தீராத் தீஞ்சுவையே...10

Advertisement

Yazh Mozhi

Active Member
தீராத் தீ______10

முகில் நேத்ராவின் பதிலில் ஒரு கணம் ஆச்சரியமும் குழப்பமுமாக தந்தையைப் பார்த்து புன்னகைத்தான்....
ப்பா செம்ம ஆளுதான் நீங்க….

மித்ரனோ எல்லாம் தலைவிதி என பெருவிரலால் நெத்தியில் பட்டை போட்டு.. நேத்ராவிடம் ஒரு உதையை அன்பளிப்பாக வாங்கிக் கொண்டார்....

நேத்ரா கடந்த கால நினைவுகளை புரட்டிய படி அமைதி காக்க முகில் பொருமையின்றி ம்மா.... ... ம்மா.... அம்மா.... சொல்லுங்க என நிகழ்வுக்கு கொண்டு வந்தான்....

நேத்ரா ஆரம்பித்தார்....

ஹம்ம்ம்ம்... எல்லாத்துக்கும் காரணம் இந்த பாழாப்போன ஃபோன் தான்....

நான் அப்போதா...டிகிரி முடிஞ்சி எங்க நிறுவனத்தோட ஒரு கிளை ஸ்கூல்ல வேலைக்கு சேர்ந்தேன்... அப்போதான் சொந்தமா வேளைக்கு போய் என்னோட இரண்டுமாச சம்பளத்தை சேர்த்து வைச்சு ஆசை ஆசையா ஃபோன் வாங்கினேன்...

உங்க தாத்தா பாட்டி மிடில் கிளாஸ் தான் ஆனா எங்களுக்கு தேவையானது எல்லாம் செய்து கண்டிப்போட தான் வளர்த்தாங்க...

அந்த கண்டிப்பிலிருந்து வேலைக்கு போக ஆரப்பிச்ச உடனே கிடைச்ச சுதந்திரத்த நான் மிஸ் யூஸ் பன்னிட்டேன்...

புதுசா வாங்கின ஃபோன் ல ஒன்னுமே தெரியாம பிரண்ட்ஸ் கிட்ட கேட்டு அத்தனை சோஷியல் நெட்வொர் கையும் ஓபன் பன்ன ஆரம்பிச்சேன்...

அத உங்க மாமா செல்வம் கண்டுபுடிச்சி திட்னாங்க... எனக்கு அத ஒழுங்கா பயன்படுத்த ஏத்த மாதரி எல்லாம் கத்துகுடுத்தாங்க ஆனா யார் தேவையில்லாம தானா வந்து பேசினாலும் அவாய்ட் பன்ன சொல்லி ஆர்டர் போட்டாங்க... ஃபோடோஸ் பயன்படுத்தக் கூடாது யாருன்னு தெரியாதவங்க கூட பேசக்கூடாது ... இன்னும் நிறைய....

என்னால ஒரு கட்டத்துக்கு மேல அத அவாய்ட் பன்ன முடியல... தேவையில்லாத நிறைய பேர் பேசவும்... எல்லாத்தையும் குளோஸ் பன்னிட்டேன் .. அப்போ எனக்கு ஏஜ் 20 தான் எதையும் சமாளிக்க தைரியம் இல்லை...

அப்பறம் அங்க சில மாசம் ஒர்க் பன்னிட்டு வீட்டுக்கு வத்து அப்பா அம்மா கூடவே தங்கி பக்கத்திலேயே வேலைக்கு போக ஆரம்பிச்சேன்...

ஆனா எனக்கு நிறையப் புது புது நம்பர் ல இருந்து கால்ஸ் வர ஆரம்பிச்சிது முடிஞ்ச வரைக்கும் அவாய்ட் பன்னேன்... திட்டினேன்..

நிறைய பேர் எடுத்து தப்பா கூட பேசி மோசமா பிஹேவ் பன்னாங்க... அந்த சிம் ஆ மாத்திட்டா வீட்ல கேள்வி கேப்பாங்களேன்னு பயந்து அதிக நேரம் ஃபோன் ஆ ஆஃப் ல போட்டேன் ...

ஒரு கட்டத்திற்கு மேல உங்க செல்வம் மாமா தா என்னக்கு தைரியம் சொன்னாங்க.. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை... பயப்படாதனு சொல்லி எல்லா அகௌன்டையும் யாரும் கால் பன்னாத மாதிரி பன்னாங்க... கொஞ்ச நாள் நிம்மதியா போச்சு.... அதே மாதிரி ஒரு நாள் ஏதோ பெரிய டென்ஷன்ல இருக்கும்போது ஒரு ஃபோன் கால் வந்தது...

யாரோ நித்யா இருக்காங்கலானு கேட்டு கால் வந்தது... பேசினது ஒரு ஆண் கூரல் எனக்கு இருந்த டென்ஷன் ல திரும்ப பேச விடாம சென்னைத் தமிழ்ல வாங்கு வாங்குனு வாங்கிட்டு கால் கட் பன்னிட்டேன்...

அடுத்து ஒரு பத்து நிமிஷம் கழிச்சு எனக்கு சாரினு ஒரு மெசேஜ் வந்தது...

அப்பறம் என்னம்மா ஆச்சு...

ஹம்ம் .... அதோட எனக்கு ஏழரை சனி ஸ்டார்ட் ஆச்சு... போடா ...

முகில் சிரித்தான்... என்னப்பா... ஹீரோ என்ட்ரி இப்படி ஜீரோ என்ட்ரி ஆய்டுச்சி...

அடப்போடா உங்க அம்மாவுக்காவது ஏழரை சனி தான்..... எனக்கு ஆயுல் தண்டனையே ஆரம்பிச்சிடுச்சி... பெய்ல் கிடைக்காம இன்னும் திண்டாடிகிட்டே இருக்கேன்...

அதுக்கு தான்டா சொல்றேன்... முடிஞ்சா கல்யாணமே பன்னிடாத...

அப்படி பன்னாலும் உங்க அம்மா மாதிரி வாயாடி ....டீச்சர்... னு படிச்ச பொண்ணா பன்னவே பன்னாத... அதான் உனக்கு நல்லது..

ஒரு கணம் முகிலுக்கு நைனிகா நினைவில் வந்து போக . நான் உங்கல மாதிரி இல்லப்பா... அமைதியா .....அடக்கமா.... நம்ம அம்மாவுக்கு புடிச்ச மாதிரி பொண்ணாதா தேர்ந்தெடுப்பேன்....

அது சரி... அம்மு. இவன் திருந்த மாட்டான் டி .... நான் இருவது வருஷத்துக்கு முன்ன எடுத்த அதே முடிவதா இவனும் எடுத்துருக்கான்... கண்டிப்பா பையன் ஜென்ம தண்டனைக் கைதி தான்டி...

ஏங்க.... என் முன்னாடியே என்னையே கிட்டல் பன்றதும் இல்லாம அவனுக்கும் சொல்லி குடுக்குறீங்களா....
நியாயமா இந்த வசனம் எல்லாம் நான் தான் பேசனும் எல்லாம் தெரிஞ்சும் ஓவரா வாய் பேசுனீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன்..

நான் மௌன விரதம் டா தங்கம் யூ கண்டினியூயூயூ...

வாங்க உங்கல கவனிக்க வேண்டிய விதத்துல கவனிக்கிறேன்...
டேய் மணியாகிடுச்சி தூங்கு போ....
ம்மா... கதை...
ஒத கெடைக்கும்... நாலுநாளா காலேஜ்கு மட்டம் போட்டாச்சு போய் நேரத்தோட தூங்கு போ..

ம்மா... ம்மா... ம்மா... பிளீஸ் மா....
நோ முகில் போ. . .. நாளைக்கு சொல்றேன் போடா....
அது ஒன்னும் சிதம்பர ரகசியம் இல்ல... போ முகில் தூங்கு மணியாகிடுச்சு தம்பி... சொல்பேச்ச கேளு போ....
ம்ம்ம்ம்..... போங்க ம்மா.... குட் நைட்...
ப்பா... குட் நைட்...
குட்நைட் முகில்...

உறங்க சென்றவன் மனதில் இப்போது நைனியை கவனிக்க வேண்டிய திட்டங்களுக்கு பிளான் .ஏ.... பிளான்... பி... எனத் தயாரித்து விட்டு நிம்மதியாக உறங்கிவிட்டான்...

நான்கு நாள் விடுமுறையை விருந்தோடும் பல உறவவுகளோடும் செலவிட்டு விட்டு இன்று கல்லூரிக்குள் காலெடுத்து வைத்தான் முகில்...
அப்பாடா.... என்னதான் வீட்ல ஹாயா சாப்டு தூங்கி சொந்த பந்தங்களோட தலைவாழை இலை போட்டு சாப்பிட்டு கதைபேசி விளையாடி அரட்டை அடிச்சாலும்....
இந்த காலேஜ் ல நுழைஞ்சி க்ளாஸ்கு போறதுக்குள்ள கலர் கலரா கண்ணுக்குள்ள மின்னலடிக்கரா மாதிரி நடக்குரதெல்லாம் பார்த்தும் பார்க்காம நகர்ந்து போறதே தனி.... ஜாலி தான்....

வகுப்பிற்குள் நுழையுமுன் நம்ம ஹீரோ... நம்ம ஹுரோயின் முட்டக்கண்ணிக்காக...

முகிலுக்கு ..... இன்று பொன்னான நாளாக அமைய வாழ்த்திக் கோள்வோம்...

கடந்த நான்கு நாட்களில் நைனிகாவிற்கு கல்லூரியில் சில நட்பு(பூ)க்களும் மலர்ந்துவிட்டன....
அன்று நைனியை பார்த்த அடுத்த சில நிமிடங்களில் இவன் நேத்ராவின் உடல்நலக்குறைவு குறித்து கால் வரவும் போனதால் நைனிகா தான் இவனை சீனியர் என்றோ அதே கல்லூரியில் தான் பயில்கிறான் என்றோ அறிந்திருக்கவில்லை…
அறிந்திருந்தால் அப்படி அவனிடம் வாய் பேசியிருக்கவும் வாய்ப்பு இல்லை...
நைனிகாவின் புதிய தோழிகள் ராகவி... வர்ஷினி...ரேச்சல்... கல்லூரி வளாகத்திற்குள் பேருந்து நின்றதும் முகிலின் கண்கள் நைனியைத் தேடியது...

முகில் நேற்று பின்மாலைப் பொழுதில் நண்பர்களுக்கு தொலைப்பேசி மூலம் பாடக்குறிப்புகளைக் குறித்து விவாதிக்கையில் நைனியைப் பற்றிய விவரங்களைக் கூறி... அவளை தட்டி வைக்க தன் ஐவர் குழுவினரின் உதவியை நாடினான்...

நைனி இறங்கி தன் தோழிகளோடு உள்ளே வளாகத்திற்குள் நுழைந்ததுமே கேட்ட குரல் அவளின் மொத்த பொருமையிலும் வேல் பாய்ந்ந உணர்வோடு நெருங்கி வந்து முறைத்தாள்...

முகில் விட்ட ஏலம் அப்படி...

அவள் முறைப்பைப் பார்த்து குழுவைத் தயாராக இருக்கும்படி சிக்னல் கொடுத்தான்...
ஓய்... கிரீன் சுடி... இங்க வா என்றான்...
யாரோ தெரியாதவர் அழைத்திருந்தால் கூட பரவாயில்லை... இவனுக்கு இரண்டுநாள் வகைவகையாக மரிமாறிய என்னை என்ன தைரியத்தில் இவன் ஆடு மாடைப் போல ஆடையை அடையாளமாக ஆடை நிறம் வைத்து அழைப்பான் எனப் பொருமினாள்..

முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் மெல்ல நெருங்கினாள்...
பாரதியின் மூலம் அவள் அறிந்த தகவல் இவனும் இந்த கல்லூரியில் படிக்கும் நான்காம் ஆண்டு ஆண்டு மாணவன் என்பது… அதோடு ஆர்கிடெக் வேறு பிரிவு என்பதால் நிம்மதியாகவே இருந்தது அவளுக்கு...

இந்த இரண்டு நாளில் அவள் புலனாய்வின் படி நைனி அறிந்தது ...முகிலுக்கு தன்மேல் ஏதோ ஈர்ப்பு உள்ளது.... அதற்கு அவள் இதுவரை காதலாக வடிவம் கொடுக்க முடியாத நிலையில் இருந்தாள்..
காரணம் வீட்டில் அவன் பார்வை அவளை வட்டமடித்து விழுங்கியதைத் தான் இவள் நன்றாகவே உணர்ந்தாலே...
இப்போது முடிவு செய்துவிட்டாள்... இவனை இனி சும்மா விடக்கூடாது நைனி… என்று..

மௌனமாக நின்றவளை உன் பேரென்ன என்றான் முகில்...
உன்ன .... பேரா கேக்குற மவனே...
யாழினி...

என்னது யாழினியா என கேட்டு முழித்தான்... பிரேம் ஐ.டியை வாங்கி பார்த்தான்... ஆம் யாழினி என்றே இருந்தது...

செல்வமும் ... பாரதியும் வீட்டில் அழைப்பது நைனி... சான்றிதழ்களில் யாழினி... ஆல்ரெடி இங்கே ஒரு யாழிசை இருப்பதால் அதை யாரும் கூப்பிடவில்லை....
பாவம் இது முகிலுக்கு தெரியாதே… முதல் கேள்விக்கே பல்பா..
ஒரு கணம் முகில் தடுமாறினான்... அவனுடைய குழு பரிதாபமாக முகிலை முறைத்திட...
முகில் பிளான் பி என அனுவுக்கு சிக்னல் கொடுத்தான்...
பிளான் பி... சிந்துவினால் தொடங்கப்பட்டது.... ஆமா உனக்கு சாரி சொல்லத் தெரியாதாமே சன் நியூஸ்ல சொன்னாங்க... என கிண்டலாகக் கேட்க...

நைனிகாவிற்கு புரிந்தது முகிலின் பழிவாங்கல் படலமிது என்று… என்ன தைரியம் இருந்தால் வீட்டில் நடந்த ஒரு சாதாரண நிகழ்வை இங்கே கடை பரப்பி அவளை கேளிக்கை பொருளாக நிக்க வைத்து கேள்வி கேட்பான்.. அதுவும் இந்த எடுப்பு துடுப்பை எல்லாம் துணையாக வைத்துக்கொண்டு….

நைனி அமைதியாக முகிலை முறைக்க பிரேம் கண்டு கொண்டான்.. ஏய் என்ன சீனியரையே சைட் அடிக்கிற...

சரி.. சரி உனக்கு ஏதாவது பனிஷ்மென்ட் தரனுமே .... நீ என்ன பன்ற... நாளைக்கு 1000 டைம்ஸ் சாரி சீனியர் னு எழுதிட்டு வந்து குடுத்துட்டு போற... இல்லைனு வை... நாளைக்கு இதவிட மோசமா இருக்கும் என மிரட்டினான்.... இல்லை இல்லை மிரட்டுவதாக நினைத்து சொதப்பினான்…
இவளுக்கு தான் இவர்கள் கொடுத்த பனிஷ்மென்ட் என்ற கமெடியை நினைத்து சற்றே எரிச்சலோடு சளிப்பாக வந்தது..

இதெல்லாம் ஒரு தண்டனையாடா தடிமாடுங்குளா என்று உள்ளுக்குள் கழுவி ஊற்றினாள்.

முகிலோ தலையில் அடித்துக்கொண்டு திரும்பிவிட்டான்...
இதுக்கு இவனுங்க கிட்ட சொல்லாமலே இருந்து இருக்கலாம்… இதெல்லாம் ஒரு தண்டனை னு ஏன்டா அவள கூப்பிட்டு வைச்சு என்ன வச்சு செய்றீங்க..
அனுவும் சிந்துவும் பிரேமை முறைக்க சுதன் அவன் காதருகே...

உனக்கு லா ஏன் யாரும் செட் ஆகலைனு இப்போதான்டா புரியிது எனக் கூறி புன்னகைத்தான்...

நைனி சிரிப்போடு கட்டுப்படுத்த போராடினாள்.... அவன் நிலைமை இவ்வளவு மோசமான பல்ப் ஆகவா முடிய வேண்டும்…
இருந்தாலும் அவனுடைய அயராத முயற்சிக்காக அவளே கொஞ்சம் மலை இறங்கினாள்...

பவ்யமாக முகிலை பார்த்து சரிங்க சீனியர் என்று கூறி நகர்ந்துவிட்டாள்...
மாலை இனிதே வகுப்பு முடிந்து அவரவர் கிளம்பிட...
முகில் தாமதமாகவை உள்ளே நுழைந்தான்...
நைனிகா வின் கண்களில் பட்டு அவமானப்பட விருப்பமின்றி பூனையாகத்தான் பதுங்கினான்..

மாடியில் அவன் அறைக்கதவை அணுகும் முன் தொண்டையைக் கணைத்துக் கொண்டே நைனி முன்னே வந்தாள்...

நிற்போமா போவோமா என பட்டிமன்றம் நடத்தி முகில் அறைக்குள் நுழையும் முன் ...

நைனி கதவை நெருங்கிவிட்டாள்..
என்ன சார் அதுக்குள்ள எஸ்கேப் ஆனா எப்படி...???
யாரு யாருகிட்ட எஸ்கேப் ஆகுரா... என்ன பனிஷ்மென்ட் மறந்து போச்சா போடி போய் அத எழுதி முடி… என்றான்…

நைனகயின் கோவத்தில் மூக்குநுனி சிவந்துவிட்டது...கோவமா...வெட்கமா… பொருமையாக பேசி சமாதானமாக போக வந்தவள் வரிந்து கட்டிக் கொண்டு வம்புக்கு நிற்கும்படி முகிலே தனக்கு ஆப்பு சீவிக்கொண்டான்...

நைனியின் கோவம் வார்த்தைகளாகத் தெறித்தது....

டேய்...மைதாமாவு.... யாரப்பாத்து டினு சொல்ற... சீனியர்னா நீ என்ன பெரிய இதா…
இத்தனைக்கும் நீ என் டிபார்ட் மெண்ட் கூட இல்லை…
நான் ஏதாவது உன்கிட்ட காலேஜ் ல மோசமா பேசி ஹர்ட் பன்னேனா… ஏதோ தெரியாம வீட்ல நடந்த சின்ன விஷயத்த போய் உன் அல்க்கைங்க கிட்ட உளறிட்டு அதுங்க பேச்ச கேட்டு மொக்கயா ஒரு பனிஷ்மென்ட் வேற…
உனக்கே இது சின்னப்புள்ளத்தனமா இல்லை….
பழம் மாதிரி பட்டை போட்டு வந்த த பார்த்து அப்பாவி னு நெனைச்சியா... அதெல்லாம் எங்க அம்மாக்காக...

ஆமா .. என்னடா நீ... உனக்குலா ஒரு கேங்கு.. அவனுங்க பன்றதுக்கு பேரு ரேகிங்கா...டா..??
உனக்கே சின்னப் புள்ளத் தனமா தெரியல...????
இங்க பாரு... பேபி....
நான் கராத்தே ல பிளாக் பெல்ட்.. நியாபகத்துல வைச்சிக்கோ... வாடி போடினு வாய் நீண்டுது அப்படியே தட்டித் தாளிச்சிடுவேன்... புரிஞ்சிதா என்று நிறுத்த...

முகில் முழித்துக்கொண்டு நின்றான்...

முகிலின் மனசாட்சி மெல்ல எம்பிக்குதித்து மிரட்டியது... முகில் இவ அதுக்கு சரி பட்டு வரமாட்டா டா ... ஆளப்பாத்து ஏமாந்துட்டியே... இப்படி கிழி கிழின்னு கிழிக்கிறாளே..... இவ வேணான்டா....

நைனி மெல்ல திரும்பி நடந்தவள் நின்று மீண்டும் வந்தாள்...

ஆ... அப்பறம் சொல்ல மறந்துட்டேன் பாரேன்... அவன் யாரு அது உன் கேங்ல நல்லா..சுருட்டை முடில காரக் கொழம்போட...??? அவனுக்கு என்ன மனசுல மலிங்கா னு நெனப்பா..??? அவனும் அவன் தலையும் அவன் சொன்ன பனிஷ்மென்ட் ஆ நீயே முடிச்சி நாளைக்கு காலைல ஏழு மணிக்கு என்ட ககுடுக்குற...
நம்ம விஷயம் லா உன் பிரண்ட்ஸ் கு தெரிய வேண்டாம்... சரியா.. தெரிஞ்சா எனக்கு ஒன்னும் இல்ல... உனக்கு தா .. பப்பி ஷேம்...

இதோட எல்லாதையும் ஏரகட்டிட்டு ஒழுங்க அம்மா புள்ளையா சமத்தா இரு...இல்லனு வை... சிறப்பான தரமான சம்பவங்கள நீ இனிமேல் தா பாப்ப... புரிதா...

இவ இங்க இன்னும் நாளு நாள் தானே இருப்பா அப்பறம் காலேஜ் ல பார்த்துகலாம் னு லா தப்பு கணக்கு போடதப்பா...
ஒரு சொட்டு கண்ணீரோட திக்கி... திக்கி.. அத்த......னு அழுதேனு வை....
உங்க அம்மாவே டின்னு கட்டிடுவாங்க புரிதா...
ரொம்ப வருஷம் கழிச்சு ஒட்டு மொத்த பெருசுங்களும் மாயாண்டி குடும்பத்தார் மாதிரி ஒன்னு சேரந்து இருக்கு..

ஏதாவது எடுக்கு பன்னேனு வையேன் உங்க அம்மாவே உன்னைய ரேகிங் பன்றாமாறி பன்னிடுவா இந்த நைனி… புரிஞ்சிதா...
இனிமேல் சீனியர் அது இதுனு என்ட வாலாட்ர வேலையெல்லாம் வேணா... போனமா படிச்சமானு இரு அதா உனக்கு நல்லது .. புரிச்சிருக்கும்னு நெனைக்கிறேன்...

வர்ட்டாடாடாடா....... பேபி...
முகில் உறைந்து நின்றுவிட்டான்….
நைனா… நீங்க இந்த குடும்பத்த பத்தி சொன்ன அப்போ நான் நம்பல… இப்போ நம்புறேன்….

உனக்கு இந்த பொட்டுவெடியே தான் வேணுமாடா முகிலா….
எதுக்கும் போயி சாப்பிட்டு திரும்ப யோசிப்போம்…

தொடரும்…
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத்குமார் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top