பீர்க்கங்காய் சட்னி / Ridge gourd chutney

Advertisement

Bhuvana

Well-Known Member
பீர்க்கங்காய் சட்னி / Ridge gourd chutney :

தேவையானவை:

பீர்க்கங்காய் - 1
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 7
புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பீர்க்கங்காயை நல்ல பொடியாக நறுக்கி ஒரு கடாயில் வேக விடவும். அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

சூடு ஆறிய பின்பு, ஊற வைத்த புளியுடன், உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: புளிக்கு பதில் தக்காளி சேர்த்தும், பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் வற்றல் சேர்த்தும் இந்த சட்னியை தயாரிக்கலாம்.

Ingredients:

Ridge gourd - 1
Small onion - 10
Green chilly - 7
Tamarind - 1 small lemon size
Asafoetida powder - 1 pinch
Salt & Oil as required.

Chop the Ridge gourd & cook it in a kadai with enough water. Along with it add the green chilly & asafoetida powder & cook well until the vegetable becomes soft.

Allow it to cool & grind along with tamarind, required salt & transfer into a bowl. Temper mustard seeds, urad dhal, curry leaves & add to it. This chutney tastes good with idly or dosa.

Note: You can substitute tamarind with tomato & green chilly with red chilly to prepare this chutney.

42157336_1549728375133102_2493699870808866816_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top