தீராத் தீஞ்சுவையே....4

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ____4


நேத்ரா கரும்பலகையில் சாக்குக்கட்டியை ஏந்தி தேதியை எழுதக் கேட்டாள்... அருகிலிருந்த ஆசிரியரிடம்.....
இதமாக தொடங்கிய நாள் இன்று இப்படியா ஆக வேண்டும்…..

அதைக் கேட்டு எழுதும் நொடிதான் அவைக் கண்முன் நிழலாடியது....

உள்ளம் ஏதோ ஒரு கனத்தால் அழுந்த இதயத்தை விரல்களின் இடையே நசுக்கி பிழிவதைப் போல ஒரு மென்வலி தொடங்கியது.

அது மெல்ல மெல்ல முன்னேறுவதற்குள் பழைய நினைவலைகளின் தாக்கம் சிந்தையை வருத்தி அவள் கைகளின் தழும்பின் மீது பார்வை பதிந்த நொடி அங்கே இரத்தம் வழிந்த பிரமைத் தோன்றியது

அவளை பைத்தியமாக பிதற்ற வைத்த தருணங்களும் அவளை துரோகத்தின் குழியில் தள்ளி மூடிய முகங்களும் அவள் உணர்வுகளை சிதைத்த காட்சிகளும் கண்களில் சுழண்டு அடித்தது…

நேத்ராவின் கண்கள் செருகியது... இதயத்துடிப்பு அதிகரித்தது கைகளும் உள்ளுக்குள் உடலும் சில்லிட்டுப் போனது .

அவள் சுயநினைவை இழக்க நேர்கையில் சக ஆசிரியர்கள் சிலர் கவனிக்க நேத்ரா கீழே முழுதாக சரியும் முன் தாங்கப்பட்டு அருகே உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாயினர்...
எல்லாம் அந்த பொல்லாத தேதியை நினைத்த மாத்திரத்தில் நடந்து முடிந்துவிட்டது…

தண்ணீர் தெளித்தும் பயனற்று அவர் வலியால் அலைப்புருதலைக் கண்டு வேகமாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அங்கே அவரை சேர்த்த பின் நெருங்கிய சக ஆசிரியர் வினோலியா எஸ்தர் மூலம் மித்ரனுக்கும் முகிலனுக்கும் தகவல் தந்தனர்...

மித்ரன் நேத்ராவை இறக்கிவிட்டு சிறிது தூரமே கடந்திருந்தமையால் உடனடியாக பள்ளியைக் கடந்து மருத்துவமனைக்கு விரைந்திருந்தார்...

முகிலன் கல்லூரிக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் நேத்ராவின் உடல்நலக்குறைவு பற்றி தகவல் அறிந்து பதட்டத்துடன் கல்லூரியை விட்டுக் கிளம்பினான்.

தந்தையைத் தொடர்பு கொண்டு மருத்துவமனை விவரம் அறிந்து வந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை...

காலையில் அத்தனை ஆசையாக சமைத்து பரிமாறி சிரித்து வழியனுப்பிய அன்னைக்கு என்னவோ ஏதோ என இருவரும் காத்திருக்க மருத்துவர் சோதித்து பின் வெளியே வந்து கூறிய வார்த்தைகளை தந்தையாலும் மகனாலும் ஏற்க முடியாது அதிர்ந்து போய் அமர்ந்து விட்டனர்..

நேத்ராவிற்கு கார்டியாக் அரெஸ்ட்...

திடீரென இதயத் துடிப்பு அதிகரித்ததாலும் அவரின் நினைவு தப்பி இரத்த அழுத்தம் உயர்ந்ததாலும் நேர்ந்த விபரீதம்.. இது....

மேலும் இதயத்தில் அடைப்பு இருக்கவும் வாய்ப்பு உண்டு மேற்படி சிகிச்சையின் பின்பு அடைப்பு இருக்கும் பட்சத்தில் சின்ன சர்ஜரி செய்ய நேரலாம் எனக் கூறிவிட்டுச் சென்றார்..மருத்துவர்….

மித்ரன் வெளியே மௌனமாகவும் உள்ளுக்குள் உடைந்தும் போனார்...

முகிலன் முழுதாகவே கலங்கிவிட்டான்… ஏதோ ஒன்று அன்னையின் உள்ளத்தை அரிக்கிறது என்று புரிகிறது ஆனால் இன்னது என்று காரணம் தான் கண்டறிய முடியவில்லை….

ஏனோ அவனுக்கு விவரம் தெரிந்தது முதலே இந்த தேதியில் அன்னையிடம் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதை சிறுவயது முதலே முகிலன் உணர்ந்து இருக்கிறான்… ஆனால் இதில் இவ்வளவு உடலை பாதிக்கும் படியான ஏதோ ஒரு பெரிய காயம் இருக்குமோ என்று சில சமயங்களில் யோசித்து கடந்திருக்கிறான்… ஆனால் இன்றும் அப்படி ஏனோ கடந்து போகத்தான் முடியவில்லை….


இருந்தாலும் தந்தையைத் தேற்றும் பொருட்டு பா அம்மாவுக்கு எல்லாம் சரியாகிவிடும் நீங்கள் தைரியமாக இருந்தால் தான் யாழ் பதட்டமின்றி இயல்பாக இருப்பாள்... பிளீஸ்... பா... என்றான்.

முகிலன் கூறிய பின்னர் தான் மித்ரனுக்கும் யாழிசை நினைவு வந்தது மாலை அவளை பள்ளியிலிருந்து அழைத்து வரும்படி முகிலனையே பணித்தார்...

அவள் சிறிய பெண்.. பொதுத்தேர்வு எழுத வேண்டிய நிலையில் அவளிடம் எதையும் கூறி அவள் மனதை கலங்க வைக்க கூடாதென முகிலனிடம் தெளிவாக அறிவுருத்தினார்..

முகிலன் நகர்ந்த பின்பு பெரும் தனிமையையும் பயத்தையும் உணர்ந்தார்...
ஏனோ எல்லாம் அவரை அவருக்கே அருவறுப்பாகத்தான் காட்டிக்கொண்டு இருந்தது… உள்ளுக்குள் ஒரு கலக்கம் கிளம்பியது….

முதல் முறையாக நேத்ராவின் நிலைக்கு தானேக் காரணம் என உணர்ந்து உள்ளுக்குள் உடைந்தார்..

அவள நான் சரியாக கவனிக்கவில்லையோ..... என் தேவைகளைத் தாண்டி அவளுடைய அகம் புறம் பற்றி அன்றும் யோசிக்கவில்லை... இதோ... இன்றும் நான் யோசிக்கவே இல்லை...யோ….

என்ன மாதிரியான மனிதன் நான் .. அவளுக்கு எப்போதுமே நான் முழுமையான துணையையும் பாதுகாப்பையும் தரவில்லையே....

அவள் மீது செய்த சத்தியங்களை எத்தனை முறை மீறிவிட்டோம் என சிறுபிள்ளைத் தனமானத் தவறுகளைக் கூடத் தேடித் தேடி மனம் கலங்கினார்... முக்கியமானக் காரணத்தை மட்டும் மறந்தே போனார்....

மீண்டும் மருத்துவர் வந்தார் நேத்ராவின் இதயத்தின் வால்வுகளில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் அவற்றை உடனடியாக நீக்க வேண்டுமென்றும் கூறினார்.

ஆனால் தற்போது நேத்ராவின் உடலும் மனமும் பலகீனமாக இருப்பதால் சற்றுத் தேரிய பின் சர்ஜரி செய்தே ஆக வேண்டும் அதுவும் கூடுமான வரையில் விரைவாக செய்ய வேண்டும் எனக் கூறினார்...

ஒரு மணி நேரம் கழித்து நேத்ராவை பார்கலாம் என கூறிச் சென்றார்... மருத்துவர்.
அவரிடம் மனம் வருந்தும்படியாகவோ அல்லது மீண்டும் சுயநினைவை இழந்து உயர் அழுத்தம் அல்லது இதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்கும்படியாகவோ எதையும் கூறக் கூடாது....கவனமாக பார்த்துக்கொள்ளுதல் அவசியம் எனக் கூறிச் சென்றார்..

நாளை அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் எனக் கூறிவிட்டுச் சென்றார்.

ஒரு மணிநேரத்தை கடிகாரத்தோடு ஆமையாக கடத்தினார் மித்ரன்..ஶ்ரீ

அதற்குள் நேத்ராவின் உடல்நலக்குறைவு தெரிந்து அவளது தந்தை தட்சிணாமூர்த்தி தாய் லலிதா... மற்றும் அத்தை மாமா வசந்தி___ கணேசன். அண்ணன் செல்வம் அண்ணி பாரதி அவர்களது மகள் நைனிகா... நெருங்கிய தோழி திலகவதி... மற்றும்பல உறவினர் எல்லாம் கூடி வந்து விட்டனர்

மித்ரனுக்கு ஒருபுறம் ஆறுதலாகத் தோன்றினாலும் மறுபுறம் வேதனை மனதை உறுத்தியது.

நேத்ராவின் வாழ்வில் நடந்து முடிந்த சில நிகழ்வுகளால் செல்வம் மித்ரனிடம் பேசுவதைத் தவிராத்திருந்தார்...

முகிலனும் யாழிசையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் பதறிவிடுவாள் என நேரே வீட்டிற்கு அழைத்துச் சென்றான்..

அங்கே அன்னை இல்லாததாலும் தந்தை வந்து அழைக்க வேண்டிய தம்மை அண்ணன் வந்து அழைத்ததாலும் யாழ் ஏதோ காரணம் உள்ளது என உணர்ந்து மௌனமாகவே வந்தாள். அவளிடம் இயல்பாக நடிக்க முகிலன் திணறித்தான் போனான் .


ஆனால் யாழ் டியூஷன் கிளம்பிய உடன் ஒன்றும் தெரியாதவன் போல யாழ் குட்டி அம்மாவுக்கு கொஞ்சம் ஃபீவர் அப்பா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ருக்காங்க நீ வரியா இல்ல அண்ணன் மட்டுமே போய் பார்த்துட்டு வரட்டுமா...?? ( முகிலன்)


மித்ரன் கூறியதைப் போல யாழ் சற்றே பதட்டமாகப் பார்த்தாள்.. முகில் அம்மாக்கு என்ன ..??? நீ ஏன் ஒரு மாதிரி இருக்க ...??? என்கிட்ட எதையும் மறைக்கிறாயா முகில் அண்ணா எனக் கேட்டாள்...


முகில் சுதாரித்துக் கொண்டான்... இ..இல்ல..இல்ல அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல குட்டிமா அண்ணா பொய் சொல்வேனா ..??? பொய் சொன்னாதா நம்ம அம்மாவுக்கு பிடிக்தாதே நான் எப்படிமா பொய் சொல்வேன் . நிஜமா யாழ் அம்மாவுக்கு ஜூரம் தான்.
அண்ணா நான் வேனும்னா இன்னைக்கு உன்கூடவே இருக்கவா.... நீ டியூஷன் போக வேண்டாம்....என்றான். (முகில்)

யாழ் சற்று யோசித்தாள் அம்மாவிற்கு ஒன்னும் இல்லை... இருக்காது ... இருக்கவும் கூடாது... முகில் பொய் சொல்ல மாட்டான் என நம்பினாள்.

ஓ.கே முகில் நீ அம்மா அப்பாவ கூட்டிட்டு வா நா டியூஷன் போய்ட்டு முடிஞ்ச உடனே உனக்கு கால் பன்றேன் என்றாள

என்னை வந்து கூப்பிட்டு போ... அம்மாக்கு ஃபீவர் ல சோ நானே ஏதாவது சமைக்கிறேன் முகில் அம்மா பாவம் வந்து ரெஸ்ட் எடுக்கட்டும் என்றாள்

முகிலனுக்கு மனம் உருகியது..

சரிடா குட்டிமா வா நானே உன்னைக் கூட்டிட்டு போறேன்...நீ தனியா சமைக்க வேண்டாம் நாம சேர்ந்து சமைக்கலாம்.. சரிதானே...

இல்லனா ஒருநாள் ஹோட்டல் ல வாங்கிக்கலாம் டா என்றான்.

சரி அண்ணா... ஆனா அம்மாவுக்கு பிடிக்காதே... பரவால்ல ஒரு நாள்தானே அப்பா அம்மாவ சமாதானம் செஞ்சு ஓகே சொல்ல வச்சகடுவாங்க இல்லையா முகில்... என்றாள் __

ஆமா குட்டி மா ஓகே உன் டியூஷன் வந்தாச்சு நீ பார்த்து போ முடிஞ்ச உடனே எனக்கு கால் பன்னு நா வரேன் . ஓகே பார்த்து யாழ்... பை....

சரி முகில் ... என கையாட்டி விடை பெற்றாள் யாழ்...

முகிலன் யாழிசையை சமாளித்துவிட்டு தந்தைக்கு அழைத்து விவரம் கேட்டான். அவர் கூறிய செய்திகள் அவனை இன்னமும் தொய்வடையச் செய்தது...


மனதை நிதானப்படுத்திக் கொண்டு ஒரு நாளுக்கு தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு பிளாஸ்க்கில் டீ உடை... நேத்ராவிற்கு உடை உணவு தேவையான அனைத்து அத்யாவசியப் பொருட்களையும் சேகரித்துக் கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்தான்.

களைத்து வாடினாலும் அங்கே இருந்த உறவுகள் சற்று ஆறுதலைத் தந்தது.

நேரம் கடந்து அவன் நண்பர்களும் விஷயம் அறிந்து மருத்துவமனைக்கு வருவதாகக் கேட்டனர்...

மருத்துவமனையில் வேண்டாம் டா அதிக கூட்டம் என்றால் அம்மாவேக் கூட பயப்பட நேரலாம் எனக் கூறிக் காத்திருந்தான்.

நேத்ரா கண்விழித்தவுடன் நர்ஸ் பார்ப்பதற்கு அனுமதி அளித்தார்..

இருவர் இருவராகச் சென்று நோயாளியைப் பேசி தொந்தரவு செய்யாமல் தனித்தனியே பார்த்துவிட்டு திரும்பும் படி அறிவுருத்தினார் .. ( செவிலியர்)

மித்ரன் உள்ளே நுழைந்தார்..... கண்கள் கலங்க கைகள் நடுங்க மனம் உரைந்து... விரல்கள் வியர்த்து நா....வரண்டு உள்ளே நுழைகையிலே அவர் விழிகளில் நிரப்பிக் கொண்ட மனைவியின் உருவம் கண்களைக் குடைந்து தழும்பவா ....??? வேண்டாமா என கண்களுக்குள் கண்ணீர் உழன்று கொண்டிருந்தது..கூடாது... கூடாது ... அவள் முன் கலங்கி அவளைக் கலங்கடிக்கக் கூடாது என பயமுறுத்திக் கொண்டிருந்தது... ( மித்ரனின் மனது )

மெல்ல நெருங்கிச் சென்று விழிகளால் தன் காதல் மனைவியை வருடினார்.
பார்வைகளால் அவளை ஊடுருவினார்...
அவள் வலதுபுறக் கையில் தழும்பிற்கு அருகே சொருகி இருந்த ஊசியையும் அதில் இறங்கிக் கொண்டிருந்த குளூகோஸையும் பார்த்த நொடி பழைய நிறைவுகள் நிழலாட மித்ரன் மேலும் உள்ளுக்குள் நொருங்கிவிட்டான்...

இப்போது புரிந்தது நேத்ராவின் இந்த நிலைக்கு காரணம் என்னவாக இருக்குமெனப் புரிந்து உள்ளம் அவரை மாறி மாறி குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி அறைந்தது...
காரணம் இந்த தேதி…. இந்த பிப்ரவரி இரண்டு அவளுக்கும் அவனுக்குமான இருண்ட பக்கங்களின் இரணம்….

நேத்ரா மித்ரனின் கரங்களை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு தலையை இருபுறமும் அசைத்தார்...

மித்ரன் அவளருகில் குனிந்து நெற்றியில் முத்தமிட்டு சாரிடி அம்மு ஐ லவ் யூ.... ஐ லவ் யூ டி செல்லப் பொண்டாட்டி... எந்த கோவமா இருந்தாலும் வீட்டுக்கு வந்து மாமவ நாலு அடி கூட அடிச்சி சட்டையப் புடிச்சி சண்டை போடு இப்படி ஹாஸ்பிடல் ல இந்த மருந்து ஸ்மெல்ல வேண்டாம் டி...
என்னோட தப்புக்காக நம்ம பசங்களுக்கு தண்டனை வேனா….டி பிளீஸ்….
உனக்கு தா இதுலா புடிக்காது ல.... நீ.. நீ... உனக்கு ஒன்னுமே இல்ல நீ நாளைக்கு காலைல நீ சமைச்சாதா நா சாப்டுவேன் டி. சரியா ... சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேர்ர வழியப் பாரு.

ஓகே வா நீ. நா.. முகில் ...யாழ்... எல்லாம் நாளைக்கு ஈவ்னிங் பீச்க்கு போறோம்.. சரியா... நீ காலைல நா பாக்கும்போது வீட்டுக்கு போக தயாரா இருக்க அவ்ளோ தா...

இல்லன்னா நா உன்ட பேச மாட்டேன் டி அம்மு சீரியஸ்...
நேத்ரா மெல்ல புன்னகைத்து விழியால் சம்மதம் தெரிவித்தாள்...
ஆனாலும் உள்ளத்து வலி கண்களில் கண்ணீராக வழிந்தது...

சரி அம்மு நீ தூங்கு ஓகே வா ரெஸ்ட் எடு யாரு வந்தாலும் பேசக்கூடாது... அமைதியா தலையாட்டிட்டு இரு நா இப்போ போறேன் நைட் உன் பக்கத்துலயே இருக்கேன் சரியா....

உன்னவிட்டு எங்கயும் போக மாட்டேன்... தூங்கு... எனக் கூறி நகர எத்தனித்தார்.

நேத்ரா வின் கைகள் மித்ரனின் விரல்களை அழுத்தமாக பற்றியது கண்கள் எதையோ யாசித்தது... அந்த பார்வையில் ஆயிரம் காதலும் ஆயிரம் பிளீஸ் களும் ஆயிரம் சாரி களும் இருந்தது.

மித்ரன் ஒரு விரலை உதட்டின் மீது வைத்து அமைதியாக தூங்கு என சைகை செய்தார்...

மீண்டும் நெற்றியில் முத்தமிட்ட விலகிடுகையில் அந்த உதடு நேத்ராவின் உடதடுகளின் மீது ஒட்டி ஒட்டாமல் இரகசியம் பேசிப் புன்னகை வாங்கிக் கொண்டு விடை பெற்றது.

நேத்ரா கண்களை மூடிக்கொண்டு அமைதியாக படுத்துக்கொண்டாள்..
ஆனால் மித்ரன் மெல்ல வடிந்த புன்னகையோடு உள்ளுக்குள் தவிப்பு சற்று குறைய வெளியேறினார்...

ஆனால் குற்றவுணர்வு கொல்லாமல் கொன்றது...

. ....__தொடரும்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top