வாணி அரவிந்தின் மௌனமே..... காதல் மொழி பேசு - இன்ட்ரோ

Advertisement

mallika

Administrator
இந்த நமது தளத்தில் போட்டிக்காக நான் எழுத இருந்து அறிவிப்பு கொடுத்தது இந்த கதையை தான் சகோக்களே.. அப்போது எழுத முடியாமல் விட்ட கதையை இப்போது இங்கு பதிவிடுகிறேன்..

இலக்கிய வானில் காதல் சிறகை விரித்து உயரப் பறந்தவர்கள் நம் தமிழர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை..

அந்த வகையில் 'மௌனமே காதல் மொழி பேசு' என்ற வித்தோடு' அழகான கிராமத்து காதலை உங்கள் இதயத்தில் விதையாக விதைத்து மனதில் வேரூன்றி விருட்சமாக வளர்க்க வந்திருக்கிறேன்..

"செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”

காதல் வாழ்வில் அவனில் அவளும், அவளுள் அவனும் கலந்து கரைகின்ற தன்மையைக் காட்டும்.

மழை என்ற தலைவனுக்காக நிலமங்கை காத்திருக்க, மழை வந்ததும் எங்ஙனம் அவற்றை பிரித்து பார்க்க முடியாதோ அதுபோல அன்புடைய நெஞ்சங்கள் ஒன்று கலந்தனவாம். பிளவுபடாத பொருந்திய காதலில் ஓருயிர் ஈருடலாக காதலர்கள் வாழ்வார்கள்.

இவ்வாறாக நமது கதையின் நாயகன் நாயகியின் மென்மையான காதல் கண்முன்னே காட்சியாக விரிகிறது. காதலில் இன்பம், துன்பம், ஊடல் அனைத்துமே தெவிட்டாமல் கொடுத்து மௌனமும் காதலின் மொழியே என்பதை அழகாக
வெளிப்படுத்தி இருக்கிறேன்.

நாயகன் முத்துவின் லட்சியம், அதற்காக அவன்படும் துன்பங்கள், மலரின் மீது கொண்ட காதல், தமிழ் மீது கொண்ட காதல், இவர்களிடையேயான ஊடல் கதையோடு பயணித்து தெரிந்து கொள்ளலாம்.

நாயகி மலர் அவன் மீது கொண்ட ஆழமான காதல். அவளின் குறும்பு, வைராக்கியம், பிடிவாதம், அளவுக்கு அதிகமான அன்பு இதையெல்லாம் கதையின் ஓட்டத்தில் உணரலாம்.

கண்ணன், எழிலின் நகைச்சுவை கலந்த ஊடல் அனைவரையும் சிரிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.

செண்பகம், ஆனந்தின் மோதலும், அதன் பின் காதலும் எதிர்பாராத திருப்பங்களும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும்..

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை'

உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். மழை இல்லாத காலங்களில் சிறுதொழில் செய்து நமது வாழ்வை வளம் பெறச் செய்யலாம் என்பதை கூறியிருக்கிறேன்.

பழனிச்சாமி, அன்னம் கதாப்பாத்திரங்கள் நகைச்சுவையுடனும், அன்னம் அடுத்தவர்களை காயப்படுத்தி வேடிக்கை பார்க்கும் பெண்ணாகவும் கிராமத்து நடையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பூவாயி கதாபாத்திரம் பெற்ற பிள்ளைகளை புரிந்து கொள்ளவும், சரியான முடிவுகளை சரியான நேரத்தில் சிந்திக்க தெரிய வேண்டும் என்பதையும் விளக்கும் பெண்ணாகவும், வரதனின் அவசரபுத்தியால் ஏற்படும் தவறுகளை திருத்தி சரிசெய்யும் அன்பு மனைவியாகவும் தோன்றும் தாயவள்..

முதுமை வயதிலும் தாத்தா, ஆச்சி இருவரின் புரிதலும், ஆழமான அன்பும் படிக்கும் போதே கண்கலங்க வைக்கும். தாத்தாவின் குறும்பும்,ஆச்சியின் செல்ல கோபமும் படிக்க படிக்க மகிழ்ச்சி தரும்..

பிள்ளைகளின் லட்சியத்திற்கு வழி கொடுத்தும் , காதலை ஆதரித்தும் அன்பு காட்டும் பெற்றோராக ராசைய்யா, சரஸ்வதி தம்பதியினரும்.. மணிவண்ணன், மாரியம்மாள் தம்பதியினரும் ஈடுஇணையில்லாத கதாபாத்திரங்களாக வலம் வருகின்றனர்..

எல்லாவற்றிற்கும் மேலாக கன்றுகுட்டி மருதுவும், நாய் ஜில்லுவும் செய்யும் அட்டகாசங்கள் அடக்க முடியாத நகைச்சுவை உணர்வுடன் இருக்கும்..

ஒரு அழகான கிராமத்து காதல் கதை. நிச்சயமாக கதாபாத்திரங்களுடன் நீங்கள் ஒன்றிப் போகும் அளவிற்கு ஆழமான வசனங்களை கொண்ட கதை. நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..

அன்புடன்
வாணி அரவிந்த்

1642865894468.png
 
Raman

New Member

View attachment 9581
:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top