வண்ணங்களின் வசந்தம் -28

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_230298665521535.jpeg

அத்தியாயம்-28

மதுவின் திருமணம் முடிந்து ஒரு வாரம் முடிந்திருந்தது. தோழிகள் நால்வரும் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்துவிட்டனர்.

ப்ரீத்தி, “மது எப்போடி காலேஜ்க்கு வருவா.நானும் சீக்கிரம் கல்யாணம் பண்றேன் அதை சாக்கா வச்சு மூணு மாசம் காலேஜ்க்கு லீவ் போடறேன். மது எத்தனை நாள் லீவ் போட போறானு தெரிலயே என்னதான் பிரண்டா இருந்தாலும் பொறாமையா இருக்கு”.
பூஜா, கல்யாணம் பண்றது இருக்கட்டும் முதல்ல ஒழுங்கா சுடு தண்ணி வைக்க கத்துக்கோ அப்போதான் மேரேஜ்க்கான என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல பாஸ் ஆவ.
ப்ரீத்தி, “எது….இதுக்கும் எண்ட்ரன்ஸ் எக்ஸாமா, மது என்கிட்ட சொல்லவே இல்லையே”என்றவள் அலற அவளை பார்த்து மற்ற மூவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

சூர்யா, “அடியே மானத்தை வாங்காதடி அதுக்கு எல்லாம் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இல்ல அவதான் சும்மா சொல்றானா நீ வேற அதை நம்பிட்டு இருக்க.நேரம் ஆச்சு கிளாஸ்க்கு போடி, நீயும் வா அபி நாமளும் போலாம்”என்று அவளையும் சூர்யா இழுத்து சென்றுவிட ஒருவழியாக தோழிகள் அவரவர் வகுப்பிற்கு சென்றனர்.
தங்கள் வகுப்பிற்குள் நுழைந்த பூஜாவும்,ப்ரீத்தியும் கண்டது கன்னத்தில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்த மதுவைதான்.ஆம், கல்யாண வைபோகம் எல்லாம் முடிந்து ஒரே வாரத்தில் கல்லூரிக்கு வந்திருந்தால் மதுவந்தி.

பூஜா அவளை ஆச்சர்யமாக பார்த்தாலும், “என்ன ஆச்சு”உடனே காலேஜ்க்கு வந்துட்டா”என்று தனக்குள்ளே கேட்டு கொண்டு யோசனையான முகத்துடன் சென்றாள்.

ப்ரீத்தி, “என்னடி ஏன் இன்னைக்கே வந்துட்ட குறைஞ்சது ரெண்டு மாசமாவது லீவ் போடுவன்னு நினைச்சேன்” என்ற கேள்வியை இருவரும் பல விதமாக கேட்டு பார்த்துவிட்டனர்.ஆனால், அவள் தந்த பதில் என்னவோ “முறைப்பு மட்டுமே” “எப்படியும் சொல்லிடுவா…. சொல்லித்தானே ஆகணும்….” என்ற முடிவிற்கு வந்தவர்கள் அதன்பின் அமைதியாகினர்.

மதிய உணவு இடைவேளையின்போது சூர்யாவும், அபியும் அவர்களின் ஃபேவரட்டான இடத்திற்கு வர அங்கே அவர்கள் கண்டது. ப்ரீத்தி நடுவில் அமர்ந்து திருதிருவென விழித்து கொண்டிருக்க அவளின் ஒரு பக்கம் பூஜாவும், மறு பக்கம் மதுவும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

மூவரையும் பார்த்து குழம்பிய இருவரும் ஒருவரை ஒருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு அவர்களிடம் கேட்க நினைத்து அருகில் சென்றனர்.முதலில் பூஜாவிடம் “என்ன ஆச்சு”என்று கேட்க அவளோ சோகமான முகத்துடன் மதுவின் திருமணத்தில் நடந்ததை சொல்லி அன்றில் இருந்து அர்ஜுன் தன்னுடன் பேசவில்லை என்றாள்.

அபி உடனே கோபமாக சூர்யாவை முறைக்க அவளோ “ஈஈஈ…..” என்று இளித்தவள், என்ன பார்த்தது போதும் அங்க இன்னொருத்தி பஞ்சாயத்து என்னனு பாரு என்க, தலையில் அடித்து கொண்டவள் “உங்களுக்கு நாட்டாமை வேலை பண்ணியே என் வாழ்க்கை முடிஞ்சுடும் போல”என்று முணுமுணுத்தவாறே மதுவிடம் “என்னடி ஆச்சு” என்று கேட்டாள்.
உடனே மது தன் கன்னத்தில் கைவைத்து கொண்டு ஒன்றும் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். அதில் கடுப்பான ப்ரீத்தி, “நல்லா கேளுடி நானும் காலைல இருந்து கேக்கறேன் முட்ட கண்ணை வச்சு முறைச்சு முறைச்சு பாக்குறா”என்றவள் மதுவிடம் திரும்பி “அடியே இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா” என்று கேட்க,

மதுவோ அதைவிட கடுப்பான குரலில் “சொல்றேன்டி சொல்றேன்…. என்னோட சொந்த கதை சோக கதைய சொல்றேன் காது குளிர கேளுங்க” என்றவள் திருமணத்தன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

திருமணத்தின் போதும் சரி, வரவேற்பின் போதும் சரி பிரபா கண்களாலேயே தன்னவளை ரசித்துக் கொண்டும் உரசி கொண்டும் இருந்தான்.இதனால் மதுவின் மனதில் பல கற்பனை கோட்டைகள் உருவாகின.மேலும் முதல் இரவின் போது அவளை தயார் செய்த நாத்தனார் முறையில் இருந்த பெண் வேறு அவளை கிண்டல் செய்து ஒரு வழி ஆக்கிவிட இவளோ அந்த பேச்சில் கண் முழி பிதுங்கி போனாள்.
இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டவள் தன் குருப்பிலேயே தனக்குத்தான் முதலில் திருமணம் நடந்திருக்கிறது என்று பெருமை கொண்டவளாக, இனி பொறுப்பாக இருக்க டிரை பண்ணனும் என்று முடிவெடுத்து கொண்டாள்.பின் அவளது மாமியார் சாமி அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி சாமி கும்பிட சொல்லிய பிறகு பிரபா அறைக்கு செல்ல சொல்ல, அவளோ கொஞ்சம் பயந்துதான் போனாள்.

தன்னவனை முதன் முதலில் தனிமையில் சந்திக்கபோவதால் ஏற்படும் படபடப்புடனும் பல பல கனவுகளுடனும் பிரபாவின் அறையை திறந்து உள்ளே சென்றவள் அங்கு கண்ட காட்சியில் திகைத்து நின்றுவிட்டாள்.

ஆம், அறை முழுவதும் சுத்தமாக இருந்தது.படத்துல எல்லாம் பர்ஸ்ட் நைட் ரூம்ல பூ அலங்காரம் இருக்கும், பழம், ஸ்வீட் எல்லாம் வச்சிருப்பாங்க இங்க ஒன்னையும் காணோம்.ஒரு வேலை ரூம் மாறி வந்துட்டமோ” என்று நகத்தை கடித்துக் கொண்டு அவள் நிற்க, அங்கிருந்த மற்றொரு அறையில் இருந்து வந்தான் பிரபா.
சாதாரண ஷார்ட்ஸ் டி-ஷர்ட் சகிதம் வெளியில் வந்த பிரபாவை மது குழப்பத்துடன் பார்க்க அவள் அருகில் வந்தவன் “என்ன மது என்னாச்சு என்கிட்ட உனக்கு என்ன பயம், பயப்படாத கண்டிப்பா உன்னோட படிப்புக்கு நான் தடையா இருக்க மாட்டேன்”என்றான்.

அவன் பேச்சில் விழித்த மது “நான் எங்கடா பயந்தேன், சும்மா நிக்கறவளை போய் பயப்படாதான்னு சொல்றான். அப்புறம் எது……படிப்பா நான் படிக்கணும்னு இவன்கிட்ட எப்போ சொன்னேன் கொஞ்சம் ஜாலியா பிரண்டுங்க கூட இருக்கலாம்னுதான் நான் காலேஜே சேர்ந்தேன் இவன் என்னடானா படிக்க வைக்கறேன்னு சொல்றான் என்ன கொடுமை இது”என்று மனதில் புலம்பி கொண்டிருக்க,

பிரபாவோ “அந்த ரூம்லதான் உன்னோட லக்கேஜ் இருக்கு சாரீல இருக்கறது கம்பர்டபுள்ள இருக்காது போய் சேன்ஜ் பண்ணிக்கறதுனா பண்ணிக்கோ”என்று சொல்ல, அவளும் “ஹப்பாடா….. “என்ற உணர்வோடு சென்று உடை மாற்றி வந்தாள்.

வெளியே வந்தவள் அங்கு பெட்டில் அமர்ந்திருந்த பிரபாவை கண்டு மூச்சடைத்து போனாள்.ஆம், ஒன்றன் மீது ஒன்றாக புத்தகங்களை அடுக்கி வைத்து அதில் ஒன்றை எடுத்து புரட்டி கொண்டே அவளுக்காக காத்திருந்தான் அவள் கணவன்.

மது, “என்னடா இவன் இப்ப போயி புக்க வைச்சுட்டு உட்கார்ந்து இருக்கான்” என்று யோசித்தவாறு அவன் அருகில் சென்றாள்.அருகில் வந்து நிற்பவளை பார்த்து சிரித்தவன் “வா மதி உட்காரு, உனக்காகத்தான் இந்த புக்ஸ் எல்லாம் தேடி தேடி வாங்கினேன், நம்மோட மேரேஜ்க்கு நான் முதல் முதல்ல உனக்கு குடுக்கற கிப்ட் இந்த புக்ஸ்தான், உன்னோட பிரெண்ட்ஸ் சொன்னாங்க உனக்கு படிக்கறதுனா பிடிக்குமாமே அதான் வாங்கினேன். உனக்கு என்ன டவுட் இருந்தாலும் சொல்லு நான் அதை கிளியர் பண்றேன்” என்று அவன் ஆர்வமாக சொல்லி கொண்டிருக்க,

மதுவோ மனதிற்குள்ளேயே “எனக்கு படிக்க புடிக்கும்னு எந்த நாய் சொல்லுச்சுனு தெரிலயே, இவன் வேற இத்தனை புக் வாங்கி வச்சுருக்கான் படிக்காம விட மாட்டானோ அம்மா, அப்பாட்ட ஏமாத்துன மாதிரி ஏமாத்த முடியாதோ”என்று புலம்பி கொண்டு இருந்தாள்.
பிரபாவோ அவளின் முக பாவத்தில் குழம்பி“உன் முகமே ஏதோ சொல்லுதே என்ன அது ஹோ… . என்ன அரியர் வச்சிருக்கியா”என்று கிண்டலாக சிரித்து “பரவாயில்லை அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, காலேஜ் லைஃப்ல அரியர் இல்லைனாதான் தப்பு” என்று சொல்லி “எத்தனை” என்று கேட்டு அவள் பதிலுக்காக முகத்தை பார்த்திருந்தான்.

அவ்வளோ “எப்படி சொல்வது” என்று விழித்தவள் பின் “சொல்லாமல் விட மாட்டான் எப்படியும் இனிமே அரியர் பீஸ் கட்ட போறது அவன்தானே சொல்லுவோம்” என்று முடிவெடுத்தவளாக தலை குனிந்து இதழ் கடித்து கொண்டே கையை மேலே தூக்கியவள் ஒரு விரலை நீட்ட, அவள் கணவனோ ஒன்னுதானே பாத்து…….. என்று சொல்லும்போதே அடுத்த விரலையும் நீட்ட, யோசனையான முகத்துடன் ரெண்டா”என்றான் அதற்கும் அவள் மறுப்பாக தலையசைத்து பத்து விரல்களையும் நீட்ட, நெஞ்சில் கைவைத்தவன் “அடியே மொத்தம் தேர்டு இயர்வரைக்கும் இருக்கறதே பத்து பேப்பரோ பன்னெண்டு பேப்பரோதானே” என்றுவிட்டு “உன்னோட பிரண்டு அபிகிட்ட உன்னை 70 பர்ஸன்டேஜ் மார்க் வாங்க வைக்கறேன்னு சபதம் போட்டேன், அப்போவே கிண்டலா சிரிச்சா அதுக்கான காரணம் அப்போ புரியல இப்போ உன்னோட அரியர் லிஸ்ட்ட கேட்ட பிறகு நல்லா புரியுது, எப்படி இருந்தாலும் சரி நான் உன்னை 60 பர்சென்ட்டேஜ்க்கு மேல் எடுக்க வச்சே தீருவேன், போ போய் புக்கை எடுத்து வா” என்று சொல்ல அவளோ தொங்கிப் போன முகத்துடன் புக்கை எடுத்து வந்தாள்.

இருப்பதிலேயே கடினமான சப்ஜெக்டான கணக்கை முதலில் எடுத்தவன் அதில் இருக்கும் ப்ரப்ளேம் அனைத்தையும் ஈசியாக சால்வ் பண்ண சொல்லி கொடுக்க, அவளோ “பாவி மனுஷா பர்ஸ்ட் நைட்ல பண்ற வேலையாடா இது, என்ன கணக்கு பண்ணுவன்னு பார்த்தா என்னையவே கணக்கு போட வச்சிட்டியேடா பாவி உனக்கு எல்லாம் கபீம் குபாம்தான் பார்த்துக்கோ ”என்று தூக்க கலக்கத்தினோடே திட்டி கொண்டு, தூங்கி தூங்கி விழுந்து கொண்டிருந்தாள். அதில் கடுப்பானவன் அவள் தலையில் நங்கென்று கொட்ட, “ஆஆஆ…” என்று அலறியவள் கொட்டிய இடத்தை தேய்த்து கொண்டே அவனை பாவமாக பார்க்க, அந்த பார்வையில் என்ன உணர்ந்தானோ “சரி போதும் போய் தூங்கு நாளைக்கு காலையில அஞ்சு மணிக்கு எழுந்து படிக்கணும் என்ன “ என்று மிரட்டுவது போல் சொல்ல அவளும் இப்போதைக்கு விட்டால் போதும் என்ற எண்ணத்துடன் வேகமாக சரியென்று தலையாட்டிவள் போய் படுத்து கொண்டாள்.

அடுத்த ஒரு வாரம் மட்டும் விருந்து கோவில் என்று அழைத்து சென்றவன் இதோ இன்று வீட்டில் இருக்கும் அனைவரையும் சமாளித்து கல்லூரியில் கொண்டு வந்து விட்டு சென்றுவிட்டான்” என்று சோகம் நிறைந்த குரலில் சொல்ல இங்கு தோழிகள் நால்வரும் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

சூர்யா, பரவல்லையே ப்ரோவே சம் எல்லாம் சொல்லி குடுக்கறாரா செம்ம, இனி புரியல எழுதலனு சொல்ல முடியாது செல்லம்”என்க அவளை முறைத்தவள் “படிக்கறது எனக்கு புடிக்கும்னு எந்த நாய் அவருகிட்ட சொன்னுச்சு”என்று கேட்க, அவளை பார்த்து சிரித்த பூஜா “அந்த வரலாற்று சிறப்புமிக்க செயலை செஞ்சது நம்ம அபிதான்” என்றாள்.

அபி, “அது இல்லடி இனி நீ படிக்கறேங்கற பேர்ல ஜாலியா எங்ககூட ஃபிரியா சுத்தலாம்னு அப்படி சொன்னேன்” என்க, அவள் கூறுவதை கேட்டு மதுவின் முகம் போன போக்கை பார்த்து மற்றவர்களோ சிரித்து கொண்டிருந்தனர்.

மது, “ஏன்டி நானே படிக்க சொல்லிட்டாறேங்கற கவலைல இருக்கேன் நீங்க சிரிச்சுகிட்டே இருக்கீங்களா” என்று கேட்டு முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள அவளை சமாதானப்படுத்த சென்றனர் தோழிகள்.

அப்போது எதேச்சையாக திரும்பிய சூர்யா தூரத்தில் அர்ஜுன் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அபியிடம் “நீ இங்க பார்த்துக்கோ,எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அர்ஜுன் இருக்கும் இடத்தை நோக்கி சென்றாள். அவள் மனதிலோ மதுவின் திருமணத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் படம் போல் ஓடிக் கொண்டிருந்தது.

திருனேஷ் தன் பின்னால் நிற்பதை கண்டு முதலில் திகைத்த சூர்யா, அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்டு எரிச்சல் மேலிட எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல முனைய அவள் கையை பிடித்தவன் “எங்க போறீங்க பொண்டாட்டி, என்னை பிடிக்காம, லவ் பண்ணாமாதான் இப்படி ரசிச்சிருக்கீங்களா” என்று விஷம சிரிப்புடன் கேட்க, அதில் மேலும் கோபமானவள் அவன் கையை உதறிவிட்டு “ரொம்ப கனவு கானாத நான் அர்ஜுனை வெறுப்பேத்ததான் அப்படி பேசுனேன், வேற எந்த எண்ணமும் இல்லை, லூசு மாதிரி உளறாம போ போய் வேற வேலை இருந்தா பாரு, நல்லா நியாபகம் வச்சுக்கோ எனக்கு இந்த ரவுடி வேண்டாம்,.அதனால இன்னொரு டைம் பொண்டாட்டி போண்டா டினுட்டு வந்த கண்ணம் பழுத்துடும் ஜாக்கிரதை என்ன அன்னைக்கு வாங்குனத மறந்துட்டியா, போ போய் வேற பொண்ண பார்த்து செட்டில் ஆகற வழிய பாரு”என்றவள் அங்கிருந்து சென்றுவிட அவளையே பார்த்திருந்த திரு ஒரு முடிவுடன் அங்கிருந்து சென்றான்.அதன் பின் அவள் கண்ணில் அவன்படவே இல்லை.

அதை யோசித்து கொண்டே வந்தவள் அர்ஜுனின் எதிரில் அவனை முறைத்து கொண்டு நிற்க, அவனோ அவளை கண்டுகொள்ளாதவனாக மொபைலை நோண்டி கொண்டிருந்தான்.

சூர்யா, “அர்ஜுன் உனக்கு மனசுல என்ன மன்மதன்னு நினைப்போ, ஏன் பூஜாட்ட ஒரு வாரமா பேசல, ஏதோ போன போகுதேன்னு உனக்கு அவ வாழ்க்கை குடுத்தா ஓவரா போற, இப்போவே நீ போய் அவகிட்ட பேசற”.

அர்ஜுனும் திமிராக அவளிடம் “முடியாதுனா என்ன பண்ணுவ, அன்னைக்கு மண்டபத்துல உன் ஆளை ரசிக்க என்ன டேமேஜ் பண்ணுனல்ல, அவ வேற கூட சேர்ந்துட்டு ஆமாம் சாமி போட்டுட்டு இருந்தால்ல அதெல்லாம் பேச முடியாது போ”

சூர்யா, “டேய் ஓவரா போற அவன் என் ஆளுன்னு நான் சொன்னனா”என்றவள் அவன் அருகில் சென்று முடியை பிடித்து ஆட்ட, அவனும் அவள் முடியை பிடித்தவன் “பின்ன ஒரு பையனை ரசிச்சு வர்ணிச்சுட்டு இருந்தா அவன் உன் ஆள் இல்லாம வேற யாரு”என்று நண்பனின் காதலை அவளுக்கு புரிய வைக்க முயல அதை கண்டுகொள்ளாதவளோ “அர்ஜுன் வேண்டாம் தேவை இல்லாம பேசாத, அன்னைக்கு உன்னை வெறுப்பேத்ததான் அப்படி பேசுனேன்னு உனக்கே தெரியும், பூஜாவோட கேரக்ட்டர் என்னனும் உனக்கு தெரியும்.அப்புறம் எதுக்கு ஓவரா சீன் போடற, பாவம் அவ முகத்துல சிரிப்பே இல்ல, டல்லா சுத்திட்டு இருக்கா ஒழுங்கா போய் பேசு” என்று சொல்ல அவனும் முடியாது என்று சொல்ல இருவரும் அந்த இடத்திலேயே குடுமி பிடி சண்டை போட்டு கொண்டனர்.

சற்று நேரம் கடந்து அர்ஜுனின் கையை தட்டிவிட்ட சூர்யா “இப்போவே நீ போய் பேசற இல்லை,உன்ன விட வெள்ள பிகரா, உன்ன மாதிரி கஞ்சூஸ்ஸா இல்லாத ரிச் பிகரா பார்த்து பேசி அவளுக்கு கரெக்ட்பண்ணி விட்டுருவேன் பார்த்துக்கோ, வெளிய எதுக்கு போய் தேடணும் அதான் திருனேஷ் இருக்கானே அவனையே பூஜாவோட கோத்துவிட்டிருவேன், அவளுக்கு ஓகேவாதான் இருக்கும்.அப்புறம் நீதான் தாடி வச்சுட்டு தேவதாஸா சுத்தணும் யோசிச்சு முடிவெடு”என்று மிரட்டிவிட்டு சென்றவளின் இதழில் ஏனோ சிரிப்புதான் இருந்தது.

சூர்யா பேசியதை கேட்டு கொண்டிருந்த அர்ஜுனும் அவள் திரும்பியவுடன் சிரித்து கொண்டே “சரியான அராத்து”என்றான்.

சூர்யா அர்ஜூனுடன் பேசுவதை கவனித்த பூஜா அவள் அருகில் வந்தவுடன் “என் அஜூ பேபி என்னடி சொன்னான்”என்று கேட்க, அப்போது வேண்டுமென்றே முகத்தை சோகம் போல் வைத்து கொண்டவள் “அது ஒன்னும் இல்லடி பூஜா ரொம்ப நல்ல பொண்ணுங்க, ஏன் அவக்கூட பேச மாட்டிக்கிறீங்கன்னுதான்டி கேட்டேன், அதுக்கு போய் அவரு எவளோ பேசுறாரு, அவளா நல்ல பொண்ணு சரியான இம்சை, நானே எப்போடா அவளை கழட்டிவிடலாம்னு பார்த்துட்டு இருந்தேன் இப்போ அதுக்கான சான்ஸ் கிடைச்சுருக்கு அதை விடாம யூஸ் பண்ணிக்க போறேன், அவளை விட வெள்ள பிகரா, ரிச் கேர்ளா பார்த்து பேசி கரெக்ட் பண்ணி அவ முன்னாடியே வந்து நிக்கறேன் பாருன்னு……..சொன்னாரு” என்றவள் சொல்லி முடிக்கவும் அவள் பின் இருந்து “எது இதெல்லாம் நான் சொன்னேன்” என்ற அர்ஜுனின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

மாட்டி கொண்ட உணர்வில் முதலில் திருதிருவென விழித்தவள் அவனை பார்த்து அசட்டு சிரிப்பு சிரிக்க பூஜாவோ “அஜூ பேபி அப்படியா சொன்ன இனிமே யாரையும் நான் சைட் அடிக்க மாட்டேன் நல்ல பொண்ணா இருக்கேன்”என்றாள். அதை கேட்டு சூர்யா ஷாக்காக அவளை பார்க்க, அர்ஜுனோ ஆனந்தமாக பார்த்தான்.ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் கம்மி என்பது போல் மேலும் தன் பேச்சை தொடர்ந்தாள் பூஜா “தூரமா இருந்து பார்த்து சைட் அடிச்சாதானே தப்பு இனி நேர போய் பேசி பிரண்டு புடிச்சிடறேன் அப்போ சைட் அடிக்க தேவை இல்லாம போய் பேசிடுவன்ல” என்க அர்ஜுனோ “இதுக்கு நீ சைட்டே அடிக்கலாம்” என்று நினைத்து தலையில் கை வைத்து கொண்டான் என்றால் .சூர்யாவோ அவனை நக்கல் சிரிப்புடன் பார்த்துவிட்டு ப்ரீத்தியிடம் சென்றாள்.

அதன்பின் அர்ஜுன் பூஜா இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு ஒரு வாரம் பேசாமல் விட்டதை பேச ஆரம்பித்தனர்.

அங்கு சூர்யாவை அபி ஒரு மார்க்கமாக பார்த்து “நல்லா புரியுதுடி இப்போ நல்லா புரியுது” என்று சொல்ல, சூர்யா அவளை புரியாத பார்வை பார்த்தாள்.

அபி, “இல்ல நீ என்ன சொன்னாலும் நம்ப கூடாதுங்கறது நல்லா புரியுது”என்று சொல்ல மதுவும் ப்ரீத்தியும் கூட அவளுடன் ஹை பை அடித்து கொண்டனர்.அதில் கோபம் போல் நடித்த சூர்யா அவர்களை அடிக்க துரத்த அவர்களோ அவளுக்கு போக்கு காட்டி ஓடி கொண்டிருந்தனர்.இதை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த திரு “உனக்கு இருக்குடி ஒரு நாள். அமைதியாவே இருந்துக்கிட்டு எவளோ சேட்டை பண்ற”என்று முணகியவன் சிறிது நேரம் அவளின் சேட்டையை ரசித்துவிட்டே அங்கிருந்து சென்றான்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல ஆரம்பித்தது.திரு சூர்யாவின் கண்ணில் படாமல் போக, அவனை ஏன் எதற்கு என்றே தெரியாமல் தன்னையும் அறியாமல் பார்வையால் தேட ஆரம்பித்தாள் சூர்யா.இதை கவனித்த அபி அவளை கிண்டல் பண்ண அவளோ அதை காதில் வாங்காதது போல் திரும்பி கொள்வாள்.அவனை வேண்டாம் என்பவள் தன்னை சுற்றி வருபவனை கண்டு எரிச்சல் படுபவள் ஒரு நாள் அவனை பார்க்க முடியவில்லை என்றாலும் அவளுள் தோன்றும் அவனுக்கான தேடல் எதனால் என்பதை அவள் புரிந்து கொண்டிருக்கலாம் விதி யாரைவிட்டது.

ஒருவழியாக அர்ஜுன், திருனேஷ் இருவரின் படிப்பும் முடிந்தது.அதற்குள் ஜனா அவர்கள் காலேஜ் ஷேர் ஹோல்டர்ஸிடம் பேசி அவர் மகனை சேர் மேன் ஆக்க முயற்சிக்க நண்பர்கள் இருவரும் அவனின் நரி தந்திரத்தை உணர்ந்து அவனுக்கான ஸ்கெட்ச்சை ரெடி செய்தனர்.


இருவரின் அதிரடியை ஜனா எப்படி சமாளிக்க போகிறான் என்பதை அடுத்த எபில பார்க்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top