பிரிவு : பொருட்பால், இயல் : அரசியல், அதிகாரம் : 40. கல்வி, குறள் எண்: 394 & 397.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 394:- உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

பொருள் :- மகிழும்படியாகக் கூடிப் பழகி. (இனி இவரை எப்போது காண்போம் என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.
 

Sasideera

Well-Known Member
குறள் 397:- யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

பொருள் :- கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?

கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

வாழ்வு வேண்டின் வேண்டுக கல்வி என்று 'வாழ்வார்' எல்லார்க்கும் கல்வி தேவை என்று இவ்வதிகாரம் வற்புறுத்துகிறது. கல்வி கற்கும் முறையும், அதனால் அடையக்கூடிய பயனும் திட்பமாகக் கூறப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் திறனும் அவர்களால் கற்பவர்க்கு உண்டாகும் அகத்தூண்டல்களும் சொல்லப்படுகின்றன. மனிதவள மேம்பாட்டிற்கும் சமுதாய வளர்ச்சிக்கும் உலகமே ஓர் ஊர்தான் என்பதை உணர்தற்கும் கல்வி இன்றியமையாதது என்று கூறி கல்வியே ஒருவனுக்குச் சிறந்த முதலீடாக அமையும் என்பதை அழுந்தச் சொல்கிறது கல்வி பற்றிய இத்தொகுப்பு.

கல்வி அதிகாரம் அரசியலில் ஏன் கூறப்பட்டது?:
ஆட்சியின் கடமைகளில் கல்வி வழங்குவதையும் ஓர் அரசியல் கடமையாகச் சேர்த்துக் கூறுகிறது குறள். ஆட்சியின் திறனுக்கும், ஆள்பவனும் குடிமக்களும் ஒழுக்க நெறி நிற்பதற்கும் அறிவார்ந்த வளமான வாழ்க்கை அமைவதற்கும் கல்வி தேவை என்பதால் இப்பொருள்நிலை நீதியும் அரசியலில் இணைக்கப்பட்டது.

கேடில் விழுச்செல்வம் கல்வி என்று வள்ளுவர் குறிப்பதால் பொருட்செல்வம் போன்று கல்வியையும் செல்வமாகக் கருதுகிறார் என அறியலாம். நாட்டின் பொருளாதாரம் வளர அறிவுவளம் இன்றியமையாதது என்பதை எண்ணிக் கல்வியை நாடாள்பவனும் கற்க வேண்டும், நாட்டின் மக்களையும் கற்கச் செய்யவேண்டும் என்ற நோக்கில் இறைமாட்சியை அடுத்துக் கல்வி வைக்கப்பட்டது. ஆட்சி செய்பவனுக்கு இன்றியமையாக் குணங்களாக 'தூங்காமை கல்வி துணிவுடைமை' என்று இறைமாட்சியிலேயே வற்புறுத்தியதால் கல்வி, கேள்வி, கல்லாமை, அறிவுடைமைகளை வலியுறுத்துவன அவன் குடிமக்களைப் பயிற்றுவித்தல் இன்றியமையாதது என்பதைக் சொல்லவே என்பது தெளிவாகிறது.
கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top