தீராத் தீஞ்சுவையே...23

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ_____23

திலகவதி நேத்ராவிடம் மித்ரனின் எண்ணைக் கொடுத்தாள்....

எல்லாம் என்னிடம் சொல்லிவிட்டு செய்தவளுக்கு தற்கொலைக்கு முடிவேடுக்க மட்டும் நான் தேவைப்படவில்லையா..... என்றாள் கோவமாக....

இல்ல திலகா நீ அவ்வளவு தூரம் சொல்லியும் நான் தானே உன் பேச்சை கேட்கவில்லை...

மீண்டும்..... உன்னிடம் கேட்டாள் மட்டும்... நீ என்ன பத்திரமா பார்த்து செத்துப் போடினு ஆல் தி பெஸ்ட் ஆ சொல்லி இருப்ப......இல்லை தானே..

அதான் உன்கிட்ட சொல்லாமலே நானே மறுபடியும் தப்புத் தப்பா.... தப்பு பன்னிட்டேன் திலகா.... சாரிடி...

உன் சாரிய நீயே பார்சல் போட்டு வித்துடு... எனக்கு வேணா... போடி..

இந்தா....
என்ன....
மித்ரனோட நம்பர்....
உனக்கு..... உன்கிட்ட எப்படி....
என்னை பார்க்க வந்தார்....
ஓ.....
என்ன ஓ....
ஒன்னும் இல்ல டி... வீட்டுக்கு போலாமா...
கொஞ்சம் பேசிட்டு போலாமா...
அவசியாமா. . பேசனுமா..
கண்டிப்பா பேசியே ஆகனும்..
சரி... உனக்காக...
நான் பேச வந்தது உனக்காக...
என்ன...
மித்ரனை பத்தி...
நான் எதையும் தெரிஞ்சிக்க விரும்பல... திலகா . பிளீஸ்.
நீ தெரிஞ்சிகிட்டே ஆகனும் டி பிளீஸ்...

வேணாம் திலகா.
முடியாது நேத்ரா...

சொல்லு... ((கண்ணீர் வடியத் தொடங்கியது....))
மித்ரன் கூறிய ஜாதகம் தொடர்பான அனைத்தையும் கூறியவள்....
நான் அவருக்காக சப்போர்ட் பன்ன இங்க வரல....

எப்போ தற்கொலை வரைக்கும் தனியா நீ முடிவு பன்ன நினைச்சியோ...

உன் வாழ்க்கை சார்ந்த முடிவையும் நீயே தான் எடுக்கனும் ...
நேத்ரா...
உனக்கு அவன் சொன்ன வார்த்தைல அவ்வளவு நம்பிக்கை இருந்ததால் தானே நீ தற்கொலைக்கு முயற்சி பன்னின....

இப்பவும் உனக்கு நம்பிக்கை இருந்தா.... கால் செய்து பேசு....

உன் காதல் உனக்கு வேணும் னா.... பேசு.

காதலுக்காக எதை வேணும்ம் நாலும் விட்டுக்கொடுக்கலாம்...
காதலை விட்டுக் கொடுப்பது தியாகமோ .... சந்தோஷமோ இல்ல... பெரிய முட்டாள்தனம்...
எல்லாருக்கும் இரண்டாவது வாய்ப்பு வர்ரது இல்ல... நேத்ரா.... உன் லைஃப்ல மித்ரனைத் தவிர யாருக்கும் இடமில்லை னு நு நினைச்சா... மித்ரனிடம் பேசி உன் காதலுக்காக போராடு...
அதைவிட்டுட்டு கோழைமாதிரி விலகி இருப்பதோ... சாவதோ... நல்ல வழி இல்லை ..

மறுபடியும் தப்பு தப்பா... தப்பான முடிவு பன்ன மாட்டனு நம்புறேன்....நேத்ரா....
வா முகத்த கழுவிக்க வீட்டுக்கு போகலாம்...
நான் நைட் பஸ் ஏறினா தான் காலைல வீட்டுக்கு போக முடியும்...

இன்றோடு அவள் எண்ணை வாங்கி ஒரு மாதம் தாண்டியும் இவளாக எந்த காலும் செய்யவில்லை...
அவனிடமிருந்தும் கால் வரவில்லை...
மனதிற்குள் குமைந்தாள்...அவன் தானே வேண்டாம் னு போ னு சொன்னான்...
என்னை டார்ச்சர் னு சொன்னான்... நான் ஏன் கால் பன்னனும் அவனுக்கு நான் வேணும் னா இன்நேரம் கால் வந்திருக்கனும்...

ஆனா திலகா கிட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவளோட மனச மாத்தி என்ன கால் பன்ன சொல்லி ஆர்டர் போட்டா...

நா போடனுமா... மாட்டேன்... எத்தனை முறைதான் நானே ஏமாந்து நிக்கிறது...

எத்தனை வருஷம் ஆனாலும் சரி நான் கால் பன்ன மாட்டேன்...

அவன் தானே என்ன போடி னு சொன்னான் அவனே தேடி வரட்டும்...
என்று தினம் தினம் தனிமையில் குமைந்து கொண்டும் .... உளறிக் கொண்டும் அவன் எண்களை கண்டு பேசிக்கொண்டும் நாட்களைக் கடத்தினாள்...

ஒருநாள் மாலை நேத்ராவிற்கு திலகவதி கொடுத்த மித்ரனின் எண்ணிலிருந்து கால் வந்தது....
பதட்டத்தில் முதலில் செல்லை தவறவிட்டவள்... மெல்ல சுதாரித்து எண்ணை கவனித்தாள்....
எண்களை சேமிக்கவில்லையேத் தவிர நன்றாகவே மனப்பாடமாகி இருந்தது...
மெல்ல சைலன்ட் மோடில் போட்டுவிட்டு தன் அறைக்கு சென்றாள்...
விடாமல் அடித்துக் கோண்டே இருந்தது...
மொபைலைக் கையில் எடுத்தாள்... ஆன் செய்து காதில் வைந்த்தாள்....
எதையும் பேசவில்லை...
அம்மு..... அம்மு.... நீதானே.... பிளீஸ் டி அம்மு நீ பேசலனாலும் பரவாயில்லை டி தயவுசெய்து கால கட் பன்னிடாத டி பிளீஸ் அம்மு......

நான் பேசனும் செல்லம்... பிளீஸ்... உனக்கு எவ்ளோ கோவம் இருந்தாளும் திட்டு... அடி... என்ன வேணாலும் பன்னு ஆனா.... ஆனா... ஏன்டி.... ஏன்டி என்ன விட்டு போகனும்னு நினைச்ச....
நீ இல்லன்னா நா மட்டும் சந்தோஷமா இருப்பேனு நினைச்சியாடி... நானும் உன்கூடவே வந்துருப்பேன் டி....

இனி உ... உன...உனக்குஅப்படி ஒரு எண்ணம் வந்தா அப்போ நான் தான் முதல்ல சாகனும்.... உன் உயிர் போறதுக்குள்ள நான் .... நான் செத்துடனும் அம்மு........ உடைந்து அழுதான்....

அவன் படபடவென பேசியதைக் கூட திடமாகத் தாங்கியவளால் அவனுடையக் கண்ணீரைத் தாங்க முடியாமல் கதறிக் கதறி அழத் துடங்கினாள்....

இருவரும் மாறி மாறி அழுதனர்... நேத்ரா மூன்று மாதமாக உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த ஒட்டு மொத்த காதலையும் கொட்டி அழுதாள்....
மித்ரனோ... மூன்றுமாத தவிப்பையும் ...
நேத்ராவின் பிரிவையும் ஈடுகட்ட முடியாமல் அவள் கண்ணீருக்கு அவனுடைய கண்ணீரால் பதில் சொன்னான்....

அம்மு... நாம கல்யாணம் பன்னிகிட்டா உனக்கு ஏதாவது ஆகிடும்னு அம்மா...சொன்னாங்க டி..... அதான்டி நா.... நா.... ....உன்ன விட்டு விலக நினைச்சேன்....
ஆனா.... .அம்மு...... இனி..... இனி.... என் உயிர் போனா தான் என்னவிட்டு உன் உயிர் போகனும் டி....
என்ன ஆனாலும் சரிடி ரெண்டு பேரும் கல்யாணம் பன்னிக்கலாம் பொண்டாட்டி...
மாமா.... உன்ன விட்டு இனி எங்கையும் போக மாடாடேன் டி... யார் சொன்னாலும் என்ன ஆனாலும் சாவே வந்தாலும் நான் உன் கூடவே இருப்பேன்டி அம்மு....
ஆமா....என்ன கேக்காம நீ மட்டும் எப்படி டி சாகலாம்னு முடிவு பன்ன....
இனி என்ன கேக்காம இப்படி ஏதாவது பன்னின உன்ன நானே கடிச்சி தின்றுவேன் பாத்துக்கோ....

நேத்ரா அழுதாள்..... அழுதாள்.... அழுது கொண்டே சிரித்தாள்... ம்ம்ம் கொட்டினாள்... கைப்பேசி என்பதை மறந்து தலையாட்டினாள்.... பேச முடியாமல் நா .....தழுதழுக்க தொண்டை அடைக்க மூக்கை உறிஞ்சிக் கொண்டு அழுது தீர்த்தாள் .

மித்ரனால் அவளுடைய அழுகையைத் தாங்க முடியவில்லை.. தேதோ பேசினான்... ஆனால் அவனும் அழுகையை நிப்பாட்டவில்லை....

நான் போக சொன்னா நீ விட்டுட்டு போகலாமா.... அம்மு... நேர்ல வந்து கன்னத்துல நாலு போட்டு என்ன கல்யாணம் கட்டிக்க சொல்லி தாலியோட ல நின்றுக்கனும்....

அதவிட்டுட்டு இப்படி பைத்தியம் மாதிரி.... போடி . ... லூசு...

நீ இல்லாம மாமா மட்டும் இங்க என்னடி செய்யப்போறேன்... இனிமேல் இப்படி ஏதாவது ஏக்குத்தப்பா செய்யேன்... உன்ன அப்படியே வெச்சி வெளுத்துடுறேன்...

அவளுக்கு சிரிப்போடு அழுகையும் மாறி மாறி வந்தது.... ஆமா...யாருடா.....மித்து....அது மாமா....

நான் தான் டி... பொண்டாட்டி ...
அத நான் தானே சொல்லனும்... நீயே சொல்ற ..

நீ இப்போ இருக்க கடுப்புல... சொல்ல மாட்டல அதா...நானே சொல்லிட்டேன்....
நான் சொல்ல மாட்டேனு எப்படா சொன்னேன் ..

அப்போ சொல்லுடி என் செல்ல உருள....
என்னடா சொல்லனும்...
மாமா.... மாமா....
ம்ம்ம்....
ம்ம்ம்..... இல்ல டி... மாமா....
ம்ம்ம்...
அம்மு பிளீஸ் டி ஒரே ஒரு டைம் ... டி பிளீஸ் மாமாக்காக... சொல்லு செல்லம்மா ..
ம்ம்ம்..... ம்ம்ம்.... சரி....
மாமா.... மாமா....
மாமா..மாமா....
ஐ லவ் யூ ......மாமா....
ஐ லஸ் யூ ...மாமா....
உம்ம்மாமா.....
சொல்ல முடியாது போடா...
அம்மு....
ம்ம்ம்....
இப்போ சொல்றேன் டி... இனி இந்த ஜாதகம் ஜோசியம்....ஜாதி....வசதி.... பணம்....பிரச்சனைனு என்ன வந்தாலும்... நம்ம ரெண்டு பேர்ல யாருக்கு என்ன ஆனாலும்....

நீதான் என் பொண்டாட்டி.... நான் தான் உன் புருஷன்.... இதுல எந்த மாற்றமும் இல்ல அம்மு....

நீ தான் இனி எனக்கு எல்லாம்.... யார் என்ன சொன்னாலும்... என்ன தடை வந்தாலும் இந்த ஜென்மத்துல எனக்கு நீதான்... உனக்கு நான் தான்...டி ...

அப்படியே ஏதாவது ஆனாலும் நாம புருஷன் பொண்டாட்டியா ஆன பிறகு ஆகட்டும்... உன் கூடவே நானும் வர தயாரா இருக்கேன் அம்மு...
ஐ லவ் யூ டி.... செல்லப் பொண்டாட்டி....
எனக்கு ஒரு ப்ராமிஸ் பன்னு.... பொண்டாட்டி....

என்ன.... டா....
சொன்னாதான் மேடம் ப்ராமிஸ் பன்னுவீங்கலா... புருஷன் மேல நம்பிக்கை இல்லையா .......பன்னுடி.
ப்ராமிஸ் ..

இனி எதுக்காகவும் எந்த சூழ்நிலையிலும் நீ இப்படி ஒரு முடிவை எடுக்கவே கூடாது இது மாமா...மேல ப்ராமிஸ் ஓ.கை வா....
ம்ம்ம்......
நல்ல பொண்டாட்டி டி நீ....இப்படி தான் என்ன சொன்னாலும் சரிங்க மாமானு சமத்தா . மண்டைய ஆட்டனும்.... நோ அப்ஜக்ஷன்ஸ் ஓ.கே.
சிரித்தாள்.. ஓ.கே. டா...
மாமா ....வ... ஏதும்.... நடுவுல டா... சொன்னியாச் செல்லம்...
ம்ம்ம்.. அது ஃப்லோவுல வந்திருக்கும்...டா...மாமா....
ஃப்லோவுல...... ஃப்லோவுல தானே.... பரவால்ல விடு....
ஃப்லோவுல சில சமயம் கெட்ட வார்த்தை கூட வரும் மாமா. .

என்னது.. .பரவாயில்லை மாமா சொன்னதால அட்ஜஸ்ட் பன்னிக்கிறேன்...
இருவருக்கும் நேர்ந்த ஊடலின்.. சோகம் எல்லாம் கைப்பேசி புன்னியத்தில் காதலாய் மாறியது....

இருவருக்கும் சிரிப்பும்.... வெட்கமும் ..... காதலும்..... கண்ணீரும் கணக்கற்று கரைபுறண்டு ஓடியது....
அவளிடம் கெஞ்சகனான்.... கொஞ்சினான்..சண்டையிட்டான்......
சீண்டினான்..... வம்பு வளர்த்தான்.... அவளை சிரிக்க வைக்க அத்தனைக் குரங்கு சேட்டைகளையும் செய்தான்....
இருவரும் தொலைப்பேசி என்பதை மறந்து... ஒருவருக்குள் ஒருவர் கூடுவிட்டு கூடுபாய்ந்து தொலைத்த காதலையும் மோதலையும் தேடித் தேடி ஈடு செய்தனர்....

ஆனாலும்.... எதற்காக மித்து நேத்ரா விடம் சத்தியம் வாங்கினானோ....

அதை அவனே சிதைத்து.... அவனாலேயே.. அவள் அப்படி மீண்டும் ஒரு முறை சாவின் விளிம்பில் போறாட வேண்டிய நிராபந்தத்தையும் அவனே உருவாக்கி விட்டு.... கதறப் போவது தெரியாமல்... இன்று அவளிடம் சத்தியம் வாங்கி சீண்டி சீண்டி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்....


___தொடரும்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top