Sahi
Well-Known Member
தேவையானபொருட்கள்:
முட்டைக்கோசு - 1/4 கிலோ
கடலைப் பருப்பு - 1/2 கப்/50 g
சோம்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லி இலை - சிறிதளவு
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - பொறிக்க தேவையானளவு
செய்முறை:
கடலைப் பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து வைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சோம்பு தாளிக்கவும். அது பொரிந்ததும் மிளகாய் சேர்த்து வதக்கவும். மிளகாய் சிறிது நிறம் மாறியதும் வெட்டி வைத்த வெங்காயம், பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்பு கடலைப் பருப்பு மற்றும் பொடியாக நறுக்கிய முட்டைக்கோசு சேர்த்து தண்ணீர் வத்தும் வரை கிளறவும். கிளறிய கலவையை சூடு ஆறியதும் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து மிக்ஸில் நீர் விடாமல் மைய அரைத்து எடுத்து கொத்தமல்லி சேர்த்து கட்லெட் வடிவத்தில் செய்து பிரட் தூளில் பிரட்டி வைக்கவும். ஒரு தவாவில் எண்ணெய் விட்டு கட்லெட்டை இரு பக்கமும் பொன்னிறம் வரும் வரையில் பொரித்து எடுக்கவும்.
சுவையான சூப்பரான கேப்பேஜ் கட்லெட் ரெடி.
குறிப்பு:
அரைத்த கலவை நீர்த்து இருந்தால் தேவையான அளவு சோளமாவு சேர்க்கவும்.