Advertisement

அத்தியாயம் – 5
நடந்து சென்று அந்த கார்க்காரன் அந்த பெட்டியின் அருகே போய் நின்ற நேரம்,  அந்த இடத்திற்கு எல்லோரும் வந்துவிட்டனர்.
அவன் குனிந்து அந்த பெட்டியை திறக்க உள்ளே, வெள்ளை துணியால் உடல் முழுவதும் சுற்றப் பட்டு, அழுது துடித்துக் கொண்டிருக்கும் சிசுவின் முகம் மட்டுமே தெரிந்தது.
நடுங்கும் கைகளோடு அந்த குழந்தையை அவன் தூக்க தெரியாமல் தூக்க, “என்னாச்சு” என்றபடி கூட்டத்த விலக்கிக்கொண்டு வந்தாள் தேவசேனா. அவளுக்கு பின்னால் மந்திராவும் கிஷோரும் வந்திருந்தனர்.
குழந்தையின் தலை அவனது கையில் இல்லாமல் பின்னல் தொங்குவது போல் இருக்க, அவனுக்கு குழந்தையை தூக்க தெரியவில்லை என்று நினைத்து தன்னிடம் வாங்கிய தேவசேனாவின் பார்வை குழந்தை மீது அழுத்தமாக படிந்தது.
மந்திரா சொன்ன அதே பெரிய மச்சம் குழந்தையின் கன்னத்தில், பிறந்து நான்கு ஐந்து நாட்களே ஆன குழந்தை என்று பார்த்தவுடனேயே கணிக்க முடிந்தது.
தேவாவின் கையில் இருந்த குழந்தையை மந்திராவும் கிஷோரும் தேவசேனாவின் உயரத்தை தாண்டி  எட்டிப் பார்க்க,
“எந்த குழந்தயை காணோம் என்று அவள் இத்தனை நாட்கள் உயிர் துடித்துக் கொண்டிருந்தாளோ அந்தக் குழந்தையைக் கண்டுவிட்ட இன்ப அதிர்ச்சி. மந்திரா ஓடி போய்குழந்தையை தன் கையில் வாங்கியபடி அந்த குழந்தையின் முகமெங்கும் முத்தம் கொடுக்க, பெட்டியில் குழந்தையை கண்ட அதிர்ச்சியில் இருந்த யாரும் அவளது கண்களுக்கு தெரியவேயில்லை.
கிஷோரும் அவளுக்கு அருகில் வந்து நின்று சந்தோசத்தில் மந்திராவோடு சேர்த்து குழந்தையையும் அணைத்தபடி நின்றவனின் கண்களில் ஆனந்த கண்ணீர்.
தேவாவை நிமிர்ந்து பார்த்தவன் “ரொம்ப நன்றி மேடம்..” என்று கைகூப்ப
இடவலமாக தலை அசைத்த தேவசேனா “நா இதுல எதுவுமே பண்ணல… நன்றி சொல்லனும்னா இவருக்கு தான் நீங்க சொல்லணும்” என்று கார்க்காரனை கை காட்ட, தேவசேனா வந்ததில் இருந்து கண்ணிமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,
தேவா அவனைக் கை காட்டியதும் மின்னும் கண்களுடன் அவளை நெருங்கி நிற்க “ரொம்ப நன்றி சார்” என்றான் கிஷோர் கார்க்காரனைப் பார்த்து
கார்க்காரனோ தேவசேனாவைப் பார்க்க “நீங்க எங்க டிபார்ட்மென்ட்டுக்கு ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணிருக்கிங்க.. தேங் யூ” என்று அவள் சொல்ல அவளுக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்று புரிந்து கொண்டவன்
“நைஸ் டூ மீட் யூ… ஐ அம் து…துருவ்.. பிகேடி கம்பனியோட எம்டி” என்றபடி அவளுக்கு கை நீட்ட, அவன் முகத்தையும் கையையும் மாறி மாறிப் பார்த்தவள் மரியாதைக்காக தானும் கை கொடுத்தாள். அவளின் கை பிடித்தவன் விடாமல் குலுக்க, கையை எடுக்க அவள் முயற்ச்சிக்க அவனது பிடி இன்னும் இறுக ஆரம்பித்தது.
கோபத்தோடு அவனது கண்களை இவள் உறுத்து விழிக்க, வசீகரமாக சிரித்தானே தவிர விடவில்லை..
அப்பொழுதுதான் அவனது சிரிக்கும் கண்களை உன்னிப்பாக கவனித்தவள் “எங்கேயோ பார்த்திருக்கிறோமே” என்று யோசிக்க அவளுக்கு சட்டென்று ஞாபகம் வராமல் போக, இருக்கும் இடம் கருதி கொஞ்சம் கொஞ்சமாக கைபிடியை தளர்த்தினான் துருவ் எனப்பட்டவன்.
அதே நேரம் அங்கே “என்னோட அறுபது வருஷத்துல நா பாக்காத தோல்வி… அதுவும் இவ்வளவு கேவலமா தோத்துப் போனதில்ல… அந்த போலீஸ்காரி இங்க வருவான்னு பாத்தா அவ எப்டி கரக்ட்டா செக்போஸ்ட் எல்லாத்தையும் அலெர்ட் பண்ணா?” என்றுக் கத்திக் கொண்டிருந்தார் தனது முன் தலை குனிந்து நின்ற மருத்துவர் மாதவனிடம்.
கண்கள் தீக்கங்குகலாக மாறி இருக்க, கர்ஜித்துக் கொண்டு இருந்தவருக்கு அறுபத்து ஐந்து வயது இருக்கும். ஆனால் பார்ப்பவர் அப்படி சொல்லக் கூடிய விதத்தில் அவர் உடம்பை அப்படி வைத்திருக்கவில்லை.
தலை நரைத்து இருந்தாலும் இன்னும் கம்பீரம் குறையாத உடல், தளராத நடை, சுருக்கம் காணாத முகம் அவரை நாற்பது வயதைப் போலவே காட்டியது.
சரி இவரைப் பற்றி அப்புறமாக பார்க்கலாம்.
மந்திராவையும் கிஷோரையும் பார்த்த தேவசேனா “இப்போ நீங்க கிளம்பலாம், ஆனா அப்போ அப்போ கேஸ்  சம்பந்தமான என்கொயரிக்கு கூப்டுவோம், அப்போ எல்லாம் வரணும்” என்று சொல்லிவிட்டு நின்றுக் கொண்டிருந்த காவலரிடம் ட்ராபிக்கை கிளியர் பண்ணிவிட சொல்ல, அவர்கள் எல்லோரும் நகர்ந்தவுடன் தான் பின் பக்கம் முழுக்கம் சேதம் ஆகி இருந்த கார் அவளது கண்களில் பட்டது.
இதைப் பார்த்துவிட்டு திரும்பி அவனது முகம் பார்க்க, அவனும் அவளை தொடர்ந்து வந்து சிதைந்து போய்க் கிடந்த அவனது காரை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
ட்ராபிக்கை கிளியர் பண்ணிக் கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிளை அழைத்தவள் “கார எடுத்துட்டு போய் மெக்கானிக் ஷாப்ல விட்டுடுங்க” என்று சொல்லிவிட்டு திரும்ப
“அப்போ நீங்களே என்னைய டிராப் பண்ணிடுங்க மேடம்” என்று அவன் சொல்ல
அவனை அவள் முறைத்து பார்க்க
“என்ன மேடம் உங்க டிபார்ட்மென்ட்டுக்கு நா எவளோ பெரிய உதவி பண்ணிருக்கேன்.. நீங்க எனக்கு இத கூட பண்ணமாட்டிங்களா?” என்றபடி நடந்து போய்க் கொண்டிருந்த தேவசேனா பின்னலையே வந்தான்.
“சரிரிரி……. ஏறுங்க” என்றபடி அவன் ஏறியவுடன் ஜீப்பை எடுத்தாள்.
ஜீப்பில் ஏறி அமர்ந்ததிலிருந்து அவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அவள் இவன் புறம் திரும்பவும் இல்லை, இவனிடம் பேசவும் இல்லை.
அவனது மனது இரண்டு வருடங்களுக்கு முன் அவளை பார்த்த நாளுக்கு போனது.
அப்பொழுது தான் அவன் புதிதாய் ஆரம்பித்து இருந்த கடைக்கு பட்டுசேலை நெய்வதற்கு ஆர்டர் கொடுத்திருந்தான். அந்த வேலை எந்த நிலையில் இருக்கின்றது என்று பார்ப்பதற்காக அன்று காஞ்சிபுரம் வந்திருந்தான்.
அவன் வந்துக் கொண்டிருந்த வழியில் கூட்டம் அதிகமாக இருக்க, அதனால் ட்ராபிக் ஜாம் உண்டாகி இருக்க காரில் இருந்தபடியே அவனுக்கு அங்கு இருந்த ஒரு பெரியவரிடம் “என்னாச்சு?” என்றுக் கேட்டான்.
“பஸ்டாப்புல நின்னுகிட்டு போற வர பொண்ணுங்கள எல்லாம் கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்துருக்கானுங்க தம்பி.. சும்மாவே அந்தம்மா ஆடும்.. இதுல பொண்ணுங்க விசயம்ன்னா சும்மா விடுமா.. அதான் ரோட்லயே போட்டு வெளுத்துவாங்கிட்டு இருக்கு” என்று அவர் சொல்ல காரில் இருந்து இறங்கி கூட்டம் இருக்கும் இடத்திற்கு சென்று எட்டி பார்த்தான்.
அங்கு இரண்டு இளைஞர்களை ரத்தம் வர வர அடித்து, ஷூக்காலோடு ஒருத்தன் தலை மேல் அழுத்தம் கொடுத்திருக்க, இன்னொருத்தன் கையை அவனது முதுகோடு சேர்த்து முறுக்கியபடி காவலர் சீருடையில் ருத்ர காளியாக நின்றுக் கொண்டிருந்தாள் தேவசேனா.
“பொண்ணுங்கன்னா அவளோ சாதாரணமா போச்சா? தொலச்சுருவேன் ஜாக்ரத” என்று அவள் கர்ஜிக்க
“நல்லா கேளுங்க மேடம்” என்று அங்கிருந்த பெண்களும் சொல்லிக் கொண்டிருக்க
“இந்த பொண்ணு இன்ஸ்பெக்டரா வந்த பின்னாடி தான் கொஞ்சமாச்சும் நிம்மதியா பொழைப்பு நடத்த முடியுது.. முன்னாடி எல்லாம் ஒரு ரோட்டு கட போட்டு ஒரு நாள் கூட நிம்மதியா பொழப்பு நடத்த முடியாது, தெனம் தெனம் வசூலு, தகராறுன்னு போயிட்டு இருக்கும்.. இந்த மகராசி வந்த பின்னாடி தான் ஏதோ நாங்கல்லாம் கொஞ்சமாச்சும் நிம்மதியா கடைப் போட முடியுது” என்றபடி தானாக பேசிக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.
இதைக் கேட்டவன் திரும்பி அவளை பார்த்தான்.
மதிய வேலை சூரியன் சுட்டு எரித்துக் கொண்டு இருக்க, அவள் முகம் கோபத்தில் செந்தனலென ஆகி இருந்தது.
பிரம்மன் அவளது அழகை ஒரு சிற்பியை போல்  பார்த்து பார்த்து செதுக்கி இருந்தான்.
பக்கத்தில் இருந்த ஒரு காவலரிடம் “இவனுகளை எல்லாம் அள்ளி ஜீப்ல போடுங்க” என்று கர்ஜித்துவிட்டு சென்று ஜீப்பில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
அவளது கம்பீரம், கர்ஜனை, நிமிர்வு என எல்லாம் பார்ப்பவரை ஆச்சரியத்தில் புருவம் உயர்த்த வைப்பதாக இருந்தது.
அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தவனுக்கு வேலை சம்பந்தமான கால் வந்ததும் கிளம்பி அங்கு போய்விட்டான். அதன் பின்னர் ஒரு நாள் அந்த ஊரிலேயே ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியவன் அவளை பற்றிய விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தான்.
விசாரித்த பொழுதும் அவனுக்கு கிடைத்தது ஆச்சரியம் தான்.
அந்த நிமிடம் முடிவு செய்தான் தேவசேனா தான் அவனது வாழ்க்கை துணை என்று.
அதன் பிறகு அவன் வேளையில் பிசியாகிவிட இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் காஞ்ச்புரத்திற்கு வேலை விசயமாக சென்றான்.
அவளை பார்க்கலாம் என்ற அவா எழ அவனது வேலை முடித்து விட்டு அவள் இருந்த போலிஸ் ஸ்டேஷன் முன் சென்று நோட்டம் விட்டான்.
அவள் வெளியில் வருவது போல் தெரியவில்லை.
“சரி நாமலே உள்ள போய் பாப்போம்” என்று நினைத்தவனுக்கு என்ன சொல்லி அங்கு செல்வது என்று தெரியவில்லை, “எதாவது சொல்லிக் கொண்டு போகலாம்” என்று அசால்ட்டாக நினைத்தபடி வெளியில் நின்ற காவலர் ஒருவரிடம் “இன்ச்பெக்டர் தேவசேனா மேடம ஒரு கேஸ் விசயமா பாக்கணும்” என்றான் உண்மை போல்
அவனை நம்பாத பார்வை பார்த்த அந்த காவலர் “மேடம் ரிசைன் ஆகி போய் ஒரு மாசம் ஆகுது.. நீ இப்பவந்து அவங்கள பாக்கனும்னு கேக்குற?” என்று சொல்லி அவனுக்கு அதிர்ச்சி அளித்தார்.
வருவாள்…

Advertisement