தேவியின் திருமுக தரிசனம் -7 precap

Advertisement

ஹாய் பிரெண்ட்ஸ்,

செம்ம பிஸியா போகுது லைஃப் வீடு, வேலைன்னு டைம் சரியா இருக்கு கிடைக்கிற கேப்ல டைப் பண்ணிருக்கேன். நாளைக்கு நைட்டுக்குள்ள அப்டேட் போட்டுடுவேன். இப்போதைக்கு குட்டி டீசர் மட்டும்.

தேவியின் திருமுக தரிசனம் 7.

இருள் இன்னமும் தெளியமால் தான் இருந்தது. வழக்கத்தைவிட சீக்கிரமே எழுந்து கொண்டாள் வருணா. இரவு உறங்க தமதமானதாலோ என்னவோ எழும்போதே இருபக்கமும் தலை விண்விண்னென்று தெறிக்க,

"அய்யோ இந்த தலைவலி வேற உயிரை வாங்குது காலையிலேயே ஆரம்பிச்சிருச்சு ச்சே" என கையால் தலையை தாங்கி பிடித்தவள் வலியை அடக்கி கொண்டு அயர்வோடு எழுந்து குளியலறை சென்று, முகம் கழுவிட்டு முகத்தை துடைத்து கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.

அவள் வரவை அறிந்தே பால் காய்ச்சிய பத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு படுத்த தொடங்கினார் சாரதா.

"அம்மா ஒரு காஃபி கிடைக்குமா ரொம்ப தலைவலிக்குது" என்றவாறே வருணா திண்டில் ஏறி அமர்ந்து கொள்ள,

"ஏய் என்னடி பண்ற? இன்னும் சின்ன பொண்ணுன்னு நினைப்பா இறங்கு கீழ".

"ப்ச் போங்கம்மா எப்ப பாரு ஏதாவது சொல்லிகிட்டே இருக்குறது. சின்ன பிள்ளையா இருந்தா தான் ஏறி உக்காரணுமா என்ன?, நா பெரிய பொண்ணா வளர்ந்திருந்தாலும் உங்களுக்கு எப்பவுமே சின்ன பொண்ணு தான் அதனால அதட்டாம பக்குவமா சொல்லுங்க" என கூறியவள் சாரதாவின் தோளில் தலை சாய்த்து கொண்டாள்.

தலைவலியை இமை மூடி அடக்கியவளின் செய்கையை பார்த்த சாரதா அவள் முகத்தில் தெரிந்த வலியின் உணர்வை கண்டு கனிவு பிறக்க, வருணாவின் தலையை பரிவாக தடவி கொடுத்தவாறே,

"இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே ஏன் இவ்ளோ சீக்கிரத்துல எந்திருச்ச மணி அஞ்சு தானே ஆகுது" என்றார் தன்மையான குரலில்.

சாரதா கூறிய பின்னரே கடிகாரத்தை பார்த்தாள் வருணா, ஐந்தை கடந்து ஐந்து நிமிட பயணத்தை தொடங்கியிருந்தது பெரிய முள்.

"அஞ்சு தான் ஆகுதா!", ஏமாற்றத்தின் சாயல் முகத்தில் படர,

"ப்ச் இனி தூக்கம் வராதும்மா நீங்க காஃபி கொடுங்க தலைவலி உயிர் போகுது" என்றாள் வருணா தலையை அழுத்தி பிடித்தபடி.

டம்ளரை அவளிடம் நீட்டியவர் அப்போது தான் கவனித்தார் மகளின் முகத்தை. 'சிவந்திருந்த கண்கள் கண்களை சுற்றி கருவளையம் சற்று வீங்கிய முகம் ஜீவன் இல்லாத விழிகள், அடங்கி பின் அலைபாய்ந்து இலக்கற்று வெறிக்கும் பார்வை' என அவள் வதனத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டவர், இன்னதென்று யூகிக்க முடியாமல் அவளிடமே கேட்டார்.

சில நாட்களாகவே வருணா சரியாக உறங்கவில்லை என்பது அவர் அறிந்து மறைத்து கொண்ட விஷயம். என்ன ஏது என கேட்டால் ஏதாவதொரு காரணத்தை கூறி மலுப்பிவிடுவாள் அல்லது பேச்சை துண்டிப்பது போல வெடுக்கென பேசிவிடுவாள், அதற்காகவே சாரதா இதுவரை வருணாவிடம் எதுவும் கேட்டு கொள்ளவில்லை இன்று மனம் தாளாமல் மனதில் உள்ளதை கேட்டுவிட்டார்.

"என்னம்மா முகமெல்லாம் வீங்கி இருக்கு உடம்பு எதுவும் பண்ணுதா டாக்டர்கிட்ட போலாமா, கொஞ்ச நாளா நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன் சரியா தூங்குறதே இல்ல போல. என்னாச்சு ஸ்கூல்ல ஒர்க் பிரஷர் ஜாஸ்தியா இருக்கா? இல்ல வேற ஏதாவது பிரச்சனையா?" என கேட்டு அவள் முகம் பார்க்க,

"எனக்கென்ன பிரச்சனை இருக்க போகுது நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க ஸ்கூல் ஒர்க் முடிச்சிட்டு படுக்க கொஞ்சம் டைம் ஆகிடும் அதுவுமில்லாம நேத்து நைட்டு ஆரம்பிச்ச தலைவலி இப்ப வரைக்கும் விட்டபாடில்லை உயிர் போகுது வேற ஒன்னுமில்ல ம்மா" என்றவளின் இதழில் வலிய வந்து ஒட்டி கொண்டது புன்னகை.

பெற்றவளுக்கு தெரியாத பிள்ளையின் மனம் என்னவென்று 'எத்தனை நாளைக்கு தான் இந்த நாடகம்னு நானும் பாக்குறேன் அப்படி என்ன பிடிவாதம் மனசுல இருக்கிறதை பெத்தவகிட்ட சொல்ல கூடாதுன்னு. இருக்கட்டும் நா கும்பிடுற சாமி உண்மை என்னனு தெரியவைக்காமல போயிரும் கட்டுனவன எத்தனை நாளைக்கு தான் மனசோடவே மறைச்சு வச்சிருப்ப" மனதோடு மருகினார் சாரதா.
------------

அழுது மரத்து போன விழிகளுக்கு சற்று நேரம் அமைதி கிட்டிட கிடைத்த சந்தர்ப்பத்தில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று எப்போதும் எழும் வேளையில் மீண்டும் விழித்து கொண்டன நந்தனின் விழிகள். கண்களை திறந்து மூடியவன் இரவு அருகில் உறங்கியவனை தேடினான்.

"இவ்ளோ காலையில எங்க போனான் ஏழு மணி ஆனாலும் எருமை மாடு மாதிரி தூங்கிட்டு இருப்பான் இன்னைக்கு எனக்கு முன்ன எந்திரிச்சுட்டானா?" என அதிசயமும் ஆச்சர்யமும் இழையோட, முணுமுணுத்தபடி எழுந்து வெளியே வந்தவன் "முத்து ண்ணா!" என அழைக்க,

கூப்பிட்ட குரலுக்கு வேக நடையில் கையில் காஃபி டம்ளருடன் வந்தவர் "இந்தாங்க தம்பி" என நீட்டினார் முத்து.

அவரை மெச்சுதலாய் பார்த்தவன் டம்ளரை தன் கரத்திற்கு மாற்றி கொண்டு "ரிஷி எங்க ண்ணா ரூம்ல பாத்தேன் காணோம் வெளிய இருக்கானா?" என கேட்டபடி மிடறாக குளம்பியை உறிஞ்ச,

"இல்ல தம்பி அந்த தம்பி காலையில சீக்கிரமே கிளம்பி போயிட்டாங்க. நா எந்திரிச்ச போது வாசல் கதவு திறந்திருந்தது வெளிய கார் சத்தமும் கேட்டுச்சு என்னனு போய் பாக்குறதுக்குள்ள விருட்டுன்னு காரை கிளப்பிட்டு போயிட்டாங்க" என சொல்லி முடிக்க, விழியில் திகைப்பை காட்டியவன் உறிஞ்சிய குளம்பி உமிழ்நீருடன் கலந்ததை உணர்ந்து கடினப்பட்டு தொண்டையில் இறக்கினான் அபிநந்தன்.
---------
இதழில் சலனமில்லா புன்னகை படர"எனக்கு எல்லாமே தெரியும் ரிஷி" என்றான் உணர்ச்சியற்று.

"அவ்ளோ தானே இப்போ கிளம்பலாமா?" என கேட்டுவிட்டு விறுவிறுவென படியிறங்கி சென்றான் அபி நந்தன்.

"என்ன தெரியுமா?" என திகைப்பை காட்டியவனின் வாய் தானாக முணுமுணுக்க, அதிர்ச்சியின் பிடியில் சிக்கி மீள முடியாமல் உறைந்து போய் நின்றிருந்தான் ரிஷி.

நந்தனுக்கு விஷயம் தெரியும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை அதன் தாக்கத்தை நொடியில் சமாளித்து கொண்டவன் விறுவிறுவென படிகளில் இறங்கி அவன் முன்னால் சென்று நின்று மூச்சு வாங்கியபடி,

"உனக்கு தெரியுமா? ஏன் என்கிட்ட முன்னாடியே அந்த விஷயத்தை பத்தி கேக்கல. இப்டி ஒரு விஷயம் உனக்கு தெரிஞ்ச மாதிரி நீ காட்டிக்கவே இல்லையே ஏண்டா?. யார் சொன்னாங்க? உனக்கு எப்டி தெரியும்? விஷயம் தெரிஞ்ச பிறகும் என்மேல உனக்கு கோபம் வரலையா?" என அவன் தோள்களை பற்றி உலுக்கியவன், வேதனையில் பற்றி எறிந்த மனதை அணைக்க முடியமால் அடுக்கடுக்காய் கேள்விகளை தொடுத்தான்.

"எனக்கு உன்மேல கோபம் வரல ரிஷி. பாவம் நீ என்ன பண்ணுவ உன்னோட தங்கச்சி வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தானே அந்த மாதிரி பண்ண அவளோட பிடிவாதம் உன்ன அந்த மாதிரியான சூழ்நிலைய உருவாக்கிடுச்சு, உன்னோட இடத்துல நா இருந்திருந்தாலும் சுயநலமா தான் யோசிச்சிருப்பேன்" என்றான் நிதானமாக.

"உன் மேலயோ இல்ல உன்னோட தங்கச்சி, என்னோட சித்தி மேலயோ எனக்கு துளி கூட கோபம் இல்ல நீங்க முணுபேரும் சொன்னிங்கன்னு உங்க வார்த்தைய நம்பி எங்க போறேன்னு கூட சொல்லாம என்ன விட்டு மொத்தமா போனாளே அவ மேல தான் கோபம் வருத்தம் எல்லாமே.

நா திரும்பி வர்ற வரைக்கும் எனக்காக வெய்ட் பண்ணி என்கிட்ட கேட்டுட்டு அது உண்மையா இல்லையான்னு தெரிஞ்சுகிட்டு போயிருக்கலாம். இல்லையா எனக்கு கால் பண்ணி கேட்டுருக்கலாம்.

அவ்ளோ தான் அவ என்மேல வச்ச நம்பிக்கை" என்று விரக்தியான புன்னகை சிந்தினான் அபிநந்தன்.
--------------

"திருச்சியில என்னோட பிரெண்டுக்கு மேரேஜ் என்னால அட்டன் பண்ண முடியாது சோ எனக்காக நீ போயிட்டு வரணும்" என கெஞ்சுதலாய் கேட்க,

"ம்ஹும் என்னால முடியாது அது நாகரிகமா இருக்காது ராகவா உன்னோட பிரெண்ட் கல்யாணத்துக்கு நீ தான் போகணும் நா எப்டி போக முடியும் அங்க எனக்கு யாரையும் தெரியாது" என்றாள் வருணா மறுப்பாக தலையசைத்து.

"ப்ளீஸ் வரு என்னால முடியாதுன்னு தானே உன்ன போக சொல்றேன் முக்கியமான ப்ராஜெக்ட் விஷயமா வெளியூர் போக வேண்டி இருக்கு நியும் பாப்பாவும் போயிட்டு வாங்க" என்றதும்,

"எங்க மாமா போதோம்" என அறையில் இருந்து வேகமாக வந்தவள் ராகவனின் கைபிடித்து இழுத்தாள்.

வெளியே நடந்த சம்பாஷனைகளை ஒன்றுவிடாமல் கூர்மையாக செவிகளை தீட்டி வைத்து கேட்டு கொண்டிருந்தவள் திருச்சி பயணம் பாப்பாவை அழைத்து போ என்ற வரிகளில் கால்களுக்கு வேகம் கொடுத்து துள்ளலுடன் வெளிய வந்து கேட்க,மகளை முறைத்து பார்த்தாள் வருணா.

"திருச்சிக்குடா குட்டி" என்றான் ராகவன்.

"அம்மாச்சி அதிக்கதி சொல்லுமே அந்த ஊதா!" என விழிகள் விரித்து கேட்க,

"ஆமாண்டா அந்த ஊர் தான் நல்லா இருக்கும் நீயும் அம்மாவும் போயிட்டு ஜாலியா திருச்சியை சுத்தி பாத்துட்டு வாங்க இன்னைக்கு ஸ்கூல்ல மாமாவே லீவ் சொல்லிடுறேன்" என கொஞ்சல் மொழியில் பேசியவன் சுபர்ணாவின் மூக்கை பிடித்து ஆட்டி தூக்கி கொண்டான்.

"என்னால திருச்சிக்கு போக முடியாது ப்ளீஸ் ராகவா புரிஞ்சுக்கோ ரவி சார் வேற ஊருக்கு போயிருக்காறு அவரோட கிளாஸ் பசங்களுக்கும் நான் தான் டீச் பண்ணனும்" என்றதும்,

"வருணா மேரேஜ் சண்டே தான் டென்ஷன் ஆகாதா ஒரு நாள் எக்ஸ்டரா லீவ் எடுத்தா ஒன்னும் ஆகாது உன்னோட பிரின்சிபில் கிட்ட நான் பேசுறேன்".

"அதுக்கில்லை ராகவா.." என வருணா இழுக்க,

"ஏய் அவன் தான் இவ்ளோ தூரம் சொல்றானே போயிட்டு தான் வாயேன் திருச்சி என்ன உனக்கு புதுசா பிள்ளைய கூட்டிட்டு போயிட்டு வருவியா" என சாரதா தன் பங்கிற்கு அவளை வற்புறுத்தினார்.

இருவரும் சேர்ந்து முடிவெடுத்த பின் அதை மறுதலிக்க முடியுமா என்ன? என எண்ணியவள்,

"என்னமோ பண்ணுங்க" என்றாள் விருப்பமில்லாமல்.

"சுபர்ணா குட்டி சீக்கிரம் கிளம்புங்க மாமா அம்மா வண்டிய ஒர்க் ஷாப்ல விட்டுட்டு வறேன்"என கீழே இறக்கி விட,

"சரி மாமா" என்றவள் ராகவனின் கன்னத்தில் முத்தமிட்டு துள்ளி குதித்தபடி சென்றாள் சுபர்ணா.
-----------

"தங்கச்சியா? யாரு நீயா?" என இகழ்ந்தவன்,

"பாசம்னா என்னனு தெரியுமா? உனக்கு நம்பிக்கைக்கு அர்த்தம் தெரியுமா? உனக்கு துணையா நின்னதுக்கு இப்ப வரைக்கும் தண்டனைய அனுபவிச்சுட்டு இருக்கேன். உண்மை தெரிஞ்சும் ஒரு வார்த்தை கூட ஏண்டா இப்டி பண்ணேன்னு கேட்காதவனுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு வேதனை பட்டுட்டு இருக்கேன். அது சரி உனக்கு எங்க தெரிய போகுது வலிய பத்தி வலி கொடுக்க வேணா தெரியும்".

"போதும் ரிஷி நீ ரொம்ப பேசுற உனக்கு மட்டும் தான் வேதனையா ஏன் எனக்கில்லை தினமும் வலியை அனுபவிச்சுட்டு இருக்கேன் நீ சொல்லிட்ட நான் சொல்லலை அவ்ளோ தான் வித்தியாசம். என்ன சொன்ன ஓசி சோறா யாரு நான்" என இதழ் சுழித்து நிந்தனையாய் புன்னகைத்தவள்,

"எனக்கும் கொஞ்சம் தன்மானம் இருக்கு உரிமை இருக்குற இடத்துல உக்காந்து சாப்பிடலை அதுக்கு தகுந்த சன்மானம் கொடுக்க போறதால இங்க சாப்பிடுறேன் அதுல உனக்கு ஏன் வயிறு எரியிது வேணும்னா நீயும் உக்காந்து சாப்டு யாரு வேணாம்னு சொன்னது" என திமிராக பதில் கூறியவள் கால்மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

ரஞ்சனியின் நடவடிக்கை அவனுக்கு வருத்தத்தை அளித்தாலும் அதை வெளிகாட்டமல் "அது சரி நாய் வாலை நிமித்த முடியுமா? உன்னோட தலையெழுத்து இப்டி தான்னா யாரலை என்ன பண்ண முடியும் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ இந்த ஜென்மம்ன்னு இல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அபிக்கு வருணா தான் அவளுக்கு அவன் தான்.

இதை யாரலையும் மாத்த முடியாது உன்னோட முயற்சியில நீ பின்னடைவை தான் சந்திக்க போற ரஞ்சனி. அஞ்சு வருஷமா அவ நினைப்பை மட்டுமே சுமந்துகிட்டு வாழ்ந்துட்டு இருக்குறவன் இனிமே உன்ன திரும்பி பார்ப்பான்னு நினைக்கிறயா?, இப்ப இல்ல எப்பவும் நீ அவனோட மனசுல இடம் பிடிக்க முடியாது" என உறுதியுடன் கூறியவனை உணர்ச்சிகள் அற்று வெறித்தாள் ரஞ்சனி.

வலி தொண்டையை அடைக்க கண்களில் ஈரம் சுரந்து விருவிறுப்பை உண்டு பண்ணியது சட்டென முகத்தை திருப்பி கொண்டாள்.

"நீ எப்டி வேணாலும் போ நா வந்த விஷயத்தை முதல சொல்லிடுறேன் வருணாவ மறுபடியும் அபி கூட சேத்து வைக்க போறேன் என்னால பிரிஞ்சவங்களை சேர்த்து வச்சு சந்தோஷமா வாழ வைக்க போறேன் அதை நீயும் பாக்க தான் போற. நா முடிவு பண்ணிட்டேன் இதை சொல்லிட்டு போக தான் வந்தேன் ஏதாவது கோல்மால் பண்ணனும்னு நினைச்சீங்க நா மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்" என எச்சரிக்கை விடுத்தவன் முகத்தில் அத்தனை கோபம்.
 
Nirmala senthilkumar

Well-Known Member

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top