பிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 44. குற்றங்கடிதல், குறள் எண்: 432 & 440.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 432:- இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

பொருள் :- பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும்.

நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.
 

Sasideera

Well-Known Member
குறள் 440:- காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

பொருள் :- தன் விருப்பம் பிறர்க்குத் தெரியாதபடி விருப்பமானவற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்ற அறிவு பெறுதல் பற்றிய அதிகாரங்களை அடுத்து, ஒருவன் அறிவுடையனாயினும் தன்னுடைய குற்றங்களை உணர்ந்து அவற்றைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துவதற்காக, குற்றங்கடிதல் அதிகாரம் அமைக்கப்பெற்றது. தன்னிடம் காணப்படும் குற்றங்கள் மட்டுமன்றி பிறரிடம் காணப்படும் குற்றங்களைக் கடிதலையும் கூறுவதாகக் கொள்ளவேண்டும் என்பர்.

இறுமாப்பு, சினம், அற்பத்தனம், பொது நிதியைச் செலவழியாமை, போலியான மானவுணர்ச்சி, பெருமையற்றவற்றில் உவகை கொள்ளல் தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்வது, நல்லதல்லாதனவற்றில் விருப்பு கொள்வது; பகைவர் அறிய பொருட்காதல் கொள்வது ஆகியன கடியப்படவேண்டிய குற்றங்கள் எனச் சொல்கிறது இவ்வதிகாரம்.
சிறிய குற்றம் நேர்ந்துவிட்டால் கூட பெரியதாக நடந்துவிட்டதே என வருந்த வேண்டும்; குற்றமின்மையே வாழ்க்கையின் பொருள் என்ற எண்ணத்துடன் வாழவேண்டும்; குற்றம் நிகழாமல் தடுக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும்; பிறர் குற்றங்களை நீக்க முற்படும் முன் தன்னிடமுள்ள குறைகளை முதலில் களையவேண்டும்; பொதுநிதியைச் செலவிடாமல் முடக்கிவைத்துக் கொள்வது குற்றம் என உணரவேண்டும்; சேமிப்பு நன்மைதானே என்று செய்யப்படவேண்டியன செய்யாமல் இருப்பது தவறான சிந்தனை என்று கொள்ளவேண்டும். இவை குற்றந் திருந்திக் குணமுற்றோங்க இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

இவற்றுள் இவறல், போலிமானம், மாணாஉவகை இவற்றை நீக்குதல் என்பதும், பிறர் குற்றம் காணுமுன் தன் குற்றம் நீக்குதல் என்பதும், 'இறைக்கு' என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. இன்றைய சூழலில் இவை அரசுக்கும் அல்லது தலைவனுக்கும் கூறப்பட்டதாகக் கொள்ளவேண்டும். மேலும் இவ்வதிகாரத்துக் கருத்துக்கள் இறைக்கு மட்டுமன்றி மாந்தர் அனைவருக்கும் பொருந்துவனவே.
 

fathima.ar

Well-Known Member
குறள் 432:- இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

பொருள் :- பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும்.

நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.


Most leaders quality eh ippo ithu thaaane:devilish:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top