Saththamindri Muththamidu Final 3

Advertisement

Sumitha

Well-Known Member
அரவணைப்பு முத்தம்
ஆனந்த முத்தம்
இதழ் முத்தம்
ஈர முத்தம்
உவகை முத்தம்
ஊடல் நீக்க முத்தம்
ஐயம் நீங்க முத்தம்
ஒற்றை முத்தம்
ஓசையில்லா முத்தம்
ஔடத முத்தம்

சத்தமின்றி முத்தங்கள்
சொல்லுமே....
அன்பு ஆசை காதல்
நேசம் பாசத்தின் ஆழத்தை..
( சொந்த கவிதை இல்லை..
யார் கவிதை ன்னு சரியா சொல்றவங்களுக்கு SM book நான் வாங்கி தரேன்.. Full edition)
Antha book vangara alavukku Nan lucky illaye...:( because intha kavithai yaru eluthinathunnu enakku theriyalaye :rolleyes::rolleyes::D:D
 

vijivenkat

Well-Known Member
மல்லி 26......
சத்தமின்றி முத்தமிடு...........

முத்தம் சத்தத்தோடு கொடுப்பதும் உண்டு.......
சத்தம் வராமல் கொடுக்கும் முத்தமும் உண்டு..........
முன்னது குழந்தைக்கும் மனைவிக்கும்.......
பின்னது மனைவிக்கு மட்டும் தான்.........
சில நேரம் திருட்டு முத்தம் மனதுக்கு பிடித்தவளுக்கு.........

ஊரில் பெரிய குடும்பம்..... பையனோட காதலை மறைக்க வீட்டு வேலையாள் பொண்ணு மணமகளாகிறாள்..........
கணவனோ மனைவியின் முகம் பார்ப்பதில்லை..... பேசுவதில்லை....... இரவில் கணவன் வேலையை கச்சிதமாக செய்பவன்......... காதலிக்கு காட்டுவதற்காக மனைவியை கற்பமாக்கிய வித்தியாசமான கணவன்.......... அவனுக்கு தெரிந்ததெல்லாம் கோபம்....... கோபம்.... கோபம்.....

காதலை மறுத்த அப்பா மீது......... மறுத்தாலும் கல்யாணம் பண்ணிய மனைவி மீது............

இவனுடைய கோபத்தீக்கு நெய் ஊற்றும் உற்றார் உறவினர்.......... வாழ்வின் வசந்தங்களை பார்க்கும் வயதில் tornado-வில் சிக்கி சுழன்றவள் துளசி....... படிக்கும் வயதில் கையில் குழந்தை......... பேச முகம் பார்க்க மறுக்கும் கணவன்....... குத்தீட்டியாய் குத்தும் மாமியார்...... உற்றார் உறவினர்..........

யாரோ ஒரு வேலையாள் சமைக்கும் உணவை உண்பவர்களுக்கு அதே இனத்து மருமகள் கொடுக்கும் தண்ணீர் கூட தீட்டாம்......... என்ன வினோதம்.......
விநோதங்களும் விசித்திரங்களும் தான் உறவுகள் என்று திரும்ப திரும்ப கொட்டி கொட்டி சொல்லும் உறவுகள்......... மருமகள் என்கிற மனித உறவை விட பொருளாதார ஏற்ற தாழ்வுகள் தான் அதிகம் கண்ணுக்கு தெறிந்தன....... வீட்டிற்கு வாழ வந்த இன்னொருத்தி கூட அவமதிக்கும் அவலம்.........

பொண்ணு கொடுத்தவர்களின் நிலையோ பரிதாபம்........... சமையல் செய்பவளுக்கு கூட kitchen வரை போகும் உரிமை.......... வீட்டுக்கு வாரிசையே கொடுத்த மருமகளின் பெற்றோருக்கு சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு அருகதை கூட இல்லை.......... பரிதாபம்........

கணவன் என்கிற கற்சிலைக்கோ எதுவும் உரைக்கவில்லை.......... நான் கொடுப்பதைத்தான் மற்றவர்கள் அவளுக்கு திருப்பி கொடுப்பார்கள் என்று புரிந்தும் தன் நிலையை மாற்றி கொள்ளாதவன்..........
விளைவு மனைவிக்கு பொண்ணு தான் உலகம்........
பொண்ணுக்கு அம்மாதான் உலகம்.........

கணவனை பற்றி மனைவிக்கு எதுவுமே தெரியவில்லை........... கையில் குழந்தையோடு இருக்கும் மனைவிக்கு தெரியாமல் முன்னாள் காதலிக்கு hospital செலவு முதல் கல்யாணம் செலவு வரை செய்த மாமனிதன் திரு..........
காதலியின் வாழ்க்கையில் இருந்த அக்கறை தன்னை நம்பி வந்த மனைவிடம் இல்லை.......... So sad.........

எது வந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று ஆராதிக்கும் துளசி......... வயிற்றின் வழியாக கணவன் மனதை தொடலாம்னு தெரிந்து சமையலையே சாட்டையாக எடுத்து சுழற்றியவள்........ மனதை தொட்டாலும் நாங்க கெத்துன்னு வெத்து வாழ்க்கை வாழ்ந்தவன் திரு........

சின்ன பொண்ணுக்கு கூட நடப்பு தெரிகிறது......... அப்பா bed இல்லாமல் தரையில் படுத்திருக்கிறார் ஏன் என்று கேட்கும் அளவுக்கு.......... அப்பா ஏன் தனியாக படுத்திருக்கிறார்னு கேட்க தெரியவில்லை....... அவ்வளவு ஈடுபாடான அப்பா.......... அம்மாவுக்கு வெளியில் இருக்கும் உலகம் தெரியவில்லை......... யாரும் தெரியவும் விடவில்லை.........

அப்பா திட்டும் போது அடிக்கும் போது அம்மா வீட்டை விட்டு போகும் போது தான் தெரிகிறது அம்மா-அப்பா வாழ்க்கை இது கிடையாதென்று........ அப்பாவிடம் முறுக்கும் குழந்தை........ கோணலானாலும் என்னோடதாக்கும் என்று இருந்த துளசிக்கு இப்போதான் உரைக்கிறது.......... உரைத்து என்ன பயன்.......... கோணாலாவே இருக்கும் கணவனை நேராக்கும் வித்தை தெரியவில்லையே.......

வீட்டை விட்டு போன மனைவியின் இழப்பை உணர்ந்தாலும் நான் ஏன் கூப்பிடனும் என்கிற அகந்தை.......... அகங்காரம்....... கேட்கிற பொண்ணுக்கும் அடி..........
ஒரு புறம் 13 வருட மனைவியின் பிரிவு.......... இன்னொரு புறம் 3 மாத காதலியின் துயரம்.......... துயரம் அசைத்த அளவுக்கு பிரிவு அசைக்கவில்லை...........

பொண்ணின் அழுகையிலும் telepathy-யிலும் சேர்க்கிறார்கள் பிரிந்தவர்கள்.......... காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக பொண்ணு வயதுக்கு வந்ததால் வந்ததாக ஒரு எண்ணம் கணவனுக்கு.........

13 வருடமாக மனைவியை உணர்ந்த கணவனுக்கு வயற்றில் அடுத்த குழந்தை வந்ததையும் உணரமுடிகிறது...... முதல் முறையாக மனைவியின் அணைப்பு......... தொடர்ந்து மனைவியின் முதல் முத்தம்.......... இனிக்கிறது.......

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் திரு........... நீ எங்கே வேணா ஏறிக்கோ........... நான் இது தான் என்று தன்னிலை மாறாத........ என் வாழ்க்கை என் கையில் என்று சொன்னாலும் அதை எப்படி கொண்டு போவதென்று புரியாமல் உழற்றிக்கொள்ளும் துளசி........
வயற்றில் குழந்தை இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஏண்டி விட்டுட்டு போனன்னு கிழிஞ்ச record மாதிரி இழுத்தாலும் அவனை நெருங்காமல் தவித்த தவிப்பு............
மனைவியின் தவிப்பை பொருட்படுத்தாமல் அவளா வரும் வரை நெருங்குவதில்லைனு சபதம் எடுக்கும் திரு......... அவனின் சபதம் அறியாமலேயே அவனை இன்னமும் தவிக்கவிடும் துளசி........... கடைசியில் மனைவியின் உடல் நிலையை முன்னிட்டு சபதத்தை கைவிட்டு துளசியை நெருங்கும் திரு........

திரு கோபத்தை குறைத்தான்.......... திருவின் நாயகி மௌனத்தை கலைத்தாள்.........
திருவின் எஜமானி இப்போ வீட்டின் எஜமானி....... Mall owner.......... கோடிக்கணக்கான சொத்துக்களின் அதிபதி.......
அதெப்படி வெறும் தோடோடு வந்தவளுக்கு கோடிக்கணக்கில் சொத்து........... தங்கத்தாலேயே இழைத்தது வந்தவளுக்கு தெருக்கோடி கூட இல்லை......... உறவுகளின் பொருமல்........... கண்ணாலே பேசி பேசி திருவின் நெற்றிக்கண்ணை மூடிய துளசி.........

நிலைமையை கையில் எடுத்த மாமியார்...........

இடை சொறுகலாக துளசியின் தம்பி தங்களை வளைக்க முயற்சிக்கும் தங்கை...... சித்தி......... எல்லாத்தையும் ஊற்றி மூடும் சித்தப்பாக்கள்.........
மனிதர்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பார்வைகள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிரகம்.........
நவகிரகங்களை மிஞ்சும் திசையில் பார்வைகள்.........

தன் பொறுமையால் கணவனை தன் வசமாக்கும் துளசி...........
மகனுக்காகவே இறங்கி வரும் மாமியார்.........
அம்மாவுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வரும் மகள்.......
மூவருக்கும் இடையில் சிக்கி தவிக்கும் திரு........
தானும் காதல் செய்து மனைவியையும் காதல் செய்ய வைத்த திரு......
மனைவியை மட்டுமல்ல படித்தவர்கள் அனைவரையும் வெட்கப்பட வைத்த திரு......

முரட்டு திரு முத்த திரு......

வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பதில்லை......
கிடைத்ததோ இனிக்கவில்லை........
இனி அறுசுவையில் ஒரு சுவையாக 13 வருட மலரும் நினைவுகள்.......

பொதுவாக அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தன் பெண் குழந்தை எப்போதும் சீரும் சிறப்புமா இருக்கணும்.......
அநேகம்
அம்மா மருமகளுக்கும்.......
அப்பா மனைவிக்கும்.......
அந்த சீரையும் சிறப்பையும் கொடுப்பதில்லை.........

ஒரு காதல்(???) ஒரு குடும்பத்தை எப்படி பாதிக்குது என்பதை மல்லியோட style-ல் நச்சுன்னு வந்திருக்கு..........

நிழலை நிஜத்தில் காண்பித்து எங்களை மகிழ்வித்த மல்லிக்கு
"இந்த கதைக்கு நான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா".......னு (தங்க நிறத்துக்கு பாட்டு தான்.....) பொய் சொல்லாமல் ஓலா பிடிச்சி ராயப்பேட்டை போய் ஒரு புக் வாங்கி (online-ல வாங்கினா வீட்டுல தெரிஞ்சிடும்...... online-ல படிச்சிட்டு book வேறவா....... இதை தடுக்க........) அதை daily revise பண்ணி அப்பப்போ inbox பண்ணுறது தான்......

இதழ் முத்தம் தரும்.. அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
முத்தம் போதாதே.. சத்தம் போடாதே......
ரத்தம் சூடானதே.. நாணமே நாணுதே......
கலக்கல் review....திரும்ப கதை முழுதும் படித்த உணர்வு...:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top