P24 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Will come with final update tomorrow.


“என் தங்கச்சி என்னை நம்ப மாட்டா... எப்பவும் வீடியோ கால் தான் செய்வா... எங்க நான் திரும்ப கடலுக்கு போயிருக்கப் போறேனோன்னு பயம்.” என ரோஜாவிடம் சொல்லியபடி தொடர்பை ஏற்றான்.
“டேய் ! என்னடா இப்படி என்னை ஒரு காட்டுவாசிக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க...” பவித்ரா சொல்ல... அருள் சிரித்தான். ஏனென்றால் பவித்ரா இருக்கும் இடம், நகரத்தை விட்டு வெளியே கிராமம் போலத்தான் இருக்கும்.
“எப்படி அண்ணி அங்க தனியா இருக்கீங்க போர் அடிக்கலை...”
“நான் படிச்சிட்டு இருக்கேன் ரோஜா... இங்க ஒரு பரீட்சை எழுதிட்டா... நானும் இங்க வேலைக்கு போகலாம்.” என்றாள் பவித்ரா.
சிறிது நேரம் பேசியவர்கள், மாதவன் அலுவலகம் கிளம்ப வேண்டும் என வைத்து விட்டனர். பவித்ராவும் ரோஜாவும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை பேசி விடுவார்கள்.

***************************************************************************************************************


அருள் மகிழ்ச்சியுடன் இருக்க.. ரோஜா முகம் வாடி தெரிய...
“என்ன ரோஜா ஏன் ஒருமாதிரி இருக்க?” அருள் என்னவோ என பயந்து போய் கேட்க,
“இனிமே நான் காலேஜ் போக முடியாது இல்ல...” என்றவளின் கண்கள் கண்ணீரை சிந்த... அருளுக்கு கஷ்ட்டமாக போய்விட்டது.
படிக்க வேண்டும் என ஆசைப்பட்ட பெண், இப்போதும் எங்கே படிக்க முடியாதோ என்ற அவளின் கவலை நியாயமானதே...
“ஏன் போக முடியாது? தினமும் காலேஜ் போகணும்ன்னு எல்லாம் இல்லை. வாரக் கடைசியில மட்டும் போற காலேஜ் எல்லாம் இப்ப இருக்கு. வா நான் உன்னை சேர்த்து விடுறேன்.” என்றான்.

**************************************************************************************************************

அருளும் ரோஜாவும் சென்றதும், “நீங்களே எல்லா வேலையும் பண்ணிட்டு, ஏன் மா என் மேல பழியை போடுறீங்க. உங்க அண்ணன் மகன் வேற அந்த ஆட்டம் ஆடுறான். நீ யாருடான்னு கேட்டிருப்பேன். அதுக்கும் காது கிழிய அட்வைஸ் பண்ணுவான். அதனாலதான் விட்டுட்டேன்.” என்றவள், “
அம்மா நாளைக்கு ஹாஸ்பிடல் போய் எல்லா டெஸ்ட்டும் பண்ணிடலாம் என்ன?” என்றாள்.
இந்த மட்டுக்குமாவது இறங்கி வந்தாளே என நினைத்த புவனா அமைதியாக இருக்க... ரேஷ்மா உள்ளே சென்று விட்டாள்.
“இவ மட்டும் பரத்தைப் பார்த்து அப்படி சொல்லி இருந்தா, அவன் என்ன பண்ணி இருப்பான்?” ஸ்ரீநிவாஸ் கேட்க,
“வேற என்ன ?வாங்க அத்தை நம்ம வீட்டுக்கு போவோம்ன்னு என்னை இழுத்திட்டு போயிருப்பான்.” என்றார் புவனா சிரிப்புடன்.

***********************************************************************************************************

அதிகாலையே எழுந்துகொள்ளும் அவர்களின் மகன் தந்தையோடு ஒரு ஆட்டம் போட்டு விடுவதால்... காலை உண்டதுமே கண்ணைக் கசக்குவான். ரோஜா வகுப்புக்கு கிளம்பும் முன் பாலைக் கொடுத்து தொட்டிலில் போட்டு விட்டு செல்வாள்.
எப்படியும் இரண்டு மூன்று மணி நேரம் நன்றாக தூங்குவான். அப்படியே எழுந்தாலும் கலை பார்த்துக் கொள்வார். அதனால் நிம்மதியாக இருப்பாள்.
கலைக்கு ரோஜா அதிக வேலைகள் எல்லாம் வைக்க மாட்டாள். காய் கறிகள் நறுக்கிக் கொடுப்பார். மற்ற நேரம் எல்லாம் பேரனை வைத்துக் கொண்டு இருப்பார் இல்லையென்றால் டிவி பார்ப்பார்.
வெகு நாட்களாகவே ரோஜாவின் மனதிற்குள் ஒரு தவிப்பு. இங்க வந்ததும் தன் அடையாளம் முற்றிலும் மறைந்து போனதா... அல்லது நாமே மறந்து விட்டோமா என்று... அதை அருளிடம் சொல்லத் தெரியாமல் சொல்லாமல் இருந்தாள்.
 

Joher

Well-Known Member
:love::love::love:

இன்னும் அடங்கலையே ரேஷ்மா.....
பையன் பொறந்தப்புறம் படிப்புமா???
கலக்கு நீ.....

அருளுக்கு சித்தி அத்தை பொண்ணு தான் வில்லிங்க.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top