பாலக் மசாலா ரொட்டி/ Palak Masala Roti

Advertisement

Bhuvana

Well-Known Member
பாலக் மசாலா ரொட்டி/ Palak Masala Roti :

தேவையான பொருள்கள்:

பாலக் கீரை – 1 கட்டு {நன்றாக கழுவி மைய அரைத்து கொள்ளவும்}
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
கோதுமை மாவு – 2 கப்
ஓமம் பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கிட்சன் கிங் மசாலா தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

அரைத்து கொள்ள:

இஞ்சி – 1 சிறு துண்டு
பூண்டு – 6 பல்
பச்சை மிளகாய் – 2

இஞ்சி, பூண்டு, மிளகாயை நன்கு மசிய அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்த அரைத்த விழுது மற்றும் மேற்குரிய அனைத்தையும் கலந்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்து ஒரு 15 நிமிடங்கள் வைக்கவும்.

அதன் பிறகு ஒரு தவாவில் நெய்யோ, எண்ணையோ விட்டு ரொட்டி சுடவும். இதனை தயிர் அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல மணமான, சுவையான, ஆரோக்கியமான உணவு.

குறிப்பு : பாலக் கீரையை நீங்கள் பொடியாக அரிந்தும் சேர்க்கலாம்.

Ingrdients:

Palak greens – 1 bunch {wash & clean & prepare a puree}
Onion – 1 finely chopped
Whole wheat flour – 2 cups
Omam powder – 1 spn.
Turmeric powder – 1 spn.
Chilly powder – 1 spn.
Kitchen king masala powder – 1 spn.
Garam masala powder – 1spn.
Salt & Oil – as required

To grind:

Ginger – 1 small piece
Garlic cloves – 6
Green chilly – 2

Grind the above into a fine paste. In a bowl add this paste, palak puree & all the above ingredients & knead into a soft dough adding required salt & oil, add water if needed & keep it aside for 15 mins.

Prepare rotis, on a tawa using ghee or oil & serve with curd or tomato sauce.

A healthy & delicious food for kids.

Note: You can even chop the palak greens & add.

15747337_970086156430663_8566705679434911609_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top