தீராத் தீஞ்சுவையே...6

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ_____6

நோத்ரா களைத்து கறுத்து வாடிப்போயிருந்தார்... ஆனாலும் மனது மித்ரனின் வார்த்தைகளில் சற்று உற்சாகமாக இருந்தது காலைப் பதினோரு மணியளவில் மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு கிளம்ப தயாராகினர் இருவரும்.

நேத்ரா மீண்டும் மீண்டும் என்ன சர்ப்ரைஸ் என யோசித்தும் கேட்டும் மித்ரன் சொல்லாததால் சற்று கடுப்பாகவே காத்திருந்தார்.

அந்த யோசனையில் முகிலன் வந்ததைக் கூட கவனிக்கவில்லை.. முகிலன் அன்னையைக் கண்டதும் அமைதியாக அருகில் வந்தான்..

மா.... முகிலனின் குரலில் தன்னிலையடைந்த நேத்ரா மகனைக் கண்டதும் அருகே அழைத்து அமர்த்திக் கொண்டார்..

முகில் சாப்டியா கண்ணா... அம்முகுட்டி எங்க டா..? அவள கூட்டிட்டு வரலையா... இல்லம்மா குட்டிமா உங்களுக்கு முடியலனு தெரிஞ்சா ரொம்ப மனசு வருத்தப்படுவா மா படிக்க முடியாம கவனம் சிதறும் அதா அப்பா அவ கிட்ட உண்மைய சொல்ல வேண்டாம் னு சொல்லிட்டாங்க மா.

நேத்ராவிற்கும் அதுவே சரியெனத் தோன்றியது.. இருந்தாலும் பெண்பிள்ளையைத் தனியாக தவிக்க விட்டது மனதை உருத்தியது.

பாவம் டா யாழ் ஸ்கூல் போக தலைவார சிரமமா இருந்திருக்கும் ... என்ன சாப்பிட்டா...???வெளியில வாங்கி சாப்டீங்கலா...??? யாழ் லன்ச் கு என்ன எடுத்துட்டு போனா எனக் கேள்விகளை அடுக்கினாள்.

மகன் மௌனமாக தந்தையை ஓரப்பார்வை பார்த்து புருவம் உயர்ந்திக் கேள்வி கேட்டான்.

மித்ரன் கண்களை பெரியதாக விரித்து வேண்டாம் என ஜாடை செய்தார்.

முகிலன் ஒன்றும் தெரியாதவன் போல அமைதியாக ஆமாம் அம்மா போட்டு ... நேத்ராவை திசை திருப்பினான்.

மித்ரன் பில் கட்டிவிட்டு வரவும் மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

நேத்ரா அமைதியாக வந்தார். அவருக்கு உடல்நிலை அசதியோடு உறக்கத்தை யாசித்தது. முகிலனிடம் வாகன ஓட்டுநர் உரிமம் இருந்ததால் அவனே ஓட்டினான்.


மற்ற நேரமாக இருந்தால் நேத்ரா சம்மதிக்கவே மாட்டார். இன்று அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டே வந்தார்.

சோர்வு கண்களைச் சுழட்டி உறங்கிட வேண்டியது மெல்ல கண்களை மூடிட மித்ரனின் தோளில் சாய்ந்து கொண்டார்.


மித்ரன் என்ன நித்து ... எனக் கேட்க .. தூக்கமா வருதுங்க கொஞ்ச நேரம் என்க....

சரிவா என மடிமீது சாய்த்துக் கொண்டார்.

னமுகிலனும் அன்னைக்காக வேண்டி மெதுவாகவே வாகனத்தை செலுத்தினான்.

தாய் உறங்கிக் கொண்டிருப்பதை உறுதிபடுத்திக்கொண்டு
முகிலன் மெல்ல கேட்டான்.....

உங்களுக்கும் செல்வம் மாமாவிற்கும் என்ன பிரச்சினை.... ஏன் உங்கள் மீது எப்போதும் கோவமாக இருக்கிறார்... எனக் கேட்டான்.

கைப்பேசியில் விளையாடிக்கொண்டு இருந்தவரின் விரல்கள் முகிலனின் கேள்வியால் பட்டென நின்றது...

மகனை நிமிர்ந்து பார்த்தார்... அவன் ஒன்றும் தெரியாதவன் போல முகத்தை நேரே வைத்து வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.

மித்ரனின் கண்கள் விளையாட்டை விடுத்து வெளியே சன்னலை உற்று நோக்கியது...

அந்த நாளின் தாக்குதல் அவரை இன்றும் அதே அதிர்ச்சியில் ஆழ்த்தியது...

ஒரு கணத்தில் எங்கிருந்து தான் இந்தக் கோழைப் பெண்ணிற்கு அத்தனைத் தைரியம் வந்ததோ என்னால் கூட முடிந்திருக்காது.....

ஆனால் அன்று.....அவள் என் மீது கொண்ட காதல் என் மீதான உரிமை அவளை உள்ளுக்குள் உடைத்து நொருக்கி ஒட்டுமொத்த வெறுப்பையும் ஒன்றாகத் தந்திருக்க வேண்டும்..

இல்லையென்றால் என்னையும். தான் பெற்ற ஓன்பது மாதக் கைக் குழந்தையையும் விட்டு சாகத் துணிவாளா....

அவள் மணிக்கட்டிலிருந்து சிதறிய இரத்தக் கரையை இன்றும் என்னால் மறக்க முடியாது...

அதற்கு காரணமான என்னையே என்னால் மன்னிக்கவும் முடியாதே.....

கோவத்தில் கிழித்துவிட்டு வலியைக் கூட மறந்து மருத்துவ மனைக்கு வராமல் மிரட்டிய சூரப்புலி தானே இவள்....... முட்டாள்... முட்டாள்...தப்பு செய்தவன் என்னை விட்டுவிட்டு தன்னையே தண்டித்துக் கொண்டு திண்டாடிய அன்பான முட்டாள்..

என நினைத்து அவருடைய உதடுகள் ஒரு விரக்திப் புன்னகையைச் சிந்தியது...

ஆனால் அதற்கு நேர்மாறாக

கண்கள் கண்ணாடியைத் தாண்டி வடியும் முன் சில துளிக் கண்ணீரைத் துடைத்து மீண்டது.
எனக்கு ஏன் அப்படி எல்லாம் புத்தி கெட்டு போனது… என்னை நானே ஏன் அத்தனை கீழானவனாக மாற்றிக் கொண்டேன்…
எவ்வளவு பெரிய மோசமான கோழை நான்.. சுயலவாதி நான்…. துரோகி நான் …. ஆனாலும் என்மீது கோவப்பட இதோ இவளுக்கு மட்டுமே உரிமை உண்டு… இப்படி மனம் எதையாவது எதனோடோ முடிச்சிட்டு அவிழ்த்து மடிய….
முகிலன் எதையும் கவனிக்காதவன் போல ரிவர் வியூவ் கண்ணாடி வழியே தந்தையின் கண்ணீரையும் முக பாவனைகளையும் குறித்துக் கொண்டான்...

அடுத்த சில நிமிடங்களில் வீட்டின் வாசலில் கார் நின்றது... முகிலன் தந்தையை அழைக்க... கனவிலிருந்து விடுபடுபவனைப் போல அ....ஆஆ.. என்ன முகில் என்றார்...

வீட்டுக்கு வந்தாச்சு என்க.... ஓ சாரி முகில் இரு அம்மாவயும் எழுப்புறேன்..

என்னப்பா நீங்க ஹீரோ மாதிரி தூக்கிட்டு வரலாம்ல...

டேய் முகில் நா வெறும் 58கிலோ. . டா.. உங்க அம்மா 85 கிலோ.... அவள தூக்குறேனு டிரை பன்னா ஒன்னு நா அடுத்து ஹாஸ்பிடல் போகனும் .. இல்லனா அவளைத் தூக்கும் போதேக் கீழே போட்டு மறுபடியும் அவள ஹாஸ்பிடல் அனுப்பனும் என்க...

முகில் சிரித்தான். மித்ரனே மெல்ல நேத்ராவை எழுப்பினார்... எழுந்தவர் ஓ சாரிங்க நிறைய நேரம் தூங்கிட்டேனா... சாரி... சாரி...

முகிலன் கதவைத் திறக்க மெல்ல எழுந்து வந்த நேத்ராவின் கண்களை மித்ரன் இரு கைகளால் மூடிக் கொண்டு அழைத்துச் சென்றார்.

நேத்ரா என்னங்க இது விளையாடிட்டு இருக்கீங்க என்ன சர்ப்ரைஸ் என்க...

கண்களின் முன்பிருந்த கைகளை விளக்கியவுடன் முன்னே பார்த்தவள் விழிகள் விரியப் புன்னகைத்தார்...
திரும்பித் திரும்பி மித்ரனையும் ஒரு முறை பார்த்துக்கொண்டு மெல்ல நெருங்கினார்... வேகமாக உள்ளேச் சென்று அனைவரையும் கண்டு புன்னகையோடு நெருங்கினார்..

எப்படி இருக்க அன்பு (அன்புச் செழியன் நேத்ரா வின் உடன்பிறப்பு).. உன் பசங்க எங்க என்க?? அன்பு சிரித்தான்.. ஸ்கூல் போய்ருக்காங்க அக்கா ஈவ்னிங் நேரா இங்க வந்திடுவாங்க..

அம்மா அப்பா நைட் நீங்க இங்கே தான் தங்கினீங்களா...? சாப்டீங்களா... ??
விஜி (அன்பின் மனைவி ) நீ எப்படி இருக்கே... பசங்க நல்லா தானே இருக்காங்க.... நேத்து நீ வராததால எல்லாரும் என் மேல கோவமா இருக்கீங்கனு நெனைச்சேன்....

அண்ணா நீ கூட எப்படி என கணவரையும் செல்வத்தையும் அண்ணி பாரதியையும் மாறி மாறிப் பார்த்தார்...

மித்ரன் அமைதியாக புன்னகைக்க செல்வமும் வேறுவழியின்றி முறைப்பை நிறுத்தி புன்னகைப் பூத்தார்..

செல்வத்தின் உடன் பிறந்த மற்ற இரு சகோதரர்களும் அவர்களின் மனைவி மக்கள் சகிதம் வந்திருந்தனர்.

அவளுடைய மனதிற்கு நெருக்கமான அனைத்து உறவுகளையும் ஒரே இடத்தில் திரட்டியிருந்தார் மித்ரன்...

பத்தொன்பது ஆண்டுகளாகிறதே ....இவர்களையெல்லாம் இப்படி பார்த்து... நேத்ரா அழுவதா ஆனந்தப்படுவதா எனத் தெரியாமல் கண்கலங்கி அனைவரையும் வரவேற்று உபசரிக்க எத்தனிக்கையில் விஜியும் பாரதியும் மற்ற அண்ணிகளும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீ ஓய்வு எடு நேத்ரா என்க ...

நேத்ராவிற்கும் அந்த அமைதி தேவையாகவேப் பட்டது... தன்னறைக்கு சென்று சன்னலை வெறித்தார்..

மித்ரன் எல்லோருக்கும் கை கூப்பி நன்றியைத் தெரிவித்தார்..

முகிலன் எல்லோரையும் உபசரித்து அடுத்த கட்ட தேவைகளைக் கணக்கிட்டு அத்தைகளிடம் சென்று தேவையான லிஸ்ட் ஐ வாங்கிக்கொண்டு கிளம்பினான்.

நேத்ராவைக் காணச் சென்ற மித்ரன் அவளின் சந்தோசத்தை கண்டு மனகிழ்வதற்கு பதிலாக அவருடைய
சாட்டையடிக் கேள்விகளால் நொந்து விழி வீழ்த்தி மௌனமாகப் பின்வாங்கினார்....

நேத்ரா கேட்டதில் தான் தவறு என்ன....?
உப்பு தின்றால் தண்ணி குடித்து தானே ஆக வேண்டும் என மித்ரனின் மனம் உள்ளத்திற்குள் உழன்று தவித்துக் கொண்டிருந்தது

இந்த வார்த்தைகளை கேட்கவா இந்த காலைப் பொழுதை எதிர்நோக்கி காத்திருந்தேன்...

இவளை இப்படி வருந்த வைக்கவா இந்த இன்ப அதிர்ச்சியைத் தர நினைத்தேன்..

இவளால் அன்பு காட்ட முடிந்த அளவிற்கு ஏன் என்னை புரிந்து கொள்ள முடியவில்லை ..

ஹம்ம்... விரக்தியாக சிரித்தார்... பிள்ளையார் பிடிக்க இப்படி குரங்கான கதையாகிப் போனதே.. என்று...

__தொடரும்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top