வாராதிருப்பானோ! 17

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!

அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்!

இந்நன்னாளில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

என்னுடைய ஏழாவது புத்தகமான "அமுதம் பொழியும்! குமுதம் மலரும்!" அச்சுப் புத்தகமாக வெளியாகி இருக்கு.

முழுக்க முழுக்க நெல்லை வட்டார வழக்கில் பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி நான் எழுதிய இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு வாங்கலாம்.

பிரியா நிலையம்
9444462284


புத்தகம் வெளியிடும் பிரியா நிலையத்தாருக்கும் அவர்களிடம் பேசி புத்தகம் வெளிவர உதவி செய்த மல்லிகா மேமிற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


கதையில் இருந்து ஒரு குட்டி டீசர்
..............................................................................................................

“ம்ம்ம். இப்பச் சொல்லு. என்னத்துக்கு அழுகை?”

விழிகள் வியப்பில் வெண்ணிலவாக விரிய நிமிர்ந்து பார்த்தவளைக் கண்டவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“அதான் உன் ஆசைப்படிப் பள்ளிக்கூடத்துல சேரப் போறேன்னு தெரியும். இருக்கக் கவுரதியா எடமும் கெடச்சாச்சு. பொறவு கண்ணு ஏன் கலங்குது?”

“அது வந்து...”

குமுதாவுக்கு இப்படி எல்லாம் தயங்கி நின்று பழக்கமே இருந்ததில்லை. படபடப் பட்டாசாய்ப் பொரிபவள் அவள். பள்ளியில் தோழிகள் கூட “கொஞ்சம் மூச்சு விட்டுத்தான் பேசேண்டி” என்று சொல்லும் அளவு மனதில் நினைத்ததைத் தயங்காமல் பேசி விடுவாள். அவளாக விஷயத்தை வெளியிடக் கூடாது என்று அமைதியாக இருந்தால் மட்டுமே உண்டு. இன்றோ தனக்கே புரியாத விஷயத்தைத் தான் எப்படி விளக்குவது என அவள் தடுமாற

“காசு பணம் இல்லையேன்னு யோசிக்குதியா?”

ஒரு பதில் கிடைத்து விட்டாற் போல் அவள் வேகமாகத் தலையசைக்க அவள் தலையசைப்பிற்குத் தாளம் தட்டுவது போல் இரு செவி ஜிமிக்கிகளும் இசைந்தாட அவன் பார்வை அதில் பதிந்தது.

அவன் அன்னையின் ஜிமிக்கிகள் அவை. தங்கத்தில் முத்தும் பவளமும் மரகதமும் பதித்துப் பலவண்ணத்தில் இருந்த அந்த ஜிமிக்கிகளை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
அவன் ஐந்தாறு வயதுச் சிறுவனாக இருக்கையில் திருவிழாவுக்குச் செல்கையில் மரகதம் அவற்றை அணிவதுண்டு.அவர் இடுப்பிலோ மடியிலோ இருக்கையில் அந்த ஜிமிக்கிகளைச் சுண்டி விட்டு அவை ஆடும் அழகைக் கண்டு கைதட்டிச் சிரிப்பானவன்.

இப்போதும் அப்படிச் சுண்டி விடக் கை துறுதுறுக்க அதைக் கட்டுப்படுத்தியபடி விழிகளால் அவள் முகத்தை வலம் வந்தான்.

கற்றைக் கார்குழலை இரண்டாகப் பிரித்து ஜடையிட்டிருந்தாள். கருமேகத் திரைக்கு இடையே ஒளிவீசும் பிறை நிலவென நெற்றி, மாரன் கைவில்லென வளைந்த புருவங்கள், அவற்றின் கீழே கருவண்டெனச் சுற்றிச் சுழலும் கண்கள், கூரான நாசி, கொழு கொழுக் கன்னங்கள், கொவ்வை இதழ்கள், அழகாகத்தான் இருக்கிறாள்.

விஷமத்துடன் இதழ்கள் வளைய,
“காசு பணத்துக்கென்ன? கொட்டிக் கெடக்குது எங்கிட்ட. நான் தாரேன்.நீ வேலை செய்ஞ்சு கடனக் கழிச்சுரு”

அவளும் மகிழ்ச்சியுடன் தலையசைசைக்க
“என்ன வேலைன்னு கேக்காம மண்டையை மண்டையை ஆட்டுத”

அவள் புரியாமல் பார்க்கவும் “பகல் முச்சூடும் அங்கன அம்ம வீட்ல பாக்குதத பாரு. ராவுக்கு என் வீட்டுக்கு வந்துரு.சீக்கிரமே கடனக் கழிச்சுறலாம்”

முதலில் அவன் சொன்னது விளங்காமல் மலங்க மலங்க விழித்தவள் பின் அவன் சொன்ன வார்த்தைகள் துளித் துளியாய் அவளுள் இறங்கி அதன் பொருளும் படிப்படியாய் விளங்க அவள் முகம் மாறியது.
அதைக் கண்டு அமுதனின் முகமும் மாறியது.

..............................................................................................................

தொடர்ச்சி அமுதம் பொழியும் குமுதம் மலரும் கதையில்...


இதற்கு முன் வெளி வந்த அனைத்து புத்தகங்களுக்கும் ஆதரவு தந்தது போல் இந்த புத்தகத்துக்கும் ஆதரவு தந்து புத்தகம் வாங்கி படித்து உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

422565525_1172605323895532_8545972493128685784_n.jpg



முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.

வாராதிருப்பானோ 17 ம் அத்தியாயம் இதோ உங்களுக்காக


வாராதிரà¯à®ªà¯à®ªà®¾à®©à¯! 17

படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


68734891_2302974316482284_6176652344516673536_n.jpg

சிரி 41.jpg
 
அருமையான பதிவு :love::love::love::love::love::love:
குழந்தையை காப்பாத்திட்டானு தெரிஞ்சதும் வருத்தப்பட்டு ஸாரி கேட்டுட்டா.
அடிச்சதை கூட மெடல் குடுத்த ரேஞ்சுக்கு நெனைச்சுதான் கொஞ்சறான். அப்பறம் ஏன்?
.:unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top