தீராத் தீஞ்சுவையே...7

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ...7

எல்லாரும் இங்கே தானே இருக்க போறாங்க நீ கிளம்பி காலேஜ் போ தேவையில்லாம லீவ் போடக்கூடாது...என்க

முகில் மெல்ல முறைதான்... ம்மா... எனக்கு மட்டும் வேண்டுதலா...நீங்களே இருடானு கேட்டாலூம் நா நாளைல இருந்து போகத்தான் போறேன்...

இன்னைக்கு எல்லாருக்கும் எல்லாம் சரியா இருக்கானு பாக்கனும்... எல்லாருக்கும் என்ன என்ன தேவையோ பார்த்து பார்த்து கவனிக்கனும்மா ....இன்னும் உங்களுக்கு வேற ஷாப்பிங் பன்னனும் ம்மா...

எவ்ளோ வேலை தெரியுமா... நீங்க
என்னமோ தி கிரேட் முகிலன பார்த்து

ஏதோ ஒரு வி.ஐ.பி மாதிரி என்னைய நிக்க
வைச்சு கேள்வி கேக்குறீங்களே....

நேத்ரா இன்னும் குழம்பினார்... எனக்கு என்னடா இப்போ ஷாப்பிங்...?

ம்மா ... எனக்கு தெரியாது எல்லாம் நீங்க இனி எது கேக்குறதா இருந்தாலும் உங்க மித்துபாட்ட கேளுங்க நா செம்ம டையர்டு ..ம்மா...

எனக்கு கண்டிப்பா கொஞ்ச நேரம் ரெஸ்ட் வேணும்.. அதோட ஈவ்னிங் பிரேம் ..அனு...சுதன் எல்லாரும் வராங்க நான் தா கூட்டிட்டு வரனும்... ம்மா...

சரி முகில் நீ போ... நான் அப்பாட்ட கேட்டுக்குறேன்.... தேடினார்..மித்ரனை...

மித்ரன் மற்ற மச்சான்களுடன் இரவு மலையேரும் பார்ட்டிக்கு தனக்கு ஆதரவு திரட்டிவிட்டு. நேத்ரா வருவதை கவனித்து பேச்சை மாற்ற வேண்டி மற்ற பணி நிமித்தமாக பேசிக் கொண்டிருந்தார்...

நேத்ரா மித்ரனிடம் சென்று என்னங்க எனக் குரல் கொடுத்தார்....

மித்ரனோடு நேத்ராவின் குரலில் மற்றவர்களும் பேச்சை நிருத்தி அமைதி காக்க..

முகில் ஏதோ ஷாப்பிங் போகனும் சொன்னான்... அதான் ஏன்னு உங்ககிட்ட கேக்க வந்தேன்க... என்றார்

ஆமா.. அம்மு நானே சொல்ல வந்தேன் மறந்துட்டேன்.. இப்போ உடனே வேண்டாம் . உனக்கு எப்போ போக வசதியோ அப்போ போ ஆனா வெள்ளிக்கிழமை க்குள்ள முடிச்சிடு... மா.
என்க...
ஏன்....?
ஏன்...ஆ..?? உனக்கு தெரியாதா..
இல்லையேங்க..
சரிதான்.. இதே கேள்விய நீ கேட்டு நான் தெரியலைனு சொல்லியிருந்தா.... மேடம் இந்நேரம் வீட்டையே இரண்டா மாத்தியிருப்பீங்க......

வரப்போற வெள்ளிக்கிழமை என்னனு நல்லா போய்ட்டு காலெண்டர் பாரு அம்மு தெரியும்...

நேத்ரா சிறிது நேரம் யோசித்து விட்டு தலையில் தட்டிக் கொண்டு சிரித்தார்.. ஹாஸ்பிடல் வாசம் எல்லாம் மறந்தே போச்சு போங்க...

ஐயோ சாரிங்க நான் மறந்தே போய்டேன்... சாரி சாரி.... என்று வேகமாக அங்கிருந்து நகர்ந்தார்...

உடனே அன்பு மித்ரனை நோக்கி மாமா எப்படி தான் எங்க அக்காவ இத்தனை வருஷமா சமாளிக்கிறீங்க... அக்கா இன்னும் அதே மாதிரி தா இருக்கா... என சிரித்தான்…
வெள்ளிக்கிழமை அப்படி என்னவாக இருக்கும்....

__தொடரும்…
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top