தீராத் தீஞ்சுவையே...47

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____47

அந்த ஆனத்தத்தால் விளைந்த கண்ணீர். அது தந்த நிறைவோடு இந்த வலிகளை மட்டுமே சுமந்த டைரியின் பக்கங்கள்.... இதோ.... கிச்சன் சிங்கில் சட..சடவென எரிந்து சாம்பலாவதைத் தான் பார்த்துக்கொண்டு நின்றார் நேத்ரா..

ஏன் டி...

ம்ம்ம்ம்... என்ன....

இத்தனை வருஷம் எழுதி பாதுகாத்து இன்றைக்கு ஏன் இப்படி பன்ற..

சொல்றேன்....

அமைதியாக எரிந்த துகல்களை குழாயைத் திறந்து மொத்தமாக வடியவிட்டார்...

அந்த கருகிய குப்பைகளோடு தன் நினைகளையும் கருகிப் போகும் படி வேண்டுதலோடு....

தங்களது அறைக்கு சென்று மீண்டும் அதே ஊஞ்சளில் இப்போது மித்ரனோடு அமர்ந்து கொண்டு இருட்டை வெறித்திருந்தாள்.... காற்றின் குளுமை மனதின் வெப்பத்தை துடைத்து போட்டது... கைகள் கோர்த்து சாய்ந்து விட்டார் மித்ரனின் தோளோடு...

என்ன தான் இன்னும் உன் மனசுக்குள் உறுத்திகிட்டே இருக்கு... அம்மு...

நீங்க தான்..

நானா...மறுபடியும் பழைய குப்பையக் கேட்காத பிளீஸ்... வேற என்னவேனாலும் கேளு....

குடுங்க...

என்ன... குடுங்க...

அதான் கேக்குறேன்...

என்னடி சொல்ற...என்ன கொடுக்கனும்..

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...

நான் என்ன சொன்... ஓ... ஏய் கேடி... உன் டீச்சர் வேலைய என்கிட்டயே காட்றியா...
என்னதான் உன்கிட்ட குடுத்து வருஷம் 25 வருஷம் ஆச்சே ...

அப்படியா.... ஆழ்ந்த குரல்.... அதன் பொருள் இருவருக்கும் புரிந்து தான் இருந்தது....

இல்லனு சொல்றியா....

உங்களுக்கு என்ன தோனுது....

அம்மா தாயே எனக்கு ஒன்னும் தோனல ...நீ சொல்லு ... ஏன் டைரிய இப்போ கொலுத்துன...

அது இனி யாருக்கும் தெரியக்கூடாது முக்கியமா முகிலுக்கும் இசைக்கும்...


ஏன்...

உங்களுக்காக தான்.....
எனக்காகவா....??? ஏன்...??? ஏன் எனக்காக. ..

எதுக்காக இத்கனை வருஷம் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து எல்லாத்தையும் மறந்து வாழ்ந்தேனோ அதெல்லாம் இனிமேலும் மாறிடக்கூடாதுனு தான்...

புரியல டி ...

எல்லா குழந்தைக்கும் அவங்க அப்பா தாங்க ஹீரோ.....அப்பா மேல அவங்களுக்கு இருக்கிறது கண்மூடித்தனமான நம்பிக்கை.... அளவில்லாத பாசம்.....

அப்பா அது வெறும் உறவு மட்டும் இல்லைங்க......வாழ்கையோட ஒவ்வொரு கட்டத்துலயும் அப்பாவோட கடமையும் பங்கும் அதிகம்..... அப்பா தா ஒரு குழந்தையோட எதிர்காலத்த வழிநடத்தனுங்க....அவர் ஒரு குழந்தைக்கு ரோல் மாடல்.... பிரண்ட்.... ஃபிலாசஃபர்.... இப்படி எல்லாத்துக்குமே ஒரு நல்ல அப்பா கூட இருக்கனுங்க.....

நம்ம பசங்களுக்கும் எப்பவுமே நீங்க தாங்க எல்லாவுமா இருக்கனும்..... பசங்களுக்கு மட்டும் இல்லைங்க.... எனக்கும் கூட நீங்க தான் எல்லாமே....

நம்ம பசங்களுக்கு நீங்க எப்பவுமே ஹீரோங்க... உங்க மேல அவங்களுக்கு இருக்க நம்பிக்கை பாசம் அந்த ஹீரோ இமேஜ்... அது என்னைக்குமே உடையக் கூடாதுங்க....
அதுவும் என்னால அது கண்டிப்பா உடையவேக் கூடாது....


நீங்க நல்ல புருஷனா இருந்தத விட ரொம்ப நல்ல அப்பாவா இருந்து இருக்கீங்க ... ஒவ்வொரு விஷயமும் நம்ம பசங்களுக்கு பார்த்து பார்த்து செய்வீங்க... இந்த ஒரு சின்ன காரணம்.. உங்க ஹீரோ இமேஜ உடைச்சா அத பசங்க தாங்க மாட்டாங்க அதான் எரிச்சேன்....

எல்லாருமே தப்பு செய்வாங்க... தெரிஞ்சு மாட்டிகிட்டவங்க கெட்டவங்களா அடையாளம் தெரியிராங்க...

தெரியாதவங்க தப்பிச்சு நல்லவனா வேஷம் போட்றாங்க... மத்தபடி யாருமே 100% நல்லவங்க இல்லைங்க...

தப்புங்கிறது திருத்திக்கிற வரைக்கும் தான் தப்பு...

தான் செய்த குற்றத்த நியாப்படுத்தி மறுபடியும் அதையே தைரியமா செய்றவங்கல அந்த லிஸ்ட்ல கூட சேக்க முடியாது...

இரண்டு ரூபா கூடுத்து வாங்குற பென்சிலுக்கே தலைக்கு மேல ரப்பர் சேத்து வருதே ஏன்... தப்பு எல்லாரும் செய்வாங்க... அத திருத்திக்க வாய்ப்பு வேணும் இல்லையா... அதான்...

நான் உங்கள என் காதலயே போட்டு வாங்கயிருக்கேனே எப்படி உங்கள விட்டுக் கொடுக்க முடியும்...

நீங்க எவ்வளவோ தப்பு பன்னி இருக்கீங்க நிறைய பொய் சொன்னீங்க...கை நீட்டி அடிச்சி இருக்கீங்க என்ன விட்டு பிரிஞ்சு கூட போனீங்க...டைவர்ஸ் கூட கேட்டீங்க... இன்னும் எனகிட்ட சொல்லாத இரகசியங்கள் கூட உங்க கிட்ட இருக்கு அது உங்களுக்கும் தெரியும்…. ஆனா நான் ஏன் உங்கள விட்டு போகல.....தெரியுமா ...காதல் ..

இந்த இருவது வருஷமா எனக்கு எத்தனையோ போராட்டம் தா....

அப்போ எல்லாம் பொறுமையா பொருத்துகிட்டு உங்க வசதிக்கு வளைஞ்சதுக்கு காரணம் ஒன்னு தாங்க.... அது நம்ம காதல் இன்னொன்னு நம்ம குழந்தைங்க...

அவங்களுக்கு ஆரோக்கியமான குடும்ப சூழல தான் கொடுக்க்கனும்... அவங்களுக்கு வாழ்க்கை மேலையோ குடும்ப அமைப்பு மேலையோ நம்பிக்கை போயிட கூடாதுனு தான்...

அதோட எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு போறாடி நாம கல்யாணம் பன்னிகிட்டோம் ...அத அவ்வளவு ஈசியா ஒரு பிரிண்ட் பன்ன பேப்பர்ரோட முடிவால பிரிச்சிட முடியுமா..
நீங்க வேணும்னா அதெல்லாம் மறந்து இருக்கலாம் … நான் எதையும் எப்பவும் மறக்கவே இல்லைங்க...
டிவோர்ஸ் எதுக்குமே ஒரு தீர்வு இல்லைங்க.....

அது வெறும் பேப்பர் தான்... நான்..... நம்ம பசங்க..... என் காதல் .....எல்லாம் உயிருள்ள பொருள் ....அதோட மதிப்பு வெறும் பிரிண்ட் பன்ன டிவோர்ஸ் பேப்பரோட வெத்து எழுத்தா....... வெறும் கலர் கலர் கரென்சி நோட்டா... இல்லைங்க...

எனக்கு எல்லாத்தையும் விட நீங்க முக்கியம்... உங்களோட காதல் முக்கியம்... நம்ம பசங்க முக்கியம் .. அவங்களோட எதிர்காலம் ரொம்பவும் முக்கியம் ....

அதுக்காக தான் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்தேன்..☹. என் சுயமரியாதை என் தைரியம்...என் கனவு என் ஆசை... ஒரு கட்டத்துல என் புருஷனே என் கை விட்டு போயிட்டார்.... இப்போது அழ மட்டுமே முடிந்தது அவரால்….

அதையும் நானேப் போராடி இதோ இந்த 20 வருஷம் கழிச்சு என்னோட காதலால மீட்டு எடுத்துட்டேன்... அப்படினு நம்புறேன்...... .எனக்கு அது போதும்... அந்த நம்பிக்கை இன்னும் இருக்குற காலத்தை நகர்த போதும்.......

ஆனா பசங்களுக்கு .... அவங்களுக்கு......

நீங்க என்னைக்குமே அவங்களுக்கு ஹீரோவா மட்டும் தாங்க இருக்கனும்...

அவங்க மனசுல உங்களோட பிம்பம் எப்பவுமே உயர்வா தெளிவா ஒரு வழி காட்டியா... பிரண்டா.... கைடா... சூப்பர் ஹீரோவா எப்பவும் அப்படியே இருக்கனும்க...... அதுக்காக தான் அந்த டைரிய எரிச்சிட்டேன்... இது வரைக்கும் தெரியாதது இனியும் தெரியாது... தெரியவும் கூடாது....

நீங்க எப்பவும் போல அவங்களுக்கு ஹீரோ தான்....... ஆனால் அதுக்காக நான் உங்களை மனானிச்சிட்டதா அர்த்தம் இல்ல….

மித்ரன் வாயடைத்து போனான்.... என்ன கொடுத்து ஈடு செய்வேன் இந்த அன்பிற்கு...

. __தொடரும்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யாழ் மொழி @ காயத்ரி வினோத் குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top