்னிடம் வேண்டும் என்றே நெருங்க முயலுகிறான் என்று முடிந்தவரை விலகி சென்றவளிடம் வசமாய் வந்து மாட்டி கொண்டான் க்ருஷ்வந்த்.
அவன் எது செய்தாலும் கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவள். அதற்கும் சோதனை வைத்தார் நம்ம க்ருஷ்வந்த் அவன் தாயிடம் சபதம் செய்திருந்த கடைசி நாள் அன்று “என்ன மீரா? நான் ஏதாவது கேட்டா பேசாம போய்டே இருக்கீங்க? எதுவும் பேசமாட்டிங்களா?” என்றான்.
‘என் செல்லகுட்டி. மை ஸ்வீட் டார்லிங். அமுல் பேபி. இப்பயே உன்னை இழுத்து வச்சி பச்சக்குன்னு ஒன்னு கொத்தா நல்லா தான் இருக்கும்….. அய்யய்யோ…!!  தப்பு தப்பு  நல்லா இருக்காதே அம்மா அங்க இருந்து பார்க்கிறாங்களே! போடி பச்சை மிளகாய். ஐ லவ் யு டி… ஸ்வீட் பொண்டாட்டிகொல்றாளே!  இந்த முட்டை  கண்ண வெச்சு” என்று மனதிற்குள் அவள் திட்டுவதை கூட காதில் வாங்காமல் கொஞ்சி கொண்டிருந்தான்.
“ஹலோ! மிஸ்டர். நீங்க யாரு? எதுக்கு எப்ப பாரு என்னை தொந்தரவு பண்ணிகிட்டே இருக்கீங்க. இது உங்க வீடா இருக்கலாம். நான் உங்க வீட்டுக்கு வாடகை கொத்துட்டு தான் குடி இருக்கேன். சும்மா ஓசில ஒன்னும் இல்ல. நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல? என்னை தொந்தரவு பண்ணாம இருக்கறது தான் உங்களுக்கு நல்லதுன்னு. நீங்க யாரா வேணா இருந்துகோங்க. போலிஸ்னா உடனே பயந்து நடுங்கனுமா. அதெல்லாம் என்னால முடியாது. ஒரு தடவை சொன்னா புரியாதா? நானும் பொறுமையா போனா ரொம்ப தான் ஓவரா இம்சை பண்ணிட்டே இருக்கீங்க? எனக்கே ஆயிரத்தெட்டு டென்ஷன். இதுல நீங்க வேற இருக்குற தலைவலி போதாதுன்னு புதுசா ஆரம்பிகிறிங்க. எனக்கு ஆம்பளைங்க மேல இருந்த மரியாதையே போய்டுச்சு. உங்க முகத்தையே பார்க்க விரும்பல நான் போதுமா? இன்னொரு தடவை என்கிட்டே பேச நினைச்சிங்க அவ்ளோ தான் நல்லா இருக்காது சொல்லிட்டேன்.” என்று பற்ற வைத்த சரவெடியாய் வெடித்து நிறுத்தினாள்.
அவன் பேச ஒரு நொடி கூட தராமல் போய் கொண்டே இருந்தாள்.
அவள் வெளியே செல்லும் வரை பார்த்துகொண்டிருந்தவன். தன் பாக்கெட்டில் வைத்திருந்த போனை எடுத்து, திரும்பி மாடியில் இருந்து காதில் போனை வைத்துகொண்டு தங்களை பார்த்தபடி இருக்கும் அன்னையிடம் பேசினான்.
“என்னம்மா கேட்டிங்களா?” என்று சிரித்தான்.
“நீ சொல்றது நிஜம் தான் கிருஷ” என்றார் சுந்தரி.
“அவள் உன்னை பிடிக்லைன்னு இவ்ளோ திட்டிட்டு போறா.. ஆனா நீ டென்ஷன் ஆகாம சிரிச்சிட்டு இருக்க?” என்று கேட்டார்.
“அவ திட்டிட்டு போனதே எங்க என்னை பிடிக்கும்ன்ற விஷயத்தை அவ வாயால உளறிடுவோம்னு பயந்து தான் மா” என்று சிரித்தான்.
“இப்படி தான் அம்மா, அப்பா ஓகே சொன்னாங்க” என்று தங்கையை பார்த்து சிரித்தான்.
“அதுக்கபுறம் தினமும் அவளுக்காக ஏதாவது ஒன்னு செய்ய ஆரம்பிச்சேன். ஆனா அன்னைலர்ந்து தப்பி தவிறி கூட இன்னைக்கு வரைக்கும் அதாவது மூணு மாசமா அவ கண்ணுல படவே இல்ல. நான் தான் இது எல்லாம் செய்றேன்னு அவளுக்கும் தெரியும் ஆனாலும் காட்டிக்கமாட்டா. அவ அந்த வாசப்படி தாண்டிட்டா என்னை தேடும் பாரு அந்த முட்ட கண்ணு.” என்று எதோ ஒரு கற்பனை உலகத்திலே மூழ்கியபடி சொல்ல.
“போதும் போதும், அம்மா என்னை கூபிட்றாங்க. கேடி பயடா நீ. நான் போறேன்.” என்று “இதோ வரேன்மா” என்று குரல் கொடுத்தபடி கிழே இறங்கி ஓடினாள்.
“ஏண்டி பச்சை மிளகாய். மனசுக்குள்ள ஆசைய வெச்சுகிட்டு என்னையே அவளோ திட்டினே இல்ல. இரு உன்னை எனக்காக ஏங்க வைக்கல என் பேர் க்ருஷ்வந்த் இல்லடி” என்று எண்ணியபடி வானத்தை பார்த்து பேச தொடங்கினான்.

Advertisement