Advertisement

6
அழுது அழுது முகம் வீங்கி தலைவலிக்க அப்படியே உறங்கிப்போனாள் ஸ்ருஷ்டிமீரா.
மறுநாள் காலை எழுந்தவள் தன்னுடைய அவல நிலையை எண்ணி வருந்தினாலும், அவனிடம் மட்டும் மீண்டும் செல்லக்கூடாது என்ற வைராக்யத்தோடு தன் வயிற்றில் இருக்கும் ஒரு பாவமும் அறியாத சிசுவிற்காக, ஏதோ ஒன்றை செய்து சாப்பிட்டாள்.
இரண்டு நாட்கள் இப்படியே கழிய, தன் தோழியை தொடர்பு கொண்டு இன்றிலிருந்து தானும் அலுவலகம் வரபோவதாக கூறி கிளம்பியும் சென்றாள்.
சுழன்று வரும் சுதனின் புதிர் துரோகம் அவளின் மூளையை ஆக்ரமிக்க, அந்த மனஅழுத்தத்தில் இருந்து வெளிவர, அலுவல் நிமித்தமாக ஹோட்டல் ஒன்றில் தன் கிளைன்டை சந்திக்க வந்தநேரம். அவள் விழிகளில் மீண்டும் சந்திரா தென்பட்டாள்.
வேகமாக ஷ்ருஷ்டிமீரா அவள் முன் நிற்க தடுமாறிபோனாள் சந்திரா. “உன் மூஞ்சிலையே முழிக்கக்கூட எனக்கு விருப்பமில்ல. ஒரே ஒரு கேள்வி மட்டும் கேக்கணும் அதான் வந்தேன்.
நீங்க காதலிச்சிங்கன்னா அப்பயே கல்யாணம் பண்ணி தொலைக்க வேண்டியது தானே? எதுக்கு என் வாழ்க்கைய இப்படி நாசமாக்கிட்டிங்க? நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன்” என்று கத்தினாள்.
சந்திரா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, “ச்சீ! வெக்கமா இல்ல உனக்கு? உனக்கு கேன்சர்னா? அதுக்காக என்னை ஏமாத்திட்டு தான் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனுமா?” என்றாள் மேலும் கோபமாக.
“இல்ல நீங்க சொல்ற எதுவும் எனக்கு புரியல? எனக்கு கேன்சரா? ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க” என்றாள் சந்திரா.
“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு? நான் என் கணவரோட சந்தோசமா தான் வாழ்ந்துட்டு இருந்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க உறவுக்காரங்க திருமணத்துக்கு போயிட்டு வரும்போது, எனக்கு பயணக்களைப்புல வாந்தி வர, கிழே இறங்கினேன். முகம் கழுவிட்டு இருக்கும் போதே ஹைவேசில் எதிரில் வேகமாக வந்த மணல்லாரி எங்கள் கார் மேல் மோதியதில் வண்டில இருந்த என் அம்மா, கணவர், தங்கை குடும்பம் என எல்லோரும் என் கண்முன்னே உயிர் இழந்தனர். ஒரு நொடியில் என் வாழ்க்கை தலைகிழானது. வாழ்கையே சூனியம் ஆனா மாதிரி இருந்தது.
இரண்டு மாசம் கழிச்சி ஒரு நாள் இவர் கோவில்ல பார்த்து பேசினார். அப்புறம் அடிக்கடி வீடு தேடி வர ஆரம்பிச்சார். சத்தியமா அவருக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியாது.
‘உன் ஞாபகதுலையே யாரையும் கல்யாணம் பண்ணிக்காம இவ்ளோ நாள் இருந்துட்டேன். இப்பயாவது என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா இல்லையா?’ன்னு கேட்டார்.
நம்மளை இவ்ளோ விரும்பறார்ன்னு தான் நான் அவரை கல்யாணம் பண்ணிகிட்டேன். ஆறு மாசம் முன்னாடி வரைக்கும் எனக்கு உங்களை பத்தி எதுவும் தெரியாது. தெரிஞ்சு கேட்டப்ப ‘வீட்ல கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அதோட உங்களுக்கு தாயாகற பாக்கியம் இல்லன்னு சொன்னார். என்னை மன்னிச்சிடுங்க. உங்க வாழ்க்கைல நான் குறுக்க வந்துட்டேன்” என்றாள் சந்திரா கண்ணீரோடு.
“இல்ல! நீங்க என் வாழ்க்கைல குறுக்க வந்ததுக்கு நான் தான் நன்றி சொல்லணும். இல்லன்னா உங்க கணவரோட உண்மையான முகம் எனக்கு தெரியாமலே போயிருக்கும் வாழ்க்கை பூரா நான் எனக்குன்னு ஒரு வாழ்க்கைய யோசிக்காமையே இருந்திருப்பேன்.
அப்படின்னா இப்பகூட என்கிட்ட பொய் சொல்லிருக்கான் அந்த ராஸ்கல். அவனுக்கு என்கிட்டே இருந்து என்ன தான் வேணும்? எதுக்காக சம்பந்தமே இல்லாம் என் வாழ்க்கைய சின்னாபின்னமாகனும்?? இதுக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்.” என்று ருத்திரதாண்டவம் ஆட சுதனை தேடிச் சென்றாள்.  .
சுதனின் அலுவலகம்,
ரிசெப்ஷனில் “நான் மிஸ்டர்.சுதனை மீட் பண்ணனும்” என்றாள் மீரா.
அவள் சுதனின் மனைவியாக அறிந்திருந்ததால், “மேம்! ஒய் ஆர் யூ ஆஸ்கிங் பெர்மிஷன்? டைரெக்டா போய் பாருங்க” என்று சிரித்தாள் அந்த பெண்.   
“நோ ஐ வான்ட் அன் அப்பாயின்மென்ட் தட்ஸ் ஆல்!” என்று அவளை முறைக்க, “ஜஸ்ட் அ மினிட் மேம்!” என்று சுதனுக்கு தொடர்பு கொண்டு அவள் வந்திருப்பதை அறிவித்தாள்.     
“சார்! உங்களை உள்ள வர சொல்லிட்டாங்க மேம்” என்றது தான் தாமதம். பாவங்களை அழிக்க வந்த சூறாவளியாய், சுதனின் அறைக்குள் நுழைந்தாள் ஷ்ருஷ்டிமீரா.  
அவளை கண்டதும் மெல்லிய புன்னகை அவனின் இதழில் எட்டிபார்க்க, ஷ்ருஷ்டிமீரா விட்ட அறையில் இருள் சூழும் மேகமென இருண்டது அவன் முகம்.
“ஹேய் என்னடி? நீயா உள்ள வந்த, என்ன ஏதுன்னு கேக்கிறதுக்குள்ள அரையர? கொழுப்பா?” என்றான் திமிராக.
“இங்க பார் உன்ன புருஷன்ற ஸ்தானத்துல இருந்து தூக்கிபோட்டு ரெண்டு நாளாச்சு. எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிகிட்ட? கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகியும் உன் சுண்டு விரல் கூட என்மேல பட்டதில்ல? நான் இது வரைக்கும் சந்தேகபடாம தான் இருந்தேன். ஆனா இப்ப எல்லாமே நீ போட்ட ப்ளான் தான? பிளான் பண்ணி வெளிநாடு போன, ஆக்சிடென்ட் டிராமா, சந்திரா விஷயத்துலையும் இப்போ வரைக்கும் பொய்யாவே தான் என்கூட வாழ்ந்துருக்க? எதுக்காக என் வாழ்க்கைல இப்படி விளையாடின? நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்? இது எல்லாத்துக்கும் இப்ப எனக்கு பதில் தெரியனும்?” என்றாள் ருத்ரமூர்த்தியின் அம்சமான மாஹகாளியாய்.
“பரவால்லையே! எல்லாம் ப்ளான்னு கண்டுபிடிச்சிட்டியே? சந்தோஷம்.. என்ன??.. காரணம்னு சொல்லனுமா??.. சொல்லிட்டா போச்சு. எல்லாத்துக்கும் காரணம் உங்கப்பா தான்” என்றவனை முறைத்தாள்.
“உன் பழிவாங்கற ப்ளான்ல எதுக்கு எங்கப்பாவ இழுக்குற?” என்றாள்.
“ஆமா! சாட்சாத் உங்கப்பாவே தான் என் வாழ்க்கைய அழிச்சது” என்றான் இன்னும் முறுக்கலாக.         
“என்ன புதுக்கதைய உளறிகிட்டு இருக்க?” என்றாள் ஸ்ருஷ்டிமீரா.
“ஆமா! நானும் சந்திராவும் அஞ்சு வருஷமா ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப விரும்பனோம். சந்திராவோட அப்பாவும் உங்கப்பாவும் ஸ்நேகிதிகர்கள். நாங்க வெளிய போன இடத்துல எங்களை பார்த்துட்டு, அவங்க அப்பாகிட்ட சொன்னதோட இல்லாம, உங்க அண்ணி அண்ணனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணதால தான் இப்படி எல்லாம் கஷ்டபட்ரான்னு ஏதேதோ சொல்லி அவர் மனச கலைச்சிட்டார். சுமுகமா கல்யாணத்துல முடிய வேண்டிய எங்க காதல பிரிச்சி கடைசில அவளை கூட்டிட்டு ஊற விட்டே போய்ட்டாங்க. நானும் தேடாத இடமில்ல. இதபத்தி சந்திராவே போறதுக்கு முன்னாடி ஒரு கடிதமா என் நண்பன்கிட்ட கொடுத்திருந்தா. நான் அவளை உண்மையா தான் காதலிச்சேன். அவளோட கல்யாணம் பண்ணி கடைசி வரைக்கும் வாழணும்னு நினைச்சேன்.ஆனா உங்கப்பா எல்லாத்தையும் கெடுத்திட்டார். அவரு ஏதோ நல்ல விதமா சொல்லிருந்தா கூட என் வாழ்க்கை போய்டுச்சே. அந்த கோபத்துல தான் உன்னை கல்யாணம் பண்ணி மனைவிக்கு தர வேண்டிய எந்த உரிமையும் தராம பழிவாங்கணும்னு கல்யாணம் பண்ணிகிட்டேன்”
இன்னைக்கு வரைக்கும் உன்ன நான் தொட்டதில்ல.. ஆறு மாசம் வெளிநாடு போறேன்னு பொய் சொல்லிட்டு என் சந்திராவ கண்டுபுடிச்சேன். நீ சந்தேகப்படக்கூடாதுன்னு என் டாக்டர் பிரெண்ட வச்சு பொய் சொல்ல சொன்னேன். என் அம்மா ரொம்ப திட்டினா எங்க நாம ஒன்னா வாழலன்னு சொல்லிடுவியோன்னு தான் தனியா குடிவெச்சேன். சந்திராவ கல்யாணமும் பண்ணி அவகூட சந்தோஷமா வாழ்ந்துகிட்டும் இருக்கேன்.
இன்னைக்கு வரைக்கும் என் மனைவின்ற பேரை தவிர வேற எதையுமே உனக்காக தந்ததில்ல. அப்புறம் எதுக்காக உனக்கு டெஸ்ட் டியுப் பேபின்னு பார்க்கிறியா?” என்று கலகலவென கொடூரமாக சிரித்தவன்.
“உன் கழுத்துல தாலி கட்டிட்டேன் எனக்கு சொந்தமாகிட்ட நீ! நாளைக்கு உண்மை தெரிஞ்சப்புறம், என்னை விட்டுட்டு போகக்கூடாதுன்னு ஒரு பொசசிவ்னெஸ். அதான் இன்னொன்னும் சொல்லட்டா? நான் பழிவாங்க நினைச்சதில கடைசி ஸ்டெப் உன் வயற்றில் இருக்கும் கருவுக்கு நான் சொந்தகாரனே கிடையாது. குழந்தை பிறந்தவுடன் நீ அதை உரியவர்களிடம் கொடுக்க வேண்டும்” என்று அவள் பதற சிரித்தான்.
“என்ன? ..எ..ன்..ன.. சொல்ற?” என்றாள்.
“அன்னைக்கு ஒரு பார்ம்ல கையெழுத்து போட்டியே அது என்னனு கூட படிக்காம என்மேல இருந்த நம்பிக்கைல போட்டல்ல… அதுதான் உனக்கு நீயே வச்சிக்கிட்ட கொல்லி. புரியல… உன்னை வாடகைத்தாயா மாத்திட்டேன் அதுக்கு அம்பது லட்சம் பணமும் வாங்கிட்டேன்.” என்று சிரித்தான்.
“குழந்தைய பெத்து கொடுத்தப்புறம் நீ அனாதை தான்” என்று மேலும் சிரிக்க, கொலைவெறியோடு அவனை கன்னம் பழுக்க நான்கு அரைவிட்டாள்.
“என்ன??? நான் உனக்கு சொந்தமானவளா…?? பொசசிவ்னெஸ்ஸா..?? முட்டாள் அந்த வார்த்தை எல்லாம் பேசற தகுதியகூட நீ இழந்துட்டே.. சொந்தமானவள்னா என்ன அர்த்தம்னு தெரியுமா? என்ன நடந்தாலும் தன்னவளோட மனசுக்கும் உணர்வுகளுக்கும் பாதுகாப்பா இருக்கறதுதான்.
எந்தவிதத்துலையும் சம்பந்தப்படாத என்னை இவ்ளோ கொடுமை படுத்திருக்கிறியே நீயெல்லாம் மனுஷ ஜன்மமே கிடையாது… மிருகத்துக்கு கூட இறக்க குணம் இருக்கும். நீ அதுலயும் சேர்ந்தவன் இல்ல. பெயர் தெரியாத எவனோ ஒருத்தனோட கருவ என் வயிற்றில் சுமக்க வச்சிருக்கியே நீயெல்லாம் ஒரு புருஷனா?” என்று கதறி மண்டியிட்டு தலையை பிடித்து அழ. “நல்லா அழு. இதுக்கப்புறமும் நீ எங்க போனாலும் உன்னை விட மாட்டேன் உன்னை துரத்தி துரத்தி அடிப்பேன்” என்று சிரித்தான் சுதன்.
அவனின் கடைசி வரிகளை கேட்டு கண்களை துடைத்து கொண்டு எழுந்தவள். அவனை நேருக்கு நேர் நின்று. “இல்ல! நான் அழுதா தான் உனக்கு சந்தோஷம்னா நான் அழமாட்டேன். எழுதி வச்சிக்க.. நீ என்ன என்னை துரத்துவது?  உன்னை என் முன் மண்டியிட்டு உட்கார்ந்து வாழ்க்கை பிச்சை கேக்கற வரைக்கும் துரத்தி அடிப்பேன்.
இந்த குழந்தைய கொடுக்கணும் அவ்ளோ தான? எவ்ளோ கஷ்டத்த பார்த்துட்டேன்..  பரவா இல்ல… குழந்தை இல்லாத ஒருத்தங்களுக்கு நான் செய்ற உதவியா நினைச்சிக்கிறேன். இந்த மூணு வருஷமும் என் வாழ்க்கைல நடந்த கெட்ட கனவா நினைச்சிக்கிறேன். கூடிய சீக்கிரம் சந்திப்போம் மிஸ்டர் மெஸ்வசுதன். அப்ப என்னை பார்க்க ரெடியா இரு வேற ஒரு ஸ்ருஷ்டிமீராவா!!” என்று அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு கம்பிரமாக வெளியே நடந்தாள்.
காரிடம் சென்றவள் உள்ளே திரும்பி வந்து ரிசெப்ஷனில், “இத உங்க சார்க்கிட்ட நான் கொடுத்தேன்னு கொடுத்துடுங்க” என்று கார் சாவியை தந்து விட்டு நடந்தே வெளியே வந்தாள்.
வைராக்கியமாக அவனிடம் பேசிவிட்டு வந்தாலும் பொங்கி வரும் அழுகையை அடக்க சிரமப்பட்டு நடந்து கொண்டிருந்தாள்.
*****************************************  .

Advertisement