Nee Ennul Yaaradaa 19

Advertisement

Novel-reader

Well-Known Member
00
தப்பு செஞ்ச கமலோட குடும்பம் தைரியமாக பேசுறாங்க ஆனால் பாதிக்க பட்ட சாரதாவோட குடும்பம் இவ்வளவு தயங்குறாங்க பணிஞ்சு போறாங்க அதனால் தான் கௌசல்யாவுக்கு இவ்வளவு திமிரு ஏறுது.
அன்னைக்கே நீ எல்லாம் என்ன பிள்ளை பெத்து வளர்த்த இப்படி ஒரு பிள்ளையை பெத்துட்டு ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நடக்குறியான்னு நல்லா அசிங்கமா கேட்டுருந்தால் கௌசல்யாக்கு உங்க மேல பயம் வந்திருக்கும்.

அவங்க வீட்டு பொண்ணு நிச்சயத்தை நிறுத்திறதுக்கே அவளோட அப்பா அம்மா அண்ணன் என்று குடும்பமே பரணியை வாசலில் நிக்க வச்சு திட்டுறாங்க ஆனால் உங்க வீட்டு பொண்ணோட வாழ்க்கையே அழிச்சிருக்கான் அவன் குடும்பத்தை ஒன்னும் சொல்லாமல் இப்படி தயங்கி நிற்குறீங்க அதான் கௌசல்யாவுக்கு ரொம்ப தைரியத்தை கொடுக்குது.

சாரதா அவ மகனே உனக்கு புருஷன் இல்லைன்னு ஆகிடுச்சு அப்புறம் என்ன இந்த கௌசல்யாவுக்கு மாமியார் மரியாதை கொடுத்துட்டு இருக்க உன் தம்பி பத்தி தப்பா பேசும் உங்க மகனை விட‌ என்‌தம்பி எந்த விதத்திலும் குறைஞ்சவன் இல்லைன்னு சண்டை போடனும் அதை விட்டுட்டு பயந்து நடுங்கிற சக்திவேல் பேச்சுக்கு கூட நீ மதிப்பு கொடுக்கணும் என்று அவசியம் இல்லை. உன்னோட முடிவுகளை நீயே சுயமாக எடு அதை பத்தி தைரியமாக பேசு அதுக்கு யார் கிட்டயும் அனுமதி கேட்கவும் வேண்டாம்.

கமல் குடும்பத்தில் யார் கிட்டயும் நீ விட்டு கொடுத்து போகணும் என்று அவசியம் இல்லை ஏன்னா அவங்க யாரும் கமலை ஒதுக்கி வைக்கிற எண்ணத்தில் இல்லை அதனால் நீ அந்த குடும்பத்தோட மருமகள் என்கிற எண்ணத்தை தூக்கி போட்டுட்டு உன் வாழ்க்கை வாழ பாரு. சக்திவேல் கார்த்திக் யாருக்காவும் அனுசரிச்சு போகவோ விட்டு கொடுத்து போகவோ செய்யாத அது உன் குடும்பம் இல்லை அவங்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்போ கடமையோ உனக்கு இல்லை அதனால் கௌசல்யா திட்டுனா வாங்கிக்கிறது சக்தி வேல் பணிஞ்சு போக சொன்னால் பணிஞ்சு போறதுன்னு தலையாட்டிகிட்டு இருக்காத.

உன்னோட பிள்ளைங்க மட்டும் தான் உன் குடும்பம் அவங்களுக்காக மட்டும் யோசி வாழு . கமல் குடும்பத்துக்கு பேர குழந்தை பார்க்கணும்னு ஆசை பட்டால் உன் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் அதிலும் கௌசல்யா கிட்ட மட்டும் பழக விடாத உன்னோட பிள்ளைங்களை உனக்கு எதிரா திருப்பி விட்டுருவா..

கௌசல்யாவுக்கு எல்லாம் நம்ம டாக்டர் சதா மாதிரி மாப்பிள்ளை அமைச்சு இருக்கணும் தாலி கட்டிட்டு விட்டுட்டு போயிடணும் பொறுமையா ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு வந்து எக்சூஸ்மீ இதில் யாரு என் பொண்டாட்டி யார் கூட நான் குடும்பம் நடத்தணும் என்று கேள்வி கேட்கிற மாதிரி நடந்து இருந்தால் கௌசல்யா கொழுப்பு எல்லாம் கரைஞ்சுருக்கும்...

ஆனாலும் சாரதா குடும்பம் ஏன் இவ்வளவு பணிஞ்சு போராங்கன்னு எனக்கு தெரியல.

ஆதி குடும்பமாவது இந்த கௌசல்யாவை திட்டி அசிங்க படுத்துவாங்கன்னு பார்த்தால் ஒன்னும் நடக்கலையே...

காயத்ரி பரணி கல்யாணம் முடியுற வரைக்கும் இந்த கௌசுவை அவ மூத்த மகன் கமல் வீட்டில் கொண்டு விடுங்களேன் அவங்களோட புது மூத்த மருமக நல்லா கவனிச்சுக்கட்டும்.

பரணிக்கு கொஞ்சமே கொஞ்சம் ரொமான்ஸ் வருதுப்பா
ஹ.. ஹ..ஹா....

Heart ஸ்பெஷலிஸ்ட் - ஐ நீங்க அறிமுக படுத்திய விதம் அருமைங்க. அவன் அது மட்டுமா செஞ்சான். ஆளு யாருன்னு confirm பண்ணி wife - ஆ வீட்டுக்கு வந்த அன்னிக்கே அறைய வேற செய்வான். ஆனால் அவன் அம்மா எப்படி அஞ்சு வருஷமா அதுக்கு அப்புறமும் மருமகளை தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க. அவங்க முகதுக்காக தான் கன்யா முதலில் ஒத்துக்கிட்டா.

கவுசல்யாக்கு தான் அந்த பக்குவம் இல்லை.
 

vijirsn1965

Well-Known Member
Muthalileye thangal kaadhalai eruvarum solli irukkalam ippo veru oru kudumbamum edaiyil vanthu vittathu sikkal perithaaki kondu selkirathu ud arumai mam viji
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top