Sahi
Well-Known Member
தேவையானபொருட்கள்:
முட்டைக்கோசு - 1/2 கிலோ
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
தயிர் - 5 டேபிள் ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் - 1/4 மூடி
மிளகு – 1( 1/2) டீ ஸ்பூன்
சீரகம் – 1 (1/2) டீ ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் (தேங்காய் எண்ணெய்)
செய்முறை:
முட்டைக்கோசை பொடியாக நறுக்கி கழுவிக்கொள்ளவும். அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், தேவையான அளவு உப்பு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 7 விசில் விட்டு இறக்கவும். வேகவைத்த கலவை நன்றாக குழைந்து இருக்கவேண்டும்.
மேலேக்குறிப்பிட்டுள்ள தேங்காய், மிளகு, சீரகத்தை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்.
இக்கலவையை வேகவைத்த கோசுடன் சேர்த்து தேங்காய் பச்சை வாசனை (10-12 நிமிடம்)போகும்வரை கொதிக்கவிடவும்.
பின்பு தயிர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து கடுகு தாளித்து இறக்கவும். இதில் பச்சை கறிவேப்பிலை தூவினால் சுவையான முட்டைக்கோசு அவியல் தயார்.
காரா குழம்பு சாதத்திற்கும், காரா அடைக்கும் தொட்டுக்கொள்ள அருமையான சைட் டிஷ்.
செய்துப்பார்த்துவிட்டு சொல்லுங்க எப்படி இருந்துச்சுன்னு.
நன்றி.