தீராத் தீஞ்சுவையே...8

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ_____8

மதிய உணவு தயாரான பின்பு... எல்லோரையும் சாப்பிட அழைத்தார் மித்ரன்...

நேத்ரா அண்ணிகளுடன் பரிமாற அனைத்தையும் தயார் செய்தார்... மித்ரன் உதவ, முகிலனும் பரிமாறிட முன் வந்தான்...

நேத்ராவிற்கு உடலின் சோர்வு எல்லாம் மனதின் நிறைவில் காணாமல் போனது நீண்ட பாயிட்டு வாழையிலை போட்டு சாம்பார் .. ரசம்.. கூட்டு.. பொறியல்.. அப்பளம்.. தயிர் .. வத்தக் குழம்பு.. என ஐந்து பெண்களும் அவரவர் பங்கிற்கு அசத்தியிருந்தனர்...

முகில் இத்தனை சொந்தங்களோடு உண்பதை ஏதோ உலக அதிசயம் போல செல்ஃபி எடுத்துக்கொண்டு இருந்தான்..

எல்லோரும் மனம் விட்டு பேசி .. நிறைவாக உணவு அருந்தி எழுந்த போது இதுவே சொர்க்கம் என நேத்ராவிற்கு நிம்மதியும் பேரானந்தமும் மேலெழுந்தது...

உண்ட மயக்கம் தொண்டருக்கும் என்பது போல அனைவரும் உறங்க சென்றனர் சிலர் ஓயாது பழைய விட்டுப் போன கதைகளை மீண்டும் இட்லி உப்புமா போல புதுப்பித்து பேசிச் சிரித்தனர்...

நேத்ரா மித்ரனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்...
என்னங்க எல்லாரும் வந்திருக்காங்க அவங்களே சமைச்சு சாப்பிட்டா நல்லாவா இருக்கும்.. என்று பீடிகைப் போட்டார்.

அம்மு கவலையேப் படாத இனி உன் சமையல் சேட்டைகளில் இருந்து உனக்கு வி.ஆர்.எஸ் தான்..

உன் சாம்பிராஜ்ஜியத்தை உன் உடல்நிலை தேரும் வரையில் தோதாக நடத்த ஒரு கண்ணம்மாவை தயார் பன்னிட்டேன் என்றார்...

நேத்ரா குழப்பமாக முழித்தார். .
உடனே கற்பனை குதிரையை தட்டி விட்டுடாத.....டி... கண்ணம்மா ஒரு சமைக்கும் பெண்மணி.. வயதானவர்.. ஆதரவற்று வாழும் தனிக்கட்டை .. அதான் நம்ம வீட்டிலேயே உனக்கு உதவியாக இருக்கட்டும் என உன் அண்ணனுடைய ஏற்பாடு என்றார்..

நேத்ராவிற்கு பெருமிதம் தான்... பார்த்தீர்களா எங்க அண்ணனை... என் மேல எவ்வளவு பாசம்... நீங்களும் இருக்கீங்களே.

மித்ரனுக்கு சிரிப்புதான் வந்தது. அடிப்போடி நல்லா பார்த்து பார்த்து செஞ்சா நல்ல அண்ணன்...தான்... ஆனால் கெட்ட புருஷன்...

இப்போ உங்க அண்ணிக்கு தெரிஞ்சா அவங்களும் உன்ன மாதிரி தான் என்னை பாராட்டி உங்க அண்ணன திட்டுவாங்க...

பெருமையா சொல்றேனு நினைச்சி நீயே உங்க அண்ணன உங்க அண்ணி கிட்ட போட்டு குடுத்துடாத...

நேத்ராவிற்கு புன்னகை விரிந்தது ... கூடவே மனமும் நடுங்கியது...
என்னங்க.....
என்னம்மா....
நா இந்த சர்ஜரி முடிச்சி நல்ல படியா வருவேனா... எனக்கு அதிர்டமே இல்லைங்க...

எல்லாரும் என்னை ஏத்துகிட்டாங்க நேரடியா யாரும் கோவத்த ஆனா நா நல்லபடியா வருவேனானு சந்தேகமா இருக்குங்க ..

உனக்கு ஒன்னும் ஆகாது அம்மு... நான் ஆகவும் விடமாட்டேன்... தைரியமா இரு... அப்படி உனக்கு ஏதாவது ஆனாலும் நானும் உன் பக்கத்துல தான் இருப்பேன் நீ பயப்படாம சந்தோஷமா இரு அப்போதான் ஆபரேஷன் கு உடம்பு சபோர்டிவா ஆரோக்கியமா இருக்கும்... சரியா..

ஹம்ம் சரிங்க...

சரி நேரமாச்சு யாழ ஸ்கூல் ல இருந்து கூட்டிட்டு வரனும் நா போய்டு வரேன்..

முகிலோட பிரண்ட்ஸ் வரதா சொன்னான் .. அதோட உன் அண்ணன் பசங்க தம்பி பசங்க எல்லாரும் வர நேரம் தான் வீடே கலாட்டாவா இருக்கப் போகுது நீ இப்போ கொஞ்ச நேரமாவது படு நான் போயிட்டு வரேன்... எனக் கிளம்பினார் மித்ரன்..

அதற்குள் பாரதி விஜியின் கைப்பக்குவத்தில் எண்ணைப் பலகாரங்களும் இனிப்பு வகைகளும் தடபுடலாகவேத் தமாரானது..


கதிரும் பன்னீரும் செல்வத்தின் சகோதரர்கள்.... அவரவர் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துவரக் கிளம்பியிருந்தனர்...
எல்லாம் கிட்டத்தட்ட யாழிசையின் வயதை சேர்ந்த கூட்டம் என்பதால் அரட்டைக்கும் ஆட்டத்திற்கும் பஞ்சம் இருக்காது….
முகிலின் நண்பர்கள் வந்துவிட்டதாக தகவல் வந்ததும் முகில் அழைக்க வேண்டி கீழே வந்தான்...

வந்தவன் வேகமான நடையோடு கடந்து போகையில் இடித்து சுழன்று இடம் மாறி மெல்ல தடுமாறி நின்றான்..

கவனிக்காமல் வந்து மோதியது அவனுடைய தவறுதானென்பதால் மன்னிப்பு கேட்க வாய் திறந்தவன் முழித்துக் கொண்டு நின்றான்.....
இது அந்த கருநீல சுடிதார் இல்ல… இவ எப்படி நம்ம வீட்ல…
அதற்குள் அவனுக்கான பஜனை நைனிகாவின் வாயினாள் ஆரமாபமாகி இருந்தது....
ஓ...மை காட் இவள தயவு செஞ்சு எனக்கு தங்கச்சி முறைனு சொல்லிடாத பிளீஸ் என் குட்டி இதயம் தாங்காது… வேண்டுதலோடு அவள் வார்த்தைகளையும் வசவுகளையும் கூட வாங்கக் கொண்டான்..

அவன் தான் போக வேண்டிய அவசரம் உணர்ந்து சமாதானக் கொடியின்றி மன்னிப்பு வேண்டினான்....

சாரிங்க... சாரி.. வெரி சாரி நான்...நான்... நா .. பன்னதுதா தப்பு ஒரு அவசரத்துல தெரியாம மேல மோதிட்டேன் சாரிங்க என வேண்டிக் கொண்டிருந்தான்...

அவள் எதையும் கேட்க தயாரில்லை என்ற தொனியில் அவனை கரித்துக் கொட்டி கப்பலேற்றிக் கொண்டு இருந்தாள்..

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவனுக்கு அவள் தனக்கு ஜூனியர் என்பது நினைவில் வந்தது... உன்னை எங்க கவனிக்கனுமோ அங்க கவனிக்கிறேன் என நினைத்துக் கொண்டு அமைதியாக பார்த்தான்...

அவன் மன்னிப்பு கேட்ட போதெல்லாம் திட்டித் தீர்த்தவளுக்கு அவன் அமைதி உருத்தியது...

அவளும் வாயை மூடிக்கொண்டு நின்றாள்...
அவன் மெல்ல நகர்ந்துவிட்டான்...

வாசலுக்கு வந்தவனுக்கு அங்கே அடுத்த அதிர்ச்சியாக நண்பர்கள் வரிசையாக ஃபென்டாஸ்டிக் ஃபைவ் மாதிரி நின்று கொண்டிருந்தனர்...

இவனுக்காக காத்திருந்து பொருமை பறந்த நண்பர் கூட்டம் வாசலில் இவனுடைய சமாதான உடன்படிக்கைத் தோல்வியைக் கண்டு அமைதியாக நின்றிருந்தது...

நம்ம ஹீரோ மீசையில மன்னு ஒட்டாத
மாதிரி ரொம்ப மெயின்ட்டெயின் செய்தும்
அவர்களின் சேம் சேம் பப்பி சேம்
பார்வையில் மெல்ல தலை கவிழ்ந்து...
பார்த்துட்டீங்களா... என்றான்...

அவர்கள் ஆம் எனத் தலை அசைக்கவும் அதா பார்த்தாச்சுல வாங்க போலாம் என அழைத்துச் சென்றான்.

நேராக அவனுடைய அறைக்கே சென்றனர்.. நேத்ராவைக் காண வேண்டியே இன்று முக்கியமான சந்திப்பு ....

முகிலன் எல்லோருக்கும் பாரதியின் உதவியோடு உபச்சாரங்களை முடித்துக்கொண்டு அம்மாவைக் காண அழைத்துச் சென்றான்...

அங்கே நேத்ரா.. சாண்டில்யனின் மன்னன் மகளோடு லயித்துக் கிடந்தார்...

முகிலனோடு அவன் பட்டாளத்தைக் கண்டதும் வாங்கடா பசங்களா என்ன ரொம்ப நாளா ஆளயேக் காணும் ....??

இப்போதா வர வழி தெரிஞ்சிதா.. இவன் ஏதாவது சென்டிமென்டா சீன் போட்டு வரவச்சானா.... என சிரித்தார்...

இல்லைங்க ஆன்டி உங்க உடம்பு இப்போ பரவாயில்லை தானே... நல்லா வீடு முழுக்க சொந்த பந்தங்களோட செம்ம ஜாலிதான் போல என சுதன் சூழலை இலகுவாக்கி பேசினான்...

ஆமான்டா உங்க அங்கிலுக்கு ஞாயான உதயம் வந்து ஆன்டிக்காக விட்டு குடுத்துட்டாரு... என சிரித்தார்...நேத்ரா

அது சரி உனக்கு எப்படி சுதன் தெரியும் முகில் சொன்னானா...

முகில் சொல்லிதா தெரியனுமா... நீங்க தா
காஃபி வித் டி.டி மாதிரி.. ஃபேமிலி வித்
நித்து னு எல்லா சோஷியல் மீடியா லயும்
ஸ்டேட்டஸ் போட்டு செல்ஃபி யோட
கலக்குரீங்களே... என்றான்..

முகிலுக்கே இந்த தகவல் புதிது ...ம்மா...
சொல்லவே இல்லை.

சுதனுக்கு மட்டும் சொல்லிட்டா போட்டேன் போடா... நீதான் அப்போ அப்போ அப்டேட் ஆ இருக்கனும்..

அது சரி என அனைவரும் சிரித்தனர்.. பேச்சும் சிரிப்புமாக இருக்க யாழிசையும் மித்ரனும் வந்தனர் ... இரண்டுநாள் அம்மாவை பார்க்காததால் யாழ் ஓடிவந்து அனைத்துக்கொண்டு கலங்கிவிட்டாள்.

அனுவும் சிந்துவும் மெல்ல மற்றவர்தளைக் கிளப்பிக் கொண்டு மித்ரனிடம் சொல்லிவிட்டு மெல்ல கிளம்பினர்...

முகிலன் விடுப்பு எடுத்த தினங்களுக்கான பாடக்குறிப்புகளை ஒப்படைத்துவிட்டு கிளம்பத் தயாராகினர்...

முகில் இவர்களை கூட்டிச்சென்று விடக் கூட சேர்ந்து வந்தான்... கீழே சொந்தங்கள் அடுத்த கூட்டணியை அமைத்து ஆளாளுக்கு ஒரு புறம் சமையல்.... சீட்டாட்டம்... ஊர்கதை...தாயம் முதல் ஆடுபுளி வரை அமர்களப்பட்டது..

முகிலின் நண்பர்களுக்கு அந்த சூழலும் மணமும் மக்களையும் மிகவும் பிடித்துவிட்டது... விடுமுறையாக இருந்திருந்தால் முழுநாளும் தங்கி ஆட்டம் போட்டிருக்கலாம்.. இப்போது ஆசையோடு வேறுவழியின்றி கிளம்பினர்...

முகில் நண்பர்களை அனுப்பிவிட்டு பாடக்குறிப்புகளை வாங்கியக் கையோடு வந்து கொண்டிருந்தான்..

இம்முறை இடித்து தள்ளி வீழ்த்துவது நைனிகாவின் முறையானது...

பாரதி விளக்கேற்ற நேரமாவதால் கட்டியப் பூச்சரத்தோடே மீதமிருந்த உதிரிப் பூக்களை தாவணியோடு ஏந்திக்கொண்டு வந்தாள்...

வீட்டில் நிறைய பேர் இருந்ததால் தாவணியோ சல்வாரோ தான் அணிய வேண்டும் என்பது செல்வத்தின் உத்தரவு...

உதிரிப் பூக்களோடு சரமும் பறந்திட ...
முகிலனே விழாமல் பிடித்துக்கொண்டான்
மாலையையும்.....மங்கையையும்....

நைனிக்கா.பயந்துவிட்டாள்....

ஐயய்யோ... இது அவன்ல.....

போச்சு ...போச்சு அப்போ நான்

திட்டும்போது யாருமே இல்ல இப்போ அங்கங்கே யாராவது வந்துகிட்டும் போய்கிட்டுமா இருக்காங்களே....

பதிலுக்கு இவன் திட்டுனா மானம் போகுமே என முட்டைக்கண்களை உருட்டிக்கொண்டு தயங்கித் தயங்கி பூச்சரங்களை அவனிடம் கேட்டு மௌனமாக கை நீட்டினாள்...

அவன் பூச்சரங்களைக் கொடுப்பதற்கு பதிலாக அவள் கைகளைக் குலுக்கி... சிரித்தான்...

ஏய்.... ஏய்...என அதிர்ந்து பின்னே நகர்ந்தாள்...
இவனோ ஒன்றும் நடவாதது போல நழுவிட அவள் தான் விழித்துக்கொண்டு நின்றாள்...
அதற்குள் பாரதியே வந்துவிட்டார்...
இங்க என்னடி பன்ற ஒரு பூவக் கூட ஒழுங்கா எடுத்துட்டு வர முடியலையா வா... மணியாகிடுச்சி என வேகமாக நகர்ந்து விட்டார்..
மீண்டும் அவள் முன் பிரசன்னமான முகிலனோ அவளை வழிமறைத்து விழி முறைத்து கேள்வி கேட்டான்...
நைனிகா முழித்துக்கொண்டு நிற்க.... மூனுநாளா காலேஜ் போற +2 வரைக்கும் படிச்சிருக்க இடிச்சா உனக்கு சாரி சொல்ல யாரும் கத்துக் கொடுக்கலையா....

தெரியாம தப்பு பன்னிட்டு சாரி கேட்டவங்கல நல்லா வைச்சு சண்டை போட மட்டும் தான் கத்துக்கிட்டு வந்தியா... என்று முகில் தன் முறைக்கு வாரினான்..

பின்பு அவனே பூக்களைக் கொடுத்துவிட்டு விலகினான்

பூக்களை வாங்கிக்கொண்டு நைனிகா நகர்ந்தாள்...

திரும்பி.. மெல்ல உன் பேரென்ன எனக் கேட்டான்....

மெல்ல திரும்பி... நைனிக்கா என்றாள்...

முகிலன் சிரித்தான்... பின்பு அப்பவே நினைச்சேன் என்றான்...

நைனிகா என்ன ....???என்றாள்...

ஹம்ம்... இந்த முட்டக்கண்ணிக்கு ஏத்த மாதிரி தான் பேரு வெச்சிருப்பாங்கனு நெனைச்சேன்... அதையே பேரா வெச்சிருக்காங்களே என்று கூறிவிட்டு ஓட்டம் பிடித்தான்....

நைனிக்கா அடிக்க தேடிவிட்டு காலை உதைத்துக் கொண்டு முறைத்துக் கொண்டு நின்றாள்.....
ஓடிப்போய் அறைக்குள் நுழைந்தவனுக்கு ஏனோ மனம் சந்தோஷமாக சாரல் வீசியது…

சோ இவ பாரதி அத்தையோட பொண்ணா… செல்வம் மாமா உங்க நேம் செலக்ஷன் சூப்பர்… அப்பா கடவுளே இருவது வருஷம் கழிச்சி இந்த சிங்கிலுக்கு மிங்கிலாக ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு… அத வெற்றிகரமா நான் முடிச்சி அந்த முட்டகண்ணியவே கை பிடிக்க நீதான்பா துணையிருக்கணும்…

___தொடரும்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top