வண்ணங்களின் வசந்தம்-26

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_273271427733827.jpeg

அத்தியாயம்-26

ஆதியின் செயலில் விழிகள் தெறித்து விடும் அளவிற்கு அபி திகைத்து நின்று கொண்டு இருக்க,அப்போது அங்கு வந்து சேர்ந்தனர் தோழிகள் நால்வரும்.

அபி ப்ரீஸாகி நிற்பதை கண்ட பூஜா அவள் தோளை பிடித்து அசைத்து “என்னடி ஆச்சு, ஏன் இப்படி பேய் அடிச்ச மாதிரி இருக்க, அவரு உன்னை ரொம்ப திட்டிட்டாரா” என்று கேட்க, மற்றவர்களும் அதே கேள்வியை கண்ணில் தாங்கியவாறு அவளையே கவலையுடன் பார்த்திருந்தனர். பூஜாவின் கேள்வி புரியாதவளாக முதலில் விழித்த அபி பின் தோழிகளின் முகத்தில் இருந்த கவலையை கண்டு “இங்கு நடந்ததை எப்படி இவர்களிடம் சொல்வது”என்று தடுமாறியவாரே அவர்களை சமாளிக்கும்விதமாக “ஒன்றுமில்லை” என்றுவிட்டாள்.

ஆனாலும் எதையோ மறைக்கிறாள் என்று அவள் முகமே காட்டிக் கொடுக்க பூஜாவும் சூர்யாவும் யோசனையாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டவர்கள் “ஆர் யூ ஷ்யூர்” என்று சந்தேகமாகவே கேட்க,அபியும் மையமாக தலை ஆட்டி வைத்தாள். அப்போது சரியாக பூஜாவின் தந்தை அவளை அழைக்க தோழிகளிடம் “இருங்கடி வரேன்”என்று சொல்லி சென்றாள்.

மது ப்ரீத்தியிடம் “ஹேய் இங்க எல்லாம் ஓல்ட்டிஷ்ஷா இருக்காங்க வாடி அந்த பக்கம் போய் சைட் அடிச்சுட்டு அப்படியே ஐஸ் கிரீம் சாப்பிட்டு வரலாம்”என்று சொல்ல, அபியோ “எது ஐஸ் கிரீமா……” என்று அலறினாள். அவளை ஏற இறங்க பார்த்த ப்ரீத்தி “ஐஸ் கிரீம்னு சொன்ன உடனே கத்தறதை பாரு உனக்கும் எடுத்துட்டு வரேன், அமைதியா இங்கயே உட்கார்ந்து வேடிக்கை பாருங்க கும்பல்ல தொலைஞ்சு போய்டாதீங்க” என்று கெத்தாக சொல்ல. சூர்யா, அபி இருவரும் கடுப்பாகி “அடியே…..”என்று பல்லை கடிக்க, மதுவோ “விடு ஜூட்” என்று சொல்லி ப்ரீத்தியை இழுத்து கொண்டு ஓடிவிட்டாள். அவர்களின் செயலில் சிரித்த அபி “இவளுங்களை சமாளிக்கவே தனியா ஸ்ட்ரென்த் நமக்கு வேணும்”என்றாள்.

அபி சொல்வதை கேட்டு சூர்யா சிரித்தாலும், அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளின் பார்வையில் திணறியவள் “என்னடி எதுக்கு இப்படி பாக்குற” என்க.

சூர்யா, “இப்பயாவது உண்மைய சொல்லு, உன் பார்வையே சரி இல்லையே, என்ன நடந்துச்சு மறைக்காம சொல்லு” என்று கேட்க, அபி சிறிது நேரம் சொல்வோமா வேண்டாமா என்று யோசித்தவள் பின் ஒரு முடிவெடுத்தவளாக சற்று முன்பு நடந்த அனைத்தையும் சொல்ல, வாயில் கை வைத்தவள்“அடப்பாவிகளா சைக்கிள் கேப்ல பிளைட்டே விட்டுருக்கீங்களே”

அபி, “நான் ஒன்னும் பண்ணல அவருதான்.. “என்று தடுமாறியவள் “உங்க எல்லாரையும் சமாளிச்சுட்டேன்னு நினைச்சேன் ஆனா நீ எப்படிடி கண்டுபிடிச்ச”.

சூர்யா, “அதுவா அன்னைக்கு மால்ல நான் முழிச்சுட்டு இருந்த மாதிரியே நீ முழிச்ச அதான்……..”என்று கூறியவள், பின்பே உளறியதை அறிந்து நாக்கை கடித்தவாறு அபியை பார்க்க அவளோ இடுப்பில் கை வைத்து உக்கிரமாக முறைத்து கொண்டிருந்தாள். “ஈஈஈ…….” என்று இளித்து வைத்தவள் “வாடி போலாம் அங்க பாரு பூஜா கூப்பிடறா”என்று சொல்லி செல்ல முனைய அவள் கையை பிடித்து தடுத்த அபி தீர்க்கமாக பார்த்து “என்ன நீ முழிச்ச மாதிரி….. உண்மையை சொல்லு” என்று கேட்க,அகப்பட்டு கொண்ட முகபாவத்துடன் நின்றிருந்தவள் அபியின் பார்வையிலேயே தான் சொல்லாமல் விடமாட்டாள் என்பதை புரிந்து கொண்டு மால் சென்ற அன்று திருனேஷ் தன்னிடம் நடந்துகொண்டதை கூறியவள் பின் “அந்த கோபத்தில் வரும்போதுதான் அந்த மைதா மாவை..”என்று இழுத்தவள் அபியின் முறைப்பை கண்டு உன் ஆளை திட்டிட்டேன்” என்றாள் பாவமான முகத்துடன்.

உடனே வாயில் கைவைத்த அபி “அடிப்பாவி இவ்ளோ நாள் இதை மறைச்சுட்டியே ஊமை குசும்பி, நான் உன்னை நம்ப மாட்டேன்னு சொன்னதுக்கு காரணம் இப்போ புரிஞ்சுதா”என்க, உடனே அவள் பேச்சை தடுத்த சூர்யா “என்னடி பேசுற அந்த லூசு பண்ணுனதுக்கு நான் என்ன பண்ண முடியும்.என்ன பத்தி உனக்கு தெரியாதா, அதுக்கு அப்புறம் அவன்கிட்ட இருந்து நான் விலகித்தான் இருக்கேன்.வேற எதுவும் இல்லை” என்று சொல்ல அவளை மேலும் கீழும் கேவலமாக பார்த்த அபி “நம்பமாட்டேன்டி நம்பவே மாட்டேன் நீ என்ன சொன்னாலும் உன்னை நம்ப மாட்டேன்”என்று சொல்ல,இதற்கு மேல் உன் விருப்பம் என்பது போல் தோள்களை அசைத்தவள் “சரி இப்பவாவது வா பூஜாட்ட போகலாம்” என்று சொல்லி செல்ல அப்போது ப்ரீத்தியும் மதுவும் ஐஸ் கிரீமுடன் இணைந்து கொண்டனர்.
அதன் பிறகு அனைவரும் இணைந்து பூஜாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவிட்டு, வழக்கம் போல் கல்லூரிக்கும் செல்ல ஆரம்பித்தனர்.
எப்போதும் போல் காதல் கலாட்டா என்று அவர்கள் அனைவருக்கும் கல்லூரி வாழ்க்கை சென்று கொண்டிருந்தாலும் அடுத்து வரவிருக்கும் மதுவின் திருமணத்திற்கான வேலைகளிலும் ஆர்ப்பாட்டமாக செயல்பட்டனர்.

தோழிகள் இங்கு மகிழ்ச்சியாக இருக்க இவர்களின் மகிழ்ச்சியை அழிக்கும் நோக்கத்துடன் ஒருவன் கூண்டு புலியாக நடந்து கொண்டிருந்தான் அது வேறு யாருமல்ல சூர்யாவிடம் காதலை சொல்கிறேன் பேர்வழி என்று அவளிடம் வம்பிழுத்து திருனேஷிடம் அடிவாங்கிய மாதேஷ்தான்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனா இரண்டே நாளில் தன் அல்லக்கைகளுடன் சேர்ந்து தன்னை அடித்த திருனேஷை எப்படி பழிவாங்குவது என்று திட்டமிட்டு கொண்டிருந்தான்.”அவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் மேல கை வச்சிருப்பான் அவனை ஏதாவது பண்ணனும் டா, என்ன ரெண்டு மாசம் ஹாஸ்பிடல்ல படுத்த படுக்கையா இருக்க வச்சு வலில எப்படி கத்த வச்சானோ அதைவிட அதிகமா அவன் துடிக்கணும். அதுக்கு முதல்ல அவள தூக்கணும் அன்னைக்கு கூட அவ மேல கை வைப்பியான்னு சொல்லி சொல்லி அடிச்சான்.அவளை எதாவது பண்ணினோம்னா கண்டிப்பா அந்த வலி அவன் வாழ்க்கை முழுக்க இருக்கும்” என்றவன் அவளை கடத்துவதற்கான திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான்.

இங்கு ஆதி அபியிடம் பேச பலமுறை முயற்சி செய்ய, அவளோ அவனை கண்டு கொள்வதாக இல்லை.போன் போட்டாலும் அட்டென் பண்ணாமல் கட் பண்ணிவிடவும் கோபம் கொண்டவன் காரை எடுத்துக்கொண்டு அவர்கள் கல்லூரிக்கே வந்துவிட்டான். அங்கிருந்தவாறே மீண்டும் அபியை போனில் அழைத்தான்.அபியோ அப்போதுதான் பாட வேலை முடிந்து ஆசிரியர் சென்றிருந்ததால் தூக்ககலக்கத்தில் இருந்தவள் போன் வரவும் யார் என்று கூட பார்க்காமல் ஆன் செய்து காதில் வைத்தாள்.

“ஹலோ ……” என்று சிறு கொட்டாவியுடனேயே சொல்ல, ஆதியோ மனதில்“உன்னால நான் நிம்மதி இல்லாம சுத்திட்டு இருக்கேன் நீ கிளாஸ்ல உக்காந்துட்டு தூங்கறியா” என்று நினைத்தவன் வெளியில் அழுத்தமான கோபம் நிறைந்த குரலில் “இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீ காலேஜுக்கு வெளிய வர” என்றுவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் துண்டித்துவிட்டான்.அவன் குரலை கேட்ட மறுநிமிடமே தூக்கம் கண்ணைவிட்டு ஓடிவிட அடுத்தடுத்து அவன் சொன்னதை கேட்டு அபி திகைத்துதான் போனாள்.

ஆதி காதலை சொல்லி இருந்தாலும் இருவருக்கும் இடையில் இருக்கும் உயரத்தை எண்ணி விலகி இருக்க வேண்டும் என்று காலை அட்டென்ட் பண்ணாமல் இருந்தாள் .ஆனால் இப்போது அவன் கல்லூரிக்கே வரவும் என்ன செய்வது என்று தடுமாறியவள்.இதை பேசி தான் சரி செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவளாக சூர்யாவிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

கல்லூரியின் வெளியே வந்தவள் தேட இடம் தராமல் அங்கேயே அருகில் இருந்த மரத்தின் கீழ் தன் காரை நிறுத்திவிட்டு நீல நிற ஷர்ட்டும் கருப்பு நிற ஜீன்ஸ்ஷுடன் கண்ணில் கூலர்ஸ் அணிந்து காரின் பேனட்டில் ஒரு காலை வைத்து கொண்டும் தரையில் ஒரு காலை வைத்து கொண்டும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.

அவன் நிற்கும் அழகில் மயங்கிய அபி எப்போதும் போல் தூரத்தில் நின்றே சைட் அடித்துவிட்டு ஒரு பெரு மூச்சுடன் அவன் அருகில் போய் நின்றாள்.அவளை பார்த்தவன் “ஏறு…..”என்றுவிட்டு வேறு எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்துவிட்டான்.

ஆதி காரை ஸ்டார்ட் செய்யவும் திகைத்த அபி “என்ன இவர்பாட்டுக்கு வான்றாரு, ஏறுன்றாரு இங்கயே பேசுவாருனு பார்த்தா எங்கயோ கூப்பிடறாரு இப்போ இவர்கூட போலாமா வேண்டாமா”என்றவள் யோசித்து கொண்டு இருக்க அதற்குள் ஆதி காரை ஸ்டார்ட் செய்துவிட்டான். ஆனாலும் அவள் ஏறாததை கண்டு கடுப்பானவன் காரை உறும விட அந்த சத்தத்திலும் அவன் முகத்தில் இருந்த கடுமையிலும் பயந்தவள் வேகமாக முன் கதவை திறந்து அமர்ந்து கொண்டாள்.தன் அருகில் அமர்ந்தவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் பீச்சை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.

கடற்கரை ஓரமாக வண்டியை நிறுத்தியவன் காரிலேயே அமர்ந்து கடலை வெறித்து பார்த்துகொண்டு இருந்தான். சற்று நேரம் அமைதியாக இருந்த அபி அவன் புறம் திரும்பி “இ …….இங்க பாருங்க ஆ………”ஆதி என்று சொல்ல வந்தவள் தன்னை சமாளித்து சார் என்று திருத்தி கொண்டு “ம்கூம்…… சார் நம்ம ரெண்டு பேருக்கும் லைப் ஸ்டைல் வேற வேற நமக்குள்ள கண்டிப்பா செட்……”என்று சொல்லவந்தவளின் இதழை சிறை செய்திருந்தான் ஆதி.

வெகுநேரம் நீடித்த இந்த இதழ் அணைப்பில் அபி மூச்சு விட தடுமாறவும் மனமே இல்லாமல் அவளிடம் இருந்து விலகியவன் கோபமாக “என்ன சரி வராது இல்ல என்ன சரிவராதுனு கேக்குறேன் உனக்கு என்னை புடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்”என்க,அவளோ எப்படி தெரியும் என்பது போல் கேள்வியாக அவனை பார்த்தாள்.

ஆதி,”பிடிக்காமையா அன்னைக்கு காலேஜ் பங்க்ஷன்ல, அப்புறம் பூஜா பர்த் டே பார்ட்டில இதோ இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டுக்கிட்ட இப்படி கேப் கிடைக்கும் போது எல்லாம் நின்னு சைட் அடிச்சுட்டு இருந்த” என்று கேட்டான். அவன் இதை எல்லாம் கவனித்திருக்கிறான் என்பதை அறிந்தவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்துதான் போனது.ஆனாலும் அவனை சமாளிக்கும் விதமாக சைட் அடிக்கறவங்கள எல்லாம் லவ் பண்ண முடியுமா நான் சும்மா.. …”என்று சொல்லும் போதே “இனஃப்”என்று சீரியவன்.

ஆதி, “என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது சும்மா ப்ரொபோஸ் பண்ற பொண்ணுங்கள எல்லாம் கிஸ் பண்ற ரோட் சைட் ரோமியோ மாதிரியா இருக்கு, உன்னை என்னோட வாழ்க்கைல ஒரு அங்கமா நினைக்கல உயிரா நினைக்கறேன்.அதே மாதிரி உன்னோட கண்ணுலையும் எனக்கான நேசத்தையும் பார்த்ததுனாலதான்கிஸ் பண்ணுனேன்.இதுக்கு மேல தேவை இல்லாம எதாவது பேசி என்னை கோபபடுத்தாத” என்க, அப்போதும் அபி “இல்ல நீங்க பெரிய பிஸ்னஸ் மேன்....”என்று இழுக்க, அவளை முறைத்தவன் பிஸ்னஸ் பண்றவங்கனா அவங்களுக்கு காதல் வர கூடாதா, நாங்களும் சாதாரண மனுஷங்கதான் ஏன் எனக்கு தனியா தலைல ரெண்டு கொம்பு இருக்கு” என்றவன் மேலும் அவள் கண்கள் காட்டும் பாவனையில் மயங்கியவனாக இந்த கண்ணுல எப்பவும் எனக்கான காதல் பார்வையை மட்டும்தான் நான் பார்க்கணும், தயக்கத்தோட தடுமாறுற இந்த பார்வை எனக்கு பிடிக்கல, எதுக்கு உனக்கு இந்த தயக்கம் பணத்தைவிட குணம்தான் முக்கியம்னு நினைக்கற பேமிலி நாங்க அதனால கண்டதையும் யோசிக்காம எனக்கு ஓகே சொல்லு, உன்னோட தைரியம், எது வந்தாலும் பார்த்துக்கலாம்ங்கற உன்னோட தெளிவு இது எல்லாம்தான் உன்கிட்ட பிடிச்சது இப்படி பயந்துட்டு இருக்கறது இல்லை என்றான்.

ஆதியின் பேச்சில் முகம் தெளிவுற சிரித்த அபியை பார்த்தவன் “ஹப்பாடா…. சிரிச்சுட்டியா, என்னடா இப்படி இருக்காளே, டீன் ஏஜ் பசங்க மாதிரி பின்னாடி சுத்தவிடுருவியோனு நினைச்சேன்” என்றான் மனதில் தோன்றிய மகிழ்ச்சியோடு.

அபியோ கூலாக “நான் இன்னும் ஓகே சொல்லவே இல்லையே, நீங்க ஒரு இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணனும் அதுல பாஸ் ஆகி செலக்ட் ஆனா மட்டும்தான், நான் ஓகே சொல்லுவேன்”என்று சிரித்தாள்.

ஆதி,“என்னது கம்பெனி எம் டிகே இன்டெர்வியூவா” என்று அலற அபியும் தோழிகளின் வழக்கம் என்றும் அர்ஜுன், திருனேஷ், பிரபா என்று அனைவருடனும் பேசியதை கூற, அதை கேட்டவன் “இந்த லிஸ்ட்ல இன்னொரு ஆள்கிட்ட நீங்க பேசல போலையே அப்போ அவரு மட்டும் என்ன பெரிய ஆளா” என்று கேட்க,அவளோ “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அவரை பார்த்த உடனே எங்களுக்கு புரிஞ்சுடுச்சு அவருதான் ப்ரீத்திட்ட மாட்ட போற பலிகடானு சோ அவரை ஒரு ஆளா நாங்க லிஸ்ட்ல சேர்க்கவே இல்ல” என்றாள்.

அவள் சொல்வதை கேட்டு சிரித்தவன் “ஹேய் அவரும் பெரிய பிஸ்னஸ் மேன்தான் அவங்க அப்பா ஐடி பீல்டு, இவரு பிரண்டு கூட சேர்ந்து ஹோட்டல் பிஸ்னஸ்பண்றாரு இப்படி இருக்கவர போய் டம்மி பீஸ் ஆக்கிட்டீங்களே என்றவன், பின் தன் காதலுக்கு சம்மதம் வாங்கிய மகிழ்ச்சியில் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தான்.

அங்கு காலேஜில் தனக்கு வர போகும் அதிர்ச்சியைப்பற்றி அறியாமல் என்ஜினீயரிங் பில்டிங்கிற்கு தனியாக சென்று கொண்டிருந்தாள் சூர்யா.அவள் பின்னோடு வந்த மாதேஷின் ஆட்களில் ஒருவன் அவள் மேல் கை வைக்க போக அதே நேரம் சரியாக அங்கு வந்து சேர்ந்த திருனேஷ் வாயை மூடி பின் பக்கமாக இழுத்து சென்று அவன் தலையை திருப்பி கழுத்தை உடைத்துவிட்டு வேகமாக அடுத்து நிற்பவனிடம் சென்றான் கீழே விழுந்தவனோ வலி தாங்க முடியாமல் அப்படியே மயங்கி போனான்.

என்ஜினீயரிங் பில்டிங் செல்லும் வழி முழுவதும் பெரிய பெரிய மரங்கள் இருக்க அதன் பின்னால் ஒவ்வொருவனையும் இழுத்து சென்ற திரு, சூர்யா பின்னோடு வருபவர்களை வாயை மூடி இழுத்து சென்று அடி வெளுத்துவிட்டான். பின்னால் ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள். அங்கு யாரும் இல்லாமல் போக “ஹய்யயோ இங்க பேய் ஏது இருக்குமோ ஏதோ சத்தம் கேட்டுட்டே இருக்கே”என்று மனதில் அலறியவள் வேகமாக செல்ல அவள் ஷால் அங்கிருந்த மரத்தில் மாட்டி இழுத்தது யாரோ இழுக்கிறார்கள் என்று பயந்தவள் தைரியத்தை வரவழைத்து கொண்டு திரும்ப அங்கு அவள் கண்ட காட்சியில் அதிர்ந்து அப்படியே சிலையாகி போனாள் ஏனென்றால் அங்கு திரு ஒருவனின் முகத்திலேயே ஓங்கி குத்த அவனது உதடு கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்திருந்தது. அப்போதும் அவனை விடாதவன் ஆக்ரோஷமாக மூக்கிலேயே குத்த ரத்தம் பொல பொலவென்று கொட்ட ஆரம்பித்தது திருவின் முகத்தில் இருந்த கோபத்தை கண்ட சூர்யா பயந்துதான் போனாள்.

எப்படி வந்தோம் என்றே தெரியாத நிலையில் அவள் கால்கள் எப்போதும் அவர்கள் உட்காரும் இடத்திற்கு அழைத்து செல்ல,அங்கு அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.மற்ற மூவருக்கும் வகுப்பு நேரம் முடிந்தும் பேராசிரியர் அவர்களை உட்கார வைத்து ரம்பம் போட்டு கொண்டு இருக்க, தனியாக இருந்த சூர்யாவினுள் பல குழப்பங்கள் உருவானது.

குழப்பத்தோடு இருந்தவளின் அருகில் நிழல் ஆடவும் யாரென்று சூர்யா திரும்ப, அங்கு அவளை பார்த்து வசீகரமாக சிரித்து கொண்டிருந்தான் திருனேஷ் .

திரு, “என்ன பொண்டாட்டி தனியா உட்கார்ந்து இருக்க ‘ஹோ….’எல்லாரும் அவங்கவங்க ஆள் கூட போய்ட்டாங்களா, நீ மட்டும் ஏன் தனியா இருக்க வா நாமளும் அப்படியே ஜாலியா பீச் போயிட்டு வரலாம்” என்க, சூர்யாவிற்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியது இருந்தாலும் அவனிடம் பேச விருப்பபடாதவள் “இங்கிருந்தால் இவன் உளறுவதை கேட்கணும் பேசாமல் கேன்டீனாவது செல்லலாம்” என்று முடிவெடுத்து செல்ல முனைய அவள் கையை பிடித்தவன் “எங்க போற உட்காரு பேசிட்டு இருக்கலாம்”என்று சொல்ல அவளோ அவனை முறைத்தாள், உடனே அவன் உன்னோட பிரண்டுங்க வர்ற வரைக்கும்தான்மா” என்றவனின் பார்வை அந்த கிரவுண்டையே சுற்றி வந்தது.

இனியும் சூர்யாவை தனியாகவிட்டாள் மாதேஷின் ஆட்கள் வந்துவிடுவர்களோ என்ற கவலையில்தான் அவன் அவளை அமர சொன்னது.அவனுடன் பேச விருப்பம் இல்லாதவள் அவன் பேச்சை காதில் வாங்காமல் செல்ல முனைய அவளுக்கு முன் வந்து நின்றவன் “என்ன மேடம் நான் சொன்ன பேச்சு கேக்கலைனா என்ன பனிஷ்மென்ட் குடுப்பேங்கறது மறந்து போச்சா வேணும்னா இப்போ நியாபகபடுத்தவா” என்றவன் அவளை நெருங்க அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த அவள் பொறுமை காற்றில் பறக்க அவனை ஓங்கி அறைந்து “நீ எல்லாம் மனுஷனாடா மிருகம், ராட்சஷன் அங்க ஒருத்தனை ரத்தம் வர அடிச்சுட்டு இங்க வந்து ரொமான்ஸ் பன்றியா உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா, இன்னொரு டைம் என் பின்னாடி வந்த எங்க அப்பாட்ட சொல்லி கை காலை உடைக்க சொல்லிடுவேன் பார்த்துக்கோ, உன்னை மாதிரி ஒரு ரவுடி என்னோட வாழ்க்கைக்கு வேண்டாம் நீ எனக்கு வேண்டாம்..வேண்டாம் வேண்டாம்……” என்று திட்டியவள் அவன் அதிர்ந்த முகத்தைகூட கண்டுகொள்ளாமல் பார்க்கிங் ஏரியாவை நோக்கி சென்றாள். ஆனாலும் அவள் மனதில் காரணமே இல்லாமல் பாரம் ஏறிய உணர்வு கூடவே எதற்காக யாருக்காக என்று தெரியாமல் கண்ணில் இருந்து கண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

சூர்யாவின் பேச்சில் அதிர்ந்து நின்றிருந்த திருவின் தோளை அர்ஜுன் தொட அப்போதுதான் சுய நினைவிற்கு வந்தவனின் கண்கள் கலங்கி இருந்தது.தன்னவள் முதன் முறை நீளமாக தன்னிடம் பேசியிருக்கிறாள் ஆனால் அந்த பேச்சும் தன்னை வேண்டாம் என்பற்காக என்று.

திருவின் மனதை உணர்ந்த அர்ஜுன் அவனை அணைத்து “பீல் பண்ணாதடா நான் அவகிட்ட பேசறேன்” என்று சொல்ல அதை தலையாட்டி மறுத்தவன் “நானே பாத்துக்கிறேன்” என்றான்.
அவனை கோபமாக முறைத்த அர்ஜுன்“என்ன பாத்துக்குவ இப்படியே அமைதியா நின்னுட்டு என்னத்த பாத்துப்ப, எவ்ளோ பெரிய ஆபத்தில் இருந்து அவளை காப்பாற்றி இருக்க அதை கூட புரிஞ்சுக்காம பேசிட்டு போறா நீயும் அப்படியே அமைதியா நிக்கற எப்படி எப்படா பேசுவ”என்றான்.

அவனை ஆழ்ந்து பார்த்த திரு சிபாரிசுனால காதல் வரக்கூடாதுடா. அவ மனசுல நான் இருக்கேன் அது எனக்கு நல்லாவே தெரியும் ஆனா அவளுக்குத்தான் தெரியல விடு பார்த்துக்கலாம் என்று உயிர்ப்பே இல்லாமல் சிரித்த நண்பனை பார்த்த அர்ஜுனுக்கு கவலையாக இருந்தது. இருந்தாலும் பேச்சை மாற்றும் விதமாக “சரி அவ கிட்ட பேசல ஆனா இவ்ளோ பெரிய பிரச்சனை நடந்து இருக்கு என்கிட்ட நீ சொல்லவே இல்லையே ஏன்? உன் காலேஜ் எனக்கு சம்பந்தம் இல்லைனு நினைக்கறியா’ என்று கேட்க,

திருவோ, “ச்ச… ச்ச….அப்படி எல்லாம் இல்லடா நம்ம படிப்பு இன்னும் ரெண்டு மாசத்துல முடிஞ்சுடும் நான் காலேஜ் டேக் ஓவர் பண்ணிட்டு அப்புறம் எல்லாத்தையும் சரி பண்ணலாம்னு பார்த்தேன், அந்த மாதேஷ்...” என்று பல்லை கடித்தவன் “அதுக்குள்ள அந்த பிளடி என் பொண்டாட்டி மேலயே கை வைக்க வந்துட்டான் இதுக்கு அப்புறமும் அமைதியா இருந்தா சரி வராது சீக்கிரமே இவனுக்கு ஒரு முடிவு கட்டணும், பல பொண்ணுங்க மேல கை வச்சுருக்கான் ஆனா அது பெரிய இஷ்ஷு ஆகாம அவனோட அப்பா காப்பாத்திட்டு இருந்தாரு,ஆனா அன்னைக்கு அவனை நான் அடிச்சதுத்துல கோபமான அவனோட அப்பா மத்த ஷேர் ஹோல்டர்ஸ்ட்ட பேசி அவன் மகனையே சேர் மேன் ஆக்க பாக்குறான்.

அவன் கைக்கு காலேஜ் போனா இங்க பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாதிரி ஆகிடும் இவ்வளவு நாள் அப்பா சேர்த்து வச்ச நல்ல பேரு எல்லாம் ஒன்னும் இல்லாம போய்டும்”என்க அதை கேட்ட அர்ஜுன் “தோள் கொடுப்பான் தோழன்னு சொல்லுவாங்க அதுக்கேத்த மாதிரி நான் இருக்கேன் உனக்கு இனி அப்பன் மகன் ரெண்டு பேரோட குடுமி நம்ம கைல, அவங்கள எப்படி டீல் பண்ணனும்னு ஸ்கெட்ச் போட்டறலாம் தட்றோம் துக்கறோம் கவலைபடாத” என்று சொல்ல அவனை பார்த்து சிரித்தவன் சரி உன் ஆள் வருது பாரு போ போய் அவங்க பிரண்டு கிளம்பிட்டானு சொல்லு சும்மா வெயிட் பண்ணிட்டு இருக்க போறாங்க” என்றவன் தன் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்

அர்ஜுன், திருனேஷ் இருவரின் அதிரடியை மாதேஷ் ஜனகராஜ் இருவரும் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை அடுத்த எபில பார்க்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top