S
semao
Guest
இந்நாள் மட்டுமல்ல
எந்நாளும் தவிர்க்க
முடியாது நட்பு எனும்
மூவெழுத்து
நடப்பில் நட்பில்லை
உள்ளதே நட்பில்லை
எனவிருக்கும் சில நடப்பை
இல்லை இல்லை
நட்பை கூடாது தவிர்த்தால்
மேடான வாழ்வு தரும்
சீரியவற்றை சீர்த்தூக்கி இயம்பாமல்
சிந்திக்க விடாமல்
சொல்வனக்கெல்லாம் தலையாட்டி
சொன்ன சொல்லை தான் புகழ்ந்து
பின் அலையும் கூட்டமென்று
ஒரு கும்பல் தானுமுண்டு
நட்பென்பர் இவருமே
நம்பாதே கண்மணியே
இனிப்பாக பேசுவார்
தப்பை நீ செய்தாலும்
சரியென்னும் நட்பு இது
கூடா நட்பு இது
முன் பார்க்க இனிக்கும்
பின் சென்றே பழிக்கும்
இவர்தம் நட்பு கூடாதே
உள்ள குறைகளை எடுத்தியம்பி
உன்னைச் சீராக்க ஓராயிரம்
அவமானம் நீ செய்தும்
உன் நலம் பேண
உன்னிடமே கெஞ்சும்
கொஞ்சும்
மிரட்டி பார்ப்பது மட்டுமல்ல
வீட்டில் உள்ளோருடனும்
சேர்ந்து உன்னை மாற்ற
முயற்சிக்கும் நட்பை
அறிந்திடுவாய்
பாகை போல் கசந்தாலும்
பகையாக எண்ணாதே
பழகியே காணிடு
பக்கத்துணை இவரென்று
எந்நாளும் தவிர்க்க
முடியாது நட்பு எனும்
மூவெழுத்து
நடப்பில் நட்பில்லை
உள்ளதே நட்பில்லை
எனவிருக்கும் சில நடப்பை
இல்லை இல்லை
நட்பை கூடாது தவிர்த்தால்
மேடான வாழ்வு தரும்
சீரியவற்றை சீர்த்தூக்கி இயம்பாமல்
சிந்திக்க விடாமல்
சொல்வனக்கெல்லாம் தலையாட்டி
சொன்ன சொல்லை தான் புகழ்ந்து
பின் அலையும் கூட்டமென்று
ஒரு கும்பல் தானுமுண்டு
நட்பென்பர் இவருமே
நம்பாதே கண்மணியே
இனிப்பாக பேசுவார்
தப்பை நீ செய்தாலும்
சரியென்னும் நட்பு இது
கூடா நட்பு இது
முன் பார்க்க இனிக்கும்
பின் சென்றே பழிக்கும்
இவர்தம் நட்பு கூடாதே
உள்ள குறைகளை எடுத்தியம்பி
உன்னைச் சீராக்க ஓராயிரம்
அவமானம் நீ செய்தும்
உன் நலம் பேண
உன்னிடமே கெஞ்சும்
கொஞ்சும்
மிரட்டி பார்ப்பது மட்டுமல்ல
வீட்டில் உள்ளோருடனும்
சேர்ந்து உன்னை மாற்ற
முயற்சிக்கும் நட்பை
அறிந்திடுவாய்
பாகை போல் கசந்தாலும்
பகையாக எண்ணாதே
பழகியே காணிடு
பக்கத்துணை இவரென்று