வாராதிருப்பானோ முன்னுரை மற்றும் ஒரு அறிமுகம்

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!

கைவிடுவேனோ கண்மணியே கதைக்கும் விமல் பாரதிக்கும் நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கு முதற்கண் நன்றி கூறிக் கொள்கிறேன். எல்லாருக்கும் பதில் எழுதி விட்டேன் என நினைக்கிறேன். யாருக்காவது பதில் சொல்லாமல் விட்டிருந்தாலும் மன்னிக்கவும்.கதை நீக்க வேண்டுகோள் கொடுத்து விட்டேன். கதை எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம். எனவே யாராவது படித்துக் கொண்டிருந்தாலும் விரைந்து முடித்து விடுங்கள்.

வாராதிருப்பானோ!

இந்தக் கதை ஆன்லைனில் வந்தது நான் கிண்டிலில் “கைவிடுவேனோ கண்மணியே” வைப் பதிவேற்றம் செய்து விட்டு என் இரண்டாவது கதையான “மனமே! நினைவை மறந்து விடு! (உண்மை சொன்னால் நேசிப்பாயா)” வை என் பெயர் தெரியாமல் போட்டிக் கதையாக எழுதி முடித்து விட்டுப் போட்டி முடிவுகளுக்காகக் காத்திருந்த நேரம்.

எனவே ஆன்லைனில் தூரிகா சரவணன் என்ற பெயருடன் வெளிவான முதல் கதை என்று இதைச் சொல்லலாம்.ஆனால் இந்தக் கதைக்குக் கிடைத்த வரவேற்பு என்னால் கற்பனை செய்து கூட பார்க்க இயலாதது.

இப்போது மீள்பதிவாக இந்தக் கதை இந்தத் தளத்தில் வரப் போகிறது. திங்கள் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி இருந்தேன். கைவிடுவேனோ கண்மணியே படிக்க சிலர் நேரம் கேட்டு இருந்தார்கள். அத்துடன் சில சொந்த வேலைகள் காரணமாகவும் தாமதம் ஆனதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை முதல் கதை அத்தியாயங்கள் பதிவிடப்படும். திங்கள் முதல் வியாழன் வரை தினம் ஒரு அத்தியாயமாக வாரத்துக்கு நாலு அத்தியாயங்கள். சென்ற கதை போல திங்கள் வியாழன் இரு அத்தியாயங்கள் எனக்கு வசதி என்றாலும் இந்தக் கதையின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றுமே பெரிதாக இருக்கும். எனவே ஒரு நாளைக்கு ஒன்று என்று முடிவு செய்து இருக்கிறேன்.

எனக்கு தினமும் கருத்துகளுக்கு பதில் எழுதுவது கஷ்டம். அதனால்தான் வாரம் இரு முறை பதிவு என்பதை நான் பின்பற்றுவது. அதனால் உங்கள் கருத்துகளை தினமும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உடன் பதில் எழுத இயலாவிட்டாலும் படித்து விடுவேன். நேரம் இருக்கும் போது பதிலும் எழுதி விடுவேன். அடுத்த வாரம் புதிய பதிவு வரும் முன் கண்டிப்பாக எல்லாருக்கும் பதில் சொல்லி விடுவேன். எனவே உங்கள் கருத்துகளைக் கண்டிப்பாகத் தெரிவியுங்கள். ஓடிக் கொண்டே இருக்கும் இந்த உலகில் உங்கள் ஊக்குவித்தல் மட்டுமே தேங்கி நிற்காமல் தொடர்ந்து ஓட வைக்கிறது.

இந்தக் கதைக்கான டீசர் ஒன்றை என் குரலில் பதிவு செய்து யூ ட்யுபில் பதிவேற்றம் செய்து இருக்கிறேன். கேட்டுப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். முழுக் கதையாகவும் இதை யூ ட்யூபில் கேட்கலாம். கதை கேட்பவர்கள் தவறாமல் என் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள். நன்றி! வணக்கம்!

என்றும் உங்கள் ஆதரவை நாடும்

தூரிகா

டீசர் லிங்க்

முழுக்கதை லிங்க்

271951229_350360386947994_6383076187946666654_n.jpg
 
Nirmala senthilkumar

View attachment 11930
Nirmala vandhachu
All the best ma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top