Advertisement

12
ஸ்ருஷ்டிமீரா கேட்டபின் அடுத்த இரண்டு நாளில் ஒரு நல்ல வழக்கறிஞ்சராக ஏற்பாடு செய்திருந்தான்.
“மீரா! இவர் என்னோட நண்பர் சந்தோஷ். லாயர். நம்மளுக்கு எல்லாத்தையும் சுமுகமா முடிச்சி தருவார்.
“ஹலோ!“ என்று ஒற்றை வார்த்தையில் அறிமுகத்தை முடித்துக்கொண்டாள்.
“அண்ணன் சொன்ன மாதிரி சீக்கிரம் எனக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க” என்றாள் அவன் முகத்தை பார்க்காமலே.
“அண்ணன் எனக்கு எல்லாத்தையும் சொன்னார். எனக்கு தங்கச்சி இல்ல. என்னையும் உங்க அண்ணனா நினைச்சிக்கோங்க. நிச்சயம் முடிச்சி கொடுத்துருவேன். அதுக்கு நீங்க உங்க அண்ணன் சொல்லி இருந்தாலும் நீங்க எல்லாத்தையும் ஒரு தடவை சொன்னிங்கன்னா சீக்கிரம் டிவோர்ஸ் வாங்கி கொடுக்க முடியும்.” என்றதும் அவள் தயங்கினாள்..
“என்னம்மா? உன் அண்ணனா என்னை நினைக்க மாட்டியா?” என்றான் சற்று பாவமாய்.
“இல்ல!! இல்ல!! அப்படியெல்லாம் ஒன்னும் இல்லண்ணா. நான் சொல்றேன்” என்று தன் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூறினாள் கடைசியாக சுதனுக்கும் அவளுக்கும்  நடந்த முன்விரோதம் குழந்தையின் உரையாடலை தவிர.
அவளின் கதையை முழுதாக கேட்டுகொண்டவன் மறவாமல் தன் திட்டத்தின்படி ரெகார்டும் செய்தான். (ஏன்னு கேக்காதிங்க? அப்புறம் சொல்றேன்).    
“சரிம்மா! இந்த பேப்பர்லலாம்  கையெழுத்து போட்று. நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன்.” என்று எல்லா பேப்பேரையும் தந்தான்.
“எல்லாவற்றையும் பொறுமையாக படித்து கையெழுத்து போட்டவள். கடைசியாக ஒரு வெள்ளை காகிதம் இருக்க கேள்விகுறியோடு சந்தோஷை பார்த்தாள்.
கேஸ் பைல் பண்ணும்போது லெட்டர் கொடுக்கனும்மா. அப்ப தேவைப்படும் அதுக்காக தான். ஏன்மா யோசிக்கிற? நான் உங்க அண்ணனோட சிநேகிதன்மா. அதுவுமில்லாம என் தங்கச்சிகிட்ட வெத்து கையேழுத்து வாங்கி நான் என்ன பண்ணப்போறேன்? பயப்படாமா போடுமா!” என்றான் கொஞ்சம் பதட்டமாக.
பின் லேசாக சிரித்து, “அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணா” என்று கையெழுத்து போட்டாள். அவனும் நிம்மதி பெருமூச்சுவிட்டான்.
வக்கீல் நோட்டிஸ் சுதனுக்கு அனுப்பபட்டது.
ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் இன்னும் வெறியோடு அவளை தேடி அலுவலகம் வர, அவனுக்கு முன் அங்கிருந்தான் க்ருஷ்வந்த்.
“இப்ப எதுக்கு சார்! என்னை வழி மறிக்கிறிங்க. நான் என் மனைவிகிட்ட பேசணும்.” என்றான் ஒரு துணிச்சலோடு.
“அப்படியா? சரி மீரா உங்ககிட்ட பேச விரும்பினா நீங்க தாராளமா பேசலாம்” என்று திரும்ப இவர்களின் பேச்சு குரல் கேட்டு வெளியே வந்திருந்தாள் மீரா.
“மீரா! சார் உங்ககிட்ட ஏதோ பேசணுமாம். நீங்க பேசறதா இருந்தா நான் கிளம்பறேன் இல்லனா அவர் கிளம்பிருவார்” என்றான் அவனை ஓர கண்ணால் பார்த்தபடி.
க்ருஷ்வ்ந்தை பார்க்காமல் சுதனை முறைத்தவள்.
“இனி இந்த ஜென்மத்துல இவர்கூட நான் பேச விரும்பல. ஒரே ஒரு தடவை மட்டும் பேசுவேன். ஆனா, அது இப்ப இல்லை. அவரை போக சொல்லுங்க” என்றாள்.   
“ஹ்ம்ம்.. அப்புறம் என்ன சார்? அவுங்களே சொல்லிட்டாங்க. இப்போ நீங்க கிளம்பிறிங்களா? எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் கிளம்பனும்” என்றான்.
மீராவை எரித்துவிடுவது போல் முறைத்தவன், எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினான்       
ஸ்ருஷ்டிமீரா க்ருஷ்வந்தை பார்க்க, அவன் அதை கண்டுகொள்ளாமல் லேடி கான்ஸ்டபலை வரவைத்து அவளுக்கு பாதுகாப்பாக நிறுத்தி விட்டுபோனான்.
தன்னிடம் எதுவும் பேசாமல் அவன் சென்றது சிறிய வருத்தம் இருந்தாலும், தான் சொன்னதிற்காக அவன் இவ்வாறு நடந்து கொள்வதால் அவன் மேல் தனி மதிப்பு உண்டானது.  
கோர்ட்டில் தனக்கு குழந்தை இல்லாததால் இந்த டிவோர்ஸ் என்று மீரா தரப்பு கூற. சுதன் எதுவும் பேசாமல் இருக்க மீராவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.
அதனால் நீதிமன்றத்தில் ஆறு மாதம் இருவரும் சேர்ந்திருக்க வேண்டும் என்று கூறியவுடன்.
மீரா பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.
சுதனும் எதுவும் பேசாமல் இருக்க, “”இருவரும் சேர்ந்திருக்கா விட்டாலும் ஆறு மாதங்கள் கண்டிப்பாக யோசிக்க டைம் எடுத்துகோங்க. சேர்ந்து வாழ முடியுமான்னு ஒருத்தருக்கு ஒருத்தர் மனம் விட்டு பேசி பிரச்சனைய தீர்க்க பாருங்க.” என்று வழக்கை ஆறு மாதம் கழித்து தள்ளி வைத்திருந்தனர்.
சுதன் எதுவுமே பேசாமல் இருப்பதும், ஒரே ஆச்சர்யமாக இருந்தது ஸ்ருஷ்டிமீராவிற்கு.
போகும்போது ஒரே ஒரு பார்வையை மட்டும் செலுத்திவிட்டு சென்றான்.
காரணம் நம்ம ஹீரோ தான்! ஆம்!
“இங்க பாரு நாளைக்கு கோர்ட்ல நீ மீராகூட தான் இருப்பேன்னோ இல்ல ஏதாவது அப்ஜெச்ஷனோ சொன்ன? நீ அப்புறம் அவளோதான்.”
“என்ன சார் ரொம்ப தான் மிரட்டுறிங்க?” என்றான்.
“என்ன ரொம்ப சத்தம் வருது? நான் மிரட்டல! இப்போ சொல்றேன் கேட்டுக்கோ நான் மீராவுக்கு எப்பவும் துணையா இருப்பேன். புரியலையா? நீ சிதைச்ச அவளோட வாழ்க்கைய நான் சரி பண்ணப்போறேன்.” என்றான். இடைல புகுந்து ஏதாவது தொல்லை பண்ணனும்னு நினைச்ச அவ்ளோ தான்” என்றான்.
“என்ன பண்ணுவீங்க?” என்றான் திமிராக.
“நான் என்ன பண்ணப்போறேன்? எதுவும் பண்ணமாட்டேன்.” என்றான் பாவமாக.
“ஒரே ஒரு கம்பிளைன்ட் மட்டும் பைல் பண்ணிடுவேன். என்னன்னு கேக்கமாட்டீங்களா? சரி. நானே சொல்லிடறேன். சுதன்ற நீங்க ஸ்ருஷ்டிமீரான்ற பெண்னை கல்யாணம் பண்ண பிறகு சந்திரான்ற இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணதால மீராவை ஏமாத்திருக்கிங்கன்னு” என்று கிருஷ்வந்த் சொல்லி முடிக்கவும் சுதன் முழுதும் வேர்த்து நனைத்திருந்தான்.  
இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. அதன்பிறகு சுதன் எதுவும் தொந்தரவு செய்யாததால் சற்று நிம்மதியாக இருந்தாள்.
அவளுடைய தொழிலில் முழுக்கவனத்தையும் செலுத்த முடிவு செய்தாள்.
ஆனாலும் அவள் வயிற்றில் இருக்கும் சிசு பாடாய் படுத்தியது.
தண்ணீர் அருந்தினாலும் பாராபட்சமின்றி  வெளிய வந்தது.

Advertisement