நானறியேன் உன்னை P21

Advertisement

Nasreen

Well-Known Member
View attachment 7984

"முதல்ல இடத்தை காலி பண்ணுறீங்களா? எனக்கு நிறைய வேல இருக்கு. பசங்க எந்திரிப்பாங்க" முயன்ற மட்டும் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யலானாள்.



"ஆமா ஆமா உனக்கு நிறைய வேல இருக்கும். அதுல முக்கியமான வேல டிரஸ் போடுறது" என்றவன் சிரிக்க "என்ன சொல்கிறான் இவன்?" என்று நிலா தன்னையே! பார்க்க குளித்து விட்டு ஒரு மெல்லிய நைட்டியை உடுத்திக்கொண்டு வந்திருந்தவள் அறைக்குள் அனுமதி இல்லாமல் யாரும் வரமாட்டார்கள் இரு தலையை துவட்டியவாறு இருக்க, இவன் வருவான் என்று எதிர்பாத்திருக்கவில்லை. வந்தாலும் வந்தான் அவன் செய்தவைகளில் அவள் தன்னையே! மறந்து பேசிக்கொண்டிருக்க, அவள் அணிந்திருந்த உடையையும் தாண்டி அவள் அங்கங்கள் அவனுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தன.



தன்னையே! நொந்துகொண்டவள் தலையை துடைத்துக்கொண்டிருந்த துண்டை தோளில் போட்டுக்கொண்டு "முதல்ல வெளிய போங்க" என்று சொல்ல வாணன் அவள் கால்களை பாத்திருந்தான்.



தொடைக்கு மேலிருந்த அவள் ஆடை என்னதான் நீ மறைத்தாலும் இங்கே! மறைக்க ஒன்றுமில்லை என்று கூவ.



இதற்கெல்லாம் அச்சப்பட்டாலோ! வெக்கப்பட்டலோ! ஒன்றும் ஆகாது என்று நின்னத்தவள், ஒற்றை விரலால் வாணனின் நாடியை பிடித்து தூக்கியவள் "அங்க என்ன பார்வ? வெளிய போகத்தானே! சொன்னேன்" என்று மீண்டும் முறைக்க



அவள் தைரியத்தை உள்ளுக்குள் மெச்சிக்கொண்டவன் "நான் பாக்கவென்றே இப்படி டிரஸ் போட்டுக்கிட்டு நிக்குற பாக்கார்காம போனா உன் மனசு தாங்காது இல்ல" என்று வெறுப்பேத்த



"இது என்ன டா புதுக்கத? இவன் வர்ரததே! தெரியாது. தெரிஞ்சா? கதவையே! லாக் பண்ணி இருப்பேன். இவன் என்ன இப்படி சொல்லுறான்?" என்று யோசித்தவள் அன்று அவன் அவள் ஆடை அணிவதே! அவன் பார்க்கத்தான் என்பது போல் பேசியது நியாபகத்தில் வர "நான் எனக்கு பிடிச்சா மாதிரிதான் துணி போடுவேன். யாரும் பார்க்குறதுக்காக வேண்டி இல்ல. நீங்க இப்போ கிளம்பினா எனக்கு பிடிச்சா மாதிரி போட்டுக்குவேன்" என்றவள் கதவின் பக்கம் கைகாட்ட வாணனுக்கு சிரிப்பாக இருந்தது.



View attachment 7985
அங்கிருந்த ஒற்றை சோபாவில் காலுக்கு மேல் காலை போட்டு அமர்ந்துக்கொண்டவன் "என்ன பொண்டாட்டி ரொம்ப நாளா நமக்குள்ள ஒண்ணுமே! நடக்கலானதும் வெக்கம் வந்திருச்சோ! நமக்குள்ள எதுக்கு வெக்கம். நீ தாராளமா என் முன்னாடி துணி மாத்தலாம். நான் பார்க்காததா?" என்று சொல்ல என்னதான் மறைக்க முயன்றாலும் நிலா முகம் சிவந்தாள்.



அது வாணனின் கண்களுக்கும் தப்பவில்லை. "ஆகா... இவ கோபத்துல சிவக்குறாளா? வெக்கத்துல சிவக்குளானு தெரியலையே!" வாணனின் மனம் பதறியவாறு நிலாவை பார்க்க



கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு "இப்போ என்னதான் உங்களுக்கு வேணும்? என்னதான் பிரச்சினை?" என்று கத்தலானாள் நிலா.



"ம்ம்... கோபமாத்தான் இருக்கா... என்ன பேசினாலும் இறங்கி வர மாட்டேங்குறாளே!" நொந்தவனாக சோபாவிலிருந்து எழுந்தவன் நிலாவின் கைகளை பற்றிக்கொண்டு "நிலா நான் உனக்கு பண்ணது எல்லாத்துக்கும் மன்னிச்சுடுனு கேக்குறது சாதாரண வார்த்த. நீ பண்ணாத தப்புக்கு தான் நான் உன்ன கொடும படுத்தி இருக்கேன். நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். ஆனா உன்ன விட்டுட்டு போய்ட மட்டும் சொல்லாத கண்டிப்பா அத மட்டும் பண்ண மாட்டேன். என்னால உன்ன விட்டுடு இருக்க முடியாது"

View attachment 7986

"ஒஹ்... அப்படியா? என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துப்பீங்களா?" கிண்டலாகவே! கேக்க வாணனும் ஆமாம் எனும் விதமாக தலையசைத்தான்.



"சரி. அப்போ அதோ! அந்த பெல்கனில இருந்து குதிச்சிடுங்க" என்றவள் அலுமாரியில் பக்கம் செல்ல வாணன் அங்கேயே நிற்பதைக் கண்டு "என்ன முடியாதில்ல" என்று கிண்டலடிக்க



"அட கொஞ்சம் இருமா... கைல இருக்குற வாட்ச கழட்டிடுறேன். இது என் அத்த கொடுத்தது விழுறப்போ... ஒடஞ்சிட போகுது" என்றவன் வாட்ச்சையும், அலைபேசியையும் வைத்து விட்டு பெல்கனிக்கு சென்றிருக்க குதிச்சசிடுவானோ! என்று நிலா யோசிக்கும் முன் வாணன் குதித்திருந்தான்.
Kadhal na uyira kodukaratha illa uyira edukaratha
Vanan kuthichuttan aiyyo ennacho
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top