மகா நடிகன் teaser

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
என் birthdayகு UD கொடுக்கலான எப்படி?

நம்ம ஊருல மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது. வெள்ளம் வரும் அறிகுறியோடு நான் busy. சரி ஒரு teaser போடலாம் என்று தோணினத எழுதி போடுறேன். எந்த epila வருமோ எனக்கே தெரியல. :love::love:

"இந்த இருட்டுல நம்ம வாய்ஸ்ல பாட்டு பாடினா பாம்பெல்லாம் தெறிச்சு ஓடும். கதிர் அண்ணா இதனாலதான் டையிலி பாடிகிட்டு வராரோ என்னவோ" பாட்டுபாடியவாறு வீட்டுக்கு வர மலை ஏறிக் கொண்டிருந்தான் செல்வா.


"தட் தட்" என்று லாவண்யாவின் வீட்டிலிருந்து சத்தம் வர "என்ன இந்த சத்தம்? நடு ராத்திரில கொலை பண்ணினவன, துண்டு துண்டா வேண்டுறது போல ஒரு சத்தம். காத்து வேற சில்லுனு ஒரே அமானுஷ்யமான இருக்கு. என்னனு பார்க்கலாமா? வேணாம் வேணாம் நம்மளையும் போட்டுத் தள்ளுவாங்க. எத்தனை சினிமால பார்த்திருக்கேன். வீணா மூக்க நுழச்சி தலைய துண்டாக்கிக்கணுமா?" என்று செல்வா முணுமுணுக்க, லாவண்யா வெட்டியா விறகுகளை சுமந்து கொண்டு வந்து வாசலில் அடுக்கலானாள்.

"ஓஹ்... விறகுதான் வெட்டினாளா?"

"யாரு அங்க?" யாரோ நிற்பதை பார்த்து கையில் கத்தியோடு முறைத்தாள் லாவண்யா.

"யம்மா.. நான் தான் செல்வா. சத்தம் வந்ததால என்னனு பார்த்தேன். ஒண்ணுமில்ல. அதான் கேஸ் சிலிண்டர் வந்திருச்சே. எதுக்கு இன்னமும் விறகு வெட்டிக்கிட்டு இருக்க? சிலிண்டரை வாங்க வேண்டியது தானே. முன்ன போல சிலிண்டர் இப்போ வெடிக்கிறது கூட இல்ல" என்று சத்தமாக சிரித்தான்.

குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்ய கேஸை மாற்றி அமைத்ததில் பல இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் நடந்தேறியது செய்திகளில் வந்தது. ஏன் இரத்தினபுரியில் கூட இரண்டு சம்பவம் நடந்திருந்தது. வீட்டிலையே பாமை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது என்று மக்கள் விறகை தேடி சென்றிருக்க, கேஸ் விலையும் அதற்கொரு காரணமாக அமைத்திருந்தது.

ஆனால் இப்பொழுதுதான் பிரச்சினை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்களே. இன்னும் ஏன் விறகை வெட்டிக் கொண்டு சிரமப்பட வேண்டும் என்று தான் கேட்டான் செல்வா.

"எங்க வீட்டுல கேஸ் குக்கர் இல்ல. சிலிண்டரை வாங்கி பூஜை செய்யவா?" என்று விட்டு வெட்டிய விறகுகளை கட்டலானாள்.

"அடுப்பே இல்லையா? சரிதான்" லாவண்யாவின் வீட்டில் அவளை, அவளுடைய குழந்தையை தவிர யாரையும் அவன் பார்த்ததில்லை. அவன்தான் காலையில் கடைக்கு சென்றால் இரவில் வீடு வருகிறான். கடைக்கும் லாவண்யாதான் குழந்தையை சுமந்து கொண்டு வருகிறாள். "ஆமா இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்? இவள் புருஷனுக்கு என்ன ஆச்சு என்று எண்ணியவன், இவளுக்குத்தான் கல்யாணமே ஆகலானு தம்பிசார் சொன்னாரே" என்று எண்ணியவன்

"வீட்டுல அம்மா, அப்பா இல்லையா?" என்று மட்டும் தான் கேட்டான்.

"எதுக்கு பொண்ணு கேட்கவா? அவங்க செத்து பல வருஷமாச்சு. நீ செத்து போய் தான் அவங்க கூட பேசணும். உனக்கு என் வீட்டு வாசல்ல என்ன வேல. கதிர் வீட்டுல இருக்கீனா சரோஜா அம்மாவோட மரியாதைய காப்பாத்திக்கிட்டு இரு. என் கிட்ட வாலாட்டனும் என்று நினச்சா. கழுத்துக்கு மேல தலை இருக்காது" கத்தியை தூக்கிக் காட்டியவாறே கூறினாள்.

"அம்மா, அப்பா வீட்டுல இல்லையா என்று கேட்டது ஒரு குத்தமா? டாடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்ல, என்னமோ இவ கூட குடும்பம் நடாத்த கேட்டது போல பேசுற" என்று அவளை முறைத்துப் பார்த்தவன் "நீ என்ன சீரியல் கில்லரா? இல்ல உன்ன நீ உலக அழகி என்று நினைச்சி கிட்டு இருக்கியா? சாதாரணமா பேசினா எறிஞ்சி விழுற. உன் மூஞ்சியும், நீயும். உன் மூஞ்சிய எப்பவாச்சும் கண்ணாடில பார்த்திருக்கியா? மனசுல இம்புட்டு குப்பையை வச்சிருக்குறதாலதான் வாழ்க்கைல இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிற. இவ்வளவு பட்டும் உன் வாய் கொழுப்பு அடங்கல, பார்த்தியா அங்க நிக்கிற நீ. உன்னயெல்லாம் பூதம் கூட தீண்டாது. என்ன பார்த்து…" என்று செல்வா வார்த்தைகளை அனலாய் கக்க,

அவன் பேசப் பேச அவனை அதிர்ச்சியாக பார்த்திருந்த லாவண்யா உள்ளே ஓடியிருந்தாள்.

"டேய் வாத்து முட்ட. ஒரு பொண்ணு கிட்ட இப்படித்தான் பேசுவியா? பிடிக்காத பொண்ணு கிட்ட கூட எந்த மடையனும் இப்படி பேச மாட்டான். நீ என்ன புடிச்ச பொண்ணு மனச இப்படி காயப்படுத்திட்டு வந்திருக்க?" சர்வேஷுக்கு கோபம் அடங்கவில்லை.

கையை நீட்டி சர்வேஷை தடுத்த செல்வா "எல்லாம் எனக்குத் தெரியும். நான் யாரு என்று அவளுக்கு தெரியாம இருக்கலாம். ஆனா நான் சரோஜா அத்த வீட்டுல இருக்கேன். கதிர் மச்சான் கூட ப்ரெண்டா இருக்கேன் என்று அவளுக்குத் தெரியும் தானே. சாதாரணமா பேசினா இப்படித்தான் பேசுவாளா?

அப்படி பேசினா எதிரே நிக்குறவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும் என்று அவளுக்கு புரிய வைக்கத்தான் நானும் ஹார்ஷா பேசினேன். இனிமேல் என்ன பார்த்தா அப்படி பேச மாட்டா. என் கிட்ட மட்டும் இல்ல யார் கிட்டயும் அப்படி பேச மாட்டா" என்றான் செல்வா.

சரோஜாவை அம்மாவென்றும், கதிரை அண்ணா என்றும் அழைத்துக் கொண்டிருந்தவன் திடிரென்று அத்தை, மச்சான் என்று அழைத்திருந்தான். அதை சர்வேஷ் கவனித்தானா?

"புரிய வைக்க பேசினியா? நல்ல பேசின போ... உன்ன திரும்பிக் கூட பார்க்க மாட்டா" சர்வேஷுக்கு கோபம் அடங்கவே இல்லை. செல்வாவை முறைத்துக் கொண்டே இருந்தான்.

"தேவையில்ல. நான் என்ன அவள கல்யாணம் பண்ணி குடும்பம் நடாத்தவா போறேன்? அவ நல்லா இருக்கணும் என்று நினைக்கிறேன். அதுக்காகத்தான் அவ லைப்ல என்னதான் நடந்தது என்று தெரிஞ்சிக்கணும் என்று கேட்கிறேன்" என்று புன்னகைத்தான் செல்வா.

அவன் புன்னகையில் சோகம் மறைந்திருக்க, சர்வேஷின் கோபம் கூட மறைந்து போனது. செல்வாவின் முகத்தில் இருந்த உறுதியை பார்த்தே தான் அறிந்து கொண்ட உண்மையை கூறலானான் சர்வேஷ்.
 

Saroja

Well-Known Member
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
மிலா
நல்லா இருக்கு பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top