மண்ணில் தோன்றிய வைரம் 25

Advertisement

n.palaniappan

Well-Known Member
மாலை டிஸ்சார்ஜ் செய்தவுடன் சாருவை அவளது காரில் அழைத்து சென்றான் அஸ்வின். அவளை காரிற்கு அழைத்து வந்த விதமும் அவள் அமர்வதற்கு வாகாக டிக்கியில் இருந்த தலையணையை எடுத்துவந்து ஒழுங்குபடுத்தி கொடுத்ததிலும் அத்தனை கரிசனை தெரிந்தது. எதற்கும் தேவைப்படும் என்று டிரைவர் டிக்கியில் எடுத்துவைத்திருந்த அந்த இரு சிறு தலையணைகளும் இப்போது சாருவிற்கு உதவியது. ஒரு தலையணையை அவளது வலக்கையை வைக்க வசதியாக அவளது மார்பிற்கும் வயிற்றுக்கும் இடைப்பகுதியில் வைக்க மற்றொன்றை தலைக்கு சாய்வாக வைத்தான். அவனது ஒவ்வொரு செயலிலும் தாயின் கரிசனத்தை கண்ட சாருவின் மனம் நெகிழ அது கண்ணீராய் உடைப்பெடுக்க தயாரானது. ஒரு பெண் எவ்வளவு தான் மனவுறுதிவுடையவளாக இருந்தாலும் அன்பு என்ற வட்டத்திற்கு அவளது உறுதி சிதறி சின்னாபின்னமாகிவிடும். அந்த அன்பிற்காக தன் சுயத்தன்மையை கூட இழக்க முன்வருவாள். அவ்வாறிருக்கையில் இவ்வளவு நாட்கள் அன்பிற்காக ஏங்கி தவித்த சாருவிற்கு தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அஸ்வினின் சிறு செய்கை கூட அவளை நெகழச் செய்ய அதன் தாக்கமே அந்த கண்ணீரின் உற்பத்தி..
அவளது முகமாற்றத்தை கவனித்த அஸ்வின் அதை வேறு விதமாக புரிந்து கொண்டு
“என்ன செய்து சாரு? கை வலிக்கிறதா??? ஏன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு” என்று கேட்க அவனை சமாளிக்கும் விதமாக
“கையை தூக்கும் போது லைட்டா பெயின் இருந்துச்சு. அதான் கண் கலங்கிருச்சி.. இப்போ ஒன்றும் இல்லை. நோ வொரிஸ்” என்று கூற அவளது கூற்றில் சமாதானமானவன் வேறெதும் தேவையா என்று விசாரிக்க அவள் இல்லை என்று கூற கார் கதவினை அடைத்து விட்டு முன்புறம் ஏறி காரை எடுக்குமாறு டிரைவரை பணித்தார். கார் கிளம்பியதும் டிரைவர் “அம்மா இப்போ கை எப்படி இருக்கு??” என்று கேட்க
“இப்போ பரவாயில்லை அண்ணா..அண்ணா நீங்க சாப்பிட்டீங்களா??” என்று அவரிடம் கேட்க
“ஆமாம் மா. தம்பி அதுக்கு வாங்கும் போது எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்திருச்சி.” என்று கூற சாருவிற்கு அஸ்வினை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. எந்த ஒரு சூழ்நிலையிலும் அனைவரையும் பற்றி தெரிந்து கொண்டு அவர்களது தேவைகளை நிறைவேற்றும் ஆளுமையை என்றும் போல் அன்றும் மனதினுள் பாராட்டினாள்.
இவ்வாறு வாகன நெரிசலினால் நீண்டுச்சென்ற பயணம் இரவு எட்டு மணியளவில் அஸ்வினின் வீட்டை அடைந்ததும் நிறைவடைந்தது. கார் சத்தம் கேட்டதும் வெளியே வந்த சித்ரா காரை நிறுத்தியவுடன் சாரு இறங்க உதவி செய்த அஸ்வின் அருகே சென்று தன் பங்கு உதவியை செய்தாள். சாருவை உள்ளே அழைத்து வந்த சித்ரா அவளை கவியின் அறைக்கு அழைத்து செல்ல அஸ்வின் அவர்களை பின்தொடர சித்ராவோ
“ கண்ணா சாருவை நான் பார்த்துக்கிறேன். நீ போய் பிரஷ் ஆகிட்டு சாப்பிட வா” என்று பணித்துவிட்டு செல்ல வேறு வழியின்றி அஸ்வின் தன்னறை நோக்கி சென்றான். ரிப்ரெஷ் செய்துவிட்டு வெளியே வந்த அஸ்வின் சாருவை பார்த்து டாக்டர் கொடுத்த மாத்திரைகளை வழங்கும் பொருட்டு அவள் இருந்த கவியின் அறைக்குள் நுழையும் முன் அறைக்கதவை தட்ட கதவை திறந்த சித்ரா
“என்ன கண்ணா சாருவை பார்க்க வந்தாயா?? இப்போ தான் உடை மாற்ற வைத்து படுக்க வைத்துவிட்டு வந்திருக்கேன் கண்ணா... ரொம்ப களைப்பா இருக்கு தூங்கட்டுமானு கேட்டா. இரும்மா கொஞ்சம் சாப்பிட்டு படுக்கலாம்னு சொல்லிட்டு வந்திருக்கேன். டாக்டர் மாத்திரை குடுத்ததா சொன்னியே..மாத்திரை எல்லாம் எங்க கண்ணா??” என்று கேட்க
“அதை கொடுக்க தான் வந்தேன் சித்தி. வருண் எங்க சித்தி?” என்று தான் கொண்டு வந்திருந்த மாத்திரையை கொடுத்துவிட்டு வருணை பற்றி விசாரிக்க
“ நீ வருவதற்கு முதல் ஆபிஸ் கால் ஒன்று வந்தது. ரொம்ப அவசரம்னு அவனை வரச்சொல்லியிருக்காங்க.. எப்படி நீ வராம எப்படி போறதுனு யோசிச்சிட்டு இருந்தான். நீ இப்போ வந்துருவனு சொல்லி அவனை நான் தான் அனுப்பி வச்சேன். நீ வந்தவுடன் கால் பண்றதா சொன்னேன். கண்ணா நீ அவனுக்கு கால் பண்ணி சொல்லிரு.”
“சரி சித்தி நான் அவன்கிட்ட பேசுறேன்” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான் அஸ்வின். பின் இரவு உணவை முடித்துவிட்டு தன் சித்தப்பாவை நலம் விசாரித்துவிட்டு அவருடன் சிறிது நேரம் உரையாடிய வண்ணம் இருக்க அவருக்கு மாத்திரை கொடுப்பதற்காக வந்த சித்ராவிடம் சாருவை பற்றி விசாரிக்க அவள் உறங்கிவிட்டதாக சித்ரா கூற மேலும் சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிவிட்டு தன் அறைக்கு சென்றான் அஸ்வின்.
அறைக்கு வந்து தன் அழைபேசியுடன் படுக்கையில் விழுந்தவன் டேட்டாவினை ஆன் செய்ய பேஸ்புக் மெசென்ஜரில் அராத்து ஆனந்தி என்ற பெயரில் இருந்து செய்தி வந்திருப்பதாக நாட்டிபிகேஷன் வர அதனை ஓப்பன் செய்து பார்த்தவன் அதில் ஒரு ஆடியோ மெசேஜ் வந்திருக்க அதனை கேட்கும் பொருட்டு தன் செல்ப்பில் இருந்த ஹெட்செட்டை எடுக்க கட்டிலிருந்து எழுந்து சென்றான். அந்த பெயரை பார்த்தவுடனே அது இன்று காலை தன்னுடன் பேசிய பெண்தான் என்று அஸ்வினுக்கு உறுதியானது. காலையில் பேசியது போல் ஏதும் எக்கு தப்பாய் பேசி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருப்பாள் என்ற பயத்திலேயே அஸ்வின் தன் ஹெட்செட்டை எடுக்க சென்றான். ஹெட்செட்டை காதில் மாட்டியவாறு வாய்ஸ் மெசேஜை ஆன் செய்ய அது
“ஓய் ரௌடிபேபி... என்னடா பாதியிலே ஓடி போய்ட்டா.. உன்னை மண்டபம் முழுக்கா தேடுனேன். நீ ரொம்ப மோசம். சரி உன்னை மன்னிச்சு விடுறேன்... உன்னை ஏன்டா என் அத்தை இவ்வளவு அழகா பெத்து போட்டாங்க?? அந்த மண்டபத்தில் இருந்த எல்லா நொள்ளிக்கண்ணும் உன்மேல தான் இருந்துச்சி. ஒருபுறம் அதை பார்த்து பத்திகிட்டு வந்தாலும் மறுபுறம் என் ஆளு தான் அதுனு நினைக்கும் போது ரொம்ப பெருமையாவும் இருந்துச்சி. ஆனாலும் நீ இவ்வளவு அழகா பொறந்து தொலைச்சிருக்கக்கூடாது. ஆளை தூக்குடா நீ.... ஓகோ ஓகோ நீ கடுப்பாகுறது புரியிது... மிச்சத்தை நாளைக்கு பேசிக்கலாம்.. குட் நைட். ஸீவீட் டிரீம்ஸ். லவ் யூ டா ரௌடி பேபி “என்று விட்டு ஒரு நீண்ட முத்தத்துடன் நிறைவடைந்திருந்தது அந்த வாய்ஸ் மெசேஜ். அதை ஆப் செய்து மொபைலை ஓரமாக வைத்தவன் கண்களை மூடினான். கண்மூடியவனுக்கு உறக்கத்திற்கு பதில் அவளது பேச்சே ஓடிக்கொண்டிருந்தது.

யார் பக்கம்
சாரு பக்கம் தானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top