Advertisement

Episode 25

இங்கே ஏற்கனவே திட்டமிட்டபடி குழந்தைகள் கடத்தும் கும்பல் இருக்கும் இடத்தை கண்காணித்து கொண்டிருந்த கான்ஸ்டப்ல் முரளி க்ருஷ்வந்திற்கு போன் செய்தார்.

“ஐயா! நீங்க சொன்ன மாதிரி இப்போ தான் ஒரு குழந்தைய கொண்டு வந்திருக்காங்க. இங்க மொத்தம் ஒரு அறுபது குழந்தைங்க இருக்குற மாதிரி தெரியுது.” என்றார்.

“ஹம்! நல்ல க்ளோஸ்அப் வாட்ச் பண்ணுங்க அண்ணா! நீங்க ரொம்ப நம்பிக்கையான ஆளுன்னு தான் உங்ககிட்ட இந்த பொறுப்ப கொடுத்துருக்கேன். வேற எதாவது தெரிஞ்சுதா?” என்றான் க்ருஷ்வந்த்.

“ஆமா சார்! இப்போ பிறந்த குழந்தைய கொண்டு வந்தவங்க அதை குழந்தை இல்லாத வெளிநாட்டு தம்பதிக்கு விக்க போறதா பேசிட்டு இருந்தாங்க. அந்த வெளிநாட்டு தம்பதி இங்க சென்னைல தான் இருக்காங்க. சரியாய் மதியம் மூணு மணிக்கு அவங்க தங்கி இருக்க ஹோட்டல்கு போறாங்க. ஆனா பணம் மட்டும் தான் அங்க கை மாறுது குழந்தை ஏர்போர்ட்ல சாய்ந்தரம் அஞ்சு மணிக்கு வேற ஒரு குரூப் கொண்டு கொடுக்க போறாங்க சார்!” என்றார்.

“சரி! நீங்க கொஞ்சம் பத்திரமா இருங்க. எதுவா இருந்தாலும் உடனே சொல்லுங்க.” என்று போனை வைத்தவன், தனக்கு மிகவும் நம்பிக்கையான போலிஸ் டீமை மீட்டிங்க்கு ஏற்பாடு செய்திருந்தான்.

அதற்குள் இங்கே, அந்த பணக்கார தம்பதி சரியான ஆதராத்துடன் நேரடியாக நீதிமன்றத்தில் ஹெர்பியௌஸ் கார்பஸ் மனுவின் மூலம் நாட அது சுதனுக்கு எமனாக முடிந்தது.

சுதனை கைது செய்யவும் மீராவை நாளை நேரில் ஆஜராகும்படி கோர்ட் உத்தரவிட்டது 

இங்கே குழந்தைகளை மீட்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. ஒன்று கடத்தி வைத்திருக்கும் குழந்தைகளையும் மீட்பது.

இரண்டாவது பணம் கைமாறுவதை கவனித்து பின்தொடர்ந்து அதை தடுத்து எல்லோரையும் கைது செய்வது.

மூன்றாவது, ஏர்போர்டில் காத்திருந்து குழந்தை கொண்டு வந்து கொடுக்கும் போது எல்லோரையும் சுற்றிவளைத்து குழந்தைகள் கடத்தல் பிரிவில் கூண்டோடு பிடிப்பது என திட்டம் வகுக்கப்பட்டது.

அதற்குள் மீராவின் செய்தி க்ருஷ்வந்த்தை வந்தடைய மீராவிற்கு போன் செய்தான்.

“என்னடா பயமா இருக்கா? குழந்தை இருக்க இடம் கண்டுபிடிச்சாச்சு. பாப்பாவ மீட்டு எல்லோரையும் பிடிக்க எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு நாளைக்கு குழந்தைய கோர்ட்ல கொடுத்துடலாம்.

“என்னையும் ஆஜராக சொல்லிருக்காங்க” என்றாள்.

“அது தேவை இல்ல. குழந்தைய கோர்ட்ல கொடுக்க போறம்ல நீ வர வேண்டாம். நல்லா யோசிச்சு சொல்லு. குழந்தைய அவங்களுக்கு கொடுக்கணுமா? நீ வேண்டாம்னா நான் ஏதாவது பண்ணி நிறுத்திடறேன்.” என்றான்.

“இல்ல கண்டிப்பா குழந்தைய கொடுத்துடலாம். ஆனா நாளைக்கு கோர்ட்டுக்கு வரேன். ஏற்பாடு பண்ணுங்க. நான் அங்க பேச வேண்டியது இருக்கு.” என்றாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன். “சரி உனக்காக பேச சந்தோஷ் வருவான்.”

“சரி. வரட்டும் ஆனா அதுக்கு அவசியம் இருக்காது.” என்றாள் மீரா.

போட்ட திட்டத்தின்படி மீராவின் குழந்தையோடு சேர்த்து எல்லா குழந்தைகளையும் மீட்டனர்.  

எல்லாம் முடிந்து குழந்தையை எதுத்து வர மாலை ஏழு மணி ஆனது.

தன் உயிராய் நினைப்பவளின் கருவில் உதித்த சிசுவை தானே பெற்றது போல் ஒரு இன்பம் பொங்க பூ போல் தூக்கி வந்தான் க்ருஷ்வந்த்.

“உன்னை பெத்தவ மட்டும் தான் நான், ஆனா நீ எனக்கு சொந்தம் இல்லை.” என்று க்ருஷ்வந்தை கட்டிக்கொண்டு விசும்ப அவளுக்கு ஆறுதலாய் தலை கோதிவிட்டான், மெல்ல அவனுக்கும் ஏதோ புரிவது போல் இருந்தது.

குழந்தையை கையிலேயே வைத்து இரவு முழுவதும் தூங்காமல் இருக்க மீராவிற்கு ச்லீபிங் இந்ஜெச்ஷன் போடப்பட்டது. அவள் உறங்கியதும் குழந்தையை தொட்டிலில் கிடத்தியவன் அவளருகிலேயே உட்கார்ந்தபடி கண் அயர்ந்தான்.

மறுநாள் கோர்ட்டில் குழந்தை மீராவின் கையினால் அந்த தம்பதிக்கு ஒப்படைக்கும் முன் மீரா பேச ஆரம்பித்தாள்.

“யுவர் ஹானர்! எனக்கு அனுமதி கொடுத்திங்கன்னா நான் கொஞ்சம் பேசணும் ப்ளீஸ்.” என்றாள் வேண்டுதலாய்.

நீதிபதி அனுமதி அளிக்க, அவள் அமர்திருந்த வ்ஹீல் சேரை தள்ளிகொண்டு வந்து மன்றத்தின் நடுவில் நிறுத்த கணீரென்ற குரலில் மீரா பேச ஆரம்பித்தாள்.

“இந்த குழந்தைய தருவதற்க்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசனும். என் பேரு ஸ்ருஷ்டிமீரா.” என்று தன் குடும்பத்தினை பற்றியும் சுதனுக்கும் தனக்கும் திருமணம் நடந்தது வரை கூறியவள்.

நிறுத்தி, “இதோ இங்க இருக்காரே இந்த சுதன். இவரா எதையோ தப்பா நினைச்சிக்கிட்டு என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டார். எப்டின்னு கேக்கறீங்களா? அவர் விரும்பன பொண்ண கல்யாணம் பண்ண எங்க அப்பா தடையா இருந்தார்னு தப்பா நினைச்சு, அவர பழிவாங்கணும்னு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார். அதே நேரம் எனக்கு தெரியாம இன்னொரு பக்கம் அவர் காதலிச்ச பொண்ணையும் கல்யாணம் பண்ணி குழந்தையும் பெத்துகிட்டார். ஆனா, என்னை பழிவாங்க எனக்கு மலடி பட்டம் வாங்கி கொடுக்க திட்டம் போட்டார்.” என்று உள்ளம் கதறி அழுதாள்.

“அப்புறம் எப்படி இந்த குழந்தைன்னு கேக்கறிங்களா?.” என்று சுதனை பார்த்தாள். ஆனால் அவனோ பயத்தில் வெலவெலத்து போனான்.

“என்னை பழிவாங்க இவர் போட்ட திட்டத்தின் அடுத்த செயல் தான் இது. எனக்கு குழந்தை பிறக்க ட்ரீட்மென்ட்குன்னு சொல்லி எனக்கே தெரியாம வாடகை தாய் ஒப்பந்தத்துலையும் சேர்த்து கையெழுத்து வாங்கிட்டார். அதோட இல்லாம அதுக்காக இவங்க கிட்ட பணமும் வாங்கிருகார்.” என்று பேசமுடியாமல் அழ க்ருஷ்வந்தினால் அவளின் அழுகையை அடக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் சுதனை கொல்லவேண்டும் என்ற வெறி ஒரு பக்கம் துடித்தது.

“நான் பாட்டுக்கு குழந்தைய கொடுத்துட்டு போய் இருக்கலாம். ஆனா நாளபின்ன எந்த பொண்ணும் இதுமாதிரி பாதிக்க கூடாதுன்னு தான் இங்க பகிரங்கமா பேசிகிட்டு இருக்கேன். எந்த ஒரு பொண்ணுக்குமே இதுமாதிரி கொடுமை இனி நடக்கவே கூடாது. நான் அவர் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தேன். அவர் சொன்ன எல்லாத்தையும் கண்மூடித்தனமா நம்பினேன். இது எல்லாத்துக்கும் மேல…” என்று தன் ஓரவிழியால் க்ருஷ்வந்தை ஒருநொடி பார்த்தவள் பின் விழிமூடி தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டாள்.

“தண்ணிர் கொடுங்க அவங்களுக்கு” என்று நீதிபதி சொல்ல தண்ணீரை பருகியவள் பின் தொடர்ந்தாள்.

“இவர் விரும்புன பொண்ணோட வாழ்ந்து குழந்தைய பெத்துகிட்ட இவர் தத்ரரூபமா நான் நம்புற மாதிரி பொய் சொல்லி கல்யாணம் ஆனா நாள்ல இருந்து இன்னை வரைக்கும் இவரோட சுண்டு விரல்கூட என் மேல படாம பார்த்துகிட்டார். அதாவது இப்ப வரைக்கும் நான் திருமணம் ஆனாலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாத கன்னி பெண் தான். இதை இங்க சொல்றதுக்கு காரணம் நீங்க இவனுக்கு கொடுக்க போற தண்டனைல இனி எவனுமே கட்டின மனைவிக்கு அநீதி இழைகவே கூடாது.” என்று தயங்கியபடி க்ருஷ்வந்த்தை பார்க்க அவன் விழியில் அவளுக்கான காதலும் சுதன் மேல் கொலை வெறியும் இருந்தது.

“இல்லை யுவர் ஹானர். இவ பொய் சொல்றாள். இவ சொல்ற மாதிரி எதுவுமே நடக்கலை இவளோட சம்மதத்தோட தான் எல்லாமே நடந்தது.” என்றான் சுதன்.

“அப்படியா சுதன்? இன்னொரு முறை சொல்லுங்க” என்றாள் நெருப்பை கக்கும் விழிகளோடு ஸ்ருஷ்டிமீரா.

Advertisement