வீரமாகாளி

Advertisement

விஜயன் தன் அண்ணியிடம் பணம் வாங்குவது போல் சென்றவன் அண்ணி இப்போ என்ன பண்றது அண்ணினு கேட்டான்.நீ தைரியமா போ.அங்கு அவர்களின் நிலைமை என்ன என்று பார்.சங்கர் மூலமே தெரிந்து விடும் அவன் குடும்பம் எப்படி இருக்கிறது என்று தெரிஞ்சிடும்.காஞ்சனா சொன்னது போல செய்.அப்புறம் கடவுள் விட்ட வழி.அங்கு சுமூகமான நிலைமை இருந்தால் இந்த அண்ணி இருக்கேன்.கவலைப்படாமல் போய் வானு அனுப்பி வைத்தாள்.

அனைவரும் கிளம்பிச் சென்றனர்.விஜயன் காலேஜுக்குச் சென்றான்.வழக்கமாக அமரும் இடத்தில் உட்கார்ந்தான்.சங்கரும் வந்து பக்கத்தில் அமர்ந்தான்.விஜயன் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு சாரிடா மச்சான்.என் அண்ணண் இப்படிப்பட்டவர்னு தெரியாதுடா.அண்ணிக்கு வளைகாப்புக்கு முன்னாடி தான் அண்ணணுடைய சுயரூபமே தெரியும்டா.என்னை மன்னிச்சிடுடா என்றான்.அவனோ கொஞ்சமும் சலனமே இல்லாமல் அவன் கையை எடுத்து விட்டு இனி மச்சான் கிச்சானு உறவு கொண்டாடிட்டு என்கிட்டே பேசாதே.

இவ்வளவு நாள் என் குடும்பத்தோட பழகினியே. கொஞ்சமாச்சும் மனசாட்சி இருந்திருந்தா உன் வீட்டு நிலைமையை சொல்லியிருக்கலாமே.ஏன்டா மறைச்சே.நீ இவ்வளவு பெரிய பணக்காரனு தெரிஞ்சிருந்தா நான் உன்னை என் வீட்டுக்கே கூப்பிட்டுப் போயிருக்க மாட்டேன்.போதும்டா சாமி உன்னோட பழகினதுக்கு எங்களுக்கு நல்ல மரியாதை கொடுத்தாருடா உங்க அண்ணண்.இனி என்கிட்டே பேசாதே.ஊருக்குத் திரும்பும் போது உங்க ஊர்க்காரங்க உங்க அண்ணணைப் பத்தி நிறைய சொல்லிட்டாங்க.

இப்படி ஜாதி வெறி பிடிச்சவரை எதிர்த்து எங்களாலே போராட முடியாது.அதுனாலே எங்களை விட்டுடு சாமி.நாங்க சாதாரண மனுசங்கப்பா.உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்.இனி என் வீட்டுப் பக்கம் தலை வைச்சுக் கூடப் படுக்காதேப்பா என்று கூறினான்.பின் வகுப்பு தொடங்கவும் அவர்கள் கவனம் திரும்பியது.ஆனால் விஜயனுக்கு வகுப்பில் கொஞ்சம் கூடக் கவனம் செல்லவில்லை.அவன் கவனம் முழுவதும்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
இந்துமதி டியர்
ஆனால் முடிவடையாமல் incomplete ஆக இருக்குப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top