தேங்காய்ப்பால் சிக்கன்

Advertisement


Sahi

Well-Known Member
இது மிகவும் எளிமையான, ருசியான மற்றும் விரைவாக செய்யக்கூடிய உணவு.

தேவையானபொருட்கள்:
1. சிக்கன் - 1/4 கிலோ
2. தேங்காய் - 1/4 மூடி (4 பத்தை)
3. பச்சைமிளகாய் - 3
4. இஞ்சி - 1 இன்ச்
5. பூண்டு - 5 பல்
6. கறிவேப்பிலை - 1 கொத்து
7. உப்பு - ருசிக்கேற்ப
8. எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
9. மல்லி இலை - சிறிதளவு

செய்முறை:
1. கால்கிலோ கோழிக்கறியை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
2. இஞ்சி, பூண்டு மற்றும் பச்சைமிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. தேங்காயை துருவி சிறிதளவு சுடுதண்ணீரில் ஊறவைத்து கெட்டியான பால் பிழிந்துக் கொள்ளவும்.
4. அரைத்துவைத்தக் கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்து கோழிக்கறியை பிரட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
5. பின்பு ஒரு சட்டியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் ஊறவைத்த கோழிக்கறியை சேர்த்து வதக்கி, 10–15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். பின்பு தேங்காய்ப்பால் விட்டு மூடிபோட்டு 7 நிமிடங்கள் வேகவிடவும். இதில் பச்சை கறிவேப்பிலை மற்றும் சிறிது மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
தேங்காய்ப்பால் சிக்கன் தயார்.
குறிப்பு: தண்ணீர் சிறிதளவும் சேர்க்கக் கூடாது.

செய்துப்பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிருங்கள்.
நட்புக்களே இங்கு எழுதுவது எனது கன்னி (முதல்) முயற்சி. தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் கண்டிப்பாகத் திருத்திக்கொள்கிறேன் (எழுத்துப்பிழையாகினும், சமையல் குறிப்புகளாயினும்).

நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top