Advertisement

அத்தியாயம் – 11
நாகேந்திரனை பிடித்திருக்கிறது என்ற சொன்ன மகளை அதிர்ந்து பார்த்தனர் சதாசிவமும், பத்மாவதியும்.
பின்னே பார்த்த நாளில் இருந்து நாகேந்திரனை வெறுப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் லலிதாவின் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சி அடையாமல் அவர்கள் என்ன செய்வார்கள்?
சதாசிவத்தின் அதிர்ச்சி நிலைத்து இருந்தது சில வினாடிகள் தான்.. ‘பெரிய பெண் ஆனதும் நாகேந்திரனைப் பற்றி புரிந்துக் கொண்டாள் போலும் ‘ என்று கணவனும் மனைவியும் நினைத்துக் கொண்டனர்.
அதே நேரத்தில் லலிதா மீது அளவில்லா அன்பு கொண்டவர்கள் அவர்கள் இருவரும். அவளது விருப்பமே அவர்களது விருப்பம், அவள் என்றும் நன்றாக இருந்தாள் அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருக்க, லலிதாவின் விருப்பத்தை மனமார ஏற்றுக் கொண்டனர் சதாசிவமும், பத்மாவதியும் .
அவளின் விருப்பமும் சந்தோசமுமே அவர்களின் சந்தோசமாகிப் போனது.
அதன் பிறகு சதாசிவம் நாகேந்திரனிடம் இது பற்றிப் பேச அவனோ முகத்தை அமைதியாக வைத்துக் கொண்டு “நீங்க எனக்கு எது செஞ்சாலும் அது என்னோட நல்லதுக்காக தான் இருக்கும்.. லலிதாவுக்கு இதுல சம்மதம்னா எனக்கும் ஓகே அங்கிள்” என்று முடித்துவிட்டான்.
அவனின் சம்மதத்தோடு ஊரே கூட, சீரும் சிறப்புமாய் நாகேந்திரன் – லலிதா திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த நாளில் இருந்து லலிதாவை தாங்கோ தாங்கென்று தாங்கினான் நாகேந்திரன். அவர்கள் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகிருந்த நிலையில் லலிதா கர்ப்பம்மாக இருப்பதாக சதாசிவத்திடம் சொன்னான் நாகேந்திரன். விசயத்தை அறிந்த சதாசிவத்திற்கும், பத்மாவதியும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளித்து எழுந்தனர்.
அதன் பிறகு லலிதாவை நாகேந்திரன் தாங்கும் அழகைப் பார்த்து மனம் குளிர்ந்து போனார் சதாசிவம்.
லலிதாவிற்கான செக் அப் எல்லாவற்றையும் சதாசிவத்தை அண்ட விடாமல் தானே பார்த்து முடித்தான் நாகேந்திரன்.
திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் கடந்திருக்க,  நாகேந்திரனின் சாடையில் ஒரு ஆண் மகவை ஈன்றாள் லலிதா.
மனம் முக்க மகிழ்ச்சி இருந்தாலும், குழந்தை குறை மாதத்தில் பிறந்துவிட்டதாய் நினைத்து சதாசிவத்தின் மனதில் ஒரு சுனுக்கமும் இருக்க தான் செய்தது.  
ஆனால் கருவை சுமந்தவளுக்கும், நாகேந்திரனுக்கும் மட்டும் தானே தெரியும் குழந்தை சரியான மாதக்கணக்கில் தான் பிறந்திருக்கிறது என்று.
சதாசிவம் ஒரு முறை லலிதாவை செக் செய்து பார்த்திருந்தால் கூட மொத்த உண்மையும் வெளிவந்திருக்கும், அது வரக்கூடாது என்பதினால் தான் நாகேந்திரன் தானே லலிதாவிற்கு எல்லாவற்றையும் ஒரு மருத்துவராக இருந்து பார்த்தான்.
சதாசிவமும் கூட லலிதாவின் மேல் உள்ள காதலிலும் அக்கரையிலும் தான் தானே விழுந்து விழுந்து கவனிக்கிறான் நாகேந்திரன் என்று நினைத்தார், மேலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கவும் மேலும் அதைப் பற்றி ஏதும் ஆராயாமல் விட்டுவிட்டார்.
குழந்தைக்கு நாகராஜா என்றுப் பெயர் வைத்து சீராட்டி வளர்த்தனர்.
காலங்கள் உருண்டோடின. லலிதா நாகேந்திரனின் காதலில் திளைத்து அவனது கவனிப்பிலும் அரவணைப்பிலும் அவனை நம்பி அவனோடு ஒத்து வாழ  ஆரம்பித்திருந்தாள், பத்மாவதியும் சதாசிவமும் தங்களது மகள் நல்வாழ்வு வாழ்வதைப் பார்த்து பூரித்து போயிருந்தனர்.
லலிதா நாகேந்திரனின் திருமணம் நடந்து பதினைந்து வருடங்கள் முடிந்து இருந்தன.
பதினைந்து வருடங்களுக்கு பிறகு கரு தரித்து இருந்தால் லலிதா.
தங்களுக்கும் லலிதா ஒரே குழந்தை, லலிதாவும் இப்படி ஒரே குழந்தையோடு நிற்கிறாளே என்று சிறிது கவலையில் சுற்றிக் கொண்டிருந்த பத்மாவதியும் சதாசிவமும் சந்தோசப்பட்டுப் போயினர்.
அன்று நிறைமாத கர்ப்பிணியாக லலிதா வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு போன் கால் வந்தது.
பத்மாவதி சமைத்துக் கொண்டிருக்க, நாகேந்திரன், சதாசிவம் இருவரும் வீட்டில் இல்லை.
நாகராஜா பள்ளிக்கு சென்றிருந்தான் போன் எடுக்க ஆள் இல்லாமல் அடித்துக்கொண்டே இருக்கவும் மேடிட்ட வயற்றில் ஒருகை வைத்தவாறு நடக்க முடியாமல் நடந்து வந்து போனை எடுத்தாள்.இவள் காதுக்கு கொடுத்தவுடனே,
“பாஸ் நம்ம பசங்க கொடுத்த வேலைய கட்சிதமா முடிச்சுடாங்க. ஸ்பாட் அவுட்.. பேமன்ட்க்கு எப்போ எங்க வர நம்ம பசங்கலோடவே வந்திரவா என்று படபடவென பொரிந்தவன், அந்த பக்கம் சத்தம் வராமல் இருக்கவும், பாஸ், பாஸ் நான் பேசுறது கேட்குதா பாஸ்” என்றான் அந்தபக்கம் இருந்தவன்.
இவள் ஏதோ ராங்கால் போல என்று நினைத்து எதுவும் பேசாமல் போனை வைத்துவிட்டாள்.
“லல்லிம்மா யார் போன்ல” என்று இவள் அம்மா சமையலறையிலிருந்து வெளியே வர
“ ஏதோ ராங் கால்ம்மா” என்றுவிட்டு சோபாவில் போய் உட்கார்ந்தாள்.
மறுபடியும் டெலிபோன் அலறியது இப்போது பத்மா வந்து எடுத்தார்
“டாக்டர், சதாசிவம் வீடுங்களா? அவருக்கு ஆக்ஸிடன்ட் ஆய்டுச்சு.அவருடைய ஆஸ்பத்ரிகுதான் தூக்கிட்டு போக போறோம் அங்கே வந்திருங்க” என்று போன் அணைக்கப்பட்டது.
சதாசிவத்துக்கு ஆக்சிடன்ட் என்று சொல்லவுமே பத்மா அலறியேவிட்டார். கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.அவர் அலறலில் லலிதாவும் ஓடி வந்து, அவரிடம் விசயத்தைக் கேட்டு அறிந்து
“அப்பாவுக்கு ஒன்றும் ஆகாதும்மா நாம ஆஸ்பத்திரி போய் பார்க்கலாம், ஏதாவது சின்ன அடியா இருக்கும்” என்று சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றிருந்தாள்.இவர்கள் ஆஸ்பத்திரி போன பொழுது நாகேந்திரன் அங்கு இல்லை. இவர்கள் உள்ளே போக அப்போதுதான் காரிலிருந்து இறங்கி வந்தான்.உள்ளே அவர்கள் இருவரும் போக அங்கு இருந்த நர்ஸ் மருத்துவர் என எல்லாரும் தலையை குனிந்தபடி இருந்தனர்.
பத்மாக்கு பயம் தொற்றி கொண்டது இவர்களின் தலை குனிவை பார்த்து “எங்க அவரெங்க??” என்று கேட்க ஒரு நர்ஸ் வந்து அவரை படுக்க வைத்திருக்கும் பெட்டுக்கு அழுத்து சென்றாள்.
கட்டிலின் அருகே  போன பத்மா, அவர் முச்சு  பேச்சு இல்லாமல் தூங்குவது போல் இருக்க புரிந்துக்கொண்டார்.
“என்னங்க என்ன மட்டும் விட்டு போய்ட்டிங்களே?” என்று சதாசிவத்தின் மேல் விழுந்தவர்தான் எழவில்லை.
“ அம்மா அம்மா” என்று குலுக்கினாள் நிறைமாத கர்ப்பிணியான லலிதா.தந்தை பேச்சு மூச்சற்று இருந்த அதிர்ச்சியில் நின்றவள் தாயும் பேசவில்லை என்பதினால் இருவரும் ஒரே நேரத்தில் தன்னை விட்டு போய்விட்டார்கள் என்ற அதிர்ச்சியும் சேர்ந்து அவளுக்கு பிரசவ வலி வந்துவிட்டது,அவசர அவசரமாக அவளுக்கு ட்ரிட்மன்ட் கொடுக்கபட்டு ஆப்ரேசன் பண்ணி அழகான ஆண் குழந்தையை எடுத்தார்கள்,அவளது தந்தைக்கும் தாய்க்கும் ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு அவளது மகன் நாகராஜன் தீமூட்டினான், பேரன் என்ற முறையில் எல்லா சடங்குகளையும் அவனையே செய்ய வைத்தார்கள். எல்லாம் முடிந்தது.லலிதாவும் குழந்தையும் வீட்டுக்கு கூட்டி வந்தும் ஒருமாதம் முடிந்து விட்டது,லலிதா ஒரே நேரத்தில் தன் தந்தையையும் தாயையும் இழந்த சோக அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை ஒரு மாதம் கடந்த பின் நாகேந்திரன் அவளை சமாதானம் படுத்தும் விதமாக அவளது அறைக்கு பார்க்க போனான்.குழந்தைக்கு புட்டிபால் கொடுத்து தொட்டிலில் ஆட்டி கொண்டிருந்தாள் வேலை செய்யும் பெண் இவனை பார்த்ததும் நாகரீகம் கருதி  அவ்வறையை விட்டு வெளியேறினார்.
அவர் சென்றது கதவை சாத்திவிட்டு வந்தவன் லலிதாவின் அருகே அமர்ந்தவாறு “லல்லிமா.. நடந்தது நடந்து போச்சு..போனவுங்க இனி திரும்ப வரப் போறதில்ல.. எனக்காகவும், நம்ம குழந்தைகளுக்காகவும் இனி நீ மறுபடியும் சகஜமான மனநிலைக்கு வர முயற்சி பண்ணனும்.. துக்கம் எங்களுக்கு மட்டும் இல்லையா என்ன?” என்று ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தவனின் தொண்டையைப் பிடித்து சுவரில் சாய்த்தவள்
“எங்கப்பாவ என்ன செஞ்ச?” என்று அந்த அறையே அதிர கத்தினாள்.
இதை எதிர்பாரவதவன் அதிர்ந்து ‘இவளுக்கு எல்லாம் தெரிஞ்சுருச்சோ’ என்று நினைத்தவன் ‘வாய்ப்பில்லை’ என்று நினைத்தபடி “என்ன லலிதா உளறுற?” என்றான் அதட்டலாக
“நா ஒன்னும் ஒளரல.. நீ.. நீதான் என் அப்பாவ கொன்றவன்.. ஏதோ நடந்து இருக்கு.. அவர நீ தான் ஆளவச்சு ஆக்சிடன்ட் செஞ்சுட்டு.. விபத்தாட்டம் காமிச்சுருக்க… ஐயோ.. உன்ன போய் நம்பினேனே… “ என்று அவனது கழுத்தை இன்னும் தனது முழு பலம் கொண்டு  இறுக்கியவள் “இப்டி என் குடும்பத்தையே அழிச்சு என்னைய அனாதை ஆக்கிட்டியேடாபாவி..” என்றபடி மாறி மாறி அவனது கன்னத்தில் அறைய
அவளது கைகளைப் பிடித்தவன் “உன் அப்பா அம்மா இறந்தது உனக்கு மட்டும் இல்ல எனக்கும் பெரிய அதிர்ச்சி தான்… ஆனா நீ அதிர்ச்சி மட்டும் அடையல.. முழு பைத்தியமாவே ஆகிட்டே…” என்றபடி அவளைக் கட்டிலில் உதறிவிட்டுவிட்டு கதவை டமார் என சாத்திவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனை செல்லும் வழியில் போக ஆரம்பித்தான்.
அவனது நினைவுகள் சதாசிவம் இறந்த அன்றைக்குப் போனது.
லலிதாவை தன் வசமாக்கிய அதே ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு டேபிளில் அமர்ந்தபடி அங்கே போகும் வரும் பெண்களை நோட்டம் விட்டபடி இருந்தான் நாகேந்திரன்.
இவனுக்கு ஒரு விலை மாதுவை அழைத்து வருவதாக சொல்லியிருந்தான் இவனுக்காக பெண்களை அழைத்து வரும்  ஒரு அல்லக்கை.
இது மாதிரியான விஷயங்கள் நாகேந்திரனுக்கு கல்லூரி நாட்கள் முதலே வாடிக்கையான ஒன்று தான்.
விடுதியில் வந்து நோட்டம் விடுபவனுக்கு அங்கிருக்கும் ஏதேனும் ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் உடனே பணம் வைத்து பேசிப் பார்ப்பான், மசியவில்லை என்றால் மயக்க மருந்தை அந்த பெண் குடிக்கும் ஏதோ ஒன்றில் கலந்துவிடுவான்.
மயக்கத்திலேயே அவளை அள்ளிப் போய் ஆசையை நிறைவேற்றி விட்டு ஏதும் நடக்காதது போல் சூழ்நிலையை அமைத்துவிட்டு வந்துவிடுவான். தன்கள் ஒரு அரக்கனின் கையால் கலங்கமாகிவிட்டோம் என்பது கூட அப்பெண்களுக்கு தெரியாத அளவில் வெளியை முடிப்பான். இவனால் சிதைந்த பெண்கள் ஏராளாம்.
அன்றும் அப்படி தான் ஒரு பெண்ணை பிடித்து போய்விட, அவனது அல்லக்கையிடம் விசயத்தை சொல்லிவிட்டு அமைதியாக ஒரு டேபிளில் அமர்ந்து அந்த பெண்ணை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.
என்றும் போல் இன்றும் அவனது அல்லக்கை சொன்ன வேலையை சரியாக முடிக்க, மயங்கி இருந்த பெண்ணை தூக்கி தோளில் போட்டபடி லிப்பட்டை நோக்கி நடந்தான். லிப்ட்டின் பொத்தனை அமுக்கிவிட்டு நிற்க, சில வினாடிகள் கழித்தே லிப்ட் வேலைசெய்யவில்லை என்று புரிய, அவளை தோளில் போட்டபடியே படிக்கட்டில் ஏறினான்.
கடகவென படிக்கட்டுகளில் எறியவன் போகிற வேகத்தில் இறங்கிக் கொண்டிருந்த ஒருவரை இடித்துவிட்டு போக “ஏப்பா பாத்து” என்று ஆரம்பித்த சதாசிவம் நாகேந்திரனைக் கண்டதும் பேச்சை நிறுத்தி சுருங்கிய புருவங்களுடன் அவனைக் கவனிக்க ஆரம்பித்தார்.
நாகேந்திரன் யாரும் பார்க்கும் முன் போக வேண்டும் என்ற பதட்டத்தில் இவரைக் கவனிக்காமல் சென்று ஒரு அறையில் புகுந்து கதவை சாத்திக்கொள்ள, குழப்பத்தில் நின்றுக் கொண்டிருந்தவர், தெளிந்து நாகேந்திரன் சென்ற அறைக்கு சென்றார்.
மூன்று நான்கு முறை கதவைத்தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
ஐந்தாவது முறையில் கதவு திறக்கப்பட, கதவைத் திறந்த நாகேந்திரனுக்கு, அங்கு சதாசிவத்தை பார்த்ததும் பெரும் அதிர்ச்சி.
வருவாள்..

Advertisement