மாயவனின் அணங்கிவள் -30

Advertisement

Priyamehan

Well-Known Member
வேந்தன் அருவியை தூக்கிக் கொண்டு வேக வேகமாக ஓடி
ஐந்து நிமிடத்தில் வீட்டை அடைய...

வீட்டில் இருவர்கள் அனைவரும் அருவியை காணாமல் தேடிக் கொண்டிருந்தவர்கள் வேந்தன் அருவியை தூக்கிக் கொண்டு வரவும்... "என்னாச்சி என்னாச்சி?" என்று அனைவரும் பதறி விட்டனர்.

"ஒன்னுமில்ல காலையில இருந்து சாப்பிடலைல அதான் மயங்கிட்டா நான் இவளை அவளோட ரூமில விட்டுறேன்" என்று யார் பதிலையும் எதிர்பார்க்காமல் அவளது அறைக்கு தூக்கிச் சென்றான்.

பெற்ற மனம் பதறி வேந்தன் பின்னால் சென்றார் நிர்மலா

"அத்தை அவளுக்கு ரெஸ்ட் வேணும் அழுது எழுப்பி விட்டுராதீங்க" என்று சொல்லிக்கொண்டே படுக்கையில் படுக்க வைத்தான்.

நிர்மலா அருவியின் தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தவர்.

"எதுக்கு வேந்தா இந்த நேரத்துல அங்க வந்தா..நாங்க பேசாம இருந்ததுல மனசு உடைஞ்சி போய்ட்டாளா..?" என்று கண்ணீருடன் கேட்டார்.

"அவ என்கிட்ட தான் பேச வந்தா... வேற எதுவுமில்ல..."

"நான் பிள்ளையை கவனிக்காம விட்டுட்டேன்... என்னோட தப்புதான்" என்று தலையில் அடித்துக் கொண்டு அழ...

"அத்தை இப்போதானே சொன்னேன் கேக்க மாட்டிங்களா... வெளியப் போங்க" என்று அதட்டவும் நிர்மலா எழுந்து வெளியே சென்று விட்டார்.

மகளை இப்படி பார்க்க வேதனையாக இருந்தது. வெளியில் அமர்ந்திருந்தவளை அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார் இருந்தும் எப்படியோ அருவி வீட்டை விட்டு சென்று விட.. வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல..

இனியன் கார்த்திக் இருவரும் வீடு முழுவதும் தேடினர்.... கிருபாகரனும் தினகரனும் வீட்டிற்கு வெளியே தேடினர். பெண்கள் கையை பிசைந்தவாறு வழியையே விழி வைத்துப் பார்க்க.. வயதான காலத்தைல் சேனாதிபதிக் கூட மாடி படிகள் ஏறி மொட்டை மாடி முழுவதும் தேடிப்பார்த்தார்.

வீட்டில் இருப்பவர்களுக்கு அருவி பேசியதில் கோவமும் வருத்தமும் இருந்தாலும் அதைவிட அவள் மேல் பாசமும், அன்பும் அதிகம் இருந்தது. பேசாமல் பிள்ளை கண் முன் இருந்தால் பெரிதாக தெரியாது... பிள்ளையை காணவில்லை என்றதும் அனைவரும் துடித்து விட்டனர்.

வேலை விசயமாக மதியம் தான் நிரூபன் சென்னை கிளம்பி இருந்தான்.வர இரண்டு நாட்கள் ஆகும் இப்போது அவனிடம் இதை சொன்னால் வண்டியில் போய்க் கொண்டிருப்பவனும் பதறுவான் என்று அவனிடம் யாரும் சொல்லவில்லை.

மாறி மாறி அருவியின் எண்ணிற்கு அழைத்துப் பார்க்க... அவளோ வேந்தனுடன் பேச சென்ற ஆர்வத்தில் அலைபேசியின் சத்ததை உயிரிலக்க செய்திருந்தாள்.

வேந்தனுக்கு அழைத்து விசயத்தை சொல்ல முயற்சி பண்ண அவன் எடுக்கவில்லை அதன் பின் தினகரன் மாறனுக்கு அழைத்து வேந்தனிடம் போன் கொடுக்க சொன்னார்.

அவனோ "அருவி அம்மிணியோட ஐயா பேசிட்டு இருக்காங்க... இப்போவே கொண்டுபோய் கொடுக்கட்டுமா?" என்று கேள்விக் கேட்டான்.

"அருவி அங்க தான் இருக்காளா?"

"ஆமா அம்மிணி இப்போதான் ஐயாவைப் பார்க்க வந்தாங்க... ரெண்டுபேரும் பேசிட்டு இருக்காங்க நான் தள்ளி உக்கார்ந்துருக்கேன்"

"சரி அவ பேசிட்டு வரட்டும் உன் தொந்தரவு பண்ண வேண்டாம்" என்று விட்டார் தினகரன் .அவன் சொன்னதையும் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி அனைவரையும் சமாதானம் செய்து வைக்க இருவருக்காகவும் வீடே காத்திருக்க ஆரம்பித்தது.

ரித்துவும் தேவாவும் தூக்கம் வருகிறது என்று அறைக்குச் சென்று விட்டனர்.

இப்படியே வீடே இருவருக்காகவும் காத்திருக்க அருவியை கையில் தூக்கி வந்ததும் அனைவரும் பதறி விட்டனர்.

கதவு பாதி திறந்த வாக்கில் இருக்க...யாரும் இவர்களை தொந்தரவு செய்யவில்லை.

வேந்தன் அருவியையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மதி முகத்தில் தான் தன்னை தொலைத்தான் வேந்தன்... வில்லாக வளைந்த புருவங்கள் இரண்டும் அவனை சண்டைக்கு அழைப்பது போல் இருக்க... தூங்குபவர்களை ரசிக்கக் கூடாது என்று முகத்தை திருப்ப நினைக்க..

திடீரென்று கண் முழித்த அருவி வேந்தனைப் பார்த்து கண் சிமிட்டவும் ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது வேந்தனுக்கு...

"என்ன மாமா சைட் அடிக்கிறிங்களா?" என்று எழுந்து அமர்ந்தவள்... அவன் பதில் சொல்ல வருவதற்குள் "பரவலா உங்களுக்கும் என் மேல லைட்டா பாசம் இருக்குது" என்று புன்னகைத்தாள்.

அவள் சொன்ன விதத்திலையே கண்டுக் கொண்டவன் "மயக்கம் போட்ட மாதிரி நடிச்சியா?" என்று இறுகிய குரலில் கேட்டான்.

"நடிச்சேன்னு சொல்ல முடியாது... அவன் முடியை இழுத்து கீழே தள்ளுனதும் அதிர்ச்சியில மயங்கிட்டேன், அப்புறம் நீங்க கன்னத்தை தட்டும் போதே எழுந்துட்டேன்... ஆனா நீங்க தேன்னு தேன்னு தேனா பாடுனதும் சரி என்ன தான் பண்றீங்கன்னு பார்க்க மயக்கத்துல இருக்கற மாதிரியே நடிச்சிட்டேன்...ஹீஹீ" என்று சிரிக்க... அவள் புன்னகை அவனிடமும் தொற்றிக் கொண்டது.

"நீ சாப்பிடாம தான் மயக்கம் போட்டேன்னு எல்லோர்கிட்டையும் சொல்லிருக்கேன்"

"விடுங்க நானும் அதையே மெயின்டைன் பண்ணிக்கிறேன்" என்றவள் "உங்களுக்கு பசிக்கல" என்று அக்கறையாக கேட்டாள்.

"உனக்கு படிக்குதுனா போய் சாப்பிட வேண்டியது தானே.."

"கண்டுபுடிச்சிட்டான்... எமகாதாகன் இவன் கிட்ட எப்போமே உஷாரா இருக்கணும்" என்று நினைத்தவள்.. "நீங்களும் வாங்களேன் ரெண்டுபேரும் சேர்ந்தே சாப்பிடுவோம்..."என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அழைக்க...

"ம்ம்ம்.." என்றான் வேந்தன்.

"பரவலா இந்த ம்ம்ம் கொஞ்சம் பெருசா வந்துடிச்சி" என்று படுக்கையில் இருந்து எழுந்தவள்... கதவின் அருகே செல்ல...

"அவன் முடியை பிடிச்சது வலிக்குதா?" என்று அக்கறையா கேட்டான்.

"ஆமா மாமா... படுபாவி நானே கார்த்திகா, மீரான்னு உரம் போட்டு முடியை வளர்த்து வெச்சிருக்கேன் அசாட்டா ஒரு கொத்து முடியை ஒரு கையில பிடுங்கி எறிஞ்சிட்டான்... அவன் மட்டும் கையில கிடைக்கட்டும் ஒவ்வொரு முடியா உக்காந்து புடுங்கி எறியறேன்" என்று சொல்ல...

நீண்ட நாட்களுக்கு பின் இப்போது தான் பழைய அருவியை பார்ப்பது போல் இருந்தது.

மனதில் இருந்த பாரத்தை வேந்தனின் மனதில் ஏற்றி விட்டு இவள் மனம் லேசாகி விட்டது.

இருவரும் வெளியே வர... வேந்தனுக்காக காத்திருந்த மொத்த குடும்பமும் அருவியும் வரவும்...

"என்னாச்சி அரு...?இப்போ பரவலையா ஹாஸ்பிடல் போலாமா...?இல்ல டாக்டரை இங்க வர சொல்லலாம், இதுக்கு தான் நேரத்துக்கு சாப்பிடுன்னு சொல்றது கேக்கறீயா?" என்று ஆள் ஆளுக்கு ஒன்றை சொல்ல... ஏனோ இன்று இவர்கள் காட்டும் அக்கறையிலும் அன்பிலும் அருவிக்கு குறைகள் எதுவும் தெரியவில்லை.அதற்கு மாறாக மனம் நிறைவாக இருந்தது.

நிர்மலாவின் கண்கள் கலங்கி விட்டது.. மகளுக்கு ஒன்று என்றால் மொத்த குடும்பமும் கவலைப்பட்டு அவளுக்காக பார்த்து பார்த்து செய்வதைப் பார்த்து அவரும் இதை தான் எதிர்பார்த்தார்... குடும்பம் என்றால் சண்டை வராமல் இருப்பதில்லை... சண்டை வந்தாலும் அதையும் தாண்டி வெளிப்படும் அன்பு தன் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும்... அது தனியாக இருந்தால் கிடைக்காது என்று தான் அண்ணன்கள் அழைத்ததும் இங்கு வந்து விட்டார்.

உறவுகள் எவ்வளவு முக்கியம் என்று வாழ்க்கை பாடம் கற்றுக்கொடுத்திருந்தது நிர்மலாவிற்கு. அவரைப் பொறுத்தவரையும் சொத்து சுகம் வேண்டுமா அண்ணன்ங்கள் வேண்டுமா என்றால் ஒரு நொடிக் கூட தாமதிக்காமல் அண்ணன்கள் தான் என்று சொல்லும் குணம் படைத்தவர்...அந்த அளவிற்கு உறவுகளை மதித்தார் நிர்மலா...

வீட்டில் ஒன்று இப்படி இருந்தால் மற்றொன்று அதற்கு எதிராக இருக்கும் என்பது விதியோ என்னவோ நிர்மலா உறவுகள் வேண்டும் என்று நினைத்தால் ஷர்மிளா பணம் தான் வேண்டும். என்று நினைப்பார் அந்த மாதிரி ஒரு குணம் ஷர்மிளாவிற்கு.

அருவி அனைவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க..

"அப்புறமா கேள்வி கேளுங்க இப்போ பிள்ளையை சாப்பிட சொல்லுங்க" என்று பாட்டி அதட்டவும்

மாலதி அருவிக்கு தட்டு வைத்தாள்.

"என்ன அத்தை எனக்கு மட்டும் தட்டு வைக்கறீங்க..? மாமாவுக்கும் வைங்க அவரும் காலையில சாப்பிட்டது தானே" என்று முதல் முறையாக வேந்தனுக்காக அருவிப் பேச... அனைவரும் வாயை பிளந்தனர்..

" காலையில இவ பேசுன பேச்சி என்ன? இப்போ பேசற பேச்சி என்ன? " என்று இனியன் கார்த்திக்கின் காதை கடிக்க...

"இதுக்கு தாண்டா சொல்றாங்க பொண்ணுங்களையே நம்பக்கூடாதுன்னு... இவளை பார்த்து புரிஞ்சிக்கணும்" என்றான் கார்த்திக்..

"அக்கா நான் காலையில்லையே சொன்னேன்ல அவங்க இப்போ சண்டைப் போட்டுப்பாங்க அப்புறம் சேர்ந்துப்பாங்கன்னு ... சின்ன பசங்க சண்டைக்கு இடையில நம்ப போனா நம்ப மூக்கு தான் உடையும்.. எனக்கு தெரிஞ்சி உனக்கு பெரிய மருமக அரு தான்... நல்லா பேசி கைக்குள்ள போட்டு வெச்சிக்கோ... இல்லனா நாளைக்கு நம்பலையே வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவா" என்று அமுதா விளையாட்டாக சொல்லி சிரிக்க

மாலதிக்கு அதில் ஏக சந்தோசம் தான்... அருவி மட்டும் மருமகளாக வந்துவிட்டால் போதும்... இந்த வீட்டின் கலகலப்பு என்று குறையாது தன் கணவரின் ஆசையும் நிறைவேறி விடும் என்று நினைக்க...

நிர்மலா வேந்தனுக்கு தட்டை வைத்தார்.

"எனக்கு பசிக்கல அத்தை... ஒரு டம்ளார் பால் போதும்" என்று அங்கிருந்த நார்காலியில் அமர்ந்தவன் "அவ தான் நல்லா இருக்காள்ல இன்னும் எதுக்கு எல்லோரும் இங்கையே நின்னுட்டு இருக்கீங்க போய் படுங்க.. மணி இப்போவே 11 ஆகுது" என்று அனைவரும் அனுப்பி விட்டான்.

நிர்மலா பரிமாற இருக்கிறேன் என்று சொல்ல "வேண்டா அத்தை அவளுக்கு தேவையானதை போட்டுப்பா நீங்க போய் தூங்குங்க நாளைக்கு காலையில பண்ணைக்கு வேற போவீங்க நிரு வேற வீட்டுல இல்லை எவ்வளவு வேலை தான் நீங்க பார்ப்பீங்க" என்று அவரையும் வற்புறுத்தி அனுப்பி வைத்துவிட்டான்.

"காலையில சாப்பிட்டது பசிக்கலையா..?. நான் பேசுனதை இன்னுமா மனசுல வெச்சிட்டு இருக்கீங்க... சாப்பிடலாம்ல" என்று கண்களால் கெஞ்சினாள் அருவி.

"ம்ம் சாப்பிடறேன்.. நீ முதல சாப்பிடு" என்றவன் அவளுக்கு இரண்டு இட்லியை வைக்க..

"ஐயோ நானே வெச்சிப்பேன் விடுங்க..." என்று பதறினாள்... இதுவரை வேந்தன் இது மாதிரியெல்லாம் செய்ய மாட்டான்... அவனுக்கு வைக்கவே இரண்டுப் பேர் வேண்டும்... சாப்பிடுபவன் எழுந்து சென்று விடுவான் யாருக்காவது ஏதாவது தேவையா வைக்கணுமா எடுக்கணுமா கொடுக்கணுமா என்று எதையும் கவனித்ததில்லை... ஆனால் அனைவரும் சாப்பிட்டார்களா என்று மட்டும் கேட்டு தெரிந்துக் கொள்வான்.

"ஏன் நான் வைக்கக் கூடாதா...?" என்று கார சட்டினியை அவள் தட்டில் ஊற்ற அவனை வினோதமாக பார்த்தாள்.

"என்ன...?"

"இல்ல அங்க தேங்கா சட்டினி சாம்பாரும் கூட தான் இருக்கு அதை விட்டுட்டு இதை மட்டும். வைக்கறிங்கன்னு பார்த்தேன்..."

"உனக்கு காரசட்டினி தானே புடிக்கும்" என்று சொல்ல

சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கு பொறை ஏறியது..

"ஏய் மெதுவா" என்றவன் தண்ணீரை அவள் பக்கம் நகர்த்தி வைத்தான்.

"எப்படி தெரியும்?" என்றாள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த குரலில்.

அதற்கு வேந்தன் பதில் சொல்லவில்லை... "லேட் நைட் ஆகுது சாப்பிட்டு அப்பிடியே போய் படுக்காத... கொஞ்சம் நேரம் நடந்துட்டு அப்புறம் படு இல்லனா ஜீரணம் ஆகாது" என்று பேச்சை மாற்றி விட்டான்.

"என்னது பேய் வாக்கிங் போற டைம்ல நான் வாக்கிங் போகணுமா...?எவ்வளவு மாறுனாலும் இதை விடவே மாட்டிங்களா மாமா...?" என்று சிணுங்க...

"அதுவும் நீயும் வேற வேற இல்லையே" என்று மெதுவாக சொன்னான் வேந்தன்

அவன் சொன்னதை கவனிக்காத அருவி "என்ன சொன்னிங்க?" என்று கேட்டவாறே கடைசி வாய் இட்லியை மென்று முழுங்கியவள் கைகழுவ எழப் போக..

என்ன சொன்னான் என்று அவனும் சொல்லவில்லை அருவியும் அதன்பின் கேக்கவில்லை.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top