விடியலில் ஒரு வெண்ணிலா - 31 டீஸர்

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"பொங்கல் ஸ்பெஷலா அடுத்த பதிவோட குட்டி டீஸர் கொடுத்துடலாம்னு வந்தேன்... எல்லாரும் ஹாப்பியா பொங்கல் கொண்டாடுங்க..."

'அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...'

'விடியலில் ஒரு வெண்ணிலா - 31 - டீஸர்...

இன்டர்காம் ஸ்பீக்கரை ஆன் செய்த பாரதி சைகையிலேயே ரிஷியியம் “கேளுங்க...” என்றுவிட்டு கங்காவிடம் பேசத் தொடங்கினாள். அதைக் கேட்கக் கேட்க ரிஷியின் முகம் அதிர்ச்சியில் வெளுத்துப் போக பாரதியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“ஹலோ, சொல்லுங்க மேடம்...”

“ஏய் பாரதி, நான் அங்க இல்லன்னதும் உனக்கு துளிர் விட்டுப் போச்சா...? ரிஷி ரூம்ல இவ்ளோ நேரமா என்னடி பண்ணிட்டு இருக்க...?”

“அது..வந்து, மேடம்... ஒரு வேலை சொல்லறதுக்காக சார் தான் ரூமுக்கு வர சொன்னார்...”

“ஏய்...! உன் ரூம்ல இருந்தா நான் வாட்ச் பண்ணுவேன்னு அந்த முட்டாள் ரிஷி ரூமுக்குப் போயி என்னைப் போட்டுக் கொடுக்க பிளான் பண்ணறியா...? தொலைச்சிருவேன்...”

“அ..ஐயோ...! அப்படில்லாம் எதுவும் இல்லை மேடம்... இதோ, நான் என் ரூமுக்கு கிளம்பிட்டேன் மேடம்...”

“இங்க பார்...! ஆல்ரெடி உனக்கு சொல்லிட்டேன்... நீ என்ன பேசணும், எப்படி நடந்துக்கணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன், ஒழுங்கு மரியாதையா வாயை மூடிட்டு எனக்கு அடிமையா இருக்கற வரைக்கும் தான் நான் சும்மாருப்பேன்... என்கிட்ட வாலாட்ட நினைச்சா அடுத்த நிமிஷம் அந்த வீடியோ நெட்ல பறக்கும்... பி கேர்புல்...! முதல்ல உன் ரூமுக்குப் போ...” சொன்னவள் அழைப்பைத் துண்டிக்க, ஒரு பெருமூச்சுடன் ரிசீவரை அதன் இடத்தில் வைத்தாள் பாரதி. ரிஷியை நோக்க நடப்பதை நம்ப முடியாத அதிர்ச்சியில் அவன் முகம் இருண்டு சுருங்கிக் கிடந்தது.

“ர..ரதீ...!”

“ம்ம்... கேட்டிங்களா ரிஷி... உங்க அண்ணி என்கிட்ட எவ்ளோ அன்பா பேசினாங்கன்னு கேட்டிங்களா...? இதுதான் உங்க அண்ணியோட உண்மையான முகம்...! உங்ககிட்டயும், உங்க அண்ணன் கிட்டயும் காட்டறது அன்புங்கற முகமூடி போட்ட முகம்... இது உங்க அண்ணி செய்யற தப்புல சின்ன சாம்பிள் மட்டும்தான்... மெயின் பிச்சர்ல இன்னும் எவ்ளோ பெரிய தப்பெல்லாம் பண்ணறாங்கன்னு தெரியுமா...?”

பாரதியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நிலைகுலைந்து கண்கள் கலங்க அமர்ந்திருந்தான் ரிஷி. அவனால் அண்ணியின் அந்த அகம்பாவப் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பாரதியிடம் இப்படி அதிகாரமாய் பேசிவிட்டு என்னிடம் அவளை அருமை, பெருமையாய் கொண்டாடிப் பேசுவது எல்லாம் வேஷமா...?” மனம் கசந்தது.

“ரிஷி...! உங்களைப் புண்படுத்த வேண்டி நான் இதெல்லாம் பண்ணலை, உண்மை தெரியாம ஒரு ராட்சசி கிட்ட உங்க வாழ்க்கையைத் தொலைச்சிட்டு இருக்கீங்களேங்கற வருத்தத்துல தான், உங்களுக்கு எப்படியாச்சும் புரிய வச்சிடனும்னு முயற்சி பண்ணிட்டே இருந்தேன்... இனியும் நான் உங்க ரூம்ல இருந்தா ஆபத்து, நாம ஈவனிங் வெளிய போயி பேசிக்கலாம்...” சொன்னவள் சென்று விட்டாள்.

ஆனால் ரிஷியின் மனம் தான் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல வெளியே வந்தவன் நிதானமாய் அண்ணி பேசியதை யோசிக்க, “அது என்ன வீடியோ...? அதை சொல்லி எதற்கு பாரதியை பிளாக்மெயில் செய்ய வேண்டும்...?” யோசிக்க பிடிபடவில்லை. உடனே தெரிந்து கொள்ள வேண்டும் எனத் தோன்ற பாரதிக்கு இண்டர்காமில் அழைத்தான்.

“ரதீ... ஒரு வொர்க், கொஞ்சம் என் ரூமுக்கு வர முடியுமா...?”

“சார், மேடம் ஒரு முக்கியமான வேலை கொடுத்திருக்காங்க, அதை முடிக்காம என்னால வர முடியாது, அப்புறம் அவங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது... ப்ளீஸ், புரிஞ்சுக்கங்க சார்...” சொன்னவள் அவனது பதிலை எதிர்பாராமல் ரிசீவரை வைத்துவிட ரிஷிக்கு புரிந்தது.

தனது அலைபேசியில் பாரதியின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த கங்கா சந்தோஷப்பட்டாள்.

“நான் போட்ட போடுல பயந்துட்டா போலருக்கு... அந்த பென் டிரைவ் என்கிட்ட இருக்கிற வரைக்கும் இந்த பாரதி நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டா...!” சந்தோஷித்தவள், ஹரியின் அழைப்பில் திரும்பினாள்.

“கங்கா...! ரொம்ப நேரமா மொபைல்ல பார்த்துட்டே இருக்க... என்னமா, ஏதாச்சும் முக்கியமான விஷயமா...?”

“இல்லங்க...! ஆபீஸ்ல வொர்க்கர்ஸ் எல்லாம் சரியா வொர்க் பண்ணறாங்களான்னு காமரா மூலமா நெட்ல செக் பண்ணிட்டு இருந்தேன்...”

“இங்க வந்தும் உனக்கு ஆபீஸ் நினைவு தானா...? நான் கூட பிஸினஸ், மீட்டிங் எல்லாம் மறந்து இயற்கையை ரசிக்கத் தொடங்கிட்டேன்... நீ இப்பவும் அதே நினைப்புல இருக்க... கொஞ்சமாச்சும் உன்னை ப்ரீ பண்ணிக்க மா, நாம கார்டன் போயிட்டு ஈவனிங் பிளைட்ல சென்னை கிளம்பிடலாம்...”

“ம்ம்... சரிங்க...!” என்றவள் உற்சாகத்துடன் அருகில் இருந்த மகனின் தலைமுடியைக் கலைக்க சிணுங்கினான் ரோஷன்.

‘எல்லாம் என் கைக்குள்’ எனும் கங்காவின் அகம்பாவத்தை உடைக்க அங்கே ஒருவன் தயாராகிக் கொண்டிருப்பது தெரியாமல் தன்னை மீறி எதுவும் நடந்திடாது என்று சந்தோஷமாய் வெளியே ரசிக்கத் தொடங்கினாள் கங்கா. ரிஷி, பாரதியின் ஆட்டம் இனிதான் தொடங்கப் போகிறது.
 
Nirmala senthilkumar

Well-Known Member

Nirmala vandhachu
Surprise super
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top