Bhuvana
Well-Known Member
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க:
1. புதினாவை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2. ஆப்ரிகாட் பழத்தை நன்கு கழுவி வேகவைத்து மசித்துக் கொள்ளவேண்டும். ஓட்ஸ், பால், சர்க்கரை ஆகியவைகளை ஒன்றாக கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து கெட்டியானவுடன் ஆறவைத்து அதனுடன் மசித்த ஆப்ரிகாட்டை சேர்த்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
3. விளாம்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
4. பாலில் திராட்சை பழச்சாறு மற்றும் தர்ப்பூசணி பழச்சாறு கலந்து குடித்து வந்தால் உடலில் பலம் அதிகரித்து நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
5. துளசி வேரை எடுத்து நன்கு கழுவி காயவைத்து அதை பொடி செய்து அந்த பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
6. ஒரு தேக்கரண்டி உலர்ந்த வல்லாரைக் இலைப்பொடியில் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்துச் சாதத்துடன் பிசைந்து தினசரி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகும்.
7. 250 கிராம் கற்கண்டைப் பாகாக்கிக் அதில் 20 கிராம் ஏலக்காயையும் 10 கிராம் சுக்கையும் பொடித்துப் போட்டு 500 கிராம் வில்வப்பூவை கலந்து பூக்கள் நன்றாக வெந்ததும் 100 கிராம் தேன் சேர்த்து கிளறி இதனை தினமும் நெல்லிக்காய் அளவு காலை மாலை இருவேளை 40 நாட்கள் சாப்பிட்டு வர உடல் நன்கு வலிமை பெறும்.
8. முட்டைக்கோஸ் எடு*த்து பொடியாக அரிந்து உப்பு சேர்க்காமல் சூப் செய்து வாரம் ஒரு முறை அளவாக சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
9. கறிவேப்பிலை, புதினா , கொத்தமல்லி , கீரைத்தண்டு சேர்த்து சாப்பிட்டுவந்தால் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
10.முளைக்கீரை , வெந்தயக்கீரை , மணத்தக்காளிகீரை சேர்த்து சிறு பருப்புடன் சமைத்து உண்ண நோய் எதிர்பாற்றல் உண்டாகும்.
11.5 புத்தம் புதிய துளசி இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
12.இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
13.கேரட், பீட்ரூட், அவரைக்காய், வாழைத்தண்டு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் அணுகாது.
14.ஒரு செவ்வாழைப் பழத்தைத் தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெறுகும்.