மாயவனின் அணங்கிவள்-22

Advertisement

Priyamehan

Well-Known Member
வேந்தன் காரை நிறுத்த சொன்னதாக நிரு சொல்லவும்

"அவன்கிட்ட சொல்றேன்டா " என்ற கார்த்திக் அழைப்பில் இருக்கும் போதே "அண்ணா காரை நிறுத்த சொல்லறாங்க இனி"என்றதும் இனியனும் ஓரமாக காரை நிறுத்தினான்.

வேந்தன் காரும் அவர்களுக்கு பின் நிற்க... இரண்டு காரில் இருந்து அனைவரும் இறங்கினர்.

வேந்தன் வேகமாக அருவிடம் சென்றவன் "என்னடி நினைச்சிட்டு இருக்க...?விட்டா கார் மேல் ஏறி ஆடுவ போல... இப்படி பண்ணுனா அவன் காரை எப்படி ஒழுங்கா ஓட்டுவான் எங்கைவாது கொண்டுப் போய் சாத்தி எடுத்துடுவான்.... நீ சாகறதில்லாம என் தம்பிகளும் போய் சேர்ந்துடுவான்க...வர வர உனக்கு திமிரு அதிகமாக போயிடுச்சி" என்று அருவியைச் சத்தம் போட்டவன்...

"இனியா இவங்களை எல்லாம் உன் கார்ல ஏத்து... ஏய் நீ இந்த கார்ல ஏறுடி" என்றான் அதிகாரமாக அருவியிடம்..

"நான் எதுவும் பண்ணாம அமைதியா இந்த கார்லையே வரேன்" என்று எங்கோப் பார்த்துக் கொண்டு சொல்ல..

"நீ அமைதியா வர லட்சணத்தை தான் பார்த்தேனே..." என்று நக்கலாக சொல்ல

'இப்போ என்ன பண்ணிட்டேன்னு சத்தம் போடறீங்க... தலையை வெளிக்காட்ட தானே அந்த மாதிரி மாடல் பண்ணிருக்காங்க..." என்று குரலை உயர்த்தி கேக்கவும்

அருவியை ஆழ்ந்து பார்த்தவன் "அது ஏதாவது அவசரத் தேவைக்கு தான் யூஸ் பண்ணனும் ... இப்படி ஆட்டம் போட இல்லை..." என்று சாலையில் வைத்து சத்தம் போடவும்....

அருவிக்கு சுளீர் என்று கோவம் வந்துவிட்டது.. "இப்போ என்ன உங்க கார்ல ஒரு அடிமை மாதிரி நீங்க சொல்லறதை கேட்டுட்டு வரணும் அதானே வரேன் போதுமா?" என்று வேந்தனின் காரில் பின்பக்கம் ஏறிக் கொள்ள

தேவாவிற்கு வேந்தன் அருவியை திட்டியதை நினைத்து உள்ளுக்குள் பேரானந்தம் எழுந்தது .

"வேணும் இவளுக்கு என்ன ஆட்டம் ஆடுறா...?பாரின்ல இருந்து வந்த நானே அடக்கி வாசிக்கறேன் பட்டிக்காட்டுல இருக்க இவ இந்த ஆட்டம் ஆடுனா சும்மாவா விடுவார் வேந்தன் மாமா இதோ வெச்சாருல ஆப்பு" என்று நினைத்தப்படி இனியனின் காரில் ஏறிக் கொண்டாள்.

இனியனின் காரில் அனைவரும் ஏறிக் கொள்ள... இனியனும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

தலையில் அடித்துக் கொண்டான் கார்த்திக்.

இப்போது நிரு காரை எடுக்க அவன் அருகில் இனியன் அமர்ந்துக் கொள்ள அவர்களின் கார் கிளம்பியது.

வேந்தன் காரை எடுக்காமல் இருக்க... கண்ணாடி வழியாக பின்னால் அமர்ந்திருந்த அருவியை பார்த்தான்

அவன் பார்க்கிறான் என்று தெரிந்தும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய அலைபேசியை அலசிக்கொண்டிருந்தாள் அருவி.

"ஹ்க்கும்" என்று வேந்தன் கனைக்க...

அருவிக்கு அது கேக்காமல் இல்லை ...தேவாவின் முன் திட்டிவிட்டானே என்ற கோவத்தில் தலையைக் கூட நிமிர்த்திப் பார்க்கவில்லை அவள் .

"ஏய் உன்ன தாண்டி?"

.............

"தேன்னு... உன்ன தாண்டி கூப்பிடறேன் காது கேக்குதா? இல்லையா?"

வேந்தனின் தேன் என்ற அழைப்பில் விறுக்கென்று நிமிர்ந்தவள், "என்ன என்ன சொல்லி கூப்பிட்டீங்க...?"என்று அவசரமாகவும் அதிர்ச்சியாகவும் கேட்டாள்.

"மாணாங்கட்டி எழுந்து முன்னாடி வாடி..."

"என்னது...!!!" என்று இந்த முறை முன்னால் வந்து அமர சொன்ன அதிர்ச்சியில் கேக்க...

வேந்தன் இன்று அருவி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கொடுத்தான்.

"இப்போ வரியா இல்ல பின்னால வந்து தூக்கிட்டு வரவா...?" என்று மிரட்டிவிட்டு "வெரசா வந்து தொலை..." என்று கத்த

அதிர்ச்சியில் இருந்த அருவி அவளாகவே முன்னால் வந்து அமர்ந்தாள்.

அவளின் அதிர்ச்சியான முகத்தைப் பார்த்ததும் தான், "கொஞ்சம் ஓவராக தான் போகிறோமோ" என்று தோன்ற அமைதியாக வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

"என்னால உங்களை புரிச்சிக்கவே முடியல ..." என்றாள் மெதுவாக

"இப்போ புரிஞ்சி என்ன கிழிக்க போறவ...?"

"எதுக்கு அப்போ திட்டுனீங்க... எப்போவுமே முன்னாடி உக்கார விட மாட்டீங்களே இன்னைக்கு என்ன...? என் பேரை என்ன சொல்லிக் கூப்பிட்டீங்க?" என்று அருவி வரிசையாக கேள்வியாக கேக்க..

"சப்பா.... கொஞ்சம் நேரம் வாயை மூடறியா?வண்டி ஓட்டட்டுமா உன் கேள்விக்கு பதில் சொல்லட்டுமா?" ...என்றான்.

எப்படி கேட்டாலும் வேந்தனிடம் இருந்து பதில் வராது என்று தெரிந்துக் கொண்டவள் அவனிடம் பேசி தன்னுடைய எனர்ஜியை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அமைதியாக வந்தாள்.

அருவியே அமைதியாக இருந்தாலும் வேந்தன் இருக்க விடமாட்டேன் என்று அடம்பிடிக்க "ஏண்டி வீட்டுக்கு வரல" என்று முதலில் இருந்து ஆரம்பித்து விட்டான்.

"இந்த கேள்விக்கு நேத்தே பதில் சொல்லிட்டேன்" என்றவள் ஜன்னல் கண்ணாடியைப் பார்த்து முகம் திருப்பிக் கொள்ளவும்... அவளது கேள்விக்களுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்பி விட்ட நிம்மதியுடன் காரை ஓட்டினான் வேந்தன்.

கார் வேந்தனின் கையில் இலவாக பறக்க...நேரமாக எழுந்து பழக்கமில்லாத அருவிக்கு தூக்கத்தில் கண்கள் சுழற்றியது...

தூங்கினால் அதற்கும் திட்டுவானோ என்று முடிந்தளவு தூங்காமல் இருக்க முயற்சி செய்தாள்.. மனம் தூங்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டியிருந்தாலும் உடல் கேக்காமல் போக... லேசாக கண்களை மூடினாள்...

முதலில் ஜன்னலின் மீது தலை சாய்த்தவள் ... நேரம் ஆக ஆக... வேந்தனின் தோள் மீது சாய ஆரம்பித்தாள்...

அவள் நன்றாக உறங்குகிறாள் என்பதைக் கண்டுக் கொண்டவன்... "தேன்னு... ஏய் எழுந்துரு.. மேலே மேலே விழுந்தா எப்படிடி கார் ஓட்டறது?" என்று அவஸ்தையாக சொன்னான்.

"மாமா.... கொஞ்சம் நேரம் ப்ளீஸ்" என்று தூக்கத்தில
லையே சிணுங்கவும் ஒரு நொடி காரை மெதுவாக்கி ஒரு இடத்தில் நிறுத்தியவன்...உறங்கும் அருவியின் முகத்தை பார்த்தான்..

காரில் தான் செல்லப் போகிறோம் என்று தலையைக் கூட ஒழுங்காக வாராமல் கலந்த முடி கன்னம் உரச அதை ஒதுக்க துடித்த கையை அடக்கிக் கொண்ட வேந்தன்

காரின் பின் இறுக்கையில் இருந்த தலையணையை எடுத்து அவளது தலைக்கு அணைவாக கொடுத்தவன் இறுக்கையை தளர்வு செய்து அருவி தூங்க வசதி செய்துக் கொடுத்தான்.

காரை எடுக்காமல் தூங்கும் அருவியையே ஐந்து நிமிடம் பார்த்தவன் நீண்ட நேரமாகியும் வேந்தனின் காரைக் காணாமல் இனியனிடம் இருந்து அழைப்பு வரவும் "ஆன் தி வே" என்ற மெசேஜை தட்டி விட்டு காரை எடுத்தான்.

என்று இல்லாமல் இன்று வேந்தனின் முகம் பளிச்சென்று இருந்தது.. அதை வைத்து தான் அவன் சந்தோசமாக இருக்கிறான் என்று புரிந்துக் கொள்ளலாம் மற்றப்படி மகிழ்ச்சியை ஆர்ப்பாட்டமாகவோ ஆரவாரமாகவோ காட்டும் ரகமில்லை வேந்தன்..

கை ஸ்டியரிங்கில் தாளம் போட்டவாரே ஓட்ட
மனம் லேசாக இருக்க பாடலை ஒலிக்க விட்டான்.வேந்தனின் கலக்சஷனில் என்றும் இளையராஜா பாடல்களும் எஸ்பிபி பாடல்களும் தான் இருக்கும்...

மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே

உள்ளதெல்லாம்
அள்ளித் தரவா வா வா
வஞ்சி என்றும் வள்ளல்
அல்லவா காதல் மல்லிகை
வண்டாட்டம் தான் போடு நீ கொண்டாட்டம் தான்...

பாடல் ஒலிக்க வேந்தன் தூங்கும் அருவியை திரும்பிப் பார்த்தான்...

தேனின் சுவை கன்னம் என்றதும் அருவின் கன்னத்திற்கு தான் பார்வை சென்றது... பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவனை எங்கோ இழுத்துச் செல்ல மனம் தறிக்கெட்டு ஓடியது...

மனதை ஒருநிலைப்படுத்த பாடலை அணைத்தவன்...மில்லிமீட்டர் அளவில் இதழ் விரிந்திருக்க இனியனின் காரைப் பிடிக்க தன் காரை வேகமாக செலுத்தினான்.

கேரளாவை நோக்கிய பயணம் அனைவருக்கும் மனதில் ஒரு இதத்தை கொடுத்திருந்தது என்று சொல்லலாம்.

வண்டி பாலக்காட்டினுள் நுழைய மெதுவாக கண் முழித்தாள் அருவி...

தூக்கக் கலக்கத்தில் "எங்க இருக்கோம்" என்று கேக்க..

அவளை திரும்பி முறைத்தவன்.. "சரியான கும்பகரணி ஒன்னு தூங்கு இல்லையா தின்னு..வண்டி ஓட்டிட்டு வரும் போது இப்படி தூங்கி வழிஞ்சா எவண்டி வண்டி ஓட்டுவான்?" என்று கடுகடுவென்று கேக்க..

நேராக எழுந்து அமர்ந்தவள் அவள் படுத்திருந்த விதத்தையும் தலைக்குக் கொடுத்திருந்த தலையணையையும் பார்த்தவள்...

"தூங்குனா எழுப்பனும் அதை விட்டுட்டு தூங்க வசதிப் பண்ணிக் குடுத்துட்டு பேச்சைப் பாரு" என்று தனக்கு தானே சொல்லிக் கொள்வது போல் சொல்ல...

"மேலே மேலே வந்து விழுந்து உயிரை வாங்கிட்டு வாயைப் பாரு..."

"ஹக்கும் வாய் ஒன்னும் தான் ஒழுங்கா இருக்கு அதையும் ஏதாவது பண்ணனும் நினைக்கறான் போல..." என்று நினைத்தவள் கண்ணாடி வழியே வெளியே வேடிக்கைப் பார்க்க..

மலையாள எழுத்துகள் முறுக்கை போல் வளைந்து நெளிந்து பார்க்கும் இடமெங்கும் சிதறி கிடந்தது.

"நம்ப பாலக்காடு வந்துட்டுமா?" என்றாள் துள்ளளாக..

"ம்ம்"

"அப்போ ராமசேரி இட்லி சாப்பிடுவோமா?" என்று ஆவலாக கேட்டவளை வினோதமாகப் பார்த்தவன்

"அது என்ன இட்லி?" என்றான்

"பாலக்காட்டுல அதுதான் ஸ்பெஷல் டிஸ்" என்றாள் வெளியே ஏதாவது உணவகம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டே

"ஓ.... எங்க என்ன கிடைக்கும்னு அதுக்குள்ள சர்ச் பண்ணிட்டியா?"

"வெளியூர் வரும் போது அதுலாம் பார்க்காமலா வருவாங்க...?"

"சரியான தின்னி மாடு..."

"இருந்துட்டு போறேன்" என்றவள் நிருவிற்கு அழைத்தாள்.

"சொல்லு அரு"

"அண்ணா ஹோட்டல் பார்த்து வண்டியை நிறுத்து பசிக்குது சாப்பிட்டு போவோம்"

"அதுக்குள்ளயா இப்போதானே மணி 8 ஆகுது"

"உனக்கு பசிக்கலைனா விடு எனக்கு பசிக்குது வண்டியை நிறுத்த முடியுமா முடியாதா ... இல்லனா நாங்க மட்டும் தின்னுட்டு வந்துருவோம்" என்றாள் காட்டமாக..

"ஏய் எதுக்குடி அவன்கிட்ட குதிக்கிற...?" என்ற வேந்தன் கண்ணுக்கு தெரிந்த ஒரு உணவகத்தில் வண்டியை நிறுத்தி அவளிடமிருந்து போனை பறித்தவன் "நிரு லோக்கேசன் ஷேர் பண்றேன் வந்துருங்க" என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.

காரை விட்டு இறங்கியவள் ... "நான் நினைக்கற அளவுக்கு இவன் ஒன்னும் மோசமில்ல... வயித்துக்கு வஞ்சனை வைக்கலப்பா என்று நினைத்தவள்... "நான் கார் டாப்பை தூக்கி தலையை வெளியே நீட்ட மாட்டேன்" என்றாள் திடீரெண்டு

காரில் சாய்ந்தவாறு தங்கள் இருக்கும் இடத்தை நிருவின் அலைபேசிக்கு அனுப்பிக் கொண்டிருந்த வேந்தன்...அருவி சொன்னதில் தலையை நிமிர்த்தி பார்த்து... "அதுக்காக எல்லாம் உன்னைய அந்த காருக்கு அனுப்ப முடியாது" என்றான்.

"நான் என்ன கேக்க வரேன்னுலாம் தெள்ள தெளிவா புரியுது.."என்று பல்லைக் கடித்தவள்..

"கார்த்திக் இல்லனா இனியை யாராவது ஒருத்தரையாவது இந்த காருக்கு வர சொல்லலாம்ல" என்று பாவமாக கேக்க

"எதுக்கு அவன்ங்க கூட சேர்ந்து கூத்து அடிக்கவா..?" என்றவன் "வந்து சாப்பிடு அவங்க வருவாங்க" என்று உள்ளே சென்றான்.

"அவங்களும் வரட்டும்" என்றதும் வேந்தன் இடம் பார்த்து அமர்ந்தான். தனியே நிற்க முடியாமல் அருவியும் அவனுடன் அமர

"எப்போ எக்ஸாம்" என்றான்

வேந்தன் தன்னிடம் இலகுவாக பேசுவான் என்று எதிர்பார்க்காதவள் அவளையும் அறியாமல் அவன் கேக்கும் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்திருந்தாள்.

"நெஸ்ட் வீக்"

"இன்னும் ஒரு செம் இருக்குல்ல, இதுல எத்தனை பேப்பர்"

"தியரி பேப்பர் நாலு, அடுத்த செம் முழுக்க ப்ராக்ட்டிகல் ரெண்டு பேப்பர் மட்டும் தியரி இருக்கும்"

"ம்ம் பிராக்டிகல்னா பில்டு ஒர்க் பண்ணணும்"

"அதுலாம் பண்ணிடுவோம்?"

"அப்புறம் வீட்டுக்கு எப்போ வர?" என்று கால் மேல் கால் போட்டவாரு அருவிக்கு முன் இருந்த தண்ணீர் கேனை எடுத்து குடித்தவாறே கேக்க..அவனின் ஆளுமையில் அருவியின் கண் வியக்க தான் செய்தது...

வேந்தன் மட்டும் எல்லோரிடமும் நடப்பது போல் அவளிடமும் நடந்திருந்தால் இந்த ஆளுமை அவளை அசைத்துப் பார்த்திருக்கும்... ஆனால் இப்போது அவள் மனதில் இவன் மீது வெறுப்பு மட்டுமே இருக்க வேந்தனின் ஆளுமைக் கூட திமிராக தெரிந்தது.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
பயபுள்ள கோபமா இருக்கற
மாதிரி நடிச்சு தனியா
தள்ளிட்டு வந்துட்டானே
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top